காய்ச்சல் பற்றிய மருத்துவ விளக்கம்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Medical description of Fever - Medicine Tips in Tamil

காய்ச்சல் பற்றிய மருத்துவ விளக்கம் | Medical description of Fever

கீல் வாயு, கீல்வாத சுரம் முதலியவைகளின் சிறு புளிப்புத் திராவக சம்பந்தமாக (Acid) இருக்கும்.

காய்ச்சல் பற்றிய மருத்துவ விளக்கம்


கீல் வாயு, கீல்வாத சுரம் முதலியவைகளின் சிறு புளிப்புத் திராவக சம்பந்தமாக (Acid) இருக்கும். ஆனால் நீர்த்தாரை, நீர்ப்பை இவைகளில் இரணம் இருக்குமானால், அது அல்கலி (Alkali) சம்பந்தமாய் இருக்கும். புளிப்பு சம்பந்தமான சிறுநீரைக் கொதிக்க வைத்தால் அதில் அல்புமென் என்னும் தாது இருக்குமாயின் அது அடியில் தங்கிவிடும். ஆனால் அல்கலி சம்பந்தப்பட்ட சிறுநீரை எவ்வளவு கொதிக்க வைத்தாலும் அதில் இருக்கும் அல்புமென் (Albumcn) அடியில் தங்காது. இம்மாதிரி சிறுநீரில் அல்புமென் நஷ்டம் ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டுமாயின் அதில் கொஞ்சம் ஏதாவது ஒரு திரவத்தைக் கலந்து அதன் பிறகு கொதிக்க வைத்தால் அப்பொழுது அல்புமென் அடியில் தங்கும். ஆனால் புளிப்பு சம்பந்தமுள்ள சிறுநீர்கூட சில மணி நேரம் கழித்துப் பார்த்தால் அது அல்கலி சம்பந்தப்பட்ட சிறுநீராக மாறிவிடும். ஆகவே எந்த சிறுநீரிலும் அல்புமென் இருக்கிறதா என்று பார்க்கவேண்டுமானால் அதில் கொஞ்சம் அஸடிக் ஆஸிட் திராவகத்தைக் கலந்து அதன் பிறகு கொதிக்க வைத்துப் பார்ப்பது உத்தமம். மைக்ராஸ்கோப் (Microscope) என்னும் பூதக்கண்ணாடிகளின் உதவியால் ஒரு துளி சிறுநீரைப் பார்த்தால் அதில் சரீரக் கெபிகளோ அல்லது இதர வஸ்துக்களோ நஷ்டம் ஏற்படுகிறதா என்று தெரிந்து கொள்ளக்கூடும்


சருமம்: வியாதியுற்றிருக்கும்போது சரீரத்தைத் தொடுவதற்கு இன்பமான சீதோஷ்ணம் உள்ளதாகவும், மிருதுவாக இருப்பதற்கு வேண்டிய அளவு ஈரப்பசை உள்ளதாகவும் இருக்கிறது. அது இழுக்கக்கூடியதாகவும், வழவழப்பாகவும்; அதிகமாக தளர்ந்தாவது அல்லது அதிக பிகுவுள்ளதாகவாவது இல்லாமல் இருக்கிறது. சுரத்தில் அதிகக் காய்ச்சல் உள்ளதாகவும், அதிக உஷ்ணமாகவும் இருக்கிறது. இந்த நிலைமையில் இருக்கும்போது சரீரம் வியர்த்து அத்துடன் வியாதியஸ்தரின் போதுமான நிலைமையில் அபிவிருத்தி கண்டால் அது நல்ல குறியாகும். மலேரியா போன்ற விட்டு விட்டு வரும் சுரங்களில் வியர்வை காணும்போது வியாதியஸ்தருக்கு நிவர்த்தி ஏற்படுகிறது. ஆனால் வியர்வை கண்டபிறகு மற்ற குறிகளிலும் பொதுவாக வியாதியஸ்தரின் நிலைமையிலும் அபிவிருத்தி ஏற்படாமல் போகுமானால் அது அபாயத்திற்கு அறிகுறியாகும். மிகவும் குறைந்து சரீர உழைப்பினால் வியர்வை காணுமானால் அது சரீர பலவீனத்தைக் குறிக்கிறது. அடிக்கடி, இரவுகளில் வியர்வை இருக்குமாயின் அது சரீர பலவீனத்தைத் குறிப்பதுடனில்லாமல் அத்துடன் குளிரும், சுரமும் இருக்குமாயின் அது க்ஷயம் என்னும் வியாதி ஆரம்பிப்பதற்கு அறிகுறி என்று கொள்ளலாம். சருமத்தின் நிறங்கூட சில சமயங்களில் நல்ல உளவுகளைக் காட்டும். சற்று நீல நிறமாக இருக்குமானால் இருதயக் கோளாறுகளால் அப்படி ஏற்படலாம். மஞ்சள் நிறம் கல்லீரல் கோளாறுகளைக் குறிக்கும். கன்னங்களின் நடுவில் நல்ல சிவப்பு நிறமாகவும், ஓரங்களில் வெளுத்தும் இருக்குமானால் மிகவும் பலவீனமான நரம்புகளையுடைய பயங்காளி என்று கொள்ளலாம். இதுவே ஏதாவது சுவாசகோச வியாதிகளினால் ஏற்பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.

