
ஜெர்மானிய மருத்துவர் சாமுவேல் கிருஷ்டியன் பிரடெரிக் ஹானிமன் அவர்களாவார்.
ஓமியோபதி விளக்கம் - கேள்வி - பதில் 1. ஓமியோபதி முறையைக்கண்டுபிடித்தவர் யார்? ஜெர்மானிய மருத்துவர் சாமுவேல் கிருஷ்டியன் பிரடெரிக் ஹானிமன் அவர்களாவார். காலம்:- 10-4-1755 முதல் 2.7-1843 வரை. 2. ஓமியோபதி என்றால் என்ன? இயற்கை விதிகளின் அடிப்படையில் நோயைக் குணமாக்கும் விஞ்ஞானமே ஓமியோபதி என்பதாகும். நோயை உண்டாக்கும் மருந்தால் நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையாகும். ஓமியோபதி என்ற சொல் கிரேக்க மொழியாகும். Homoeopathy Homols-like. அதே போல் Pathos-disease. நோய். Like disease அதேபோல் உள்ள நோய். இதைத்தான் சிமிலியா சிமிலிபஸ் குராண்டர் (Similia Similibus Curentur) என அழைக்கிறோம். ஆங்கிலத்தில் Let likes be treated by likes என்பதாகும். 3. அதற்குப் பொருள் என்ன? நல்ல உடல்நிலையில் உள்ளவர் ஒருவருக்கு ஒரு மருந்தை நோய்க்குறிகள் தோன்றும் அளவிற்கு அதிக அளவில் கொடுத்து, அது தோற்றுவிக்கும் குறிகளை குறித்துக்கொண்டு, அக்குறிகளை ஒத்த இயற்கை நோய்க்குறிகளைக் கொண்ட நோயாளிக்கு அதே மருந்தை வீரியப்படுத்தி, குறைந்த அளவில் கொடுத்துக் குணமாக்குவதாகும். 4. டாக்டர் ஹானிமன் அவர்களின் பிரதான சேவை எது? அவர் எழுதியுள்ள "தி ஆர்சுவான்" (The Organo). "தி" மெட்டீரியா மெடிகா பியூரா” (The Matorla Medica Pura) "தி கிராவி டிசென்" (The Chronic Diseases), "தி ரைட்டில்ல்" (The Lesser Writings) ஆகிய நூல்கள் பிரதானமாகும். 5. டாக்டர் ஹானிமனுக்கு முன்பிருந்தவர்கள் இவ் விதிமுறைகளை அறிந்திருந்தனரா? ஆம். ஹானிமன் தன் "ஆர்கனான்' நூலில் எழுபேர் இக்கருத்தைக் கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள்: 1. ஹிப்போகிரேட்ஸ், 2, பராசெல்சல், 3. ஹாலார் 4. ஸ்ட்ரோக், மற்றும் பலர். 6. ஓமியோபதியின் அடிப்படைக் கொள்கைகள் என்ன? (அ) நோயின் தன்மையை அதன் தெளிவான குறிகளைக் கொண்டு அறிதல். (ஆ) நல்ல உடல் நிலையில் உள்ளவருக்கு ஒரு மருந்தைக் கொடுத்து பரிசோதனைமுலம் அம் மருந்தின் செயல் முறையைப் பெறுதல். (இ) மேற்குறிப்பிட்ட இரண்டு உறவுகளுக்கிடையே "அதே போலுள்ளதை, அதே போலுள்ளதைக் கொண்ட (similar) ஒத்த நியதியின்," அடிப்படையில் குணப் படுத்தும் சீரிய பண்பு கொண்டதாகும். (ஈ) நோயைக் குணப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்து ஒன்று தான் இருக்கவேண்டும். கூட்டு மருந்துகளாக இருக்கக்கூடாது. ஆகையினால், நோய் நீக்கும் மருந்து ஒன்று மட்டுமே (Single) என்பது இதன் தலையாய கொள்கையாகும். (உ) மிகச் சிறிய அளவு மருந்தே நோயைக் குணப்படுத்தப் போதுமானதாகும். ஆகையினால் அது குறைந்த அளவு (Minimum dose) என்பதைக் குறிப்பதாகும். 7. ஓமியோபதி மருத்துவர் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமானவை எவை? (அ) நோய்க்கான ஒத்த மருந்தை விதிப்படி தருதல். (ஆ) மிகக் குறைந்த அளவு மருந்தையே குணப்படுத்தக் கொடுத்தல். (இ) முக்கியமாக, நாட்பட்ட நோயில் மருந்து கொடுத்து குணம் தெரிந்தால், எந்த மருந்தை தந்து வருகிறோமோ அம் மருந்தை மீண்டும் தராமல் நிறுத்திவிடுதல். 