
ஒரு பொருளை நோயாளிக்கு கொடுப்பதற்காக, நோய் குணமாக்க மருந்தாக தயாரிக்கும் கலைக்கு பார்மஸி என்று பெயர்.
மருந்து தயாரிப்பு, அளவு வீரியம் கடைபிடிக்க வேண்டியவைகள் 1. பார்மஸி (Pharmacy) : ஒரு பொருளை நோயாளிக்கு கொடுப்பதற்காக, நோய் குணமாக்க மருந்தாக தயாரிக்கும் கலைக்கு பார்மஸி என்று பெயர். 2. பார்மகாலஜி: (Pharmacology) : மருந்தைப் பற்றிய விளக்கங்களும் அதன் செயல்களையும் விளக்கும் நூல். 3. போடன்ஸி (Potency): டைனாமைசேஷன் (Dynamization), அட்டனுவேஷன் (Attenuation), டைலூஸன் (Dilution), ஸ்ட்ரென்த் (Strength). இவை எல்லாம் மருந்து செய் முறைகளாகும். அதாவது வீரியப்படுத்தும் முறைகளாகும். பத்தில் ஒரு பாகம் (Decimal) நூறில் ஒரு பாகம் (Centismal) அளவுகளில் முறைப்படி செய்யப் படும் உட்பிரிவு ஆகும். மில்லிஸ்மல் வீரியம் (Millismel) என்பது சுமார் பத்தாவது சென்டிஸ்மல் வீரியத்திற்கு சமம். மூலப்பொருட்களைக் கொண்டு ஒன்பதுவகையான முறைகளில் ஓமியோபதி மருந்துகளைத் தயாரிக்கின்றனர். அ. வகை-1. தாய்க் கரைசல் : (Mother Tincture) செடிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. புதிய செடியினுடைய சாற்றைப் பிழிந்து அச்சாற்றின் எடைக்கேற்ப தூய ஆல்கஹாலை சம அளவில் கலக்கப்படுகிறது. இவ்வாறு கலக்கப்பட்ட கலவையில் மருந்து பாதி அளவும், தூய ஆல்கஹால் பாதியளவும் இருப்பதால் இக்கலவைக்கு "தாய்க் கரைசல்" என்று பெயர். இந்தத் தாய்க்கரைசலிலிருந்து 2 (இரண்டு) பங்கும், சக்தி குறைந்த தூய ஆல்கஹாலில் 98 பங்கும் கவந்து முதல் செண்டிஸ்மல் 1/100 வீரியம் பெறப்படுகிறது. இதற்கு 1-c என்று பெயர். இந்த முதல் வீரியத்திலிருந்து ஒரு பங்கு எடுத்து அத்துடன் 99 பங்கு தூய ஆல்கஹாலைக் கலந்த கலவைக்கு 2-c வீரியம் என்று பெயர். தூய இவ்வாறாக மேற்கொண்டு தேவையான வீரியங்களைத் தயாரிக்கின்றனர். ஏற்கனவே உள்ள வீரியத்துடன் ஆல்கஹாலைக் கலக்கும்போது அக்கலவையை நன்றாகக் குலுக்கி வைக்கின்றனர். மற்றொன்று டெசிமல் வீரியம் (Docimal Potency) இதிலும் இரண்டு பங்கு தாய்க் கரைசலுடன், 8 பங்கு சக்தி குறைந்த தூய ஆல்கஹாலைக் கலந்து, முதல் டெசிமல் வீரியம் பத்தில் ஒரு பங்கு 1/10 பெறப்படுகிறது. இதற்கு 1 x - என்று பெயர். இந்த முதல் வீரியத்திலிருந்து ஒரு பங்கு எடுத்து அத்துடன் 9 பங்கு தூய ஆல்கஹாலைக் கலந்த கலவைக்கு 2 x - என்று பெயர்.