சருமம் (The Skin) பற்றிய விளக்கங்கள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Descriptions of The Skin - Medicine Tips in Tamil

சருமம் (The Skin) பற்றிய விளக்கங்கள் | Descriptions of The Skin

நமது சரீரம் பூராவையும், சருமம் அல்லது தோல் மூடிக்கொண்டு இருக்கிறது.

சருமம் (The Skin) பற்றிய விளக்கங்கள்:


நமது சரீரம் பூராவையும், சருமம் அல்லது தோல் மூடிக்கொண்டு இருக்கிறது. இதன் உபயோகம் உள்ளிருக்கும் தசைகளைக் காப்பாற்றுவதுடன் சரீரத்துக்கு உபயோகமற்ற சில பதார்த்தங்களை வெளியேற்றுவதும், சரீரத்தில் சீதோஷ்ண நிலையைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்வதும், தொடு உணர்ச்சியைக் கிரகிப்பதுமாகும்.

சருமம் இருவகைத் தோல்களால் ஆகியது. மேலே இருப்பது மேல்தோல் (Epidermis). அதற்கு உள்ளே இருப்பது உள்தோல் (Dermis). மேல் தோலின் கனம் பல பாகங்களில் பல மாதிரியாக இருக்கும் உதாரணமாக நமது உள்ளங்காலில் இதன் கனம் ஒரு அங்குலத்தில் 20-ல் ஒரு பாகம் இருக்கிறது. ஆனால் நமது முகத்தில் இதன் கனம் ஒரு அங்குலத்தில் 200-ல் ஒரு பங்கு தான் இருக்கிறது. இது கெட்டியான செதில்கள் போன்ற ஒரு வகைக் கெபிகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. வெளித் தோலின் உட்பாகத்தில் ஒருவிதமான வர்ணத் தசை இருக்கிறது. அதுதான் நம் தோலுக்கு நிறத்தை அளிக்கிறது. வெள்ளைக்காரர்களுக்கு அந்த வர்ணத் தசை மெல்லியதாகவும் உஷ்ணப் பிரதேசத்தில் இருப்பவர்களுக்குக் கனமாகவும் இருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு இது கனமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தோல் கறுப்பு நிறமாகவும் உஷ்ணத்தைத் தாங்கும் சக்தியுள்ளதாகவும் இருக்கும்.

வெளித்தோலில் இரத்தக் குழாய்கள் கிடையாது. ஆனால் உள்தோலில் இருக்கும் சிறிய இரத்தக் குழாய்களிலிருந்து வெளிப்படும் நிணநீர் இந்த வெளித்தோலைப் போஷிக்கிறது வெளித் தோலில் அதி நரம்புகளும் கிடையாது ஆகவே வெளித் தோலின் காயம் பட்டால் வலி தெரியாது.

பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் மேல்தோலில் பல சிறிய துவாரங்கள் தென்படும். இவைகள் வியர்வைக் கோளங்களிலிருந்து வெளிவரும் துவாரங்கள்.

பூந்தசைகள் அல்லது மியூகஸ் மெம்ரேன்கள் (Mucous Membranes) என்பவை, எல்லா உள் அவயவங்களிலும் மேலாக இருக்கும் மெல்லிய தசைகளாகும். மியூகஸ் மெம்ரேன்கள் உள்ளும் வெளியிலும் சந்திக்கும் இடங்களில் தோலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது உதடுகளிலும், கண்களின் ஓரங்களிலும், அபானத்திலும் மியூகஸ் மெம்ரேன்கள் தோலுடன் சேருகின்றன. தண்ணீர் முதலிய திரவ பதார்த்தங்களில் கரைந்திருக்கிற பதார்த்தங்களை உள்ளுக்குக் கிரகித்துக் கொள்ளும் சக்தி இந்த மெம்ரேன்களுக்கு உண்டு. ஆகையினால் தான் நமது ஹோமியோபதி ஔஷதங்கள் வாயிலேயே கிரகிக்கப்பட்டு வேலை செய்கின்றன.

