நாட்பட்ட நோய்களும், மியாசங்களும், விளக்கமும்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Chronic diseases, miasma, explanation - Medicine Tips in Tamil

நாட்பட்ட நோய்களும், மியாசங்களும், விளக்கமும் | Chronic diseases, miasma, explanation

மருத்துவத் துறைக்கு மிக முக்கியமான கொள்கையாக உலகப் பொதுமறை திருக்குறள் விதிமுறைப்படி ஒவ்வொரு மருத்துவத்துறையும் கடை பிடிக்க வேண்டியது:

நாட்பட்ட நோய்களும், மியாசங்களும், விளக்கமும்

மருத்துவத் துறைக்கு மிக முக்கியமான கொள்கையாக உலகப் பொதுமறை திருக்குறள் விதிமுறைப்படி ஒவ்வொரு மருத்துவத்துறையும் கடை பிடிக்க வேண்டியது:


"நோய் காடி நோய் முதல் நாடி அது தணிக்கும் 

வாய் நாடி வாய்ப்பச் செயல்."


நோயின் தோற்றத்தையும், அதன் காரணத்தையும், நோயை நீக்கும் வழிமுறைகளையும் ஆராய்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும். இல்லையெனில் பயனற்றதாகிவிடும். மருத்துவத் துறைக்குத் தேவையானவர்கள் நால்வர். 1 நோயாளி, 2. மருத்துவர், 3. மருந்து, 4. மருந்தை அருகிலிருந்து கொடுப்பவர். இதை வள்ளுவப் பெருந்தகை அவர்கள் மிக அழகாகத் தம் குறளில்,

'உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச் செல்வானென்று 

அப்பால் நாற்கூற்றே மருந்து"

என்று குறிப்பிட்டுள்ளார். நாட்பட்ட நோய்கள் ஏற்படக் காரணம் என்ன என்பதைக் கீழ்வரும் விபரங்கள் மூலம் அறியலாம். நாட்பட்ட நோய்கள் (Chronic diseases) நாட்பட்ட மியாசங்களால்தான் (Chronic miasms) ஏற்படுகின்றன என்பதை டாக்டர் ஹானிமன் அவர்கள் கண்டுபிடித்தார். நோயைப் பற்றி நோயாளியை விசாரித்து அறியும்போது அவருடைய உடலமைப்பு, நன்னடத்தை, புத்திக்கூர்மை கொண்ட குணம், தொழில், வாழும் விதம், பழக்கம், சமுதாயம், வீட்டு உறவுகள், வயது, பால் உணர்வு, உறுப்புகளின் செயல்கள் முதலியவைகளையும் கருத்திற் கொள்ளல் வேண்டும், (ஆர்கனான், பாரா 5)

அது மட்டுமின்றி நாட்பட்ட நோய்களைக் குணப்படுத்த மொத்தக் குறிகளை (Totality symptoms) அவசியம் கண்டுபிடித்த பிறகு அதற்கேற்ற ஒத்த மருந்தைக் கொடுக்குமுன்பு நோயாளியிடமுள்ள சுத்தமற்ற தன்மை, அவரின் உணவுப் பழக்கம், சுகாதாரக் குறைவு ஆகிய குறைபாடுகளைக் களைய வேண்டும். 

டாக்டர் ஹானிமன் அவர்களின் தத்துவம் உயிரோட்டமுள்ளது. அந்த தத்துவங்கள் தான் மியாசங்கள் என்பதாகும். அவை, சோரா, சைக்கோசிஸ், சிபிலிஸ் என்று மூன்று வகைப்படும். சோராவானது பகலில் சூரியன் தோன்றியதிலிருந்து அது மறையும் வரையிலும், சைக்கோசிஸ் பகல் இரவு எல்லா வேளைகளிலும், சிபிலிஸ் சூரியன் மறைந்ததில் இருந்து அது மறுநாள் தோன்றும் வரையிலும் தொல்லைகள் தருவது, இவைகளின் மிகமிக முக்கியக் குறிகளாகும்.