அக் கலவையை நன்றாக குலுக்கி வைக்கின்றனர். இவ்வாறாகவே மற்ற வீரியங்களையும் தயாரிக்கின்றனர். ஆ. வகை-2. தாய்க் கரைசல். இதில் புதிய செடியை நன்றாக சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு எடையுள்ள தூய ஆல்கஹாலில் மூன்று மடங்கு எடையுள்ள நறுக்கி வைத்த செடி யின் துண்டுகளுடன் கலந்து ஊறவைத்து வடிகட்டியபின், "தாய்க்கரைசலை"ப் பெறுகின்றனர். இதிலும் வகை ஒன்றில் இருப்பதுபோலவே வீரியங்கள் தயாரிக்கப்படுகின்றன. இ. வகை-3. தாய்க் கரைசல். இதில் ஒரு செடி முழுவதுமோ அல்லது அதன் ஒரு பகுதியையோ ஒரு பங்கு எடையுள்ளதுடன் இரண்டு பங்கு எடையுள்ள தூய ஆல்கஹாலைக் கலந்து தாய்க் கரைசலைத் தயாரிக்கின்றனர். தூய ஆல்கஹாலைக் கலப்பதற்கு முன், செடியை கூழாக்கியப் பின் கலந்து எட்டு நாட்கள் அக்கலவை வைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஆறு பங்கு தாய்க்கரைசலுடன் 94 பங்கு தூய ஆல்கஹாலைக் கலந்து முதல் சென்டிஸ்மல் வீரியம் பெறப்படுகிறது. மற்ற வீரியங்கள் 1 பங்கு முதல் வீரியத்துடன் 99 பங்கு தூய ஆல்கஹாலைக் கலந்து 2-c வீரியமும் மற்ற வீரியங்களும் இவ்வாறே பெறப்படுகின்றன. ஈ. வகை-4. தாய்க் கரைசல் இந்த வகைகயில் உலர்ந்த மிருகம் அல்லது தாவரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கின்றனர். இதில் ஒரு பங்கு எடையுள்ள தூளுடன் 5 பங்கு எடையுள்ள தூய ஆல்கஹாலை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதிலும் இக்கலவையை நோட்கள் வைத்து பிறகு வடிகட்டுகின்றனர். முதல் வீரியம் 10 பங்கு தாய்க் கரைசலுடன், 90 பங்கு தூய ஆல்கஹாலைக் கலந்து தயாரிப்பர். மற்ற வீரியங்களும் வகை ஒன்றின் முறையையே பின்பற்றித் தயாரிக்கின்றனர். உ. வகை. 5. தாய்க் கரைசல். இந்த வகையில் பொருட்களை தண்ணீரில் கரைத்து, அதில் 10% சதவீத கரைசலுடன் 1% சதவீதம் கலந்து பத்தில் ஒன்று வீரியம் 1x - மற்றும் 1c -வீரியங்கள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறாக 3வது வீரியம் வரை காய்ச்சி வடிகட்டிய நீர் (Distilled water) பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பின்னுள்ள வீரியங்களைத் தயாரிக்க தூய ஆல்கஹாலை கலக்கின்றனர். ஊ. வகை. 6. தாய்க் கரைசல். இந்த வகையில், ஐந்தாவது வகையில் தயாரிப்பது போலவே தயாரித்தாலும், ஆரம்பத்திலிருந்தே தண்ணீருக்குப் பதிலாக தூய ஆல்கஹாலைப் பயன்படுத்தி வீரியங்களைத் தயாரிக்கின்றனர். எ. வகை. 7. தாய்க் கரைசல். இதில் தாய்க் கரைசல் இல்லை. இந்த வகைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் தண்ணீரிலோ அல்லது தூய ஆல்கஹாலிலோ கரைபவை அல்ல. அதனால் அரைத்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு பங்கு எடையுள்ள மருந்துப் பொருளுடன் 99 பங்கு எடையுள்ள பால் சர்க்கரை (Sugar of Milk)யைச் சேர்த்து 4 மணி நேரம் அரைக்கப்படுகிறது. உலோகங்களுக்கு குறைந்தது 6 மணி நேரம் அரைக்க வேண்டும். மற்ற வீரியங்களும் அவ்வாறே தயாரிக்கின்றனர். இந்த மருந்துத் தூளுடன் 6வது வீரியத்தில் காய்ச்சி