8. ஒரு மருந்தைமட்டும் தேர்ந்தெடுக்க எதைக் குறியாகக் கொள்ள வேண்டும்? ஒரு மருந்தை மட்டுமே தேர்ந்தெடுக்க நோயாளியினுடைய மொத்தக் குறிகளைக் (Totality of the Symptoms) கண்டாக வேண்டும். 9. மொத்தக் குறிகள் என்றால் என்ன? ஒரு நோயாளி தான் அனுபவிக்கிற குறிகளையும், தன் மனத்தில் தோன்றுகிற எண்ணம், உணர்ச்சி ஆகிய அனுபவங்களை அவராகவே, அவர் மொழியில் சொல்லப்பட்டதையும். இவைகளோடு சம்பந்தப்படாத குறிகளை மருத்துவர் நேரில் தம் புலன்களால் நோயாளியைப் பற்றி அறிகின்ற அறிகுறிகள், ஆகிய எல்லாவற்றிற்கும் மொத்தக் குறிகள் என்று பெயர். 10. மொத்தக் குறிகள் எல்லாமே முக்கியத்துவமுள்ளது தானா? எல்லாம் அல்ல. மிக விஞ்சிய தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்த (Prominent), அரியதான (Uncommon), சிறப்பான (Poculiar), குணங்கொண்ட குறிகளுடைய நோயாளிக்கு உள்ளது போல் உள்ள ஒத்த குறிகளைக் கொண்ட மருந்தைத் தேர்வு செய்தல் வேண்டும். பொதுவானக் குறிகள் ஒவ்வொரு நோயிலும் பெரும்பாலான மருந்துகளிலும் உள்ளதால், அவைகளைக் குறைந்த அளவே கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். 11. பொதுவாக ஒரு மருத்தை நோயாளிக்கு தேர்வு செய்யும் போது எந்தக் குறிகளுக்கு முதலிடம் தர முடிவுசெய்ய வேண்டும்? மனக் குறிகளையும் (Mental Symptoms), நோயாளிக்கு கடைசியாகத் தோன்றியுள்ள குறிகளையும் கவனிக்க வேண்டும். நோயாளிக்கு அதிக அமைதி, ஆறுதல், மனத்தில் சுகம், சமீபத்தில் ஏற்பட்டு வளர்ந்த குறிகள் மறையவும், முதலில் வகை செய்தல் வேண்டும். 12. மருந்தின் செயலை எவ்வாறு கண்டுபிடிக்கிறோம்? உடல் நலமுள்ளவருக்கு மருந்து கொடுத்துச் சோதித்துப் பார்த்தும். நஞ்சால் ஏற்பட்ட விளைவுகளைக் கவனத்தில் கொண்டும் கண்டு பிடிக்கிறோம். 13. மருந்தைச் சோதித்துப் பார்த்தல் (Provings) என்பதன் பொருள் என்ன? நல்ல உடல்நிலையில் உள்ளவருக்கு போதுமான குறிகளைத் தோற்றுவிக்க பல அளவுகளில் ஒரு மருந்தைத் கொடுத்து ஆராய்வதாகும். அதாவது, மருந்துகளின் உண்மையான தெளிவான விளைவுகளைப் பரிசோதிப்பதாகும். 14. ஒரு மருந்தை நிரூபணம் செய்வதற்கும் நச்சுத்தன்மையால் ஏற்பட்ட விளைவை பதிவு செய்வதற்கும் உள்ள உறவு யாது? நிரூபணமான மருந்தை சிகிச்சைக்காக ஒத்த குறிகளுக்கேற்ப கொடுப்பதானது இன்றியமையாததும், அதிக முக்கியமானதுமாகும். காரணம், மருந்தின் செயலை நேர்த்தியாக பகுத்துக் கொடுக்கிறது. ஆனால், நஞ்சில், வழக்கமாக கொல்லக்கூடிய சக்தியைப் பெற்றிருப்பதால் நஞ்சால் ஏற்படும் குறிகளை வெளியில் தெரியாமல் தடுக்கிறது. அது பண்படாத செயலைக் கொடுக்கிறது. 15. நோயைத் தோற்றுவிக்கக்கூடிய (Pathogenesis) மருந்து என்றால் என்ன? பரிசோதனையின்போது ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு மருந்தை பலவித அளவுகளில் கொடுத்து, அது உடலில் தோற்றுவித்த, குறிகளைக் பரிசோதனைக்குட்பட்டவர் தானாக தெரிவித்ததும், அவரிடம் மருத்துவர் நேரடியாகக் கண்ட குறிகள் எல்லாவற்றையும் பதிவுசெய்த குறிகளுடன், நஞ்சுகளின் தன்மையும், முறைகளும் கொண்டது உள்பட, விவரிக்கக்கூடியதாகும். 