
மனித சரீரத்தைத் தலை, கழுத்து, உடல், கைகள், கால்கள் என்று ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
சரீர சாஸ்திரம் அல்லது உடற்கூறு பற்றிய விளக்கம் மனித சரீரத்தைத் தலை, கழுத்து, உடல், கைகள், கால்கள் என்று ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். தலையில் முகமும், எலும்புகளால் ஆன ஒரு பெட்டியும் இருக்கின்றன. இவ்வெலும்புப் பெட்டியில் தான் மூளை வைக்கப்பட்டிருக்கிறது. கழுத்து, தலையையும் உடலையும் ஒன்று சேர்க்கிறது. கழுத்தின் வழியாக ஆகாரக் குழாய், காற்றுக் குழாய் முதலியவை உள்ளே போகின்றன. உடலானது உட்புறத்தில் டயாப்ரம் (Diaphragm) எனப்படும் ஒருதசைப் படுத்தாவினால் இரு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மேல் பாகத்தில் சுவாசகோசங்களும் (Lungs), இருதயமும் (Heart), ஆகாரக் குழாயும் இருக்கின்றன. கீழ்ப் பாகத்தில் வயிறும் (Stomach), குடலும் (Intestines), கல்லீரலும் (Liver), பித்தப்பையும் (Gall Bladder), மண்ணீரலும் (Spleen) காணப்படும். மேல் அறைக்கு மார்பறை (Thoracic Cavity) என்றும் கீழ்பாகத்திற்கு வயிற்றறை (Abdominal Cavity) என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஜீரணம், சுவாசம், அசுத்த நிவாரணம் முதலான சரீரத்தின் இன்றியமையாத வேலைகள் ஒன்றோடொன்று நன்கு இணைக்கப்பட்ட பல உறுப்புக்களால் நடைபெறுகின்றன. உதாரணமாக நாம் உட்கொள்ளும் ஆகாரத்தை ஜீரணித்து சத்தைக் கிரகித்துக் கொள்ளும் வேலையில் வாய், அன்னக்குழாய், வயிறு, கல்லீரல், பாங்கிரியாஸ் (Pancreas), சிறுகுடல், பெருங் குடல் முதலியவை ஈடுபடுகின்றன. சரீரத்தின் மேலிருக்கும் மெல்லிய தோலை உரித்தால் உள்ளிருக்கும் தசைகள் தென்படும். இத்தசைகள் ரப்பரை போன்று நீளவும் சுருங்கவும் சக்தி வாய்ந்தவை. அவைகளை வாலண்டரி தசைகள் (voluntary muscles), இன்வாலண்டரி தசைகள் (Involuntary muscles) என இருவகைகளாகப் பிரிக்கலாம். நாம் விரும்புகிற விதம் சுருக்கவும் நீட்டவும் முடிகின்ற தசைகளுக்கு வாலண்டரி தசைகளென்றும், நாம் இஷ்டப் படாமல் தானே இயங்கும் தசைகளுக்கு இன்வாலண்டரி தசைகள் என்றும் பெயர். கைகள், கால்கள், முகம் ஆகியவற்றில் இருப்பவை வாலண்டரி தசைகள். அன்னகோசம், இருதயம் ஆகியவற்றில் இருப்பவை இன்வாலண்டரி தசைகள். வாலண்டரி தசைகள் நடுவில் தடிப்பாகவும் இரு ஓரங்களிலும் மெலிந்தும் இருக்கின்றன. மேலும் அவை தத்தம் இருப்பிடங்களுக்குத் தகுந்தபடி உருவங்களை அடைகின்றன. இத்தகைய தசைகளால் நாம் அடையும் பயன் என்ன? தசைகள் எலும்புகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் நாம் கை கால்களை மடக்கவோ, நீட்டவோ விரும்பும் போது, அத்தசைகள் சுருங்கித் தடித்து ஒரு எலும்பை மற்றொரு எலும்பின் பக்கமாகக் கொண்டு வருகின்றன. இதனால்தான் நம் விருப்பப்படி அங்கங்களை நீட்டவோ மடக்கவோ முடிகிறது. முன்புறம் இருக்கும் தசைகள் முன்னுக்கும் பின்புறமிருக்கும் தசைகள் பின்னுக்கும் நம்மை இழுப்பதால் நாம் நேராக நிற்க முடிகிறது. சரீரத்திலுள்ள