சித்த மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: சித்த மருத்துவம்
விஷக்கடிகள், தலைவலி, கண்வலி தீர்வுகள் | Remedies for poison bites, headache, eye pain

விஷக்கடிகள், தலைவலி, கண்வலி தீர்வுகள்

Category: சித்த மருத்துவம்

புரசு மரப்பட்டை சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க பாம்பு நஞ்சு தீரும்.

இயற்கை வழிமுறை மருந்துகள் காது, மூக்கு மற்றும் தொண்டை: | Natural Remedies Ear, Nose and Throat:

இயற்கை வழிமுறை மருந்துகள் காது, மூக்கு மற்றும் தொண்டை:

Category: சித்த மருத்துவம்

அளவுக்கு அதிகமான இரைச்சலைத் தொடர்ந்து செவிமடுப்பதைத் தவிர்க்கமுடியாத நிலையில் வாழும் ஒவ்வொருவரும் நரம்பு தொடர்பான பல பிணிகளுக்கு இலக்காக நேரிடும்.

வாய்ப் புண், பற்கள் வலி, வயிறு வலி நிவாரணம் அடைய | To get relief from mouth sore, toothache, stomach ache

வாய்ப் புண், பற்கள் வலி, வயிறு வலி நிவாரணம் அடைய

Category: சித்த மருத்துவம்

மூக்குப் பொடியாகவும், சிகரெட்டாகவும், பீடி, சுருட்டு போன்ற உருவத்திலும் புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கம் நம்மக்களிடையே இருக்கிறது.

தலைமுடி, பொடுகு, மூட்டு வலிகள் போக்க மருந்துகள் | Remedies for hair, dandruff, joint pain

தலைமுடி, பொடுகு, மூட்டு வலிகள் போக்க மருந்துகள்

Category: சித்த மருத்துவம்

நரம்புத் தளர்ச்சி யுகம் என்று தகுந்த காலத்தைப் பற்றிக் கூறலாம். அந்த அளவுக்கு நரம்புத்தளர்ச்சிக்கு இலக்கான மக்கள் தற்காலத்தில் அதிக அளவுக்கு உள்ளனர்.

இருதயம், கல்லீரல், சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள் | Relieves heart, liver, kidney stones

இருதயம், கல்லீரல், சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள்

Category: சித்த மருத்துவம்

நமது உடலுக்கு தேவைப்படும் முக்கியமான திரவங்களைச் சுரப்பதற்கென நமது உடலுக்குள் சுரப்பிகள் என்ற உறுப்புகள் அமைந்துள்ளன.

மருத்துவ குணம் கொண்ட பொருள்கள் | Medicinal substances

மருத்துவ குணம் கொண்ட பொருள்கள்

Category: சித்த மருத்துவம்

முழுமையான ஆரோக்கியந்தரும் உணவில் மூன்று விதமான முக்கிய சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.

உணவில் சேர்க்க வேண்டிய பொருள்கள் | Ingredients to be added to the diet

உணவில் சேர்க்க வேண்டிய பொருள்கள்

Category: சித்த மருத்துவம்

நமது தேகம் வளர்ந்து நாம் உயிர் வாழ நாம் தினசரி பலவகையான உணவு வகைகளைப் புசித்து வருகிறோம்.

பொது மருத்துவம் | General medicine

பொது மருத்துவம்

Category: சித்த மருத்துவம்

தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணமாகும்.

நோய் வராமல் நலமாக வாழ வழிமுறைகள் | Ways to stay healthy without getting sick

நோய் வராமல் நலமாக வாழ வழிமுறைகள்

Category: சித்த மருத்துவம்

தினந்தோறும் அதிகாலையிலே சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும்.

சித்த மருத்துவம் | Siddha Medicine

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் மனிதனின் அடிப்படைத் தேவைகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் சீர்குலைந்து மனிதனை நோயாளியாக மாற்றிக் கொண்டு இருக்கிறது.