அடுத்து வரும் கட்டுரைகளில்  சில முக்கியமான வியாதிகளின் குறிகளையும் அவைகளுக்குப் பிரயோசனப்படக்கூடிய ஒளஷதங்கள் சிலவற்றையும் எழுதுகிறோம். சாதாரணமாக ஹோமியோபதியில் ஒளஷதம் கொடுப்பதற்கு ஒரு வியாதியஸ்தர் என்ன வியாதியினால் அவஸ்தைப்படுகிறார் என்று கண்டு பிடிக்கும் (diagnosis) அவசியமில்லை. நாம் ஒரு வியாதியஸ்தரின் எல்லாக் குறிகளுக்கும் ஏற்பட்ட ஒரு ஒளஷதத்தைத்தான் கண்டுபிடிக்கிறோம். ஏனென்றால் ஏதாவது ஒரு வியாதியில் அவஸ்தைப்படும் பத்து நபர்களை எடுத்துக்கொண்டால் அவரவர்களின் குறிகளுக்குத் தக்கவாறு பத்து வேறு மருந்துகள் நமக்கு வேண்டிவரும். ஆங்கில டாக்டர்கள் சாதாரணமாகச் செய்யும் வியாதி நிர்ணயம் தேவையே இல்லை. ஆனல் ஒரு வைத்தியரிடம் வியாதியஸ்தர் வந்தால் அன்னார் என்ன வியாதியால் அவஸ்தைப்படுகிறார் என்று வைத்தியர் சொன்னாலொழிய அவ்வியாதியஸ்தருக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. சாதாரணமாக வழங்கிவரும் சில வியாதிகளுக்கு ஏற்பட்ட முக்கியமான குறிகளை கீழே கொடுக்கிறோம்.


டைபாய்டு சுரம் (Typhoid Fever)

இதற்கு ஆங்கிலத்தில் டைபாய்டு சுரம் (Typhoid Frcr) அல்லது எண்ட்ரிக் சுரம் (Enteric Fever) என்று சொல்லுவார்கள். இது விடாமல் நீடித்து அடிக்கும் சுபாவம் உள்ளது. அத்துடன் ஒட்டுவாரொட்டி என்று சொல்லப்படுகிறது. ஒரு வியாதியஸ்தர் கழிக்கும் மலம், மூத்திரம் முதலியவைகளிலிருந்து இந்த வியாதியை உண்டாக்கும் வஸ்துக்கள் மற்றவரைப் பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. முக்கியமாக குடிக்கும் தண்ணீர் மூலமாகவே இந்த வியாதி பரவுவதாகவும் ஏற்படுகின்றது. இச்சுரம் சுமார் 21 நாள் நீடிக்கும். மார்பு, வயிறு முதலிய இடங்களில் ரோஜா பூவின் நிறத்தையொத்த தடிப்புகள் சில தென்படும். 