வடிகட்டிய நீரையும் தூய சாராயத்தையும் சம அளவில் கலந்து மருந்து கரைசல் தயாரிக்கப்படுகிறது. ஏ. வகை - 8. தாய்க் கரைசல். இந்த வகையில் கரைசல் மருந்துகளைக் கொண்டு மாவாக (Trituration) அரைக்கும் முறையாகும். ஒரு பங்கு மருந்துக். கரைசலுடன் 99 பங்கு எடையுள்ள பால் சர்க்கரை கலந்து அரைத்துத் தயாரிக்கின்றனர். ஐ. வகை - 9. தாய்க் கரைசல். இந்த வகையில் புதிய தாவரங்களையோ உயிருள்ள பிராணி வகையாகிய சிலந்தி, வண்டு, தேனீப்பூச்சி, கரப்பான் ஆகியவை களை பால் சர்க்கரையிலிட்டு அரைத்தல். 2 பங்கு பொருளுடன் 98 பங்கு எடையுள்ள பால் சர்க்கரை. கலந்து அரைத்தால் அது முதல் வீரியம் 1C - ஆகிறது. மற்ற வீரியங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டது போல் தயாரிக்கின்றனர். ஓமியோபதியின் சிறப்பு எப்போதும் உறவு சம்பந்தப்பட்ட தாகும். அளவு (Dose) என்பது தம் ஓமியோபதி மருத்துவர்களிடையே ஒரு பிரச்சினையாக உள்ளது. மருந்தின் வீரிய (Potency) சம்பந்தப்பட்ட விதிகளை எல்லா ஓமியோபதி மருத்துவரும் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. கண்டிப்பான பல ஓமியோபதியர்கள் கூட குறைந்த வீரியங்களைப் பயன்படுத்துபவராகவே இருக்கின்றனர். இதில் தாம் தவறுகள் செய்கின்றோம். அதனால் பல சிகிச்சை செய்தும் பலனற்று விடுகிறது. ஓமியோபதி மருத்துவம் செய்யும் போது தவறுகள் நேராவண்ணம் தவிர்ப்பது எப்படி யென்று நாம் பொதுவாக அறிந்துகொள்ள வேண்டும். மருத்துவ விஞ்ஞானக் கலையில் மருந்து தருவதும் சிகிச்சையளிப்பதும் தான் முக்கியமானதாகும். அவ்வாறு செயல்படும்போது பயன் நன்றாகவும், சரியான பயனின்றியும், நோயின் தன்மை அதிகரிக்கவும் கூடும். மருந்தின் தோற்றம், அளவு, அதே அளவுகளைத் திரும்பத் தருதல், அளவுகளைக் குறித்த நேரத்தில் தருதல், குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட நோய் தீரும் ஒத்த மருந்துகளை ஓமியோபதி விதிமுறைப்படி தருதல் முக்கியமானதாகும். ஒரு தக்க மருந்தை ஒத்த குறிகளுக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொடுத்தும், நாம் விரும்பிய பலன் கிட்டவில்லையானால், மீண்டும் அம் மருந்தையே கொடுப்பது சரியல்ல. ஏனெனில், ஒன்று, மருந்து தயாரிப்பில் குறையிருக்கலாம்; இரண்டாவது, தேர்வுசெய்து தரும் மருந்துகள் தரமாக இருந்து நோயைக் குணப்படுத்துவதில் தோல்வி காண்போமானால் மருத்துவர் சரியான எச்சரிக்கையுடன் செயல்படவில்லை எனப் பொருள் கொள்ளவேண்டும். இந்த இரண்டாவதில், தேர்வு செய்யப்பட்ட மருந்து மருந்து கான்ஏடு (Repertory) மூலம் மியாசத்தின் அடிப்படையில் ஆன்டிசோரிக் (Antipsoric) மருந்தாக வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நோயாளிக்கு