
நமது தேகம் வளர்ந்து நாம் உயிர் வாழ நாம் தினசரி பலவகையான உணவு வகைகளைப் புசித்து வருகிறோம்.
உணவில் சேர்க்க வேண்டிய பொருள்கள் நமது தேகம் வளர்ந்து நாம் உயிர் வாழ நாம் தினசரி பலவகையான உணவு
வகைகளைப் புசித்து வருகிறோம். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகையான உயிர்ச்சத்துக்கள்
உள்ளன. அவ்வளவும் சேர்ந்து தான் நமது உடலுக்குப் பலத்தையும் உயிர் வாழத் தேவையான சக்தியையும்
அளிக்கின்றன. நாம் தினசரி உட்கொள்ளும் அரிசி, சோளம், கோதுமை, கம்பு, பருப்பு வகைகள், நெல் அல்லது
எண்ணெய், கீரை வகைகள். காய்கறி வகைகள், பால், இறைச்சி, மீன், பழங்கள் போன்ற
பொருள்களி லிருந்து நமது தேகத்திற்குத் தேவையான வைட்டமின் உயிர்ச்சத்து கிடைத்து வருகிறது.
வைட்டமின் உயிர்ச் சத்துக்களை பலவகையாகப் பிரித்து அதற்கு A, B, C, வரிசையில்
பெயரிட்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த வகையில் வைட்டமின் A வைட்டமின்
B1, வைட்டமின் B2, வைட்டமின் C போனற உயிர்ச் சத்துக்களையே முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த வரிசையில் வைட்டமின் A உயிர்ச்சத்து
நம் உடலில் தேவையான அளவு இருந்தால் அதனால் ஏற்படும் நன்மை என்ன? வைட்டமின்
A உயிர்ச்சத்து குறைவாக இருந்தால் என்னென்ன குறைபாடு ஏற்படும்
என்ற விபரத்தை கீழே காணலாம். நன்மைகள் உடலுக்குப் பலத்தைத் தரும். உடலை வளரச் செய்யும். நரம்புகளுக்கு
பலத்தைக் கொடுக்கும். கண் பார்வை தெளிவடையும். உடல் தோலை சுரசுரப்பின்றி மழுமழுப்பாக்கும்.
பல் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. பற்கள் பலம் பெற்றுவிடும். இரத்தத்தை உண்டு பண்ணும்.
அதன் காரணமாக தாது விருத்தி உண்டாகும். இந்த உயிர்ச்சத்துக்கு விஷநோய்க் கிருமிகளைக்
கொல்லும் சக்தி உண்டு. அதனால் இரத்தத்தில் கலக்கும் கிருமிகளை இது கொன்றுவிடும். வயிற்றில்
வளரும் குழந்தைகளுக்கு போஷாக்கை அளிக்கும். எனவே வைட்டமின் A உயிர்ச்சத்து
அதிகம் உள்ள பழங்களை அதிக அளவில் சாப்பிட்டு வருவது நல்லது. தீமைகள் உடலில் வைட்டமின் A உயிர்ச்சத்துக்
குறைந் தால் இதற்கு நேர்மாறான கெடுதல் உண்டாகும். பழங்களில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள்
இருக்கும் விவரம்: அடங்கியுள்ள வைட்டமின்
A உயிர்ச்சத்து மாம்பழம் – 1367 மில்லி கிராம் பப்பாளிப்பழம் – 573 மில்லி கிராம் பேரிக்காய் – 170
மில்லி கிராம் பலாப்பழம் – 153 மில்லி கிராம் ஆரஞ்சுப் பழம் -