முக்கியமான குறிகள் : அதிக பலவீனம், வயிற்றில் வலியும், இரணமிருப்பது போன்ற உணர்ச்சியும், குடலில் இரணமும். இரண்டாவது வாரத்தில் வயிற்றுப்போக்கும் காணும். அது வியாதி விருத்தியாக விருத்தியாக அதிகமாகும். மலம் அதிகமாகவும் தண்ணீர் போலவும், அழுகியதாகவும், அதிக நாற்றமுள்ளதாகவும் ஆகும். முக்கியமாக சரீரத்திலுள்ள இரத்தமே மாறுதலடைந்து இம்மாதிரி வயிற்றுப் போக்காகப் போகிறது. இந்த சுரத்துக்கும் ஒரு தனி வியாதிக்கிருமி இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு டைபாய்டு கிருமிகள் என்று பெயர். சாதாரணமாக டைபாய்டு சுரம் சில பருவகாலங்களிலும் அவ்வப்போது பெருவாரியாகவும் தோன்றும். அநேகமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அது அதிகம் தோன்றுவது கிடையாது.

குறிகள்: இந்த சுரத்திற்கு வியாதி தயாராகும் காலம் (Incubation period) சுமார் 10-லிருந்து 21 நாட்கள். தயாராகும் காலம் என்பது அந்த வியாதியை உண்டாக்கும் கிருமியோ அல்லது வஸ்துவோ ஒரு சரீரத்தில் புகுவதற்கும் அந்த வியாதி காணுவதற்கும் இடையிலுள்ள காலம். இம்மாதிரியாகவே எல்லா வியாதிகளுக்கும் தயாராகும் காலம் என்பது உண்டு. முதன் முதலில் தெரியக்கூடிய குறிகள், அதிக பலவீனம், அசதி, பசி இல்லாமை, அத்துடன் வாயாலெடுக்க வருதல், நாக்கு வெண்மை நிறத்தை அடைதல், சுவாசத்தில் நாற்றம். சிலருக்கு தொண்டையில் இரணமும் ஏற்படலாம். ஆரம்ப காலத்தில் சுரத்திற்கு வேண்டிய அளவு வேகமான நாடியில்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டியதில் சற்று குறைவாகவும் இருக்கும்.

முதலாவது வாரம்: நாளுக்கு நாள் சிறுகச் சிறுக சரீர உஷ்ணம் அதிகரித்தல், சரீர உஷ்ணத்துக்கு ஏற்றதல்லாத நாடி, ஆனால் அது குதித்தோடிக் கொண்டிருத்தல், தாகம், வியாதியஸ்தர் தனக்கு அதிகத் தலைக்கனம் இருப்பதாகவும் புகார் சொல்லுவார். இரவுகளில் பிதற்றல், வயிற்றின் வலது பாகத்தைக் கையால் அமுக்குவதினால் வலி ஏற்படும். அத்துடன் சிறுகுடல் இருக்கும் பாகத்தில் அமுக்கினால் ஒருவிதமான களகள என்ற சப்தம் கேட்கும். இம்மாதிரியாகச் சப்தம் ஏற்படும் இடத்தில் தான் அதிக இரணம் இருக்கிறது. ஆகவே அவ்விடத்தை அமுக்குவதில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அத்துடன் அடிக்கடி அமுக்காமல் இருப்பது நல்லது. சுமார் 6 அல்லது 7-வது நாள் மேலே சொல்லப்பட்ட ரோஜாப்பூவின் நிறங் கொண்ட சினப்புகள் தென்படும். இவைகள் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.

இரண்டாவது வாரம்: பலவீனம் அதிகமாகும் சரீரம் இளைத்துவிடும். சிறுநீர் குறையும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். ஆனால் 100-க்கு 25 கேசுகளில் வயிற்றுப்போக்குக்குப் பதிலாக பூராவும் மலபந்தமே இருக்கும். சந்தேகாஸ்பதமான கேசுகளில் வியாதியஸ்தரின் இரத்தத்தைச் சோதனை செய்தே சந்தேக நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