உள் தோல்தான் நிஜமான தோலாகும். இது மேல்புறத்தில் கெட்டியானதாகவும், உட்புறத்தில் மிருதுவாகவும் இருக்கின்றது. உட்பாகத்தில் அதில் சிறிதளவு கொழுப்பு உண்டு. இந்த உள் தோலில் அனேக நரம்புகளும் இரத்தக் குழாய்களும் இருக்கின்றன. உள்தோலின் வெளிப்புறத்தில் பல விரல்கள் போன்ற சிறிய முளைகள் இருக்கின்றன. இவைகள் ஒவ்வொன்றிலும் பல நரம்புகளும் இரத்தக்குழாய்களும் இருக்கின்றன. இவைகளுக்கு உணர்ச்சிக் கெபிகள் என்று பெயர். சரீரத்தின் எந்த பாகத்தில் உணர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அவ்விடங்களில் அதிக உணர்ச்சிக் கெபிகள் இருக்கின்றன. தவிர அவ்விடங்களில் மேல் தோல் மிக மெல்லியதாகவும் இருக்கின்றது.

தோலில் இருவகைக் கோளங்கள் இருக்கின்றன. ஒன்று மயிர்க்கால் கோளங்கள். மற்றது வியர்வைக் கோளங்கள். ஒவ்வொரு வியர்வைக் கோளமும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் கம்பி போன்ற சுருளாகும். இதன் பக்கங்களில் பல காபில்லரிகள் இருக்கின்றன. அவைகளில் இரத்தம் வரும்போது அதிலிருந்து வியர்வை பிரிக்கப்படுகிறது. வியர்வைத் தண்ணீரில் சோடியம் குளோரைடு (Sodium Chloride) என்னும் உப்பும் யூரியாவும் கரைக்கப்பட்டு இருக்கின்றன.

வியர்வையின் முக்கிய உபயோகம் நமது சரீரத்தின் சீதோஷ்ணத்தை சம நிலையில் வைத்திருப்பது. வெய்யிற் காலத்திலும் அதிக உழைப்பினாலும் நமது சரீரத்தில் அதிக உஷ்ணம் உண்டாக்கப்படுகின்றது. அப்பொழுது வியர்வை உண்டாவதால் சரீரம் குளிர்ச்சியாக்கப்படுகிறது. வெயிற் காலத்திலும் அதிக உழைப்பினாலும் அதிக வியர்வை உண்டாவது தோலிலிருக்கும் காபில்லரிகள் விரிந்து அதிக இரத்தம் தோலில்வர ஏதுவாகிறது. அதிக இரத்தம் கோளங்களின் பக்கங்களில் வரவே அதிக வியர்வையும் உண்டாக்கப்படுகிறது.

மயிரும் நகங்களும் : இவைகள் வெளித்தோலின் வளர்ச்சிகளே ஆகும். இவைகளில் வெளித்தோல் கெபிகள் ஒரு மாதிரியான மாறுதல்களை அடைந்து ஒரு கெட்டியாகி இருக்கிறது. மயிரும் வெளித் தோலி லிருந்து உற்பத்தியாகிறது. ஒவ்வொரு மயிருக்கும் ஒரு வேர் உண்டு. அந்த வேரின் அடியில் கோளமும் உண்டு இந்த கோளத்தில் ஒருவிதமான பசை உற்பத்தியாகி மயிரைப் பளபளப்பாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு மயிருக்கும் நரம்பு இருக்கிறது. அதன் உதவியால் மயிர் விறைப்பாக நிற்க முடிகிறது.