: சித்த மருத்துவம் - மருத்துவ குறிப்புகள் [ சித்த மருத்துவம் ] | : Siddha Medicine - Medicine Tips in Tamil [ Siddha medicine ]

சித்த மருத்துவம்

முன்னுரை:

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் மனிதனின் அடிப்படைத் தேவைகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் சீர்குலைந்து மனிதனை நோயாளியாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இயற்கையோடு இணைந்த இந்த எளிய வைத்திய முறைகளை இச்சிறு கட்டுரையின் மூலம் ஒவ்வொரு நோய்க்கும் பலவிதமான மருந்து முறைகளைத் தொகுத்து எழுதியுள்ளேன். நோய் ஒன்றுக்கு நோயின் காரணமும். அதனை நீக்கும் வழியாக பலவிதமான மருந்துகளை தொகுத்து எழுதியுள்ளேன்.

விண்ணை விஞ்சும் விஞ்ஞானம் உருவாகி மனிதனை மயக்கினாலும். ஆடம்பரம் இல்லாத இயற்கை சூழலில் மெய் ஞானத்தில் மனிதன் தெளிவாகவும். மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான் என்பதற்கு.

"மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உனின்" என்ற குறள் மூலமாகவும், "மிகினுங் குறையினு நோய் செய்யுதுவோர் வளிமுதலா வெண்ணிய மூன்று." என்ற குறள் மூலமாகவும். திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே நம் நாட்டில் எப்படிப்பட்ட நோயையும் அதிசயத்தக்க வகையில் இயற்கை மூலிகைகள் மூலம் குணப்படுத்துவதற்கு சித்த மருந்துகள் உதவுகிறது.

மருத்துவ முறைகளில் பல்வேறு விதமான நோய் தீர்க்கும் முறைகள் தோன்றினாலும். நான்கு யுகங்களுக்கு முன்பே வாழ்ந்த சித்தர்கள் மூலம் அறிந்ததும். முதலில் தோன்றியதுமான சித்தர் தமிழ் மருத்துவமே மிகவும் பழமையானதும் மேன்மையானதும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சித்தர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகைகளின் பயன்களை அடைவதற்கு நாங்கள் சிறப்பான வழிகாட்டியாக கட்டுரையை எழுதி இருக்கிறோம். சித்தர்கள் நமக்கு வழங்கிய சித்த வைத்திய மூலிகைகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் நோய் வராமல் தடுக்க முடியும். நமது மூலிகைகளை சாப்பிடுவதனால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். காலை 9 மணிக்குள் முழு உணவு சாப்பிடுங்கள். மதியம் 3 மணிக்குள் முக்கால் பங்கு அளவு உணவு சாப்பிடுங்கள். இரவு உணவு 3 பழம், அரை முடி தேங்காய் மட்டும் சாப்பிடுங்கள், உடல் ஆரோக்கியமாக வாழ உணவு முறைகளை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

 

மருந்து உண்ணும் முறை

1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் (300 மெஸ்) வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் போது முழு பலன் கிடைக்கிறது.

3. வஸ்திரகாயம் சிறிய பாத்திரத்தில் துணியை மூலிகை பவுடரை அதன் மீது வைத்து தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்போது எல்லா மருந்து வகைகளும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது. அந்த மூலிகை பவுடரை வாங்கி துணியில் சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து அல்லது மூலிகை சாப்பிட்டு வெத்நீர் குடிக்க வேண்டும். சாப்பிடவும். ரைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக் கொள்கிறது. ஆகவே நைஸ் பவுடராக்கி சாப்பிடுங்கள்.

6. சவித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும். மீதி உள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.

ஏரானமானவர்கள் சித்த மருந்து, மூலிகை மருந்துகள் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது கட்டுரைகள் எழுதப்படுகிறது.

 

நன்றி!

: சித்த மருத்துவம் - மருத்துவ குறிப்புகள் [ சித்த மருத்துவம் ] | : Siddha Medicine - Medicine Tips in Tamil [ Siddha medicine ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: சித்த மருத்துவம்