மூன்றாவது வாரம்: பலவீனமும், சரீர இளைப்பும் மிகவும் அதிகமாக ஆகிவிடுகின்றன. வியாதியஸ்தர் மல்லார்ந்து படுத்துக்கொண்டால் அவரால் புரண்டு படுத்துக் கொள்ளக்கூட முடியாத நிலைமையில் இருப்பார். பற்களிலும், ஈறுகளிலும் அழுக்குப் படிகிறது. நாக்கு உலர்ந்து பழைய தோலைப்போல் ஆகிவிடுகிறது. சில சமயங்களில் மூத்திரப் பிடிப்பும் ஏற்படும். மலம் தன்னையறியாமலே போகும். வியாதியஸ்தர் ஆகாசத்தைப் பார்த்து விழிப்பதும், படுக்கையைப் பிராண்டுவதும், எதையோ பிடிக்கப் போவதுபோல் கைகளை ஆட்டவும் செய்கிறார். காது கேட்கிறதில்லை. தன்னுடைய சிநேகிதர்களையும் மறந்துவிடுகிறார்கள். மிகவும் கடுமையாகப் போன வியாதியில் இம்மாதிரியாக உள்ள சிலர் பிழைத்தெழுந்த பிறகு சில காலத்துக்கு தன் சுய அறிவின்றியும் இருக்கக்கூடும். டைபாய்டு வியாதியில் மிகவும் அபாயகரமான காலம் மூன்றாவது வார முடிவில்தான். பிழைக்கக்கூடிய கேசுகளில் அதன் பிறகு படிப்படியாக சரீர உஷ்ணம் குறைய ஆரம்பிக்கும். சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் சாதாரண உஷ்ணமாகிய 98·4°-ஐ அடைகிறது. இவ்வியாதி 3 அல்லது 4 வாரங்களும் சிற்சில சமயங்களில் 6 அல்லது 8 வாரங்களும் இருக்கக்கூடிய வியாதியாகையால் சரீர பலம் அதிகமாகக் குறைந்து போகும். தவிர வயிற்றிலும் சீரண அவயவங்களிலும் இரணமுண்டாகும் வியாதியாகையால் கெட்டியான ஆகாரங்கள் கொடுக்கக்கூடாது. அத்துடன் தண்ணீர் போன்ற ஆகாரங்கள் இலகுவில் சீரணம் ஆகக்கூடியவையாயும் இருக்கவேண்டும். வியாதி சாந்தப்பட்டு சரீர உஷ்ணம் சாதாரணம் ஆகி 4, 5 நாட்களுக்குப் பிறகே ஆட்டியான ஆகாரங்கள் கொடுக்கப்படலாம். 

டைபாய்டு சுரத்தில் முக்கியமாக உபயோகப்படக் கூடிய ஒளஷதங்கள் பின்வருமாறு:

ஆர்ஸனிகம் ஆல்பம், பாப்டீஷியா, மூரியாடிக் ஆஸிட், பிரயோனியா, மூளைக் குறிகள் அதிகமாயிருந்தால் ஹயாஸ்யாமஸ், ஓபியம் இன்னும் மற்றவையும். 


விடாமல் அடிக்கும் சாதாரண சுரம்

இது குளிருடன் வேகமாகச் சென்றாலும் நாடியுடனும் உலர்ந்த நாக்கு, உதடு, வாய் இவைகளுடன், சரீர உஷ்ணத்துடன் ஏற்படும் சுரம், தாகவரட்சை இருக்கும். சிறுநீர் அதிக சிவப்பு நிறமாகவும் அளவு குறைந்தும் இருக்கும். நாக்கில் வெண்மையான மாசு இத்துடன் இடுப்பிலும், கைகால்களிலும், தலையிலும் கனமும் வலியும் தோன்றும், பசி இல்லாமை, மூச்சுவிடத் திணறுதல், தூக்கத்தில் பிதற்றுதல் இவைகள் கூட வரும் குறிகளாகும். முக்கியமாக எல்லாக் குறிகளும் இரவில் அதிகமாக இருக்கும். இம்மாதிரியான சுரத்தில் அதிகமான வியர்வை கண்டால் அது சுரம் படிகிறது என்பதற்கு அறிகுறி. வியர்வை கண்ட பிறகு வியாதியஸ்தர் பலவீனமாக இருந்தாலும் மற்ற விஷயங்களில் சௌகரியமாகவே இருக்கும். சாதாரண சுரம் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரையிலும் சிற்சில சமயங்களில் அதற்கு மேற்பட்டும் இருக்கலாம். சாதாரண சுரம் மூன்று நாட்களுக்குமேல் இருக்குமானால் அது டைபாய்டு, நிமோனியா, கீல் வாயு சுரம் முதலிய கடுமையான சுரங்களோவென்று சந்தேகிக்க இடமுண்டு. 


