ஆன்மீகம்

குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: ஆன்மீகம்
தெரிந்த விநாயகர் - தெரியாத தகவல்கள் | Known Ganesha - Unknown Information

தெரிந்த விநாயகர் - தெரியாத தகவல்கள்

Category: ஆன்மீக குறிப்புகள்

பெயர் விளக்கம்: விநாயகர் பெயரில் வரும் வி என்றால் இதற்கு மேல் இல்லை என்று பொருள்.

முன்னோர் ஆசி கிடைக்க அருளும் கோவில் | An auspicious temple to get the blessings of the ancestors

முன்னோர் ஆசி கிடைக்க அருளும் கோவில்

Category: ஆன்மீக குறிப்புகள்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் விளமல் என்ற ஊரில் பதஞ்சலி மனோகரர் கோயில் உள்ளது.

சங்கடங்கள் தீர்ப்பார் சங்கரநாராயணர் | Sankaranarayanar is the arbiter of dilemmas

சங்கடங்கள் தீர்ப்பார் சங்கரநாராயணர்

Category: ஆன்மீக குறிப்புகள்

சங்கரன் + நாராயணன் = ? இப்படி ஒரு கேள்வியை ஆன்மீக ரீதியாக எழுப்பினால் அனைவரின் கவனமும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை நோக்கி திரும்பும்.

ஆன்மீகம் | spirituality

ஆண்டவன் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி மேல் நாட்டில் ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டு வருகிறது.

: ஆன்மீகம் - குறிப்புகள் [ ஆன்மீக குறிப்புகள் ] | : spirituality - Tips in Tamil [ Spiritual Notes ]

ஆன்மீகம்

முகவுரை மற்றும் மதிப்புரை:

ஆண்டவன் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி மேல் நாட்டில் ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டு வருகிறது. வேத சாத்திரம் சம்பந்தமான வெளியீடுகளும் மக்களால் விரும்பப்படுகிற வெளியீடுகளும் இந்த தர்க்கத்தில் ஈடுபட்டு தங்கள் தங்களுடைய கொள்கைகளை வெளியிட்டு வருகின்றன. இந்த தர்க்கத்தின் சாதகத்தையோ பாதகத்தையோ ஆராயாமல் ஒருவன் "கடவுள் இருக்கிறார்'' என்றோ, "இல்லை" என்றோ முடிவு செய்வதானால் அவனது வாழ்க்கை முறை எவ்வாறு பாதிக்கும் என்பதனை அவனது சொந்த புத்தியே ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்து செயல்பட வேண்டும்.

பதினெட்டாவது நூற்றாண்டைப் பகுத்தறிவு சகாப்தம் என்றும், பத்தொன்பதாம் நூற்றாண்டை முன்னேற்றச் சகாப்தம் என்றும், இருபதாம் நூற்றாண்டை ஆர்வ மிகு சகாப்தம் என்றும் சொல்கிறார்கள்.

அறிவு பல வழிகளில் பெருகியும், வாழ்க்கையின் தொடர்புள்ள கலைகள் நன்றாக அறியப்பட்டும், பல விஞ்ஞான சாதனைகள் நன்கு பயன்பட்டும் வருகிற இந்நாளில் மனிதன் முன் எப்போதையும் விட தன் வாழ்வில் ஏதோ ஒரு குறை இருப்பதாக எண்ணிக்கொண்டு வருந்துகிறான். தன் மனத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் எவ்வாறு அடையலாம் என்பதை இடைவிடாமல் எண்ணிக் கொண்டு உலழ்கிறான். இந்தப் போக்கு சரியா என்பதைப்பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

'ஆத்மா நிறைவு அடையாமல் இருப்பதற்கான காரணங்களைப் பரம்பரை பரம்பரையாக அறிவாளிகள் அறிய முயன்று வருகின்றார்கள். மறுக்கப்படாமலிருக்கும் பழைய கொள்கைகள் தற்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது" என்று சிலர் சொல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஒரு புதுமை இல்லை! பொதுவுடைமைக் கொள்கைகளும் நாத்திகக் கருத்துகளும் மட்டுமே மனிதனை நிறைவு செய்வதும் முடியாது.

மனிதாபிமானம் உள்ளவர்கள் புராதனமான மதக்கொள்கைகளுடன் பிற வழிகளின் பயன்களையும் தேடுகிறார்கள். இப்படிப் பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகிறது. மற்றொரு பக்கத்தில் 'கசிலி' தனது புத்தகத்தில் 'அறிவின் கதவுகள்' என்று சொல்வது போல, தனித்து உன்னதமாக உள்ளம் நிற்கக்கூடிய நிலையில், புரியக்கூடிய ஆனந்தத்திற்கு விஞ்ஞானத்தில் திறவுகோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். மேலும் அவர் வெகுகாலத்திற்கு முன்பே அந்த உன்னதமான நிலையையடைய, பட்டினி கிடத்தல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் முதலியவற்றைக் கையாண்டார்கள் என்கிறார்.

இவற்றிற்குப் பதிலாகப் பேரின்ப சமாதி நிலையை அடைய வேறு முறைகள் உண்டென்றும் சொல்கிறார். இப்படிப் பலப்பலவாகக் கொள்கைகள் உள்ள காலத்தில் பொறியான் வலைத்தளத்தில் கூறியுள்ள சங்கதிகளைப் புரிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்மீக சிந்தனைகள் மனிதனை பேரின்பக் கடலில் சங்கமிக்க வைக்கச் செய்கிறது. தொடர்ந்து ஆன்மீக பயணத்தில் பயணிப்போம்.

: ஆன்மீகம் - குறிப்புகள் [ ஆன்மீக குறிப்புகள் ] | : spirituality - Tips in Tamil [ Spiritual Notes ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: ஆன்மீகம்