இவருடைய தத்துவமானது நோயின் காரணங்கள் (Pathological), கிருமிகள் (Bastoria). நஞ்சுகளகற்றியது பற்றியவைகள் (Anti - toxic theories). கண்டுபிடிப்புகள் (Discoveries), நோயைக் குணப்படுத்தும் அடிப்படைகள் (Basis for therapeutics) ஆகியவைகளுக்கு எதிரிடையானதாகும். இவைகள் யாவும் நோய்களை குணப்படுத்தப் போதுமான, பாதுகாப்பான, அடிப்படை தளம் கொண்டவைகளல்ல என்பதை அறிகிறோம்.

மியாசம் என்பதற்கு "சூழ்நிலையால் ஏற்பட்ட நஞ்சின் செல்வாக்கு'' என்று பொருளாகும் (Miasm :-polsonous Influence from the Atmosphere).

நாட்பட்ட நோயை மூன்று வகையாக பிரிக்கலாம்:

1. வெளிப்படையாகத் தெரிவது— Patent

2. உள்ளே மலைந்திருப்பது - Latent

3. மருந்தால் ஏற்படுவது - Medicinal

முதலில் வெளிப்படையாகத் தெரிவதை எடுத்துக் கொள்வோமானால், இதில் நான்கு உட்பிரிவுகள் உண்டு. 

(அ) பொதுவானது (General). 

(ஆ) ஒருபக்கம் (One-sided), 

(இ) சிக்கலானது (Complicated) 

(ஈ) விட்டுவிட்டோ மாறியோ வருதல் (Intermittant and Alternating).

1. பொதுவானதில் (General) சோரோ சைக்கோசிஸ், சிபிலிஸ் அடங்கும். நாட்பட்ட நோய்கள் பெரும்பாலும் இம் மியாசங்களால் ஏற்பட்டாலும், உடலில் செயற்கையாகவே தோன்றும் நாட்பட்ட நோய்களும் உண்டு. இவைகள் மியாசத்துடன் தொடர்பு கொண்டுள்ள நோய்கள் அல்ல. ''உடலுக்குக் கெடுதல் செய்யக்கூடியவைகளான வழக்கமாக மது அருந்துதல், உபவாசம் இருத்தல், சுகாதாரமற்ற சதுப்பு நிலத்தில் வாழ்தல், ஈரமுள்ள தரையில் படுத்தல், மனத்தாலும் உடலாலும் வருத்திக் கொள்ளுதல், தொடர்ந்து கவலையிலிருந்தல் ஆகியன இருந்து, அதனால் உடல் பலகீனப்பட்டு நாட்பட்ட நோயாகித் துன்பப்பட்டாலும், மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு முன்னேற்றமான வாழ்வைப் பெறத் தான் கடைபிடிக்கும் நடவடிக்கைகளால் ஒருவருக்குள்ளே நோய் தானாகவே மறைந்து விட்டால் அவைகள் நாட்பட்ட நோய்களாகாது. அங்கே நாட்பட்ட மியாசமும் மறைந்திருக்காது ("ஆர்கனான்: பாரா. 77).

அடுத்து மியாசத்துடன் தொடர்பு கொண்ட நாட்பட்ட கொடுமையைப் பற்றி ஆர்கனான் பாரா 78ல் "ஒரு நாட்பட்ட மியாசத்தினால்தான் உண்மையான இயற்கையான நாட்பட்ட நோய்கள் தோன்றுகின்றன, அவைகளை தக்க மருந்து கொடுத்து நீக்காமல் விட்டுவிட்டால், மனமும் உடலும் நன்றாக இருப்பினும் நோய் அதிகமாகி வளர்ந்து, நோயாளிக்கு கடும் வேதனையைச் சாகும் வரை தந்து, எப்போதும் அதிக துன்பத்தில் நோயாளியை ஆழ்த்திவிடும். மியாசங்கள் இம் மனித இனத்திற்கு எண்ணற்ற கொடுமையைத் தருவதுடன், அதிக திடகாத்திரமும், கட்டுக் கோப்பான உடலமைப்பையும் முறையான நல்வாழ்க்கையையும், பலம் வாய்ந்த உயிர்சக்தியைக் கொண்டிருந்தும் மியாசங்களைப் போக்க இவைகள் போதுமானவைகள் அல்ல" என்று வரையறுத்துக் கூறுகிறார்.

