
இரத்தத்தின் மூலமாக சரீரத்தின் பல பாகங்களுக்கு வேண்டிய போஷிப்புப் பொருள்களும் பிராண வாயுவும் போய்ச் சேருகின்றன.
இரத்தமும், இரத்த ஓட்டக் கருவிகளும் இரத்தத்தின் மூலமாக சரீரத்தின் பல பாகங்களுக்கு வேண்டிய போஷிப்புப் பொருள்களும் பிராண வாயுவும் போய்ச் சேருகின்றன. இரத்தத்தில் ப்ளாஸ்மா (Plasma) என்னும் ஒருவகை வர்ணமில்லா நீரும் அதில் கோடிக்கணக்கான இரத்தக் கெபிகளும் இருக்கின்றன. இரத்தக் கெபிகள் இருவகைப்படும். ஒன்று சிவப்புக் கெபிகள், மற்றயது வெள்ளைக் கெபிகள். இது வட்டமாயும் ஓரங்களில் கனமாகவும் மத்தியில் மெலிந்தும் இருக்கின்றன. இவைகளின் பரிமாணம் மிகச் சிறியது. சுமார் 1௦ லட்சம் சிவப்புக் கெபிகளை ஒன்றை மற்றயதின் ஓரங்களில் படும்படியாக வரிசையாகப் பரப்பினால் சுமார் ஒரு சதுர அங்குலத்துக்குத்தான் வருமென்றால் இவைகளின் பரிமாணத்தை நீங்கள் ஒருவாறு ஊகிக்கலாம். இவைகளின் நிறம் ஒரு மாதிரியான மஞ்சள். அவை இரத்தத்தில் மிகவும் அதிகமாய் இருப்பதால் இரத்தத்துக்கு ஏற்பட்ட சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. இவைகளின் மத்தியிலுள்ள கடற் பஞ்சு போன்ற பாகத்துக்கு ஹிமோகுளோபின் (Haemoglobin) என்று பெயர். இந்த ஹிமோகுளோபினுக்குச் சடுதியில் பிராண வாயுவைக் கிரகித்துக் கொள்ளும் சக்தி இருப்பதால், அது அவ்வாறு கிரகித்துக் கொண்டவுடன் நல்ல சிவப்பு நிறத்தை அடைகிறது. பிராண வாயுவைக் கிரகித்துக் கொண்டுள்ள கெபிகள் இரத்த ஓட்டத்தின் மூலம் தசைகளுக்குச் செல்லும் போது அவைகளுக்கு வேண்டிய பிராண வாயுவை அளிக்கின்றன. வெள்ளைக் கெபியின் உருவம் ஒரே மாதிரியாக இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். இவைகளின் வேலை சரீரத்தில் வெளியிலிருந்து வரும் வியாதிக் கிருமிகளைக் கொல்வதேயாகும். வியாதிக் கிருமிகளோ அல்லது இதர வஸ்துக்களோ சரீரத்தில் எந்தப் பாகத்தில் வந்தடைந்தாலும் இவை அவ்வேற்று வஸ்துக்களை வளைத்துக்கொண்டு விழுங்கவோ, அல்லது வெளியேற்றவோ பாடுபடும். ப்ளாஸ்மா என்பது சுமார் நூற்றுக்கு 90 பங்கு தண்ணீரும் பாக்கி இதர உப்புக்களும் கரைக்கப்பட்டுள்ள ஒரு நீர். இதில்தான் மேற்கண்ட இரு வகைக் கெபிகளும் மிதக்கின்றன. நமது இருதயம் தசைகளினால் ஆக்கப்பட்டு உள்ளே 4 அறைகளைக் கொண்டதோர் அவயவம். இது சுருங்குவதால் சரீரத்தின் பல பாகங்களுக்கும் இரத்தத்ததை அனுப்புகிறது. இது மார்பு கூட்டின் நடுவில் டயாப்ரம் என்னும் தசைப்படுதாவிற்கு மேலாகவும் இரு சுவாசகோசங்களுக்கு மத்தியிலும் இருக்கிறது. இதன் அகன்ற பாகம் (Base) மேற்புறமாகவும் குறுகிய நுனி கீழ்புறமாகவும் சற்று இடது பக்கத்தை நோக்கியும் இருக்கிறது. ஒவ்வொருவருடைய இருதயத்தின் அளவு சுமார் அவரவர்களின் கை முஷ்டியின் அளவேயாகும். இருதயத்தைச் சுற்றி இரட்டை, மடிப்புள்ளதும் ஒரு