எலும்புகளை தட்டை எலும்புகள், நீன எலும்புகள், குட்டை எலும்புகள், என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மண்டையோட்டை தட்டை எலும்புகளுக்கும், கை கால் எலும்புகளை நீள எலும்புகளுக்கும், மணிகட்டு எலும்புகளை குட்டை எலும்புகளுக்கும் உதாரணமாகச் சொல்லலாம். மண்டை ஓட்டில் கபாலமும் (Cranium) முக எலும்புகளும் இருக்கின்றன. கபாலம் என்பது சில தட்டை எலும்புகளால் ஒரு பெட்டி போல் இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தட்டை எலும்புகளும் ஒன்றோடொன்று மிகவும் அழுத்தமாகத் தச்சன் பெட்டி கோர்ப்பது போல் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே நம் மூளை இருக்கும் இடம் மிகவும் உறுதியானது. மூளை மிகவும் முக்கியமான அங்கமாகையால் அதற்கு ஏதாவது கெடுதல் நேரிட்டால் உடனே மரணம் நேரும். ஆகையால் தான் மூளைக்கு அவ்வளவு உறுதியான பெட்டி வேண்டியிருக்கிறது. தலையிலுள்ள எலும்புகளில் கீழ்த்தாடை எலும்புகளைத் தவிர மற்றவை எல்லாம் ஒன்றோடொன்று பலமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. கீழ்த்தாடை எலும்பு மாத்திரம் அசையும்படி மேல்தாடை எலும்பில் பூட்டப்பட்டிருக்கிறது; ஆகையினால் தான் நாம் ஆகாரத்தை மெல்லுவதற்கும் பேசுவதற்கும் முடிகிறது. இது ஒரே எலும்பு அல்ல, ஆனால் 33 சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இப்படி இருப்பதினால் தான் பல வேலைகளைச் செய்ய நாம் முதுகை வளைக்க முடிகிறது. ஒவ்வொரு முள்ளெலும்பின் நடுவிலும் ஒரு துவாரம் இருப்பதாலும், அவை ஒன்றின்மேல் ஒன்று வைக்கப்பட்டிருப்பதாலும், முதுகெலும்பின் நடுவில் ஒரு குழாய் ஏற்படுகிறது. இக் குழாயில் ஸ்பைனல் கார்டு (Spinal Cord) என்னும் முக்கியமான நரம்பு இருக்கிறது. மேற்சொன்ன 33 எலும்புகளில் மேல் 24 எலும்புகள் அசையக் கூடியவை. கீழ் 9 எலும்புகள் 7 அசைக்க முடியாதவை. மேல் எலும்புகளும் கழுத்துபாக முள்ளெலும்புகள் (Cervical Vertebrae) அதற்கடுத்த 12 எலும்புகள் முதுகுப்பாக முள்ளெலும்புகள் (Dorsal Vertebrae) அதற்கும் அடுத்த 5 எலும்புகள் இடுப்புப் பாகத்து முள்ளெலும்புகள் (Lumbar Vertebrae) என்று வழங்கப்படும். இவைகளில் முதுகுப்பாக முள்ளெலும்புகள் மார்புக்கூடு எலும்புகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. கீழ் 9 எலும்புகளை வால் எலும்புகள் காக்கிஸ் (Coccyx) என்று சொல்லுவார்கள். விலாவெலும்புகள் (Ribs) முதுகெலும்புடன் பின் புறத்தில் சேர்க்கப்பட்டும் முன் புறத்தில் மார்பெலும்புடன் இணைக்கப்பட்டும் இருக்கின்றன. இவை 12 ஜதையேயாகும். இவற்றில் 11 ஜதைகள் ஸ்டர்னம் (Sternum) என்னும் மார்பெலும்புடன் இணைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு ஜதை மாத்திரம் மார்பெலும்பில் இணைக்கப்படாமல் தனியே நிற்கிறது. இப்படியாக மார்பில் ஒரு எலும்புக்கூடு ஏற்படுகிறது. இக்கூடு மார்பிலுள்ள முக்கிய உறுப்புகளாகிய இருதயம் சுவாச கோசம் முதலியவைகளைப் பத்திரமாகக் காப்பாற்றுகிறது. தோள்பட்டை எலும்பு (Scapula). புஜ எலும்பு, இரண்டு முன் கை எலும்புகள் (Radius and Ulna) மணிக்கட்டு எலும்புகள் (Carpals) உள்ளங்கை எலும்புகள் (Meta Carpals) விரல் எலும்புகள் (Phalanges) முதலியன. கை எலும்புகள் மற்ற உடல் பாகத்து எலும்புகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதாவது புஜ எலும்புகள் கழுத்துப்பட்டை எழும்பினால் (Collar Bone) உள்ளே க்ளினாய்டு குழியில் (Glenoid Cavity) புதைக்கப்பட்டிருக்கின்றன. கழுத்துப் பட்டையின் மற்றொரு முனை மார்பு எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. முன் கை எலும்புகள்: முன் கையில் இரு எலும்புகள் இருக்கின்றன. அவைகளுக்கு ரேடியஸ், அல்னா என்று பெயர். மணிக்கட்டு எலும்புகள்: இவை எட்டு சிறிய எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன. உள்ளங்கை எலும்புகள்: இவை ஐந்து. விரல் எலும்புகள் : கட்டை விரலில் இரண்டும் மற்ற விரல்களில் மூன்றும் ஆகமொத்தம் 14 எலும்புகள் இருக்கின்றன. கால் எலும்புகளும் கை எலும்புகள் மாதிரியே அமைந்திருக்கின்றன. இடுப்பு எலும்புகள் மூன்று பாகங்களாக உள்ளவை. பெமூர் (Femur) எனப்படும் தொடை எலும்புகள் இடுப்பு எலும்புகளின் இரு பக்கங்களிலும் உள்ள அசிடாபுலம் குழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றன. தவிர முழங்காலில் முழங்காற் சில்லு (Knee Cap or Patella) என்னும் ஒரு சில்லுப் போன்ற எலும்பும் இருக்கிறது. முழங்கால் சில்லுக்குக் கீழே கணுக்காலுக்கு மேலே உள்ள இரு நீண்ட எலும்புகளுக்கு பிபுலா, டிபியா என்று பெயர். இரு எலும்புகள் சேரும் இடத்தை மூட்டு என்று சொல்லுவார்கள். நம் உடம்பில் அநேக மூட்டுக்கள் இருக்கின்றன. இம்மூட்டுக்களில் சில அசையும் சக்தி வாய்ந்தவை. மற்றவை அசையாமல் இணைக்கப்பட்டிருக்கின்றன. கிரேனியத்தில் அதாவது மண்டை யோட்டில் உள்ள எலும்புகள் ஒன்றோடொன்று மாகச் சேர்க்கப்பட்டு அசையாமல் இருக்கின்றன. அசையும் மூட்டுக்களை அவை ஒவ்வொன்றும் அசையும் விதத்தைக்கொண்டு 4 பெரும் களாகப் பிரிக்கலாம். அவை பின் வருமாறு: 1. பந்துக் கிண்ண முட்டுக்கள் (Ball & Socket Joints): இம்மூட்டுக்களில் சேரும் இரு எலும்புகளின் ஒன்றின் முனையில் கிண்ணம் போன்ற ஒரு குழியும் மற்றொரு எலும்பின் முனையில் மேற்சொன்ன குழியில் பொருந்தும் வண்ணம் ஓர் பந்துபோன்ற முண்டும் இருக்கின்றன. தோள்பட்டை, இடுப்பு இவைகளில் இருக்கும் மூட்டுக்கள் இவ்வினத்தைச் சேர்ந்தவை. 2. நாதாங்கி மூட்டுக்கள் (Hinge Joints): நம் வீட்டுக் கதவுகள் எப்படி நாதாங்கிகளின் உதவியினால் ஒரே விதமாக முன்னும் பின்னுமாக நகருகின்றனவோ, அவ்விதமாக இம் மூட்டுக்களிலுள்ள எலும்புகளும் அசைந்து கொடுக்கும். உதாரணமாக முழங்கைகள், முழங்கால்கள், கை விரல்கள், கால் கட்டை விரல்கள் ஆகியவைகளில் இருக்கும் மூட்டுகளைச் சொல்லலாம். 3. அசையும் மூட்டுக்கள் (Gliding Joints): இம் மூட்டுக்களில் உள்ள எலும்புகள் அவற்றின் நடுவிலுள்ள கார்டிலேஜ் என்னும் வஸ்துவின் உதவியினால் ஒன்றோடொன்று சற்று நழுவினாற் போல் நகர்ந்து கொள்கின்றன. இதற்கு மணிக்கட்டு எலும்புகளைச் சொல்லலாம். 