நோயும் அதன் காரணங்களைப் பற்றி அறியும் (Pathology) நூலில் காணும் விபரங்கள் யாவும், எண்ணிலடங்கா பலதரப்பட்ட நோய்களும் அவை தோன்ற மூலகாரணமானதும் அடிப்படையானதும் ஆக உள்ளது "சோரா"வே யாகும். இந்த சோரா மிகப்பழமையானதும் உலகத்தில் மிகப் பரந்த அளவிலும் மிக அதிக அளவிலும் கெடுதலை உண்டாக்கக் கூடியதுமான நாட்பட்ட மியாசம் –நஞ்சு - இதுவேயாகும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருப்பதால் அதற்கேற்றவாறு நோயின் குறிகளும் பரவியுள்ளன. இதன் இரண்டாம் நிலையில் ஏற்படும் நோய்க்குறிகள் கணக்கிடமுடியாத அளவிற்கு தோன்று வதை ஆர்கனான் பாரா 80 ல், "பயங்கரமாக இருக்கும் நாட்பட்ட மியாசமே இந்த சோராதான். எல்லா எண்ணற்ற நோய்களையும் உற்பத்தி செய்யக்கூடிய உண்மை யான காரணகர்த்தா இது ஒன்றுதான்" என்று கூறியுள்ளார்.

அவ்வெண்ணற்ற நோய்களை சிறப்பானதாகவும் (Peculiar), சுயேச்சையானதாகவும் (Independent) உள்ளதாகப் பிரித்து, நோயும் காரணங்களும் (Pathology) நூவில் தனித்தனிப் பெயரிட்டு முறைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு நோயின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு சிகிச்சையளிப்பது சரியல்ல என்பதையும், நோய்க் குறிகளின் மாறாத குணத்தைக் கொண்டு தனிப்பெயரிட்டு அழைக்கத் தேவையில்லை என்பதையும் அறிகிறோம். சோரா நம் உடலில் கறைபடிந்த நோயாகும். வெளியே தெரிவது சாதாரணமாக இருப்பினும் அது இரண்டாம் நிலையாகும். முதல் நிலையில் அது உடலின் உள்ளே வேரூன்றி மறைந்து கிடக்கின்றது. இது அசட்டை செய்ய முடியாத நாட்பட்ட மியாசம். அதைப் போக்க மேல்பூச்சு மருந்துகளைப் பயன்படுத்தி நீக்கச் செய்தோமானால், மேலே தோன்றியுள்ள நோய் அமுக்கப்பட்டு, அது கூடிய சீக்கிரம் உள்ளிருக்கும் சோராவைத் தூண்டிவிட்டு அதிகரிக்கச் செய்துவிடுகிறது. இதன் மூலம் நோயின் தன்மை அதிகரிக்கிறது.

சோராவின் குறிகளை எல்லாம் ஒரே நபரிடம் காண முடியாது. நபருக்கு நபர் மாறுபடும். ஒருவருக்கு அதிகமாயும், இன்னொருவருக்கு குறைந்தும், மற்றொருவருக்கு அமுக்கப்பட்டும் இருக்கலாம். சோரா நோயுற்றவர்கள் குணம் பெறுவதில் முன்னேற்றம் ஏற்படுவதெல்லாம் சுற்றுப்புறச் சூழ்நிலையாலும், உடல் அமைப்பாலுமே யாகும். குற்றம் காணும் தன்மையும். கவலையற்று மகிழ்ச்சியாகவும், அமைதியுடனும், உணர்ச்சி வயப்படாலும் இருக்கும் நிலைமைகளில் சோராவானது வெளியே தெரியுமளவிற்கு வளராமலும், மனநிலையில் தீய எண்ணம் ஏற்படாத வரையிலும் நிரந்தர நாட்பட்ட நோயாக மாறாலும் பல ஆண்டுகளுக்கு உடலினுள் மறைந்து கிடக்கும்.

ஒருவருடைய மனத்திலும் உடலிலும் நோயினாலோ, வேறு பாதிப்பினாலோ மாற்றம் ஏற்படும்போது, ஆழப் பதிந்து மறைந்து கிடக்கும் சோரா, பெரும் எண்ணிக்கையுடனும் பலத்துடனும் தோன்றுகிறது. இந்நிலையில் கிளர்த்தெழுந்துள்ள சோராவின் குறிகளையும் அதன் வெறித் தன்மையையும் ஒவ்வொரு நோயாளியின் தனித் தன்மைக்கேற்றவாறும், மாறுபட்டுள்ளதற்கிணங்கவும், குறிகளுக்கும் ஏற்ப கவனமாக சிகிச்சையளிக்க வேண்டும்.