நோய்க்குறிகள் யாவும் இரவில் தான் அதிகமாகிறதென்றால், அந்நோயாளி சிபிலிஸ் (Syphills) மியாசத்தின் அடிப்படையில் இருப்பதாகக் கருதி அவரின் நோய் தீர்க்க ஆன்டி சிபிலிஸ் (Anti Syphills) மருத்தையே தருதல் வேண்டும். ஒரு நோயாளிக்கு எவ்வெப்போது குறைந்த, மத்திய உயர்த்த வீரியங்களைப் பயன்படுத்துவது என நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும். குறைந்த வீரியங்களைக் கொண்டே சிகிச்சை செய்வோரும் உள்ளனர். குறைந்த, மத்திய, உயர்ந்த வீரியங்களைக் கலந்தும் சிகிச்சை செய்கின்றனர். உயர்ந்த வீரியத்தைக் கொண்டே சிகிச்சையளிப்போரும் உள்ளனர். முதலில் குறைந்த வீரியத்தையும், பிறகு மத்திய வீரியத்தையும், அதன்பிறகு உயர்ந்த வீரியங்களையும் உயர்த்திக் கொண்டே சென்று சிகிச்சையளிப்போரும் உள்ளனர். நோயைத் தீர்க்கும் ஒரு மருத்தின் வெவ்வேறு வீரியங்கள் வெவ்வேறு நிலைகளில் வேலை செய்யக்கூடியது என்ற அடிப்படையான இந்தச் சாதாரணக் கருத்தை ஒரு ஓமியோபதி மருத்துவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். நோயாளி ஓகிச்சை செய்து கொள்ள ஆரம்பிக்கும் போது, ஒரு மருந்தானது அவர் உடலில் தொடர்ந்து வேலை செய்யும் காலம், அவர் எடுத்துக்கொண்ட மருந்தின் அளவு, அல்லது நோயாளி நீண்ட நாட்கள் சிகிச்சை செய்துகொண்டு வரும் போது உள்ள நிலையைப் பொறுத்தும் மாறுபடும். இந்த உண்மையை அறியவேண்டுமானால், தனிப்பட்ட முறையில் நோயாளிக்கு சிகிச்சை செய்து வரும்போது, அதன் முக்கியத்துவத்தை ஒரு மருத்துவர் கண்கூடாகக் காணலாம். ஓமியோபதி மருந்துகளை எந்த வீரியங்களிலும் நோயாளிக்குக் கொடுக்கலாம் என நினைக்கக்கூடாது. சில மருந்துகளை எல்லா வீரியங்களிலும் தரலாம். சில மருந்துகளை உயர்ந்த வீரியங்களில் மட்டுமே தரலாம். சில மருந்துகளைக் குறைந்த வீரியங்களில் தான் தரலாம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். 1. குறைந்த வீரியங்கள் உடனேயும், மேலெழுந்தவாரியாக குறைந்த காலமே செயல்படக்கூடியது. உயர்ந்த வீரியங்கள் மெதுவாக, ஆழ்ந்து, நீண்டகாலம் செயல்படும். 2. ஒரு உயர்ந்த வீரியம் நாட்பட்ட நோய்களுக்குத்தான் தரப்படவேண்டும். மத்திய அல்லது குறைந்த வீரியங்கள் ஒரு கடுமையான நோய்க்கோ, வடிகால் செய்வதற்கோ தரப்படவேண்டும். 3. ஒரு குறைந்த வீரியம் உயர்ந்த வீரியத்தின் துணைக்கோள் ஆரும். குறைந்த வீரியம் உயர்ந்த வீரியத்தின் செயலை ஒருமுகப்படுத்திச் செயல்படும். 4. உயத்த விரியங்கள் ஒரு உறுப்பின் பகுதியில் நுண்ணியமாய்ச் செயல்படும். குறைந்த வீரியங்கள் உள்ளுறுப்புப் பகுதியில் குறைந்த அளவே செயல்படும். 5. உயர்ந்த வீரியங்களுக்கு பரந்த செயலும், நீண்டசெயலும் பல நோய்களை நீக்கப் பொதுவாக பயன்படவுமான மூன்று குணங்கள் உண்டு. 