16. நோய் மிகுதியாகும் (Aggravation) பண்பென்றால் என்ன? நோயாளிக்கு ஒத்த மருந்தை கொடுத்தபோது நோய்க் குறிகள் முன்பிருந்ததைவிட தற்காலிகமாக அதிகமாகி விடுவதாகும். இதுவன்றி உணவு, காலம், சுற்றுப்புறச் சூழ்நிலை, சூரிய சந்திர நிலைகள் முதலியனவும் இதில் அடங்கும். 17. ஓமியோபதியில் நோய் மிகுதியாதல் (Homoeopathic aggravation) என்றால் என்ன? ஓமியோபதி விதிப்படி, ஒரு நோயை நீக்க தேர்ந்தெடுத்த ஒரு மருந்தைக் கொடுத்தபோது, வேறு புதுக் குறிகளைத் தோற்றுவிக்காமல், ஆபத்தையும் உண்டாக்காமல், ஏற்கனவே உடலில் உள்ள நோய்க்குறிகள் தற்காலிகமாக முன்பிருந்ததை விட சற்று அதிகமானால், அது மருந்தினால் தோற்றுவித்த "மருந்து நோய்" (Medicinal disease) ஆகும். அப்பொழுது முன்பு தந்த மருந்தையே மீண்டும் தராமல் நிறுத்திவிடவேண்டும். மேலும் அந்த மருந்தினாலான நோய், ஏற்கனவே குணப்படுத்த வேண்டியிருக்கிற நோயைக் காட்டிலும் இயற்கையாகவே சற்று பலம் பெற்றதாக இருக்குமேயானால், முன்புள்ள நோயை மருந்தினாலான நோய் அடக்கி ஒழித்து விடுகிறது எனக் கருத வேண்டும். இது நோயைக் குணப்படுத்த மிகவும் சாதகமானது மட்டுமன்றி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் நன்மைகளைக் கொடுக்கும். இதைத்தான் நோய் மிகுதியாதல் என்கிறோம். 18. நோய் குறைதல் (Amolioration) என்றால் என்ன? நோயாளிக்கு மருந்து கொடுத்தபின் முன்பிருந்ததைவிட பூரண குணம் கிடைக்கும் முன்பே நோய் தணிந்து வந்தால் அதற்கு நோய் குறைதல் என்று பெயர். 19. ஓமியோபதியில் கோய் குறைதல் (Homoeopathic amoiloration) என்றால் என்ன? ஓமியோபதி விதிப்படி ஒரு தோயை நீக்க மருந்தைக் கொடுத்தபோது நோய்க் குறிகள் மருந்தினால் மட்டுமின்றி, காலம் (Time). தட்பவெட்ப நிலை (Weather). குளித்தல் (Bathing), ஓய்வு அல்லது அசைதல் (Rest or Motion). நிலைமைகள் (Position), வெளி உணர்வுகள் (External stimuli). உண்ணுதல் (Eating), தாகம் (Thirst). தூக்கம் (Sleep). மாதவிடாய் (Menses), வியர்வை (Sweat), பால் உணர்வு (Sexual), உணர்ச்சிவயப்படல் (Emotlons), ஒத்தடம் தருதல் (Formentation) ஆகியவைகளினால் நோய் குறைந்தாலும் இதற்குப் பொருத்தும். 20. மருந்து (Drug) என்றால் என்ன? உடலின் செயல்முறையையோ, ஊட்டச்சத்தின் ஒரு பகுதி அல்லது பகுதிகளையோ மாற்றும் ஒரு பொருளுக்கு மருந்து என்று பெயர். 21. மெட்டீரியா மெடிகா (Materia Medica) என்றால் என்ன? மருந்துகளின் தோற்றம் பற்றியும், நோயைக் குணமாக்கும் அதன் செயல் முறைகளைப் பற்றியும், அளவுகளையும், விளக்கும் நூலுக்கு மெட்டீரியா மெடிகா என்று பெயர். 