சைக்கோசிஸ்: இது சிறுநீர் புறவழியில் வெள்ளை ஒழுகலால் ஏற்படுவதாகும். இதற்கு கொனேரியா என்று பெயர். இந்த நோய் தாக்கப்பட்ட நபருக்கு ஐந்து முதல் பத்து நாட்களுக்குள் குறிகள் தென்படும். வெள்ளை ஒழுகலைக் குணப்படுத்துவதற்கு பதிலாக அந்நோய் அமுக்கப்பட்டால் இரண்டாவது நிலையில் அது உள்ளுறுப்புகளில் தங்கி அழற்சியைத் தோற்றுவிக்கிறது. சரியான முறையில் அதை நீக்க சிகிச்சையளிக்காவிட்டால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் மூன்றாம் நிலையில் சைக்கோசொக மாறுகிறது. பாதிக்கப்பட்டவரின் உடலில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருப்பதோடு பரம்பரையாக நோய் தோன்றவும் காரணமாகிவிடுகிறது. இதனால், கழலை, மரு, பாலுண்ணி, சதைக்கட்டி போன்றவைகள் தோன்றுகிறது. இவைகளை அழிக்க அறுவை மூலமோ வெளிப்பூச்சு மூலமோ முயன்றால் வேறு இடங்களில் தோன்றச் செய்யும். தோலின் மீது வளர்ந்துள்ளவைகளை அழித்துவிட்டால் நோயாளியை குணப்படுத்திவிட்டதாக நினைப்பது சரியல்ல. சைக்கோசிஸை நீக்க ஆழ்ந்து வேலை செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.

சிபிலிஸ் : இது ஒரு தொற்றுநோய், ஆண், பெண் உடலுறவால் ஏற்படுவதாகும். அதாவது நோய் ஏற்கனவே உள்ளவர் மூலம் பரவுவதாகும். இவ்வகைத் தொற்றுநோயில் கிருமிகள் உள்ளுறுப்புகள் முழுவதையும் தாக்காமலே புண் போன்ற நோயைத் தோன்றச் செய்கிறது. சிபிலிஸ் புண்ணை (Chancre) வெளிப்பூச்சு மூலம் நீக்கம் செய்தால் அது உள் நோயாக மாறி பிறகு முதிர்ந்த நோயாக இரண்டாம் நிலையில் ஏழு முதல் பத்து வாரங்களில் வெளியே வரும். பிறரைத் தொற்றுவது இரண்டாம் நிலையில் தான். ஆரம்ப நிலையில் சிகிச்சை செய்யாமல் மறைந்த குறிகள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கடுமையான நோயாகத் தோன்றுவது மூன்றாம் நிலை யாகும். ஆரம்பத்தில் ஏற்பட்ட புண்ணின் சுவடு தெரியாது. ஆனால் அவ்விடத்தில் நீலநிறத்துடனுள்ள தழும்பு காணப்படும். துடை இடுக்கில் கட்டி (Bubo) தோன்றும். சிபிலிஸ் மியாசம் சக்தி வாய்த்தது. சிக்கலானது. நாட்பட்ட நோயைப் சிபிலிசும் நாட்பட்ட தஞ்சை உறுப்புகளில் தொடர்ந்து இருக்கச் போலவே செய்கிறது, அதனால் உறுப்புகளில் பல ஊனங்கள் சிபிலிஸ் மியாசத்தால் ஏற்பட ஏதுவாகிறது.

ஆ. ஒரு பக்கம் (One-sided) என்பதில் ஒரு நோயில் அதன் குறிகள் குறைந்த அளவு மட்டுமே இருக்கும். ஒன்று அல்லது இரண்டு முக்கிய குறிகளை மட்டுமே வெளியே காட்டும். பெரும் பாலான குறிகள் நமக்குத் தெரியாது. அதனால் இதை ஒரு பக்கமுடையது என்கிறோம். 

இதில் இரண்டு வகையுண்டு, ஒன்று உடல் சம்பந்தப்பட்டது (Corporal); இரண்டாவது மனத்தின் சம்பந்தப்பட்டது (Mental).