99 மில்லி கிராம் செவ்வாழைப் பழம் –
99 மில்லி கிராம் தக்காளிப் பழம் –
91 மில்லி கிராம் பம்பளிமாசுப் பழம் – 57 மில்லி கிராம் வாழைப் பழம் - 35 மில்லி கிராம் மலைவாழைப் பழம் –
35 மில்லி கிராம் புளியம் பழம் –
28 மில்லி கிராம் விளாம் பழம் – 0 மில்லி கிராம் இலத்தைப் பழம் –
20 மில்லி கிராம் அன்னாசிப் பழம் –
17 மில்லி கிராம் எலுமிச்சைப் பழம் –
7 மில்லி கிராம் நீலத்திராட்சைப் பழம் - 4 மில்லி கிராம் நேந்திரவாழைப் பழம் – 0 மில்லி கிராம் ஆப்பிள் பழம் -
0 மில்லி கிராம் கொய்யாப் பழம் -
0 மில்லி கிராம் சாத்துக்குடிப் பழம் - 0 மில்லி கிராம் தர்ப்பூஸ் பழம் -
0 மில்லி கிராம் பச்சை திராட்சைப் பழம் - 0 மில்லி கிராம் சீத்தாப் பழம் -
0 மில்லி கிராம் நாவற்பழம் - 0 மில்லி கிராம் இந்தப் பழம் சாம்பல் பூசணிக்காயை ஒத்த அளவில் பெரிதாக இருக்கும். இதன் மேல்தோல் கரும் பச்சை நிறமாக இருக்கும். இதை இரண்டாகப் பிளந்தால், நடு பாகம் வரை ஒரே சிவந்த நிறமாக சதைப் பற்று இருக்கும். மேல் தோலிலிருந்து உள் பக்கமாக சுமார் 4 செ.மீ. கனம் வரை ஒரே கனமான மிருதுவான சதைப்பற்று இருக்கும். அதையடுத்து சடைபோன்ற பாகமிருக்கும். இந்தச் சடை பாகத்தில் பீர்க்கங்காயின் விதையையொத்த அளவில் கருநிறமான விதைகள் நிறைந்திருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் B1 உயிர்ச்சத்து மட்டும் தான் சிறிதளவு இருக்கிறது. வேறு எந்த உயிர்ச்சத்தும் கிடையாது. தர்ப்பூஸ் பழத்திலுள்ள உயிர்ச்சத்து விபரம்: வைட்டமின் A உயிர்ச்சத்து – கிடையாது. வைட்டமின் BI - 6 மில்லிகிராம் வைட்டமின் B2 – கிடையாது. வைட்டமின் C - கிடையாது. சுண்ணாம்புச் சத்து – 3 மி.கி. இரும்புச்சத்து - ௦.1 மி.கி. இதன் உஷ்ண அளவு - 5 காலரி. இந்தப் பழம் இனிப்பு ருசியாக இருக்கும். தாகத்தைத் தணிக்கும். இதைச் சாப்பிடுவதினாலும் உடலுக்கு எந்த விதமான பயனும் ஏற்படாது. பொதுவாக நன்மையுமில்லை தீமையுமில்லை. இது மாதுளம் பழத்தைப் போன்ற வடிவத்தில். மாதுளம் பழத்தில் முக்கால்
திட்ட அளவுள்ளதாக இருக்கும். உள்ளேயும், மாதுளம்பழத்தைப் போன்ற உறுதியான
கனத்த தோலுக்கு நடுவில் நான்கு சுளை களிருக்கும். இந்தச் சுளைகள், வெள்ளை, ரோசாப்பூ நிறத்தை
போலிருக்கும். இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடலுக்கு எந்த வகையான நன்மையும்
ஏற்படாது. பித்தத்தை அதிகரிக்கச் செய்யும். வயிற்று வலியைக் குணமாக்கும். உடல் வைக்கும்.