சரீரத்தின் சீதோஷ்ணம்

சரீரத்தின் உஷ்ணம் ஏற்படுவது முக்கியமாகத் தசைகளிலும் நீர்களை உற்பத்தி செய்யும் கோளங்களிலும் நரம்பு ஸ்தானங்களிலும் ஏற்படும் பெளதிக சக்தியினால் ஏற்படுகிறது அதாவது கெபிகள் பிராண வாயுவைக் கிரகித்துக்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் போது அதிக உஷ்ணம் ஏற்படுகிறது. ஆகவே, எவ்வளவுக்கெவ்வளவு தசைகள் அதிகமாக வேலை செய்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அதிக உஷ்ணம் உற்பத்தியாகிறது உஷ்ணம் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்போது உஷ்ணம் நஷ்டமும் ஆகிக்கொண்டே இருக்கிறது. இம்மாதிரியாக உஷ்ண உற்பத்தியும் நஷ்டமும் ஆகிக் கொண்டே இருப்பதில் நிரந்தரமாக இருப்பது 98.4 பாரன்ஹீட் டிகிரி ஆகும். சரீரத்திலிருந்து உஷ்ணம் நஷ்டமாவதற்கு இரண்டு வழிகள் முதலாவது சரீரம் உஷ்ணமாயிருக்கும்போது அதைச் சுற்றிலுமுள்ள காற்றின் உஷ்ணம் உண்டு குறைவாக இருந்தால் சரீரம் சிறிது உஷ்ணத்தை அதைவிட வெளியிடுகிறது. தவிர வியர்வை உற்பத்தியாலும் சிறிது உஷ்ண நஷ்டம் ஏற்படுகிறது.

மேலே உஷ்ண கூறியபடி நஷ்டமும் உஷ்ண உற்பத்தியும் சரிகட்டிக்கொண்டு சரீரம் எப்பொழுதும் ஒரே சீரான உஷ்ணத்தில் இருக்கு கின்றது. சரீரத்தில் உஷ்ண உற்பத்தியையும் உஷ்ண நஷ்டத்தையும் நம் இஷ்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்றாலும் சரீரத்தின் சீதோஷ்ண சமநிலை நம்முடைய முயற்சி இல்லாமலேயே நடந்து வருகிறது. அதாவது இன்வாலண்டரி நரம்புகளின் ஆட்சியால் நடந்து வருகிறது சருமத்தில் இரத்த ஓட்டத்தை அமைக்க மூளையில் ஒரு பாகத்திலிருந்து உத்திரவுகள் கிளம்பி சரீரம் அதிக உஷ்ணமானால் இரத்த ஓட்டத்தை விருத்தி செய்து வியர்வையை உற்பத்தி செய்து உஷ்ண நஷ்டம் ஏற்படும்படி செய்து சரீர சீதோஷ்ணம் நிலைமையை சம செய்கிறது. இரத்த ஓட்டத்தைக் மூளையில் மெடுல்லா அடையும்படி கட்டுப்படுத்தும் இடம் ஆப்ளாங்கடாவில் இருக்கிறது. உஷ்ணத் தாக்குதலினால் இந்த இடம் சரியாக வேலை செய்யாவிட்டால் உடனே 108 டிகிரி வரையில் உஷ்ணம் அதிகமாகி சாவு ஏற்படும். அதைத்தான் சூரிய இடி (Sun stroke) என்கிறோம்.

சரீரத்தின் உஷ்ணத்தை அளப்பது தர்மாமீட்டர் என்னும் கருவியால். தர்மாமீட்டர்களில் பலவகை உண்டு. தர்மாமீட்டர் என்னும் கருவிக்கு உஷ்ண மானி என்று பொருள். சரீரத்தின் உஷ்ணமானிக்கு க்ளினிகல் தர்மாமீட்டர் (Chinical Thermometer) என்று பெயர். இதிலிருக்கும் அளவுகளைக்கொண்டு 95 டிகிரி முதல் 110 டிகிரி வரையில் உஷ்ணத்தை அளக்க முடியும். மனிதனின் சராசரி உஷ்ணம் சுக சரீரமாயிருக்கும்போது 98.4 டிகிரி.

சரீரத்தில் எல்லாப் பாகங்களிலும் உஷ்ணம் அல்லது அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இம்மாதிரியாக இருப்பது இரத்த ஓட்டத்தினால் ஏற்படுகிறது. சிறிது பலமான உடற்பயிற்சி உழைப்பினால் அப்பொழுது மாத்திரம் உஷ்ணம் சற்று அதிகமாக இருக்கும். உஷ்ணமான அல்லது குளிர்ச்சியான உணர்ச்சிக்கும் சரீர உஷ்ணத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. உதாரணமாக அதிக சுரத்தினால் சரீர உஷ்ணம் அதிகமாய் இருக்கும்போது சிலருக்கு குளிர் ஏற்படுகிறது அல்லவா? இதன் காரணம் சரீரத்தின் சருமங்களில் உள்ள காபில்லரிக் குழாய்களிலுள்ள இரத்த ஓட்டத்தைப் பொறுத்தது. காபில்லரிகளில் அதிக இரத்த ஓட்டம் இருந்தால் உஷ்ணமான உணர்ச்சி ஏற்படும். இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் குளிர் உண்டாகும்.