மெல்லிய பையைப் போன்றதுமான ஒரு மூடி இருக்கிறது. இப்பை மூடிக்கு பெரிகார்டியம் (Pericardium) என்று யெயர். இது எப்பொழுதும் ஒரு பசை போன்ற நீரை உற்பத்தி செய்துகொண்டு இருதயத்தை ஈரப்பசையுள்ளதாக வைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் இருதயம் அசைந்து கொடுப்பதற்கு இலகுவாக இருக்கிறது. இருதயத்தின் உட்பாகம் குறுக்கே வலது, இடது என்று இரு பாகங்களாகத் தசைகளினால் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இவ்விதம் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பாகமும் மேல் அறை, கீழ் அறை என இரண்டிரன்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேல் அறைக்கு ஆரிகிள் (Auricle) என்றும் கீழறைக்கு வெண்ட்ரிகிள் (Ventricle) என்றும் பெயர். ஆகவே வலது ஆரிகிள், இடது ஆரிகிள் என இரண்டு ஆரிகிள்களும் வலது வெண்ட்ரிகிள், இடது வெண்டிரிகிள் என இரண்டு வெண்ட்ரிகிள்களும் இருக்கின்றன. ஆரிகிள்கள் சிறியவையாயும், மெல்லிய தசைகளால் ஆக்கப்பட்டவையாகவும், வெண்ட்ரிகிள் பெரியவையாயும், களமான தசைகளால் ஆக்கப்பட்டவையாயும் இருக்கின்றன. இதிலும் வலது வெண்டிரிகிளைவிட இடது வெண்ட்ரிகிளின் சுவர்கள் மிகவும் கெட்டியானவை. வலது ஆரிகிளுக்கும் வலது வெண்டிரிகிளுக்கும் மத்தியில் ஒரு வழி இருக்கிறது. அதேபோல் இடது ஆரிகிளுக்கும் இடது வெண்ட்ரிகிளுக்கும் நடுவே ஒரு வழி இருக்கிறது. இந்த வழிகளில் வால்வ் (Valve) என்னும் ஒருவகைத் தசை மூடிகளின் உதவியால் ஆரிகிளிலிருந்து இரத்தம் வெண்ட்ரிகிளுக்குப் போக முடியுமே தவிர வெண்ட்ரிகிளிலிருந்து ஆரிகிளுக்குப் போக முடியாது. ஆரிகிள் சுருங்கும்போது அவைகளிலுள்ள இரத்தம் வெண்ட்ரிகிள்களுக்கு வால்வுகளின் வழியே செல்லுகின்றது. வெண்ட்ரிகிள் சுருங்கும்போதும் அவைகளில் இருக்கும் இரத்தம் அவைகளிலிருந்து கிளம்பும் இரத்தக் குழாய்களின் வழியே தள்ளப்படுகிறது. வலது வெண்ட்ரிகிளிலிருந்து கிளம்பும் இரத்தக் குழாய்க்கு 'பல்மனரி ஆர்ட்டரி') (Pulmonary Artery) என்று பெயர். இடது வெண்ட்ரிகிளிலிருந்து கிளம்பும் இரத்தக் குழாய்க்கு ‘எஓர்டா' (Aorta) என்று பெயர். இந்த இரத்தக் குழாய்களுக்கும் வெண்ட்ரிகிள்களுக்கும் இடையே வால்வுகள் இருக்கின்றன. இவைகள் இரத்தக் குழாய்களுக்கு இரத்தத்தை விடுமே தவிர இரத்தக் குழாய்களிலிருந்து வெண்ட்ரிகிள்களுக்கு இரத்தத்தை விடாது. இருதயத்துக்கு இரத்தத்தைக் கொண்டு வரும் இரத்தக் இரத்தக் குழாய்களுக்கு அசுத்தமான குழாய்கள் அல்லது வெயின்கள் (Veins) என்று பெயர் இருதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு போகும் குழாய்களுக்கு சுத்த இரத்தக் குழாய்கள் அல்லது ஆர்ட்டரீஸ் (Arteries) என்று பெயர். சரீரத்தின் பாகங்களில் இருக்கும் அசுத்த இரத்தத்தை