6. குறைந்த, மத்திய வீரியங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே செயல்படும். 7. சில நாட்பட்ட நோய்களில் ஏற்படும். கடுமையான தொல்லைகளில் குறைந்த அல்லது மத்திய வீரியங்களைத் தரவேண்டும். 8. நாட்பட்ட நோய்களுக்கு ஆழ்ந்து வேலை செய்யும் மருந்துகளைக் கடுமையான நிலைமைகளில் தந்தால், அவை ஆபத்தை விளைவிக்கக் கூடும். 9. நாட்பட்ட நோய்களில் 200 C - விரியங்களில் ஆரம்பிப்பது தான் நல்லது. இல்லையெனில் ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், மருந்தின் தன்மை, நோயின் நிலைமை, மியாசங்கள் ஆழ்ந்து செயல்படுதல் ஆகியனவாகும். 200 c - வீரியத்தில் ஆரம்பிப்பதன் நோக்கம் நாட்பட்ட நோய்களில் நாம் படிப்படியாக நோயின் முன்னேற்றத்தைப் பொறுத்து வீரியத்தையும் படிப்படியாக உயர்த்தித்தர ஏதுவாகிறது. 10. உயர்ந்த வீரியங்களைக் கொடுக்கும்போது அதன் செயல்படும் காலம் முடிந்த பின்புதான் அதே மருந்தின் அடுத்த உயர்ந்த வீரியத்தைத் தரவேண்டும். அம்மருந்தின் உயர்ந்த பட்ச வீரியத்தைக் கொடுத்தும் பலனில்லையானால், மீண்டும் ஆரம்பத்தில் கொடுத்த 200 c -வீரியத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உயர்ந்த வீரியம் தரும் போது 2௦௦c -, 1M-1௦M-50M-C.M. ஆகிய முறைப்படி தருதல் வேண்டும். 11. நம்பிக்கையில்லாத நோய்களில் உயிருக்காக போராடிக் கொண்டுள்ள நிலைகைகளில், கடுமையான நோய்களில் உயர்ந்த வீரியங்களைத் தரப் பரிந்துரை செய்யப்படுகிறது. 12. இறுதிக் கட்டத்தில் உள்ள நோயாளிக்கு மிக உயர்ந்த வீரியங்கள் கொடுத்தால், அவை வலியில்லாத இறப்பை (Euthanasia) ஏற்படுத்தும். 13. குணப்படுத்த முடியாத நாட்பட்ட நோய்களில் நோயாளிக்கு உடலில் தாங்கும் சக்தியும், நோயின் தன்மையும் அதிகக் கடுமையாகவும் இல்லாமல் இருந்தால் ஒழிய, குறைந்த, மத்திய வீரியங்கள் தரத் தகுதியானதாகும். ஆழ்ந்து வேலை செய்யும் மருந்துகள் தருவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக நோயைத் தணிக்கக்கூடிய மருந்துகளைத் தான் தரவேண்டும். 14. மனத் துன்பங்கள், மன நோய்களுக்கு உயர்ந்த வீரியங்களான 10-M-மும், அதற்கு மேலும் தரலாம். 15. பொதுவாக வயதுவந்தவர்க்கு மத்திய வீரியம் தரலாம். குழந்தைகளுக்கு உயர்ந்த வீரியங்கள் குறிப்பாக ஏதும் செய்வதில்லை. 16. ஆபத்தான நாட்பட்ட நோய்க்கு ஆழ்ந்து வேலை செய்யும் மருந்துகளை தக்க வீரியங்களில் கொடுக்க அதிக அக்கறை கொண்டு தேர்ந்தெடுத்துத் தரவேண்டும். 17. உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களாக இருப்பின், குறைந்த மத்திய வீரியங்களைத் தரலாம். 18. உசிரையே பயமுறத்தும் அளவிற்கு பொறுக்கமுடியாத வலி இருக்குமானால், கடுமையான நோய் தீர்க்கும் மருந்துகளிலிருந்து 30 -அல்லது 200 - வீரியங்களையும் தரலாம். 