22. ஓமியோபதிக்கு பயன்படும் மருந்துகள் எவைகளிலிருந்து பெறப்படுகின்றன? மிருகம் (Animal), தாவரம் (Vegetable), தாதுப்பொருள்கள் (Mineral) ஆகியவை இயற்கையிலிருந்தும், நோயிலிருந்து பெறும் பொருளிலிருந்தும் (Nosodes) பெறப்படுகின்றன. 23. நோசோதுகள் (Nosodes) என்றால் என்ன? நோயிலிருந்து பெறப்பட்ட பொருளை நோயைக் குணமாக்க மருந்தாகக் கொடுக்கப்படுவதை ஓமியோபதி முறையில் நோசோதுகள் என்று பெயரிட்டு அழைக்கின்றோம். 24. தடுப்பு மருந்து (Prophylaxis) என்று எதற்குப் பெயர்? நோய் வராமல் தடுக்கச் செய்ய மேற்கொள்ளும் எந்த ஒரு முறைக்கும் நோய்த்தடுப்பு முறை என்கிறோம். அதேபோல் நோய் வராமல் தடுக்க நோய் வரும் முன்பே மருந்தைக் கொடுக்ககிறோம். அம் மருந்துக்கு தடுப்பு மருந்து என்று பெயர். 25. நோய்களுக்கு சிசிச்சை (Therapeutics) என்பதன் பொருள் யாது? மருத்துவ விஞ்ஞானத்தில் நோயை குணமாக்கச் செய்யும் முறைகளின் ஒரு கிளையாகும். 26. நோயைக் குணமாக்க கருத்தில் கொள்ள வேண்டியவைகள் யாவை? தக்க மருந்தை தேர்ந்தெடுத்தல், குணப்படுத்துதல், உணவு, காலநிலை, உடை, குளித்தல், சிகிச்சை, தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வு, வெளிச்சம் முதலியவைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும். 27. நோயை எதிர்க்க எம்முறையை கையாளலாம்? 1. தடுப்புமுறை (Preventive), 2. தணிக்கும் முறை (Palliative). 3. குணப்படுத்தும் முறை (Curatlve), ஆகிய மூன்று குறைகளைக் கையாளலாம். 28. தணிக்கும் (Palliative) மருந்துகள் என்று எதற்குப் பெயர்? குணமாக்க முடியாத நோய்கள் என கூறப்படும் நோய்களில் கூட ஓமியோபதி மருந்துகள் மூலம் நோயைத் தணித்து புகழத் தக்க வகையில் பயன்கள் பெறப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஏற்படும் கடுமையையோ, குணமாக்க முடியாத வேதனைகளையோ மருந்துகள் மூலம் தணிப்பதற்கு தணிக்கும் மருந்து என்று பெயர் கொண்டழைக்கிறோம். இதில் மருந்தல்லாத வெப்பம், குளிர்ச்சி, உணவுப் பொருள்களும் அடங்கும். 29. குணமாக்கும் (Curativo) மருந்துகள் என்றால் என்ன? தனிப்பட்ட வகையில் (Exclusively) நோயைக் குணமாக்க ஓமியோபதி இடம் பிடித்துக் கொண்டுள்ள பகுதியாகும். அது தான் ஒத்ததை ஒத்ததால் குணப்படுத்தும் மருந்துகளுக்கு குணமாக்கும் மருந்துகள் என்று பெயர். 30. போலி மருத்துவர் (Empiricism) என்று ஏன் கூறுகின்றனர்? விற்ஞான அடிப்படையின் படியோ, ஆராய்ச்சியோ, மருத்துவ முறைகளோ ஏதும் இன்றி தன் அனுமானத்தின் மீது அனுபவத்தைக் கொண்டு நோயாளிக்குச் சிகிச்சை செய்யவருக்குப் போலி மருத்துவர் என்று கூறுகின்றனர். 31. குறிகள் (Symptoms) என்றால் என்ன? ஒரு நல்ல உடல் நிலையில் உள்ளவரின் உடம்பில் ஒரு மருந்தாலோ அல்லது நோய் உண்டாக்கும் சில பொருள்களாலோ ஏற்படும் தொந்தரவுகளுடன் மாற்றத்தை உணர்வதற்கு குறிகள் என்று பெயர். 32. மெரியா மெடிகாவை குறிகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு பிரிக்கலாம்? (அ) நோயைத் தோற்றுவிக்க காரணமாயுள்ளதையும், நோயாளிக்குரிய நோய்க் குறிகளையும் (Pathogenice and Clinical) கருத்திற் கொள்ளுதல். (ஆ) இனத்தையும் ஆதன் பண்புக்கூறுமளயும் (Generic and Cheracteristic) கருத்திற் கொள்ளுதல். 