இருதயத்தின் வலது ஆரிகிளுக்கு இரண்டு குழாய்கள் கொண்டு வருகின்றன. இவைகள் முறையே மேல் பக்க வீனா காவா (Superior Vena Cava), கீழ் பக்க வீனா காவா (Inferior Vena Cava) எனப்படும். இம்மாதிரியாக வலது ஆரிகிளில் வந்து சேரும் அசுத்த இரத்தத்தை அந்த ஆரிகிள் வலது வெண்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது. இந்த வலது வெண்ட்ரிகிள் சுருங்கும்போது அசுத்த இரத்தம் பல்மனரி ஆர்ட்டரி வழியாகத் தள்ளப்பட்டு அதன் இரு பிரிவுகள் வழியாக இரண்டு சுவாசகோசங்களையும் அடைகின்றது. இங்கே அது சுத்தம் செய்யப்பட்டு பல்மனரி வெயின் வழியா இடது ஆரிகிளுக்கு வந்து சேருகிறது இடது ஆரிகிள் சுருக்கத்தினால் சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் இடது வெண்ட்ரிகிளுக்குப் போகிறது இடது வெண்ட்ரிகிள் சுருங்குவதினால் அதிலுள்ள இரத்தம் ஏஓர்டா என்னும் முக்கிய இரத்தக் குழாம் வழியாக சரீரத்தின் பல பாகங்களுக்குச் செல்லுகிறது இரண்டு ஆரிகிள்களும் ஒரே சமயத்தில் சுருங்கி வெண்ட்ரிகிள்களுக்கு ஒரே சமயத்தில் இரத்தத்தை தள்ளுகின்றன. உடனே இரு வெண்ட்ரிகிள்களும் ஒரே சமயத்தில் சுருங்கி ஆர்ட்டரிகளில் இரத்தத்தை தள்ளுகின்றன. இது ஆனவுடன் சிறிது தாமதித்து மறுபடியும் ஆரிகிள்கள் சுருங்குகின்றன. இம்மாதிரியாக ஒரு வயது வந்த மனிதனின் இருதயம் நிமிஷம் ஒன்றுக்கு ஆரிகிள்கள் 72 தடவைகள் சுருங்குகின்றன. அவைகளின் சுருக்கத்தினால் வெண்ட்ரிக்கிள்களுக்குத்தான் இரத்தத்தை அனுப்புகின்றன. ஆகவே அவை மெல்லிய தசைகளை உடையவைகளாய் இருக்கின்றன. வலது வெண்ட்ரிகிள் தன்னுடைய சுருக்கத்தினால் இரத்தத்தை சற்று தூரத்திலுள்ள சுவாசகோசங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. ஆகவே அது ஆரிகிள்களை விட சற்று பருத்த தசைகளை உடையதாய் இருக்கிறது. ஆனால் இடது வெண்ட்ரிகிள் எஓர்டா மூலமாக சரீரத்தின் பல பாகங்களுக்கும் போகும்படியாக இரத்தத்தை வேகத்துடன் அனுப்ப வேண்டியிருக்கிறது. ஆகவே அதன் தசைகள் மிகப்பருத்து பலமுள்ளதாக இருக்கின்றன. இடது வெண்ட்ரிகிளின் ஒவ்வொரு சுருக்கத்தினாலும் ஏஓர்டாவில் அதிக இரத்தம் தள்ளப்படுகிறது. இம்மாதிரி தள்ளப்படும் இரத்தம் குபீர் குபீரென்று சரீரத்தில் பல ஆர்டரிகளின் வழியாக அலைகள் போல் செல்லுகிறது. இம்மாதிரி வரும் அலைகளைத் தான் நாம் நாடி என்று சொல்லுகிறோம். நாடி (Pulse) எந்த இடத்தில் ஒரு ஆர்டரி தோலின் சமீபத்தில் இருக்கிறதோ அங்கே பார்க்க முடியும். சாதாரணமாக மணிக்கட்டுகளில் நாடி பார்ப்பதற்கு எளிதாக இருக்கிறது. ஆர்ட்டரியில் அலைகள்போல் செல்லும் இரத்தம் காபில்லரிகள் (Capillaries) என்னும் மெல்லிய குழாய்களின் வழியே செல்லும் போது அலைகள் மாறி சாதாரணமாக ஓடுகின்றன. காபில்லரிகளில் அவ்வாறு ஓடும் இரத்தம் பல காபில்லரிகள் சேர்ந்து