1. உடல் சம்பந்தப்பட்டதில் முக்கிய உட்குறிகள் உள்ளன. பல ஆண்டுகளாக இருக்கும் தலைவலி, நீண்ட நாட்களாக இருக்கும் வயிற்றுப்போக்கு, தெய்ஞ்சுவலி முதலியனவும், அல்லது வெளிக்குறிகளான படை, பவுத்ரம், மரு முதலியனவும்அடங்கும்.

2. மனம் சம்பந்தம் என்றால் பெரும்பாலான நோய்களுக்கு சோரா மூலகாரணமாக இருப்பதாலும் நோயின் குறிகள் வெளியே தெரியாமல் மறைந்திருப்பதால் அவைகளின் சிறப்பான தனிக்குறிகள் தெரியாததாலும், குறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குணப்படுத்துவதில் கடினமாக தோன்றுவதால் "ஒரு பக்கம்" உள்ளது என அழைக்கப்படுவதோடு இவைகளுக்கு மன நோய்கள் என்றும் அழைக்கப்படுறெது. மேலும் மெதுவாக படிப்படியாக உடல் பாதிப்பால் மனத்தில் ஏற்படும் குறிகளான ஆர்வம், பைத்தியம், பித்து, மகப்பேற்றின்போது வேதனையால் ஏற்படும் மனக்கோளாறுகள், துரையீரலில் சீழ்பிடித்தலால் ஏற்படும் பைத்தியம், திடீரென்று ஏற்படும் அதிர்ச்சி, பயம், கோபம், வெறுப்பு முதலியனவும், நாட்பட்ட உடல்நோய் தோற்றுவித்த மனநோய்க் குறிகளும் இதில் அடங்கும்.

இ. சிக்கலானது (Complicated) என்பதில் சோராவும் கிபிலிசும், சோராவும் சைக்கோசிகம், பிெலிசும் சைக்கோரிகம், சைக்கோசிசும் சிபிலிசும் கலந்து இருந்தால், இவைகளுக்கு சிக்கலான நோய்கள் என்று பெயர். சோரா, சைக்கோசிஸ், கிபிலிஸ் ஆகிய மூன்றும் ஒன்றுசேர்ந்தால் நோயாளிக்கு ஆயுளின் முடிவைச் சீக்கிரம் ஏற்படுத்தும்.

ஈ விட்டுவிட்டு மாறி மாறி வருதலில் (Intermittant and alternating} காய்ச்சலும், சில குறிப்பிட்ட காலங்களில் காய்ச்சல் அல்லாத நோய்களும் இடைவெளிவிட்டு காய்ச்சலைப் போலவே பலவகை நோய்கள் குறிப்பிட்ட காலத்தைக் கடத்து மாறியும் வரும். கால் வலி நீங்கி கண்வலியும், முழங்கால் வலி நீங்கி நெஞ்சு வலியும், சீதபேதி படை மறைந்து ஆஸ்த்துமா ஏற்படுவதும், வியர்வையை அமுக்கியதால் வயிற்றுப்போக்கு ஆரம்பித்தலும் முதலியன. மாறிவரும் நோய்களில் எண்ணிலடங்காத இவைகளெல்லாம் நாட்பட்ட நோயின் வகுப்பைச் சேர்ந்தவைகளாகும். பொதுவாக அவைகளில் சோரா ஒன்று மட்டுமே வைத்து வளர்ந்ததாகும்.


1. டாக்டர் ஹெரின் அவர்களின் விதிப்படி "உள்ளிருந்து வெளியே மேலிருந்து கீழும், திரும்ப முறையாக முன்தோன்றிய இடத்திற்கே வந்து பிறகு குணமாகுதலாகும். ''உதாரணமாக மூட்டு (Joints) வலி குறிகளுடன் தோன்றி கீல்வாதக் காய்ச்சலோடு (Rheumatic fover) இருந்த நோயாளிக்கு காய்ச்சலும், மூட்டுவலியும் மறைந்து, அவருக்கு இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு ஓத்த (Similar) மருத்தை பயன்படுத்தியபோது இருதய பாதிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு. நெஞ்சுவலியானது தோள்களுக்கும் முழங்கைகளுக்கும் திரும்பி. பிறகு இவை மறைந்து மீண்டும் வலியானது முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, வலிக்குறிகள் நீங்கி நோயாளி முழுக் குணமடைகிறார். இவ்வாறின்றி வலியானது மீண்டும் இருதயத்திற்கே திரும்ப வந்தால் நோய் நீக்க தேர்ந்தெடுத்து கொடுத்த மருத்து தவறானது என்பதை அறிய வேண்டும்.