தர்மாமீட்டரில் இரசம் இருக்கும் குண்டுப்பாகத்தை, அக்குளிலாவது, நாக்கின் அடிபாகத்திலாவது வைத்து சரீர உஷ்ணத்தை அளக்கலாம். சில சமயங்களில் அபானத்தினுள்ளேயும் வைத்துப் பார்ப்பது உண்டு. இவ்விடத்தில் உஷ்ணம் சுமார் அரை டிகிரி முதல் 1 டிகிரி வரையில் அதிகமாக இருக்கும்.

மனிதனின் சராசரி உஷ்ணம் 97.8 முதல் 99 டிகிரிக்குள் இருக்கும். இது அதிகமாக இருப்பது இரவு சுமார் 8 மணிக்கு, மிகவும் குறைவாக விடியற் காலை சுமார் 4 மணிக்கு இருக்கும். வயதானவர்களை விட குழந்தைகளுக்கு உஷ்ணம் அதிகமாக இருக்கும். சரீரத்திலிருத்து எக்காரணத்தினாலாயிலும் அதிக இரத்தம் வெளியேறிவிட்டால் உஷ்ணம் குறைவாக இருக்கும். தவிர ஒரு நீடித்த வியாதிக்குப் பிறகும் இருதயக் கோளாறுகளிலும் உஷ்ணம் குறைவாக இருக்கும்.


சரீர உஷ்ணம்

100 டிகிரி இருந்தால் அதை சொற்பமான சுரம் என்க

102 டிகிரி இருந்தால் அதை சுமாரான சுரம் என்க

104 டிகிரி இருந்தால் கடுமையான சுரம் என்க

105 டிகிரிக்கு மேலிருந்தால் அது மகா கடுமையான சுரம் என்க

97.5-க்குக் குறைவாகவோ அல்லது 99.3-க்கு அதிகமாகவோ சரீர உஷ்ணம் நீடித்து இருந்தால் அது வியாதியின் அறிகுறியாகும்


இந்திரியங்கள் (The Special Senses)

உணர்ச்சி என்பது ஏதாவது ஒரு உணர்ச்சி நரம்பு கொண்டு வரும் உணர்ச்சியை நாம் அறிந்து கொள்வதாகும். உணர்ச்சி ஒரு விசேஷ உணர்ச்சி அவயவத்திலிருந்து ஏற்படுகிறது. ஐம்புலன்கள் என்று சொல்லப்படும் ஐந்து விசேஷ உணர்ச்சிகள் தொடு உணர்ச்சி, ருசி,வாசனை, சப்தம், பார்வை இவைகளாகும். உணர்ச்சி நரம்பு கொண்டு ஒரு வரும் செய்தி மூளைக்குச் சென்று அங்கு தான் உணர்ச்சி ஏற்படுகிறது.

தொடு உணர்ச்சி: சரீரத்தின் எல்லாப் பாகங்களின் மேலும் இருக்கும் சருமத்தில் தொடு உணர்ச்சி இருக்கிறது. சருமத்திலும், மூக்கு, வாய் முதலியவைகளின் உள்ளே இருக்கும் மியூகஸ் மெம்ரேன்களிலும் முடியும் உணர்ச்சி நரம்புகளின் நுனியில் தொடு கெபிகளென்று சொல்லப்படும் ஒரு விதமான கூட்டங்கள் இருக்கின்றன. இவைகளின் உதவியால் தான் தொடு உணர்ச்சி கிரகிக்கப்பட்டு உணர்ச்சி நரம்புகளின் வழியாக மூளைக்கு எட்டுகிறது. விரல்களின் நுனிகளிலும் நாசிகளின் நுனிகளிலும் கீழ் உதட்டிலும் தொடு உணர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

சீத உஷ்ணமும், வலியும் : இவைகளைத் தெரிவிக்க மற்றொரு விதமான கெபிக்கூட்டங்கள் இருக்கின்றன. இவைகள் வெளித்தோலுக்கு அடியில் இருக்கின்றன். இவைகளும் தொடு உணர்ச்சிக் கெபிகளும் வெவ்வேறானவை.