4. முளை மூட்டு (Pivot Joints): நமது மண்டை ஓட்டுடன் சேர்ந்த அட்லஸ் என்ற முதல் முள்ளெலும்பும் பிடர் அச்சு முள்ளெலும்பின் மூளை மீது திரும்பும். இம்மூட்டினால் ஏற்படும் பக்கவாட்ட அசைவுகளின் உதவியால்தான் நாம் சுற்று முற்றும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மூட்டிலும் இரு எலும்புகள் சந்திக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வெலும்புகள் நழுவாதபடி இருக்கவேண்டும் அல்லவா? அதற்காக அவ்வெலும்புகள் லிகமெண்ட் அல்லது பந்தனி என்னும் ஓர்வித வெள்ளைத் தசை நார்களால் பலமாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. இப் பந்தனிகள் ரப்பரைப்போல் நீளவும் சுருங்கவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதால் நாம் கை கால்களை மடக்கவும் நீட்டவும் முடிகிறது. மூட்டுக்களிலிருக்கும் தசைகளை எடுத்து விட்டால் இப்பந்தனிகளை நாம் நன்றாகப் பார்க்கலாம். இத்தசைநார்களைத் தவிர வேறு விதமான தசை நார்களும் இருக்கின்றன இவைகளின் பெயர் டெண்டன் தசைநார். எலும்புகளுடன் தசைகளை இணைக்க இவைகள் உபயோகப்படுகின்றன. கெட்டியாக, ஆனால் வளையக்கூடிய தன்மை வாய்ந்த ஒருவித எலும்புகளைக் குறுத்தெலும்பு என்று அழைக்கிறோம். முதுகு எலும்பில் 33 எலும்புகள் இருக்கின்றன என்பதை நீங்கள் படித்தீர்கள். அம்முள்ளெலும்புகள் இரண்டும் சேரும் இடங்களில் இக்குறுத்தெலும்பு அட்டைகள் காணப்படுகின்றன. மார்புக்கூட்டு எலும்புகள் மார்பெலும்புடன் குறுத்தெலும்புகளின் மூலமாய்த்தான் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நம் வெளிக்காதுகள் கூட குறுத்தெலும்பால் ஆனவை தான். இது குறுத்தெலும்பின் மேல் மெல்லிய தசையாலும் தோலாலும் மூடப்பட்டுள்ளது. குறுத்தெலும்புகள் உறுதியாக இருப்பதுடன் வளைந்து கொடுக்கக்கூடியவையாயும் இருப்பதால் நம் சரீரத்தின் பல பாகங்களை வளைக்க முடிகிறது. தவிர கிழே விழுந்தாலும் அடிபட்டாலும் அந்த அதிர்ச்சியைத் தாங்குகின்றன. மூளையும் நரம்புகளும் இல்லாவிட்டால் நாம் ஒரு காரியமும் செய்யமுடியாது. நாம் செய்யும் எந்தக் காரியமும் இவைகளின் உதவியால்தான் நடைபெறுகிறது. இவைகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது 1 மூளையும் முள்ளந்தண்டும் (Cercbro – Spinal System): இப்பிரிவில் மூளையும் முள்ளந்தண்டும். இவைகளிலிருந்து பிரியும் நரம்புகளும் இருக்கின்றன. 2. உப உணர்ச்சி நரம்புகள் (Sympathetic Nervous System): முள்ளந் தண்டுக்கு முன் பக்கத்தில் சங்கிலி போன்ற இரு நரம்புகள் இருக்கின்றன. இவைகளில் காங்கிலியா (Ganglia) என்னும் பல முடிச்சுகளும் அம் முடிச்சுகளிலிருந்து பல நரம்புகள் பிரிந்து பல பாகங்களுக்குச் செல்லுகின்றன. இவைகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று பழுப்பு நரம்புக் கெபிகள், மற்றது வெள்ளை நரம்புக் கெபிகள். பழுப்பு நிறமுள்ளவை தான் உண்மையான நரம்புக்கெபிகள். வெண்மை உள்ளவை நரம்பு நார்கள். ஒவ்வொரு