வெயின்கள் சுவாத என்னும் அசுத்த இரத்தக் குழாய்களாக மாறி அவைகளில் ஓடுகின்றன. இம்மாதிரியாக வெயின்கள் மூலம் இருதயத்தை அடைந்து அங்கிருந்து கோசங்களுக்கு சுத்தம் செய்ய அனுப்பப்படுகிறது. வெயின்களிலும் காபில்லரிகளிலும் இரத்தம் சாதாரணமாக ஓடுகின்றது. ஆர்ட்டரிகளில் தான் அலைகளாக ஓடுகிறது. ஒரு காயம் பட்டு ஒரு ஆர்ட்டரி நறுக்கப் பட்டுவிட்டால் அதிலிருந்து வரும் இரத்தம் குபீர் குபீரென்று வெளிவரும். ஆனால் ஒரு வெயின் நறுக்கப்பட்டு அதிலிருந்து வெளிவரும் இரத்தம் சாதாரணமாக வெளியாகும். நமது சரீரத்திலுள்ள பல பாகங்களில் தசைகளுக்கு வேண்டிய தாதுப் பொருள்களையும், பிராண வாயுவைக் கொண்டு போகவும், அவ்விடங்களிலிருந்து அசுத்தப் பதார்த்தங்களை வெளியேற்றவும் இரத்த ஓட்டம் ஏற்பட்டிருக்கிறது. சரீர வளர்ச்சிக்கு வேண்டிய முக்கிய பதார்த்தங்களை இரத்தம் ஜீரணம் செய்யப்பட்ட ஆகாரத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இவைகளை சரீரத்தின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டும் அல்லவா? அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு தசையும் அதற்கு வேண்டிய தாதுக்களையும் பிராண வாயுவையும் இரத்தத்திலிருந்து கிரகித்துக் கொள்கின்றன. அதே சமயத்தில் அவைகளிடமிருக்கும் அசுத்தப் பதார்த்தங்களையும் கரியமில வாயுவையும் இரத்தத்தில் விட்டுவிடுகின்றன. இம்மாதிரியாக விடப்பட்ட அசுத்தப் பதார்த்தங்கள் இரத்தத்துடன் ஓடி அந்த இரத்தமும் மூத்திரக் காய்களுக்கு வரும் போது அவ்விடமிருந்து சிறுநீராக வெளியேறுகின்றன. சில அசுத்தப் பதார்த்தங்கள் சருமத்தின் வழியாக வியர்வையாகவும் இரத்தம் சுவாசகோசங்களுக்குச் வெளியேறுகின்றன. செல்லும்போது அவ்விடம் இரத்தத்திலுள்ள கரியமிலவாயு வெளி யேற்றப்பட்டு அத்துடன் பிராணவாயு சேர்க்கப்படுகின்றது. சரீரத்தில் இரத்த ஓட்டம் குழாய்களின் மூலம் நடைபெறுகின்றது. எல்லாவற்றையும் விட பெரிய ஆர்ட்டரி ஏஓர்டா என்பது. இது இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து கிளம்புகிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஏஓர்டாவிலிருந்து பல கிளைகள் பிரிகின்றன. அம்மாதிரி பிரியும் ஒவ்வொரு ஆர்ட்டரியும் ஒவ்வொரு அவயவத்துக்குச் சென்று அங்கே பல கிளைகளாகப் பிரிந்து சிறிய சிறிய இரத்தக் குழாய்களாக மாறி கடைசியில் பல மிகச் சிறிய இரத்தக் குழாய்கள் வலைகளால் பின்னப்பட்டதுபோல ஆகிவிடுகின்றன. இவைகளுக்குத்தான் காபில்லரிகள் என்று பெயர். இவைகளை பூதக்கண்ணாடியின் உதவியால்தான் காண முடியும். காபில்லரிகளின் சுவர்கள் மிகவும் மெல்லியவைகளாக இருப்பதால் அவைகளின் வழியே நிணநீர் எனப்படும் இரத்த நீர் கசிந்து பக்கங்களிலுள்ள தசைகளில் இருக்கும் கெபிகளை நனைக்கிறது. இம்மாதிரியாக சரீரத்தின் எல்லாப் பக்கங்களில் இருக்கும் கெபிகளும் நிண நீரினால் மூழ்கடிக்கப்படுகின்றன. இப்பொழுது கெபிகள் அவைகளுக்கு வேண்டிய தாதுப் பொருள்களை நிண நீரிலிருந்து எடுத்துக்கொண்டு அவைகளிடமுள்ள அசுத்தப் பதார்த்தங்களை நிண நீரில் விட்டுவிடுகின்றன. காபில்லரிகள் சுவர்களின் ஊடே சிவப்பு இரத்தக் கெபிகளிலிருந்து பிராணவாயு வெளிச்சென்று கெபிகளை அடைகின்றது. கரியமிலவாயு கெபிகளிலிருந்து இரத்ததுடன் கலந்து விடுகின்றது. இரத்தக் குழாயிலிருந்து வெளியே கசியும் நிணநீர் மேலே சொன்ன மாறுபாடுகளை அடைந்து அதன் பிறகு அதில் பெரும்பகுதி இரத்தத்துக்கே திரும்பி வந்துவிடுகிறது. பல காபில்லரிகள் ஒன்று கூடி மெல்லிய வெயின்களாகி, பல சிறிய வெயின்கள் ஒன்று சேர்ந்து பெரிய வெயின்களாக மாறி இந்த அசுத்த இரத்தத்தை இருதயத்திற்குக்கொண்டு போகின்றன. இப்பொழுது இரத்த ஓட்டத்துடன் நாமும் ஒரு முறை சரீரத்தைச் சுற்றி வருவோம். வெண்ட்ரிகிளின் சுருக்கத்தினால் அவ்விடம் இருக்கும் சுத்த இரத்தம் ஏஓர்டாவில் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஏஓர்டா மேலே சென்று உடளே மூன்று இடது பக்கமாக வில்போல் வளைந்து கீழே இறங்குகிறது. ஏஓர்டாவின் வளைந்த பாகத்தில் ஆர்ட்டரிகள் கிளம்புகின்றன. இதில் ஒன்று இரு பாகங்களாகப் பிரிந்து, வலது பக்கப் பிரிவு வலப் பக்கத்து தலை, கழுத்து இவைகளுக்கும் இடது பக்கத்துப் பிரிவு இடப்பக்கத்து தலை, கழுத்து இவைகளுக்கும், செல்லுகின்றன. இவைகளுக்கு கரோடிட் ஆர்ட்டரிகள் (Carotid Arteries) என்று பெயர். மற்ற இரண்டு ஆர்ட்டரிகளுக்கும் சப்க்ளே வியன் ஆர்ட்டரிகள் என்று பெயர். இவைகளில், வலது பக்கத்து சப்க்ளேவியன் ஆர்ட்டரி வலது கைக்கும். இடது பக்கத்து சப்க்ளேவியன் ஆர்ட்டரி இடது கைக்கும் செல்லுகிறது இந்த சப்க்ளேவியன் ஆர்ட்டரிகள் முழங்கைகளில் வந்தவுடன் ரேடியஸ் (Radius) அல்னா (Ulna) என இரு பிரிவுகளாகப் பிரிகின்றன. சாதாரணமாக நாம் நாடி பார்ப்பது ரேடியஸ் ஆர்ட்டரியில்தான். ஏஓர்டாவிலிருந்து இன்னும் இவைகளைத் தவிர பல ஆர்ட்டரிகள் பிரிந்து சரீரத்தின் பல பாகங்களிலுள்ள அவயவங்களுக்கும், தசைகளுக்கும் செல்கின்றன. டயாப்ரம் என்னும் தசைப்படுத்தாவின் ஊடே அதைக் கிழித்துக்கொண்டு ஏஓர்டா வயிற்றினுள்ளிருக்கும் பல உறுப்புகளுக்கும் செல்கின்றன. ஒரு சிறிய கிளை, மூன்று பிரிவுகளாக ஆகி அன்னகோசத்துக்கும், கல்லீரலுக்கும், மண்ணீரலுக்கும் செல்லுகின்றது. இரண்டு சிறிய ஆர்ட்டரிகள் குண்டிக் காய்களுக்குச் செல்லுகின்றன. கடைசியில் எார்டா இரு பெரிய பிளவுகளாக ஆகி வயிற்றின் கீழ் பாகத்துக்குக் கிளைகளை விட்டு விட்டு இரு கால்களின் வழியே கீழே இறங்குகின்றன. இவைகளுக்கு கால்களில் பல கிளைகள் ஏற்படுகின்றன. சரீரத்தின் பல பாகங்களிலும் செல்லும் ஆர்ட்டரிகள் பல