பொது மருத்துவம்

சித்த மருத்துவம்

[ சித்த மருத்துவம் ]

General medicine - Siddha medicine in Tamil

பொது மருத்துவம் | General medicine

தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணமாகும்.

பொது மருத்துவம்

விஷக்கடிகள்

அ] தேள்கடி நிவாரணம்:

1. தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணமாகும். 

2. நாட்டு வெங்காயத்தை நசுக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.


ஆ) பாம்புக்கடி நிவாரணம்:

1. புரசு மரப்பட்டைச் சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க பாம்பு நஞ்சு, தீரும்.

2. பல்லி கடித்து விட்டால் உடனே சிறிது பனை வெல்லத்தை சாப்பிட நஞ்சு முறியும்.


இ] எலிக்கடிக்கு நிவாரணம்:

1. 100 மி.லி. நல்லெண்ணையை அப்படியே தனியாக குடித்தால் சரியாகும். 

2. ஒரு பிடி கீழாநெல்லி இலைகளை எடுத்து 100 மி.லி. நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி எண்ணையை கடிவாயில் தடவ வேண்டும். மேலும் காய்ச்சி வறுத்த இலைகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட விஷம் குறைந்து விடும்.


ஈ) தேனீ - குழவி கடிக்கு நிவாரணம்: 

கொட்டிய பகுதியில் கருப்பங்காடியை பூச அந்த பாதிப்பு குணமாகும்.


நகச்சுற்று

நிவாரணங்கள்:

1. எலுமிச்சை பழத்தில் துளை விட்டு அதில் விரலை சொருகி வைக்கவும்.

2. சுடுசோற்றில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து பிசைந்து கட்டலாம்.

3. அரளிபூவையும் ஆமணக்கெண்ணெயில் வதக்கி கட்டலாம்.

4. தர்ப்பை புல் கஷாயத்தை தினமும் குடித்து வர தோலில் கொப்புளம் போன்று சிவந்து ஏற்படும் ஒருவகை தொற்று நோயை குணமாக்கும். ஒவ்வாமை, உடல் அரித்துத் தடிப்பு ஏற்படல் ஆகியவற்றையும் போக்கும்.


வெண் குஷ்டம்

நிவாரணங்கள்:

1. பவளமல்லி இலைச்சாற்றில் புங்க எண்ணெய் சேர்த்து காய்ச்சி, அதை உடல் முழுவதும் பூசி குளித்து வர வெண் குஷ்டம் படிப்படியாக குணமாகும்.

2. அரளிப்பூவுடன் கந்தகம் சேர்த்து அரைத்து நல்லெண்ணை கலந்து காய்ச்சி பூசி வர புண், குழிப்புண், வெண் குஷ்டம் போன்றவை குணமாகும். 

3. புங்கம் வேரை மெல்லியதாக சீவி பால் பிழிந்து அதனுடன் சம அளவு தேங்காய் பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு அதனை ஆறாத புண். ரணங்கள், ராஜபிளவை (சர்க்கரை நோயால் ஏற்படும் கட்டிகள்) ஆகியவற்றின் மீது தடவி வர அவை விரைவில் ஆறும். 

4. புங்கவேரை பொடி செய்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி இருவேளை குடித்து வர ஆறாதபுண், ரணங்கள் கூட ஆறும்.


சுளுக்கு & கழுத்து வலி

நிவாரணங்கள்:

1. புளியமர இலையை அவித்து, அதை சூட்டோடு சுளுக்குள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்துக் கட்டி வர சுளுக்கு குணமாகும்.

2. புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். 3.முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாகக் குறையும்.

4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி, நெய்விட்டு லேசாக வறுத்த 1.2 கிராம் அளவு காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டு வர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும். சுளுக்கு மற்றும் அடிபட்ட வீக்கம் குணமாகும்.