உஷ்ணத்தைத் தணித்து, சமநிலையில் நாட்பட்ட சீத பேதியானாலும்
இந்தப் பழத்தின் தோல் அதை நிறுத்தும் சக்தி பெற்றதாக இருக்கிறது. இந்தப்பழத்தின் தோலை
மைபோல அரைத்து கொட் டைப் பாக்களவு எடுத்து தேக்கரண்டியளவு சுத்தமான தேனும் சேர்த்துக்
கொடுத்தால் சீதபேதி குணமாகும். குறிப்பு எந்த வகையான பழமானாலும், அது காயாகவோ, செம்பழமாகவோ
இருக்கும் பொழுது சாப்பிடக்கூடாது. நன்றாகப் பழுத்தப் பழங்களையே தான் சாப்பிடவேண்டும்.
பதனழிந்த, அழுகிய எந்தப் பழங்களையும் தொடவே கூடாது.
அழுகிய பழங்களில் கண்களுக்குத் தென்படும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளுமிருக்கும்.
இதைச் சாப்பிட்டால் உடல் நலம் கெடும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பனைமரத்தில் உற்பத்தியாவது தான் பனம்பழம். பனம் பழம் பந்து போல
உருண்டையாக இருக்கும். இதன் நிறம் ஒரு விதமான கருப்பு. காம்புப்பகுதிக்குக் கீழே இளநீர்க்
காய்க்கு இருப்பது போல செதில்களிருக்கும். நன்றாகப் பெருத்த பழம் சுமார் 15மி.மீ. குறுக்களவு
உள்ளதாக இருக்கும். பனம் பழத்தைப் பச்சையாகவும், சுட்டும், அவித்தும்
சாப்பிடலாம். பனம்பழம் இனிப்பு ருசியுடனிருக்கும். இது உடலுக்கு எந்தவிதமான கெடுதலும்
செய்யாது. ஆனால் பித்தத்தை அதிகரிக்கச் செய்யும். சொரி, சிரங்குகளை
சீக்கிரம் ஆற்றாது. இந்தப் பனம் பழத்தின் குழம்பை எடுத்து 'பனவெட்டு' என்ற ஒரு வகை
தின்பண்டம் தயாரிக்கின்றனர். இலந்தைப்பழம் சிறுவர் விளையாடும் கண்ணாடிக் கோலிக் குண்டளவிலிருந்து
சுண்டைக் காயளவு வரை பெரியதும் சிறியதுமாக இருக்கும். பழத்தின் மேலுள்ள தோல் மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும்.
பழத்தின் உள்ளே பழத்தின் அளவில் முக்கால் திட்டமுள்ள சுரசுரப்பான உறுதியான தோலுடன்
கூடிய உருண்டையான ஒரே ஒரு கொட்டை இருக்கும். இந்தக் கொட்டைக்கும் மேல் தோலுக்கும் நடுவே
சுமார் 3 மி.மீ கனத்திற்கு மாப் பசை போன்ற பழுப்பு நிறமான சதைப் பற்று
கொழ கொழ வென்றிருக்கும். இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் இந்த சிறிதளவு
சதைப் பற்றைத்தான் சாப்பிட முடியும். இலந்தைப் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியுடனிருக்கும். இலந்தைப் பழத்திலுள்ள உயிர்ச்சத்து
விபரம்: வைட்டமின் A உயிர்ச்சத்து - 2௦ மி.கி. வைட்டமின் BI - கிடையாது. வைட்டமின் B2 – கிடையாது. வைட்டமின் C - கிடையாது. சுண்ணாம்புச் சத்து – 3 மி.கி. இரும்புச்சத்து - ௦.2 மி.கி. இதன் உஷ்ண அளவு - 19 காலரி. இலந்தைப் பழத்தை வெகு எச்சரிக்கையாகவே சாப்பிட வேண்டும். பழத்தைப் புரட்டிப் பார்க்க
வேண்டும். பழத்தின்மேல் சிறிய வட்டமான துளை இருக்குமானால் அந்தப் பழத்தில் நிச்சயமாக
ஒரு புழு இருக்கும். அதைச் சாப்பிடக் கூடாது. துளையில்லாத பழத்தையே சாப்பிட வேண்டும். இலந்தைப் பழத்தில் வைட்டமின் A உயிர்ச் சத்தும்
சுண்ணாம்புச் சத்தும் மட்டும் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடலில் பலம் ஏறும். எலும்பு.