2. உள்ளே மறைத்திருத்தலில் (Latent) உள்ளுறுப்புகளில் நோயானது எந்தவித குறியும் இவ்வாமல் மறைந்து குடிகொண் டிருப்பதாகும். மியாசங்கள் கடுமையான நிலைக்கு மாறும் போது அவை உறுப்பைத் தாக்கினாலோ அல்லது உணவு, தட்ப வெப்ப நிலை, இயங்குதல் (Machanical). ஆன்மீகம் (Astral) நில சம்பந்தம் (Terrestrial) ஆகியவைகளினால் பாதிக்கப்பட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டு, அவ்வப்போது தோய்க்குறிகளை வெளியே தோன்றச்செய்து பிறகு மெதுவாக வளர்த்து பயங்கரமான நோயாகக் கொண்டு வத்துவிடுகிறது.


3. மருந்தினாலாவதில் (MedicInal) நீண்டகாலத்திற்குப் பண்படுத்தப்படாத வீரமுள்ள மருந்துகளை (Crude Drugs) அதிகவளவில் பயன்படுத்தியதால் ஏற்படும் நோய்கள் என்பதாகும். உதாரணமாக சல்பர் மெர்குரி, அயோடின், சில்வர் நைட்ரேட் மருத்துகளையும் அதன் களிம்புகளையும், ஓபியம், வலேரியன் கொய்னா,பின்கோனா பட்டை, ஈயம், சல்பூரிக் ஆசிட் முதலியவைகளையும் பயன்படுத்தியதால் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இம் மருந்துகளின் ஆரம்ப செயவில் (Primary actlon) நலமுள்ள உடல்மீது மருத்தினால் ஏற்படும் செயற்கைதோலை தம் உயிர்ச் சக்தியானது வரவேற்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டு செயற்கை சக்தியை அனுமதித்து உடல்தவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது -(ஆர்களான் பாரா. 64).

நம் உடலில் உள்ள உயிர்ச் சக்தியைப் பற்றி கூறும்போது உடலுக்கு (Body) உயிருக்கும் (Spirit) இடையில் ஒரு பலம் வாய்ந்த சக்தி (Vital force) மையப் பொருளாக இருந்து கொண்டு இந்த உயிரான ஆத்மாவை ஒரு கால அளவிற்கு இந்த உடலில் இருக்கச் செய்கிறது. உடலும் உயிரும் நலமாக இருக்கத் துணைபுரிவது பலம் வாய்த்த சக்தியான உயிர்ச்சக்தியே ஆகும். உடலில் தேய்மானம் நோய்கள் தாக்குதல் ஏற்படும்போது உயிர்ச் சக்தியை (Vital force) அவைகள் பலகீனப்படுத்துகின்றன. இந்த பலகீனப்படுத்தலால் முதலில், உடலும் பிறகு உயிரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. உடல் பாதிக்கப்படும்போது மியாசங்களின் அடிப்படையில் பலவித நோய்களும், உயிர் பாதிக்கப்படும்போது மனத்தில் பலவிதக் குறிகளையும் தோற்றுவிக்கின்றன. "உயிர்ச் சக்தி இல்லாத நிலையில் இந்த உடல் உறுப்பில் உணர்வோ, செயல் பாடோ, சுயபாதுகாப்போ அதற்கு இருக்காது. எல்லா உணர்வுகளையும் இயக்கங்களையும் உயிருடன் இருக்க முழுவதுமாக உடல் நலத்திலும், நோயிலும் தூண்டிவிடுவது இந்த அருவ மான (Immatorlal Boing) பொருள் இந்த உயிர்ச் சக்தி என்பது அடிப்படையான உண்மையாகும்"-(ஆர்கனான் பாரா-10).

மருத்துவ குறிப்புகள் : நாட்பட்ட நோய்களும், மியாசங்களும், விளக்கமும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Chronic diseases, miasma, explanation - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்