19. நோயின் கடுமை முன்னிலும் அதிகமாகி உள்ளபோது, நாட்பட்ட நோய்க்கு ஏற்கனவே கொடுத்த மருந்திற்கு துணை மருந்தையோ, அல்லது அதனுடைய இன மருந்தையோ அதே வீரியங்களில் தரலாம். 20. நாட்பட்ட நோய்களில் மிகமிக அதிகக் கடுமையுள்ளபோது சில நேரங்களில் கடுமை மருந்துகளில் உயர்ந்த வீரியத்தை தந்து அதனால் கடுமை குறைந்தபின் நோயின் தன்மை புதுவடிவத்துடன் காணப்படும். ஏற்கனவே நாட்பட்ட நோயில் உள்ள குறிகளையும் கருத்திற்கொண்டு, சமீபத்தில் தோன்றிய நோயின் வளர்ச்சிக்கேற்பப் புதிய மருந்தைத் தருதல் வேண்டும். 21. பல நிலைமைகளில் திசுக்கள் மாறுபாட்டால் ஏற்பட்ட குறிகளான நாட்பட்ட இருதயக்கோளாறுகள், பிடிப்புகள் ஆகியவைகளுக்கு, மிகக் குறைந்த வீரியங்கள். தாய்க் கரைசல்கள் பயன்படுத்தலாம். 22. முறையில்லா சிகிச்சையின் பயனாக சில குறிப்பிட்ட நபர்கள் மிக உணர்வுள்ளவர்களாக உள்ளனர். எந்த மருந்து தந்தாலும் அது அவர்களுக்கு நிருபணமாகிறது. அவர்களுக்கு குறைந்த, மத்திய வீரியங்கள் தேவைப்படுகிறது. 23. மிகவும் மந்தமானவர்களுக்கும். ஆங்கில முறை மருந்தை அதிகம் உண்டவர்களுக்கும், மிக உயர்ந்த அல்லது குறைந்த வீரியங்கள் சிலமணிக்கொருமுறை நோயின் குணம் கிடைக்கும் வரை தரலாம். 24. நாட்பட்ட நோயில், சிகிச்சையின் போது நோய் கடுமையாக அதிகமானால் உடலில் குணமாகும் சக்தி ஏற்பட்டு உள்ளதென்றோ, மருத்தின் அதிக உணர்ச்சிமிகு செயல்பாட்டால் அதிகமாகியுள்ளதென்றோ, தவறான வீரியம் தந்ததால் அதிகமானதென்றோ கொள்ளல் வேண்டும். நோய் தாங்க முடியாத அளவிற்குச் செல்லவில்லையானால் மருந்தில்லா மாத்திரைகளைத்தான் கொடுக்கவேண்டும். 25. நோயானது படியாத, குறையாத நிலைமைகளில், ஒரு மருத்தை ஒரு டம்ளரின் மூன்றில் ஒரு பங்கு நீரில் கரைத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவு மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைக் கொட்டிவிட வேண்டும். மீண்டும் முன்பிருந்த அளவிற்கு நீர் கலந்து நன்றாக கலக்கிவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியை இரண்டாவது அளவாகக் கொண்டு குடித்து வருதலால் இம்முறையில் வீரியம் சற்றுக் கூடுவதோடு பலனும் அளிக்கும். 26. மருந்து செயல்படும் காலம் என்று ஒன்று உண்டு. அதாவது ஒரு நோயாளிக்கு ஒரு மருந்தைத் தந்தால் அம்மருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்யக்கூடியதென்று ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அக்காலம் முடியும் வரை, அம் மருந்தை, திரும்ப வீரியங்களில் தருவது கூடாது. 