33, நோயில் காணும் (Pathognomonic Symptoms) முக்கிய குறிகள் என்றால் என்ன? ஒரு நோயில் காணும் சிறப்பு அல்லது பண்புக்குறிகளைக் குறிப்பதாகும். நோய் இன்னதென்று நன்கறிந்த மருத்துவரே இதை கண்டுபிடிப்பார். 34. கோயின் பரம்பரைக் குறிகள் (Pathogenetic Symptoms) என்பதன் பொருள் என்ன? நல்ல உடல் நிலையில் உள்ளவர் மூலம் பரிசோதனையில் நிரூபணமான குறியோ அவ்வது நச்சுத்தன்மையால் கண்டறிந்து பெற்றவைகளுக்கு பரம்பரைக் குறிகள் என்று பெயர். 35. நோயாளிக்குரிய குறி (Clinical Symptoms) என்றால் என்ன? ஒரு நோயாளி படுக்கையில் படுத்திருக்கும்போது அவரிடம் காணப்படும் நோய்க்குறிகள் ஓமியோபதி முறைப்படி நிரூபணமாகாததாகும். சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு மருந்து தருகிறோம். ஓமியோபதி முறைப்படி நிரூபணமாகாத அம்மருந்தால் குறிப்பிட்ட குறிகள் மறைந்தால் கொடுத்த மருந்து வேலை செய்கிறது என்று நம்பிக்கை கொள்ளுவதற்கு நோயாளிக்குரிய குறி என்று பெயர். 35. இனத்தின் குணக்குறிகள் (Ganerle Symptoms) என்பது என்ன? பல மருந்துகளிலும் உள்ள பொதுவான குறிகளை இனக் குறிகள் என்று சொல்லுகிறோம். உதாரணமாக பசியின்மை, பலகீனம், தலைவலி, வேதனைகள் முதலியன. மருத்துவருக்கு இவை சிறிது அளவே முக்கியத்துவம் வாய்ந்தவை. 37. குணக் குறிகள் (Characteristic Symptoms) என்பதற்குப் பொருள் என்ன? குணக்குறிகள் என்பது ஒரு மருந்தினுடைய தனிப்பட்ட குறிகளாகும். அது ஒரு மருந்து சம்பந்தப்பட்ட முழு விளக்கங்கள் மட்டுமே கொண்டதாக இருத்தல் வேண்டும். 38. குணக் குறிகளை சில வேளைகயில் எவ்வாறு பிரிக்கிறார்கள்? 1. முக்கிய குறிகள் (Key - note Symptoms) 2. வழிகாட்டும் (Guiding Symptoms) என்று பிரிக்கிறார்கள். 39. தானாக மனத்தில் எழுகிற குறிகள் (Subjective Symptoms) என்றால் என்ன? மருந்து நிரூபணத்திற்குட்படுத்தப்பட்ட நபரோ, அல்லது நோயாளியோ, தான் அணுபவிக்கிற குறிகளை, மனத்தில் தோன்றுகிற அனுபவங்களை, அவராகவே அவர் மொழியிலேயே மருத்துவருக்குச் சொல்வதை தானாக மனத்தில் எழுகின்றச் குறிகள் என்கிறோம். 40. நோக்கக் குறிகள் (Objective Symptoms) என்றால் என்ன? நோயாளியிடம் இருந்து நேரடியாக மருத்துவரின் கவனத்தைக் கவரக்கூடிய குறிகளுக்கு நோக்கக் குறிகள் என்று பெயர். 41. அத்தியாவசியமான குறிகளில் மூன்று முக்கிய பகுதிகள் எவை? 1. இடம் (Location) 2. உணர்வு (Sensation) 3. அதிகமாதல் (Aggravation) அல்லது தணிதல் (Amelioration) ஆகும். அவைகளில், அதிகமாதலும், தணிதலும் மிக மிக முக்கியமான தாகும். 42. அந்த மூன்றும் ஒவ்வொரு குறியிலும் காணப்படுமா? அவைகள் காணப்படாது. மருந்து நிரூபணத்தில் போதிய முக்கியத்துவம் பெறாவிட்டாலும் கூடியவரை சிகிச்சையை முழுமையடையச் செய்ய உதவும். 