கிளைகளாகப் பிரிந்து முடிவில் காபில்லரிகளாக மாறிவிடுகின்றன. தசைகளுக்கும், கெபிகளுக்கும் வேண்டிய தாது வஸ்துக்களை கொடுத்துவிட்டு அவைகளிலிருந்து அசுத்த வஸ்துக்களையும், கரியமில வாயுவையும் பெற்றுக்கொண்ட பிறகு இரத்தம் நல்ல சிவப்பிலிருந்து நீல நிறமாக மாறிவிடுகின்றது காபில்லரிகள் ஒன்று சேர்ந்து பல வெயின்களாக ஆகின்றன. பல சிறிய வெயின்கள், பெரிய வெயின்களைச் சேருகின்றன. இம்மாதிரியாக சரீரத்திலுள்ள எல்லா அசுத்த இரத்தமும் இருதயத்தின் வலது ஆரிக்கிளுக்கு வந்து சேருகின்றது. வலது இடது ஜூங்குலர் வெயின்கள் (Jugular Veins) என்பவை தலை, கழுத்து இவைகளிலிருந்து வருபவை. இடது சப்க்ளேவியன் வெயின்கள் (Sub-Clavian Vcin என்பவை கைகளிலிருந்து வருபவை. இவை ஒன்றாய்ச் சேர்ந்து மேல் பக்கத்து வீனா காவா ஆகின்றது கால்களின் அசுத்த இரத்தக் குழாய்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கீழ்ப்பக்கத்து வீனா வயிற்றின் வழியாய் மேலே காவாவாக மாறி வயிற்றின் வழியாய் மேலே செல்லும்போது வயிற்றின் பல பாகங்களிலிருந்து வரும் அசுத்த இரத்தத்தையும் சேர்த்துக்கொண்டு இருதயத்தின் வலது ஆரிக்கிளைச் சேருகிறது. அன்னகோசத்திலும், சிறுகுடல், மண்ணீரல், பாங்க்ரியாஸ் இவைகளிலிருந்து கிளம்பும் அசுத்த இரத்தக் குழாய்கள் ஒன்று சேர்ந்து போர்ட்டல் வெயிள் (Portal Veins) என்னும் குழாய் ஆகி கல்லீரலுக்குச் சென்று அங்கே பல காபில்லரிகளாக மாறிவிடுகின்றன. ஆகவே கல்லீரலுக்கு ஆர்ட்டரிகளிலிருந்து வரும் நல்ல இரத்தத்துடன்கூட அன்னகோசம் முதலிய ஜீரண அவயவங்களிலிருந்து வரும் வெயின்கள் மூலமாய் ஜீரணத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்ட தாதுக்களுடன் கூடிய இரத்தமும் வருகிறது. இங்கே இவைகள் ஒன்றுகூடி வேறொரு வெயின் மூலமாய்க் கீழ் பக்கத்து வீனா காவாவுடன் கலக்கின்றது. இம்மாதிரியாகச் சரீரத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் அசுத்த இரத்தம் இருதயத்தின் வலது ஆரிக்கிளுக்குக்கொண்டு வந்து சேர்க்கப் படுகிறது. வலது ஆரிக்கிளிலிருந்து இரத்தம் வலது வெண்ட்ரிகிளுக்குச் செல்லுகிறது. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து கிளம்பும் பல்மனரி ஆர்ட்டரி இரு பிரிவுகளாகப் பிரிந்து இரு சுவாசகோசங்களுக்கும் செல்லுகிறது. சுவாசகோசங்களில் காபில்லரிகளின் அசுத்த இரத்தத்தில் இருக்கும் கரியமிலவாயுவும் நீராவியும் வெளியேற்றப்பட்டுப் பிராணவாயு இரத்தத்துடன் சேர்ந்து கொள்கிறது. இம்மாதிரியாக சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் ஒவ்வொரு சுவாச கோசத்திலிருந்து இரு பல்மனரி வெயின்கள் மூலம் இருதயத்தின் இடது ஆரிக்கிளுக்கு வந்து சேருகிறது. சரீரத்திலுள்ள ஆர்ட்டரிகளில் சுத்த இரத்தம் ஓடுகிறது. ஆனால் பல்மனரி