பற்களுக்கு உறுதி உண்டாகும். வேறு பலன் இல்லை. இந்தப் பழத்தை வாயில் போட்டுக் கொண்டால்
சிலருக்கு அடிக்கடி ஏற்படும் குமட்டல், வாந்தி நின்று விடும். பித்தத்தைத்
தணிக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும். காலை வேளையில் வெறும் வயிற்றில் இலந்தைப்
பழத்தைச் சாப்பிட்டால் வயிற்றில் ஒருவித எரிச்சலை உண்டு பண்ணும். குறிப்பு வைட்டமின் A உயிர்ச் சத்தே இல்லாத ஆப்பிள் பழத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, வைட்டமின்
A, B, C உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி, மாம்பழம், தக்காளிப்பழம்
இவைகளை குறைந்த விலையில் வாங்கி பயனடைவதே புத்தி சாலித்தனமாகும். புளியம் பழத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எனவே அதைப்பற்றி
அதிக விளக்கம் தேவை இல்லை, பொதுவாக புளியை நாம் சமையல் வகைக்கு தான் அதித அளயில் பயனபடுத்தி
வருகிறோம். பொன், வெள்ளி வேலை செய்பவர்களுக்குக்கட சமயம் இது பலபடக்கூடியதாக இருக்கிறது. வைத்திய முறைக்கும் கூட புளி பயன்படுகிறது. ஒரு சிலச் புளியை
அதிக அளவில் சாப்பிட்டால் அது இரத்தத்தை முறித்து நீர்க்க வைத்து விடுயென்று பயமுறுத்துவார்கள், புளியில் இரத்தத்தை
முறிக்கக் கூடிய கொடிய சத்து ஒன்றுமே இல்லை. புளியம்பழத்தில் என்னென்ன
உயிரச் சத்துக்கள் இருக்கிறது என்பதைக் கீழே காணலாம். வைட்டமின் A உயிர்ச்சத்து - 28 மி.கி. வைட்டமின் BI - 17 மி.கி வைட்டமின் B2 – கிடையாது. வைட்டமின் C - 1 மி.கி. சுண்ணாம்புச் சத்து – 48 மி.கி. இரும்புச்சத்து - 3.1 மி.கி. இதன் உஷ்ண அளவு - 82 காலரி. புளியானது உடலுக்கு அதிக உஷ்ணத்தை தரக் கூடியதாக இருக்கிறது.
புளியம் பழம் குலை சம்பந்தமான வியாதிகளைக் குணப்படுத்தும். வாத சம்பந்தமான வியாதிகளைத்
தணிக்கும். வாந்தி குமட்டலை நிற்கச் செய்யும்,
ஒரு சிலருக்கு அடிக்கடி குமட்டல் வாந்தி ஏற்படும். தர்ப்பஸ்திரிகளுக்கு
வாந்தி ஏற்படும், இதை நிறுத்த பாக்களவு புளியை வாயில்போட்டு
சப்பி நீரை விழுங் கினால் வாந்தி நிற்கும். கோலியளவு புளியை அரை டம்ளர் அளவு தண்ணீரில்
கரைத்துக் குடித்து விட்டாலும் உடனே குமட்டல், வாந்தி நின்று
விடும்.வைட்டமின் உயிர்ச்சத்துக்கள்
தர்பூஸ் பழம்
மங்குஸ்தான் பழம்
பனம் பழம்
இலந்தைப் பழம்
புளியம் பழம்
சித்த மருத்துவம் : உணவில் சேர்க்க வேண்டிய பொருள்கள் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Ingredients to be added to the diet - Siddha medicine in Tamil [ Health ]