43. ஓமியோபதி மருத்துவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் யாவை? ஓமியோபதி மருத்துவர் ஒரு மருந்தைப் பற்றி அறிந்திருப்பதோடு. தனியாக நோயைக் குணமாக்கக்கூடிய அறிவையும், சிறப்பாக மருத்துவ விஞ்ஞானத்தையும், ஓமியோபதியின் சட்டமான ஒத்ததையும் (Similar) அவசியம் தெரிந்திருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் பரம்பரை வழக்கங்கள் (Tradition), முன்னோர்களின் பூர்வீக நோய்கள் (Inheritance), உண்மை நிலைகளுடன் (Right). மருந்தோடு இவைகளையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். 44. மருந்துகளின் ஒன்றுக்கொன்று உள்ள உறவு என்ன? 1. எதிர்ப்பவை (Antidote). 2. பொருத்தமுள்ளவை (Concordent). 3. பூர்த்தி செய்பவை (Complimentary) 4. பகை (Inimical). 5. குடும்பம் (Family) ஆகிய ஐந்து வகைகளாகும். 45. எதிர்ப்பு மருந்து (Antidote) என்றால் என்ன? ஏற்கனவே உட்கொண்ட மருந்தின் செயலை மாற்றவோ அல்லது எதிர்த்தோ செயல்படும் ஒரு மருந்துக்கு முறிவு மருந்து என்றும், எதிர்ப்பு மருந்து என்றும் பெயர். 45. பொருத்தமுள்ள (Concordent) மருந்து என்றால் என்ன? மருந்துகளுக்கிடையே செயல்கள் ஒரே மாதிரியாக (Similar) இருந்தும் அவைகளின் தோற்றம் வேறுபட்டு (Dissimilar origin) இருப்பினும், அவை ஒன்றுக்கொன்று தொடர்ந்து நன்றாக வேலை செய்யும். அம்மாதிரி உள்ளவைகளுக்கு பொருத்தமுள்ள மருந்துகள் என்று பெயர். 47. பகை மருந்து (Inimical) என்றால் என்ன? ஒரு மருந்து இன்னொரு மருந்துடன் சேராது. அதனால் ஒன்றுக்கொன்று தொடர்ந்து வேலை செய்யாது. அவைகளுக்கு பகை மருந்துகள் என்று பெயர். 48. மருந்தில் 'குடும்பம்' என்று எதற்குப் பெயர்? மருந்துகளுக்கிடையே நிலவும் உறவானது அம்மருந்துகளின் மூலம் (Origin) யாவும் ஒன்றாக இருப்பதால் அவைகளைக் குடும்பம் என்று அழைக்கிறோம். 48. பூர்த்தி செய்கிற மருந்து (Complimentary) என்றால் என்ன? நோயைக் குணமாக்க ஒரு நோயாளிக்கு ஒரு மருந்தைக் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட மருத்தின் செயலை, அதன் இன்னொரு உறவு மருந்து நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு பூர்த்தி செய்கிற மருந்து என்று பெயர். 50. பல்பயன் மருந்து (Poly Chrest) என்று எதற்குப் பெயர்? நோயை நீக்க தமது அன்றாட புழக்கத்தில் மிகவும் அடிக்கடி பயன்படும் மருத்துக்கு பல்பயன் மருந்து என்று பெயர், 51. மாறுபாடுகளை உடைய மருந்து (Differentiation) என்று சொல்வதின் பொருள் என்ன? ஒரே உறவுள்ள மருந்துகளுக்கிடையே அதன் செயல்பாடுகள் மாறுபட்டு இருப்பதால் அதற்கு மாறுபாடுகளை உடைய மருந்து என்று பெயர். 52. மாற்றித் தரும் மருந்து (Alternation) என்றால் என்ன? நோயைப் போக்க முதலில் ஒரு மருந்தும், பிறரு இன்னொரு மருந்தும், அவ்வாறாக இரண்டு அல்லது அதற்கு மேலும் உள்ள நோய்க் குறிகளுக்கேற்றவாறு மருந்துகளை மாற்றி மாற்றித் தருவதற்கு மாற்றித் தரும் மருந்து என்று பொருளாகும். 