ருசி : ருசி அறிவிக்கும் அவயவம் நாக்கு. அது தசைகளினால் ஆக்கப்பட்டு மியூகஸ் மெம்ரேன்களால் இணைக்கப்பட்டிருக்கிறது. கீழ்ப்பக்கத்தில் வழவழப்பானதும் மேல் பக்கத்தில் சொறசொறப்பானதுமான மியூகஸ் மெம்ரேன்களால் நாக்கு மூடப்பட்டு இருக்கிறது. மேல் பக்கம் சொற சொறப்பாயிருப்பதற்குக் காரணம் பாபில்லே என்னும் முளைகள் ஏராளமாக நாக்கில் இருப்பதே. ஒவ்வொரு பாபில்லேயின் உள்ளேயும் பல கெபிகளுள் ருசி மொக்குகள் இருக்கின்றன. ருசியறிவிக்கும் நரம்புகள் இந்த மொக்குகளில் முடிகின்றன.

நாக்கிற்கு 5-வது. 9-வது, 12-வது கபால உணர்ச்சி நரம்புகள் வருகின்றன. 5-வதும் 9-வதும் நரம்புகள். ஆகவே அவை ருசியை அறிவிக்கின்றன. 12-வது நரம்பு மோட்டார் நரம்பு. இதன் உதவியால் நாம் நாக்கைப் பல பாகங்களிலும் அசைக்க முடிகிறது.

நாக்கிலிருக்கும் ருசி மொக்குகளில் பதார்த்தங்கள் திரவ ரூபத்தில் பட்டவுடன் அவைகளிலிருக்கும் உணர்ச்சி நரம்புகளின் வழியாக ருசி முளைக்குப் போய்ச் சேருகிறது. சாதாரணமாக கசப்பு, தித்திப்பு, உவர்ப்பு, புளிப்பு என நான்கு விதமான ருசிகளே இருக்கின்றன. இவைகளைச் சரியானபடி உணர நான்கு வித ருசி மொக்குகள் இருக்கின்றன. மற்ற ருசிகளெல்லாம் மேல் கண்டவைகளில் இரண்டு அல்லது மூன்று ருசிகள் ஒன்றாய்க் கலந்தவையே என்பது கவனிக்கத்தக்கது.

வாசனை: வாசனையை அறிவிக்கும் அவயவம் நாசி. நாசித்துவாரங்களில் மியூகஸ் மெம்ரேன்கள் இருக்கின்றன. இந்த மியூகஸ் மெம்ரேன்களில் ஏராளமான நரம்புகளும் இருக்கின்றன. நாசித் துவாரங்களில் மேற்பாகத்தில் வாசனை அறிவிக்கும் விசேஷ நரம்பாகிய முதல் கபால நரம்புகளின் பல கிளைகள் இருக்கின்றன. எந்தப் பதார்த்தத்தின் ஆவியும் இந்த நரம்புகளின் நுனியில் படுமானால் அது அவ்வஸ்துவின் வாசனையைக் கிரகித்து மூளைக்குக் கொண்டு போகும். கடுமையான சளி பிடித்திருக்கும் போது நாசியின் மியூகஸ் மெம்ரேன்கள் வீங்கித் தடித்து, அதனால் காற்று நாசித் துவாரங்களில் மேல்பாகத்துக்குச் செல்லாமல் போய்விடும். ஆகையினாலேயே நமக்கு அப்பொழுது வாசனை தெரிவது இல்லை.

மருத்துவ குறிப்புகள் : சருமம் (The Skin) பற்றிய விளக்கங்கள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Descriptions of The Skin - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்