5. பிரண்டை உள்ளே உள்ள உப்பை பொடி செய்து 10 கிராம். ஜாதிக்காய் சூரணம் 20 கிராம் அளவுடன் தயார் செய்து தினசரி காலை, இரவு என இரு வேளையாக மூன்று நாட்கள் சாப்பிட்டாலே நரம்புத் தளர்ச்சி குணமாகி நரம்பு பலப்படும். 6.காலில் முள் குத்திய இடத்தில் முள்ளை எடுத்த பின்னர் வெற்றிலையில் நல்லெண்ணை தடவி அனலில் வாட்டி, சூட்டோடு வலி உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க அந்த வலி நீங்கும்.


பசி, பசியின்மை

நிவாரணங்கள்:

1. பசித்தீயைத் தூண்டும் சீரகம், ஓமம், கடுகு, பெருங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, குண்டு மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீரான சேர்க்கை, வாரம் ஒன்றிரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல் ஆகியவற்றின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும்.

2. வெந்தயம் 1 பங்கு, கோதுமை 8 பங்கு இவற்றை லேசாக வறுத்து இடித்து வைத்துக் கொண்டு, தினசரி 'காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட நல்ல பசி எடுக்கும். மலச்சிக்கல் இருக்காது.

3. ஓமம், சுக்கு, தனியா ஆகியவற்றை நன்றாகப் பொடித்து ஒரு சிட்டிகையளவு பொடியை புழுங்கலரிசிக் கஞ்சியுடன் கலந்து. சாதாரண உப்புக்குப் பதிலாக இந்துப்பு கலந்து வெது வெதுப்பாகக் குடிக்கவும். இந்த கஞ்சி செரித்த பிறகு பசி எடுத்தால் தான் அடுத்த உணவை சாப்பிட வேண்டும். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வெட்டிவேர் 15 கிராம், 1 லி. தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அரை லிட்டராக ஆகும் வரை காய்ச்சி, சூடு ஆறியதும் வடிகட்டிய தண்ணீரை சிறிது சிறிதாகக் குடிக்க வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் உணவை நன்றாக செரிக்க வைத்து, வயிற்றிலுள்ள புண்ணை ஆற்றி, மப்பு நிலை ஏற்படாதவாறு பாதுகாக்கும்.


உடல் பருமன் குறைக்க

நிவாரணங்கள்:

1. தக்காளிச் சாறு & எலுமிச்சைப் பழச்சாறு இவைகளினுள்ள வைட்டமின் சி தோலை இளமையாக வைத்து. உடல் பருமனும் குறைந்து விடும்.

2. 100 கிராம் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வரலாம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும்.

3. ஆமணக்கின் வேரை நன்றாக நைய இடித்து தேன் கூட்டிப் பிசைந்து 250 மிலி தண்ணீரில் ஊற வைத்து, ஒரு நாள் முழுவதும் ஊறியதும் கசக்கிப் பிழிந்து சக்கைகளை களைந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும்.


மூலம்

நிவாரணங்கள்:

1. தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். மூலநோய் உள்ளவர்கள் இந்தக் கீரையை அடிக்கடிச் சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும்.

2. நாயுருவி இலை & தண்டு, மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்துக் கொட்டை பாக்கு அளவு சாப்பிட தீராத மூல நோயும் தீரும்.

3. ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணை விட்டு வதக்கி ஒற்றடமிட மூலமுனை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும். ஊறலும் தணியும்.

4. நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூலச் சூட்டை தணிக்கும். மேலும் அது உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.

5. பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துவர ரத்த மூலம் கட்டுப்படும். 6. அத்திப்பால் அத்திமர வேரிலிருந்து எடுக்கப்படுகிறது. இது மூலச் சூட்டை தணிக்கும். மேலும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.

7. நார்ச் சத்துள்ள கோதுமை, கொண்டைக் கடலை, புதினா கீரை, கறிவேப்பிலை, வெங்காயம், முட்டைகோஸ் முதலிய வற்றில் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மூலநோய் கட்டுப்படுவதுடன் குடல் புற்றுநோய் வராது.

8. ஆவரைக் கொளுந்து, பூ, பட்டை இவற்றுடன் அருகின்வேர் சூரணம் சேர்த்து அரைத்து, அதில் இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பசும் நெய்யில் 48 நாட்கள் உட்கொள்ள உள்மூலம் குணமாகும்.