53. மருந்தை மாற்றி மாற்றித் தந்து சிகிச்சைச் செய்வது கண்டிக்கத் தக்கதாகும். ஏன்? (அ) மொத்தக் குறிகள் கண்டபின் ஒரு மருந்துக்கு மேல் ஓமியோபதியில் தருவது இடையாது. (ஆ) ஒரு மருந்தின் செயல்பாட்டைக் கருத்திற் கொள்ளாமல் அக்கறையற்று தனக்கு திட்டவட்டமாகச் சரியானபடி போதிய அறிவு இல்லாததால் பல மருந்துகளைக் கொடுக்க நாடுதல். (இ) ஒரு மருந்து அதன் செயல்படும் காலம் முடியும் முன்பே இரண்டாவது மருந்தைத் தருவோமானால் முதல் மருந்தின் செயலில் குறுக்கிடுவதாகும். அதனால் எதிர்பார்க்கும் பயன் கிட்டாது. ஏற்கனவே உடலில் செயல் பட்டுக்கொண்டு வரும் மருந்தும் தன் சக்தியை இழந்து விடும். (ஈ) முறிவு மருந்துகளை அல்லது ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறித் தருதல். (உ) நோயை நீக்க ஒரே மருந்தை மட்டும் கொடுத்து பார்த்ததில் நல்ல பலனோடு சீக்கிரமாக குணமடைந்துள்ளதைப் புள்ளி விவரங்கள் நிருபிக்கின்றன. இவைகளைக் கருத்தில் கொள்ளாமல் சிகிச்சை செய்வது கண்டிக்கத் தக்கதாகும். 54. அமுக்குதல் (Suppression) என்பதை விளக்கிக் கூறுக: "நோய் பூரணமாகக் குணமாவதற்கு முன்பே நோய் மறைவதை தெளிவாக நமக்கு காட்டுவதே" அமுக்குதல் ஆகும். இதில் பலவகை உண்டு. மருந்தினால், அல்லது எதிர்பாராத விதமான நிகழ்ச்சியினாலும், அல்லது இயற்கையினாலும் ஏற்பட்ட அதிர்ச்சிகளை அமுக்கப்பட்டபோது, அதிர்ச்சியினால் ஏற்பட்ட உணர்வுகள் கவலையையோ, வருத்தத்தையோ மனதில் தோற்றுவிக்கிறது. மாதவிடாயின்போது குளிப்பதாலும். சளிப்பிடிப்பதாலும், பிரசவத்திற்குப் பிறகு போகும் விடாய் (Lochia) நிற்பதாலும், பால்சுரப்பது நிற்பதாலும், குளிரால் திடீரென வியர்வையை தடுப்பதாலும் கூட ஏற்படலாம். ஒரு கடுமையான நோய் இன்னொரு கடுமையான நோயை பின் தள்ளிவிட்டு இரண்டாவது நோய் குணமாகும் வரை இருக்கச் செய்தலும் அல்லது ஒரு கடுமையான நோய் அந்நோயின் செயல் முடியும் வரை தற்காலிகமாக ஒரு நாட்பட்ட நோயைச் செயல் படாமல் வைக்கலாம். தோலின் மேல் ஏற்பட்ட நோயை மேல்பூச்சு மருந்துகளால் அமுக்குதல், உட்கொள்ளும் மருந்துகளால் நோயை அமுக்குதல், கைகால்களில் ஏற்படும் வியர்வைக்கு பவுடர் தடவுவதால் அமுக்குதல், மரு. சதை வளர்ச்சி, இவைகளை அறுவையைக் கொண்டு நீக்குதல் ஆகியவைகளாகும். குணமாகும் நோய்க்கு தணிக்கும் மருந்தை தரவே கூடாது என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும். தணிக்கும் மருந்தால் நோய் அமுக்குதல் ஏற்படும். அதனால் நோயை குணப்படுத்த முடியாமல் போகலாம். எந்தவிதமான அமுக்குதலும் நோயை மறைக்கவே செய்யும். 55. உயிர்ச் சக்தி (Vital Force) யைப் பற்றி விளக்குக: இந்த உயிர்ச் சக்தியானது உடலை சாதாரணமாக செயல்பட வைக்கும் பணியை நிர்வகிக்கிறது. உடலுக்கு ஒவ்வாத அல்லது பகையான பொருட்களால் உடலின் செயலில் அவை தலையீட்டுக் கெடுக்கும். சம்பந்தப்பட்ட நபர் நோயினால் தாக்கப்பட்டு அதன் மூலம் நோயின் குறிகளும், குணக்குறிகளும் (signs and Symptoms) தோன்றி நலமற்று விடுகிறார். இந்நிலையில் உயிர்ச்சக்தி பாதிக்கப்படுகிறது. உயிர்ச்சக்தி பலகீனப் பட்டால் முதலில் உடல் கெட்டு, பிறகு உயிரும் கெட ஏதுவாகிறது. முற்றிய நிலையில் மனத்தைத் தாக்கி மனநிலையை பேதலிக்கச் செய்தும், குழப்பத்தில் ஆழ்த்தியும் பலவிதமான எண்ணங்களையும் தோற்றுவிக்கிறது. இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ளது இந்த உயிர்ச் சக்தி யாகும். இது கெட்டுப் போனால் உடல், மனம் ஆகியவைகளில் தோயைத் தோற்றுவிக்கிறது என்பதாகும். 