ஆர்ட்டரிகளில் ஓடும் இரத்தம் அசுத்தமானது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் சரீரத்திலுள்ள வெயின்களில் அசுத்த இரத்தம் ஓடுகிறது ஆனால் பல்மனரி வெயின்களில் மாத்திரம் சுத்த இரத்தம் ஓடுகிறது. இருதயத்தின் தசைச் சுவர்களுக்கும் இரத்தம் வேண்டுமல்லவா? அது இருதயத்தின் உள்ளிருக்கும் இரத்தத்தை உபயோகித்துக் கொள்ளவில்லை. ஆனால் ஏஓர்டாவிலிருந்து கிளம்பும் ஓர் சிறிய ஆர்ட்டரியின் வழியாகவே அதற்கு வேண்டிய இரத்தத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த ஆர்ட்டரி இருதயத்தின் தசைகளில் காபில்லரிகளாக ஆகி மறுபடியும் ஒரு வெயின் மூலம் மேலே வலது ஆரிக்கிளுக்கு வந்து சேருகிறது. உயிரோடிருக்கும்போது இருதயத்தின் அசைவு நரம்புகளினால் நடைபெறுகிறது. நரம்பு ஸ்தானங்களில் ஏற்படும் அதிர்ச்சியினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இருதயத்தின் சக்தியைக் கட்டுப்படுத்தி அதை ஒரே சீராக வேலை செய்ய வைப்பது மூளையிலிருந்து வரும் வேகஸ் (Vagus) அல்லது நியுமோகாஸ்டிரிக் (Pocumo-gastric) என்னும் நரம்பினாலும் முள்ளந்தண்டிலிருந்து வரும் உணர்ச்சி (Sympathetic) நரம்புகளாலும் நடைபெறுகிறது. இரத்தக் குழாய்களின் சுவர்கள் மூன்று விதமான மெல்லிய தசைகளால் ஆக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலே இருப்பது ஒரு கெட்டியான நார்த் தசை. இதற்கு உள்ளே இருப்பது ரப்பர்போல் நீளக் கூடிய ஒரு தசை. ஆர்ட்டரிகளின் சுவர்கள் மிகவும் கெட்டியாகவும் விரிந்து கொடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. நடுவில் இருக்கும் தசை ரப்பரைப் போல் இழுத்தால் நீளக்கூடியது. அதற்குள்ளே இருப்பது ஒரு மெல்லிய வழவழப்பான தசை. ஆகவே ஆர்ட்டரிகளின் தசை மிகவும் கெட்டியாகவும் விரிந்துகொடுக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. வெயின்களின் தசைகள் இவ்வளவு கெட்டியானவை அல்ல. ஆகையால் வெயின்களிலுள்ளே இரத்தம் இல்லாவிட்டால் அவைகள் சுருங்கிப்போகும். வெயின்களினுள்ளே பைகள் போன்ற வால்வுகள் இருக்கின்றன. இவைகள் இருப்பதால் இரத்தம் இருதயத்தை நோக்கி ஓடமுடியுமே தவிர எதிர்ப்பக்க மாய்ச் செல்ல முடியாது. ஆர்ட்டரிகள் காபில்லரிகளாக மாறும்போது வெளிப்பக்கத்து இரண்டு தசைகளும் மறைந்து விடுகின்றன. உள் மெல்லிய தசைகள் மாத்திரம் இருக்கின்றன. காபில்லரிகள் போல் பின்னப்பட்டு இருக்கின்றன. அவைகளின் வலைகள் சுவர்கள் மிகவும் மெல்லியவைகளாக இருப்பதால் அவைகளினூடே நிண நீரும், பிராண வாயுவும் செல்ல முடிகிறது. இரத்தக் குழாய்களும் நரம்பு ஸ்தாளங்களால் ஆளப்படுகின்றன. சிற்சில சமயங்களில் சிற்சில அவயவங்களுக்கு அதிக இரத்தம் தேவையாக இருக் கிறது. உதாரணமாக ஆகாரத்தை ஜீரணம் செய்யும் போது அன்னகோசத்துக்கு அதிக இரத்தம் தேவை. ஆனால் ஜீரணம் ஆனபிறகு