நரம்புக் கெபியும் தனித்தனியாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு கெபியிலிருந்தும் பல கிளைகள் உண்டாகி ஒன்றின் கிளை மற்றொரு கெபியின் கிளைகளோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நரம்புக் கெபியும் அதன் கிளைகளும் ந்யூரான் (Neuron) என்று வழங்கப்படும். மேற்சொன்ன ந்யூரான்களாலும், நரம்பு நார்களாலும் ஆக்கப்பட்டு கயிறு போன்று இருப்பவைகளைத் தான் 'நரம்புகள்' என்கிறோம். அநேக நரம்புகளில் மெடுல்லரி ஷீத் (Medullary Sheath) என்னும் கொழுப்புத்தசைகளும் இருக்கின்றன. மூளையை ஒரு தபால் ஆபீசுக்கும் நரம்புகளை தந்திக்கம்பிகளுக்கும் ஒப்பிடலாம். இந்நரம்புகளில் உணர்ச்சி நரம்புகள், (Afferent Nerves or Sensory Nerves) மோட்டார் நரம்புகள் (Motor Nerves) இருவகை உண்டு. உணர்ச்சி நரம்புகள் உடம்பில் ஏற்படும் அதிர்ச்சிகளை உணர்ந்து அத்தகவல்களை மூளைக்குத் தெரிவிக்கின்றன. உதாரணமாக நம் காலில் ஒரு முள் குத்தி விட்டதென்றால் அத்தகவலை மறுக்ஷணமே காலிலிருக்கும் உணர்ச்சி நரம்புகள் மூளைக்குத் தெரிவிக்கின்றன. மூளைக்கு இச்செய்தி தெரிந்தவுடனே தான் நமக்கு முள் தைத்ததின் உணர்ச்சி ஏற்படுகிறது. முள் தைத்து மூளைக்குத் தெரிந்தவுடன் அது மோட்டார் நரம்புகளின் மூலமாக கைகளை உதவிக்குப் போகும் படியும் காலைத் தூக்கும்படியும் உத்திரவு அனுப்புகிறது. ஆகவே நமது சரீரத்தில் அநேக உணர்ச்சி நரம்புகளும் அநேக மோட்டார் நரம்புகளும் இருக்கின்றன. இவைகளில் சில நரம்புகள் மோட்டார், உணர்ச்சி இரு வேலைகளையும் செய்யும்படி ஏற்பட்டிருக்கின்றன. இவைகளுக்குக் கலப்பு நரம்புகள் என்று பெயர். உணர்ச்சி நரம்புகளும், மோட்டார் நரம்புகளும் ஒழுங்காக வேலை செய்தால்தான் நமக்குச் சரீரத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் நன்கு தெரியும். உதாரணமாக நம் காலிலுள்ள உணர்ச்சி நரம்புகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம். அப் பொழுது காலில் ஊசி குத்தினாலும் நமக்கு வலி தெரியாது. ஏனென்றால் அந்த விஷயம் மூளைக்கு எட்டுவதில்லை. ஒருவித குஷ்டரோகமுள்ளவர்களுக்கு நரம்பு இம்மாதிரி செயலற்றுப் போகின்றன. அதே போல் ஏதோ ஒரு மோட்டார் நரம்பு செயலற்றுப் போய்விட்டால் அந்த நரம்பு செல்லும் பாகத்தைத் தூக்கவோ, இஷ்டப்படி உபயோகிக்கவோ முடியாது. பாரிசவாயு என்னும் பட்சவாத வியாதியில் மோட்டார் நரம்புகள் செயலற்றுப் போகின்றன. தசைகள் (Muscles)
எலும்புச் சட்டம் (The Skeleton)
மண்டை ஒடு (The Skull)
முதுகு எலும்பு (Back-Bone or Spinal Column)
மார்புக் கூடு (The Thorax)
கை எலும்புகள்:
கால் எலும்புகள்
மூட்டுகள் (Joints)
பந்தனிகள் (Ligaments)
குறுத்தெலும்பு (Cartilage)
மூளையும், நரம்புகளும் (The Nervous System)
நரம்புக்கெபிகள் (Nerve Cells)
மருத்துவ குறிப்புகள் : சரீர சாஸ்திரம் அல்லது உடற்கூறு பற்றிய விளக்கம் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Explanation of Sarira Shastra or Anatomy - Medicine Tips in Tamil [ Medicine ]