56. உயிர்ச்சக்தி பலமற்று உள்ளதை எவ்வாறு அறியலாம்? மந்தமும், மனத்தின் செயல்பாடின்மை நிலையும், சிந்திக்கும் போது தலையினுள் மிகுதியாக நிறைந்திருப்பது போலவும், பசி இன்மையும், களைப்பும், சோர்வுள்ள உணர்வும், உடல் சில்லென்றிருக்கிறப் போக்கும் காணப்படும்போது உயிர்ச் சக்தியானது பலமற்று உள்ளதாக அறியலாம். 57. தசைகள் சக்தியிழந்துள்ளதை அறிவது எப்படி? மந்தமான பின்புற வலியும், களைப்பான நிலையும். கர்ப்பப்பை கீழ் இறங்குதலும், இரத்தப்போக்குகளும், வெள்ளை படுதலும் ஆகியக் குறிகளைக்கொண்டு, தசைகள் சக்தியிழந்துள்ளதாக அறியலாம். 58. மியாசத்தின் (Miasm) தத்துவும் என்ன? டாக்டர் ஹானிமன் அவர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சி அனுபவங்கள் மூலம் அறிந்து நாட்பட்ட நோய்களுக்கெல்லாம் உண்மையான காரணம் மூன்று மியாசங்களான சோரா, சைக்கோஸிஸ், சிபிலிஸ் ஆகியவைகள் தான் என்றார். இந்த சோரா உடலில் மறைந்திருந்து மிகச் சக்தி வாய்ந்த வேலையைச் செய்வதோடு, நாட்பட்ட நோயை மட்டுமல்ல (Chronic Diseases) கடுமையான நோயை (Acute Diseases) யும், குணப்படுத்தத் தடையாக உள்ளது. சோரா இல்லாமல் உடலில் சைக்கோசில், சிபிலிஸ் ஆகிய நோய்கள் தங்கியிருக்காது என்பது அதன் தத்துவமாகும். மியாசம் என்பதற்கு "சூழ்நிலையால் ஏற்பட்ட நஞ்சின் செல்வாக்கு" என்று பொருளாகும். 59. டாக்டர் ஹானிமன் வடிவம் என்றால் என்ன? குறிகளை உடற்கூறு வரிசையில் தலையிலிருந்து ஆரம்பித்து பிறகு கண், காது, மூக்கு, முகம், வாய், தொண்டை, இரைப்பை, வயிறு, சிறுநீர்வழி, சுவாச உறுப்புகள், இருதயம், கழுத்து, முதுகு, கைகால்கள், தோல் முதலியவைகளை ஒழுங்குபடுத்தி வைத்த முறைக்கு டாக்டர் ஹானிமன் வடிவம் என்று பெயர். 60. ஓமியோபதி சிகிச்சை முறை சிறந்தது, ஏன்? உடற் கூறு முறையில் (Physiological method) மலச் சிக்கலுக்கு இலேசான பேதி மருந்துகளையும் (Laxatives for constipation), வயிற்றுப் போக்குக்கு அதைக் கட்டுபடுத்துகிற மருந்துகளையும் (Astringents for diarrhoea), காய்ச்சலுக்கு எதிரான காய்ச்சல் நீக்கும் மருந்துகளையும் (Antipyretics for fever), வயிற்றின் வாயுவிற்கு வாயுத் தொல்லை நீக்கும் மருந்துகளையும் (Carminatives for flatulence) தருவதைக் காண்கிறோம். ஓமியோபதி முறையில் நோயாளியின் தனிப்பட்டக் குறிகளுக்கு மருந்து தராமல், ஒரு முழு மனிதனிடமுள்ளக் குறிகளுக்கு மருந்து தருவதால் நோய் அடியோடு நீக்கப்படுகிறது. இதனால் ஓமியோபதி சிகிச்சைமுறை சிறந்தது ஆகும்.
மருத்துவ குறிப்புகள் : ஓமியோபதி விளக்கம் - கேள்வி - பதில் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Homeopathy Explanation - Question - Answer - Medicine Tips in Tamil [ Medicine ]