புண்கள்

நிவாரணங்கள்:

1. மாந்தாரை பட்டையை நுண்ணிய பொடியாக்கி புண்களின் மீது தூவி வர புண்கள் ஆறும். 

2. வேப்ப மர இலைகளை அரைத்து பசைபோல் செய்து வீக்கம், நாள்பட்ட புண்கள், கட்டிகள் மீது பூசி வரலாம்.

3. பூசணிப் பழத்தை குழைய வேக வைத்து பிசைந்து அதை அழுகிய புண்களுக்கு வைத்துக் கட்டலாம். 

4. தர்ப்பை புல் கஷாயத்தை கொண்டு நாட்பட்ட ஆறாத புண்களை கழுவி வர அவை குணமாகும். மேற்படி கஷாயத்தை தினமும் காலையில் குடித்து வர உடலில் கொப்புளம் போன்று சிவந்து ஏற்படும் ஒருவகை தொற்று நோயை குணமாக்கும். ஒவ்வாமை, உடல் அரிப்பு நீங்கும். 

5. புன்னை இலை அல்லது பூக்களை நீரில் ஊற வைத்து அந்த நீரில் தினமும் குளித்து வந்தால் மேகப் புண் தீருவதுடன் சொறி, சிறங்கு போன்றவையும் குணமாகும்.


மூக்குண தோஷம் (வாதம், பித்தம், கபம்)

நிவாரணங்கள்:

1. இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்து விட்டு காலையில் நீராகாரம்) குடிக்க கபம், பித்தம், வாதம் ஆகிய முக்குண தோஷம் நீங்கி, அழகும். ஆண்மையும் பெருகும்.

2. பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறியை பயன்படுத்து வோருக்கு வாதம், பித்தம், கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

3. பனம் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றுக்கு நோய்கள் நோய் நீக்கும் குணங்கள் உண்டு. பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்தால் கண்நோய்கள் அகலும். 

4. கோரைப் பாயில் படுத்து தூங்க பசி, மந்தம், சுரம் ஆகியன குணமாகும். உடலுக்கு குளிர்ச்சி & நல்ல உறக்கமும் தரும்.


மஞ்சள் காமாலை

நிவாரணங்கள்:

1. கீழாநெல்லிச் செடியை அரைத்து மோருடன் சேர்ந்து அருந்தி வருகலாம்.

2. கீழாநெல்லிச் செடியை கசாயமாக காய்ச்சி சிறிது பனை வெல்லம் (கருப்பட்டி) சேர்த்து பருகலாம்.

3. எலுமிச்சைப் பழச்சாற்றுடன் தேன் கலந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சோர்வில்லாமல் கொடுத்து வந்தால் குணம் தெரியும். உப்பு, புளி நீக்கி ஆகாரம் உண்ணலாம்.


உடலில் சேரும் நச்சுப் பொருட்கள்

நிவாரணங்கள்:

1. புகைபிடித்தல், மது அருந்துதல், மாசுபட்ட குடிநீர், கலப்பட உணவினால் உடலில் சேரும் நச்சுப் பொருட்களை (டாக்ஸின்) அதிரடியாக வெளியேற்றி உடலை மேம்படுத்த அகத்திக்கீரை மற்றும் தனியா & பனங்கற்கண்டு சேர்த்த சூடான பாலாகவோ குளிர்பானமாகவோ பருகலாம்.

2. கற்பூரவள்ளி இலையுடன் வேப்பம் ஈர்க்கு சேர்த்து நன்கு அரைத்து சுண்டக்காய் அளவு கொடுத்து வர வயிற்றில் உருவாகும் நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.

3. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாக வில்லை என்றால் மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனைப் போக்க துவரம் பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் தட்டிப் போட்டு ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

4. ஆவார இலை, பூ, காய், பட்டை, வேர் இவைகளை தூளாக்கி சலித்து சூரணமாக்கி,அதில் 30 கிராம் கோரக்கிழங்கு சூரணம் 10 கிராம், கிச்சிலி கிழங்கு சூரணம் 10 கிராம் கலந்து வைத்துக் கொண்டு தினமும் குளிக்கும் போது சோப்புக்குப் பதில் இந்த சூரணக் கலவையை தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கற்றாலை நாற்றம் தீருவதுடன், தேமல், சொறி சிரங்கு போன்றவை குணமாகும்.

5. பாக்கை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.

6. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப் பூச்சி & வயிற்றுப் பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.


மலட்டுத் தன்மை (ஆண், பெண், பொது]

ஆண்மலட்டுத் தன்மை நீங்க

1. பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர் வேட்கையும் நீங்குவதுடன் ஆண்மை அதிகரிக்கும்.

2. சுரைக்காயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தைப் போக்கும் குணமுடையது. இதன் விதைகள் ஆண்மையைப் பெருக்கும்.

3. ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுதும் விதை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து அதை பாலில்'கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.

4. அரச விதையை பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகும்.


பெண் மலட்டுத் தன்மை நீங்க

1. தாழம்பூ விழுதை அரைத்து பாலில் கலந்து குடித்து வர மலட்டுத் தன்மை நீங்கும்.

2. பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச் சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.

3. இலந்தை இலை ஒரு கைபிடி அளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகு, நான்கு பூண்டு பல்லும் சேர்த்து அரைத்து மாத விலக்கான முதல் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்சனைகண் நீங்கி வாய்ப்புகள் அதிகரிக்கும். கரு உருவாகும்

4. விஷ்ணு கிராந்தி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீருடன் கலந்து உட்கொண்டு வரவும்.

5. அத்திப் பழத்துடன் தேன், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வர கருச்சிதைவு தடுக்கலாம்.

6. அசோக மரப்பட்டை 200 கிராம், ஆடாதோடப் பூ 100கி. மாந்தளிர் 100 கிராம் எடுத்துக் கெண்டு அவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து 2 கிராம் அளவு தேனில் கலந்து மாத விலக்கான 5வது நாளில் இருந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர பெண்கள் உடனே கருத்தரிப்பார்கள். இந்த மருந்து அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவையும் தடுக்கும்.

7. அசோக மரப்பட்டையுடன் பசும்பாலைச் சேர்த்து சாப்பிட்டு வர கருச்சிதைவை தடுக்கலாம்.

8. விஷ்ணு கிராந்தியுடன் ஓரிதழ் தாமரை சேர்த்துப் பால் விட்டு அரைத்து மாதவிடாய் கண்ட அன்று விடியற் காலையில் பெண்களுக்கு உட்கொள்ள கொடுத்து வர, மலடு நீங்கி குழந்தைப் பேறு அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

9. பருத்தி விதையை அரைத்து, கொட்டை பாக்களவு எடுத்து கோழி முட்டையின் வெண்கருவுடன் கலந்து சாப்பிட்டு, அடுத்த மாதம் மாதவிலக்கான அன்று நெறுஞ்சில் வேரை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

10. சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் பி-2. இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து புரதம் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

11. உப்பு, பூண்டு, வெங்காயம் போன்றவை ஆசை உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யக் கூடியது. எனவே அவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.

12. வேம்பம்பூ. குங்குமப்பூ 20கிராம், பனைவெல்லம் 100 கி. செய்முறை: வேப்பம்பூவை சுத்தம் செய்து லேசாக வறுத்து தூள் செய்து குங்குமப்பூவையும் மைய அரைத்து வேப்பம் பூவூடன் கூட்டி அரைத்துக் கொண்டு பனை வெல்லத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து இதனை 9 உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து 3 நாட்களுக்கு 3 வேளையாக 9 உருண்டை சாப்பிடவும். பால் அருந்தவும். கர்ப்பம் தரிக்காவிடின் மறுமுறையும் தொடர்ந்து சாப்பிடவும்.

13. படிகாரத் தூளை காலை வெறும் வயிற்றில் தூயநீரில் சேர்த்து பருகி வர கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.