27. பொதுவாக கடுமையான நோய்களுக்கு குறைந்த வீரியங் களைத் தருகிறோம். உதாரணமாக, ஒரு நோயாளிக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். நோயின் கடுமையை அனுசரித்து அதை நிறுத்த ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும், கடுமையை பொறுத்து மூன்று நிமிடத்திற்கு ஒருமுறையில் திரும்பத் திரும்பத் தருகிறோம். அது மட்டுமன்றி, 3 – 6 - வீரியங்களை கடுமை நிலைகளில் கால், அரை, ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணி இடைவேளைகளிலும் தருகிறோம். இவ்வாறு தரும்போது நோய் தணிந்துள்ளதென தெளிவாகத் தெரிந்தபின், அம் மருந்தையே திரும்பக் கொடுக்கக்கூடாது. உண்மையாகவே நோய்க் குறிகள் தணிந்துள்ளனவா என்று அறியும் வரை மருந்து தருவதை நிறுத்தக் கூடாது. 28. நோயின் காரணங்களின் அதாவது பெதாலஜியின் அடிப்படையில் உள்ள நோய்களுக்கு குறைந்த மத்திய வீரியங்களையும், அவ்வாறு இல்லாதவைகளுக்கு 100C-யும், அதற்கு மேலும் உள்ள வீரியங்களையும் தரலாம். 29. மிகவும் சக்தி குறைந்த நோயாளிக்கு, ஒரு வேளைமட்டும் உயர்ந்த வீரியத்தைக் கொடுத்துவிட்டு, அதன் பலன்களைக் கண்காணிக்கவேண்டும். இவ்வாறு செய்வதினால், உடலில் முழுசக்தியையும் நோயின் மாற்றங்களையும் அக்கறையுடன் கவனித்து - வீரியத்தைத் தேர்ந்தெடுக்க உதவும். 30. பொதுவாக சிகிச்சை செய்யும்போது, குறைந்த, அதிக வீரியத்தை தேர்ந்தெடுத்து கொடுக்கும்போது கவனத்தில் நன்றாகக் கொள்ளல் வேண்டும். அதாவது, தசாம்ச வீரியங்களில் குறைந்தவைகளான 3x, 6xயும், அதன் உயர்ந்த வீரியங்களில் 12x,30x,200x,யும் பயன்படுத்துகிறோம். சதாம்ச வீரியங்களில் குறைந்தவைகளான 3c 6c 12c 30c அதில் உயர்ந்த வீரியங்களில் 200c, 1m, 10m 50m, C.M ம் அதற்கு மேலும் பயன்படுத்துகிறோம். ஒரு வீரியத்தைக் கொடுக்க முடிவு செய்யும் போது நம் பாதுகாப்பிற்காகத் தேர்ந்தெடுக்கவேண்டியது குறைந்த வீரியங்களான 3, x6, x3c-6c-12c - இவைகளை அடிக்கடி இடைவெளிவிட்டு தரலாம். இவ்வாறு கொடுத்துவரும் பொழுது அதில் ஏதும் கெடுதல் ஏற்படுமேயானால் அந் நேரமே அதை மாற்று மருந்து கொடுத்து முறித்துவிடலாம். நோசோதுகளைப் பொறுத்து வீரியத்தை தேர்ந்தெடுக்கும் போது பொதுவாக 200c- வீரியத்தில் ஒரு வேளை மட்டும் தரவேண்டும். தேவையானால் வாரம் ஒரு வேளையோ பத்து நாட்களுக்கு ஒருமுறையோ தரலாம். அடிக்கடி தசாம்ச, சதாம்ச வீரியங்களைப்போல் கொடுக்கக்கூடாது- (அதாவது, டெசிமல், செண்டிஸ்மல் வீரியங்கள்).மருந்து தயாரிக்கும் வகைகள்
அளவும் வீரியமும் கடைப்பிடிக்க வேண்டியவைகள்
மருத்துவ குறிப்புகள் : மருந்து தயாரிப்பு, அளவு வீரியம் கடைபிடிக்க வேண்டியவைகள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Drug preparation and dosage should be followed - Medicine Tips in Tamil [ Medicine ]