அவ்வளவு இரத்தம் தேவையில்லை. நாம் தூங்கும்போது மூளைக்கு அதிக இரத்தம் தேவையில்லை. ஆனால் மனதினால் யோசனை முதலிய வேலைகள் செய்யும்போது மூளைக்கு அதிக இரத்தம் தேவையாக இருக்கிறது. சரீரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் இருக்கும் இரத்தக் குழாய்களுக்கும் நரம்புகள் உண்டு. இந்த நரம்புகள் மூலமாய் இரத்தக் குழாய்களைப் பெருக்க வைக்கவோ,சுருங்க வைக்கவோ நமது மூளைக்குச் சக்தி இருக்கிறது. எந்த இடத்துக்கு அதிக இரத்தம் தேவையோ அவ்விடத்துக்கு இரத்தக் குழாய்களை விரிந்து கொடுக்கும்படி நரம்புகளுக்கு மூளை உத்திரவு கொடுக்கிறது. குழாய்கள் பெருக்கும்போது அதிக இரத்தம் செல்வது இயல்புதானே. காபில்லரிகளின் மூலமாய் நிண நீர் தசைகளுக்குச் சென்று கெபிகளுக்கு வேண்டிய தாதுப் பதார்த்தங்களைக் கொடுக்கின்றனவென்று முன் கட்டுரையில் படித்தோம். இதைத் தவிர கெபிகளிலிருந்து அசுத்தப் பதார்த்தங்களையும் அந்த நிண நீர் கிரகித்துக்கொண்டு இதில் 'பெரும்பகுதி, மறுபடியும் காபில்லரிகளுக்கு வந்து வெயின்கள் மூலமாய் இருதயத்தைச் சேர்க்கின்றனவென்று படித்தோம். இதில் பெரும்பகுதி இம்மாதிரி வந்துவிட்டால் பாக்கியுள்ள சிறு பகுதி என்ன ஆகிறது? இந்த பாக்கியுள்ள பாகம் வேறு ஒரு விதமான காபில்லரிகளில் சேருகின்றது. இவைகளுக்கு நினை நீர்க் காபில்லரிகள் (Lymphatic Capillaries) என்று பெயர். இம்மாதிரி பல நிண நீர்க் காபில்லரிகள் ஒன்று கூடி நிண நீர்க் குழாய்களாக ஆகின்றன. இக்குழாய்களின் நடுவே பல இடங்களில் கோளங்கள் இருக்கின்றன. இந்தக் கோளங்கள் சல்லடைபோல் நிணநீரை வடிக்கட்டி சில அசுத்த வஸ்துக்களை மேலே போகவொட்டாமல் தடுக்கின்றன. சரீரத்தின் பல பாகங்களில் வெளியிலிருந்து தற்செயலாக வந்து இரத்த ஓட்டத்தில் கலந்துகொள்ளும் வியாதிக் கிருமி களையும் இதர வஸ்துக்களையும் கண்டுபிடித்து வெளிப் படுத்தும் போலீஸ் ஸ்டேஷன்களே இந்த நிண நீர்க் கோளங்கள். இம்மாதிரியாக வடிகட்டும் வேலை செய்யும் கோளங்களைத்தான் நாம் நெறிக்கட்டுதல் என்கிறோம். இந்தக் கோளங்களின் வழியாக வடிக்கட்டி சுத்தம் செய்யப்பட்ட நிண நீர் மறுபடியும் பெரிய வெயின்களில் கலந்து விடுகிறது. ஒரு சிரங்கோ, கட்டியோ ஏற்பட்டால் நெறிகட்டுகிறது. இதன் காரணம் அச்சிரங்கிலிருந்து அசுத்தப் பதார்த்தங்கள் நமது இரத்த ஓட்டத்தில் கலக்காதபடி தடுப்பதற்கு ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தடையே ஆகும்.சிவப்புக் கெபிகள் :
இருதயம் (The Heart)
இரத்த ஓட்டம்
இரத்தக் குழாய்களின் அமைப்பு
நிண நீர்க் குழாய்கள்
மருத்துவ குறிப்புகள் : இரத்தமும், இரத்த ஓட்டக் கருவிகளும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Blood and circulatory systems - Medicine Tips in Tamil [ Medicine ]