14. சீரகம், வெங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து கொட்டை பாக்கு அளவை பசும்பாலில் கலந்து பருகவும். புளியும், போகமும் கூடாது.


மலட்டுத் தன்மை (இருபாலருக்கும் பொது)

விட்டதடி ஆசை விளாம்பழத் தோட்டோடு" என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத் தன்மை நீங்க இருவரும் விளாம்பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது (மேல் தோல்) கஷாயமாக காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள இரத்தம் சுத்தம் ஆகி குழந்தைப் பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு, தவிர விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது. 

2 அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள் என்று பழமொழியும் உண்டு. அரசமரத்தில் சூலகத்தை வலுவாக்கும் அழலையை நீக்கும் பொருள் உள்ளதால் ஆண் & பெண் குளித்த உடன் ஈரத் துணியுடன் சுற்றினால் அரச மரத்திலுள்ள அந்த சத்துகள் ஈர்க்கப்பட்டு குழந்தை உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

3. மாதுளை வளர்ந்த வீட்டில் களக்கமில்லை என்ற பழமொழி போல ஆண், பெண் இருபாலருக்குமே மலட்டுத் தன்மை நீங்கி விடும். ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கை பெருகும். பெண்கள் மாதுளம்பூ கஷாயத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து தினசரி பருகி வர, கருப்பை உஷ்ணம் & கிருமிகள் நீங்கி விரைவில் கருத்தரிப்பர். ஆண்களும் மாதுளம் பழ விதைகளை ஜூஸ் செய்து சாப்பிட 3 மாதத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்து குழந்தை பிறக்க வழியேற்படும்.

4. புளிக்காத தென்னங்கள்ளை குடித்து வந்தால் அழகான குழந்தை பிறக்கும்.

5. பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும். நீர்வேட்கையும் நீங்குவதுடன் ஆண்மை அதிகரிக்கும். 

6. அத்திக்காய் வடை:

அத்திக்காயை விதை நீக்கி திட்டமாக தண்ணீர் சேர்த்து வேக வைத்து கரகரப்பாக வடைமாவு பதத்தில் அரைத்து, அதுபோல கடலைப்பருப்பையும் ஊற வைத்து கரகரப்பாக அரைத்து இஞ்சி, நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி செடி. உப்பு இவைகளை சேர்த்து வடை பக்குவத்தில் எண்ணெயில் இட்டு சிவக்க பொரித்து எடுத்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்து மலடும் நீங்கும். ஆண்களுக்கு உடல் சூட்டை சீர்செய்து விரைவாதம் & மலட்டு தன்மையும் குணமாகும்.


பூப்படைய பிரச்சினை

நிவாரணங்கள்:

1. சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் அவர்கள் விரைவில் பூப்படைவார்கள்.

2. செம்பருத்தி இலை அல்லது பூ எந்த வகையிலாவது உட்கொள்ள அவர்கள் கூடிய விரைவில் பருவம் அடைவார்கள்.

3. நெருஞ்சி வேரை. எனுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து உட்கொள்ள பூப்படைவார்கள்.

4. மாவிலிங்கப் பட்டையுடன் பூண்டு. மிளகு கூட்டி நன்கு அரைத்து பாக்கு அளவு எடுத்து 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பருவம் எய்தியும், பூப்படையாத பெண்களுக்கு மாதவிடாய் உண்டாகும்.

5. கருஞ்சீரகம், சீரகம், ஓமம், பெருங்காயம், இந்துப்பு, சுக்கு. மிளகு, திப்பிலி இவை ஒவ்வொன்றையும் வகைக்கு 10 கிராம் வீதம் தனித்தனியாக பொடி செய்து வஸ்திர காயம் செய்து நாளுக்கு இரண்டு அல்லது 3 முறை சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன்பாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூதக வாயு, மாதவிடாயாகாமை, பிரசவ கோளாறுகள் தீரும்.

சித்த மருத்துவம் : பொது மருத்துவம் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : General medicine - Siddha medicine in Tamil [ Health ]