சாதாரண சுரங்கள் ஏற்படுவதற்குக் காரணங்கள்

திடீரென்று மாறும் சீதோஷ்ணம், ஈரமான துணிகளை அதிக நேரம் உடுத்திக்கொள்வது, அல்லது ஈரமுள்ள இடங்களில் அதிகமாக நடமாடுதல், மிதமிஞ்சிய ஆகாரம். அதிக நாற்றமுள்ள இடங்களில் காற்றை சுவாசித்தல். சரீரத்திற்கும் மனத்திற்கும் ஏற்படும் அதிக உழைப்பு சிற்சில சமயங்களில் சரீரத்தில் உண்டாகும் சிரங்கு, அடிபடுதல் இவைகளினால் சுரம் காணலாம்.

சிகிச்சை : அகோனைட் என்னும் மருந்தை வழக்கமாகக் கொடுப்பது பழக்கத்தில் இருந்து வருகிறது. இப்படி ஆரம்பத்தில் இம்மருந்து கொடுக்கப்பட்ட வியாதியஸ்தர்களில் பெரும்பாலோர் குணமாகி விடுவார்கள். கடுமையான சுரங்களில் கூட முதலில் அகோனைட் கொடுக்கப்பட்டிருந்தால் அச்சுரத்தின் வேகம் அவ்வளவு கடுமையாக இராது. பெல்லடொன்னா, பிரயோனியா, ஆர்ஸனிகம், ரஸ்டாக்ஸ் முதலியவை குறிகளுக்குத் தக்கவாறு உபயோகப்படக்கூடிய ஒளஷதங்களாகும்.


கக்குவாய் இருமல் (Whooping Cough)

இதற்கு பெர்டுஸிஸ் (pertusis) என்று மற்றெரு பெயரும் உண்டு. இது ஒட்டுவாரொட்டியாகவும் பெருவாரியாகவும் அவ்வப்போது தோன்றும். ஒரு முறை இருமல் வந்தால் விடாமல் கொஞ்ச நேரம் இருமிக்கொண்டே இருக்கும். இருமலின் முடிவில் ஒரு மாதிரியான விகாரச் சப்தத்துடன் மூச்சு உள்ளே இழுக்கப்படும். இச்சப்தம் வூப் என்பது போலிருப்பதால் இவ்வியாதியை வூப்பிங் காப் (Whooping Cough) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது குழந்தைகளுக்கு ஏற்படும் சகஜமான வியாதிகளில் ஒன்று. ஒரு முறை கக்குவாய் இருமல் ஒருவருக்கு வந்து விட்டால் மறுமுறை வருவது கிடையாது. ஆரம்பத்தில் சாதாரண இருமலும் சுரமும் காணும். ஒரு வாரத்தில் இருமல் கடுமையாகவும் அதிக சப்தத்துடனும் தோன்றி கக்குவாய் இருமல் என்று நன்றாய் தெரிந்துவிடும். கோசங்களிலிருந்து ஏராளமான காற்றை வெளித் தள்ளுவதால் இருமல் நின்றவுடன் உள்ளே இருக்கும் காலி இடத்தைப் பூர்த்தி செய்ய வெளிக் காற்று அதிவேகமாக உள்ளே செல்லுகிறது. இவ்வளவு வேகமாக காற்று உள்ளே செல்லுவதினால் மூசசுத் திணறல் ஏற்படுகிறது. இம்மாதிரியாக ஒரு முறை இருமல் வந்து போனால் அதன் பிறகு அதிக பலவீனம் ஏற்படுவது இயற்கையல்லவா? இருமல் மும்முரமாய் இருக்கும்போது வியாதியஸ்தரின் முகம் சிவந்தும் உப்பியும் இருக்கும். கண் விழிகள் வெளியே பிதுங்கி கண்களிலிருந்து நீர் வர ஆரம்பிக்கும். ஏராளமான தயிர் போன்ற கோழை வெளிப்பட்டு அதன் பிறகு குழந்தை சாதாரண நிலைமையை அடையும். இம்மாதிரியான உக்கிரமான நிலைமையில் நாளொன்றுக்கு 4 அல்லது 5 தடவைகளோ இருமல் அல்லது 10, 12 தடவைகளோ ஏற்படலாம்.

சாதாரணமாகக் கக்குவாய் இருமல் 6 வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரையில்கூட நீடிக்கும். மாதக் கணக்காய் இருந்தால் அது கடுமையானதாகத் தான் இருக்கும் நம் ஹோமியோபதி வைத்திய முறையில் இவ்வியாதிக்கு மிகவும் நல்ல ஒளஷதங்கள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே சரியானபடி இம்மருந்துகளைக் கொடுத்துவிட்டால் வியாதி வெகு சீக்கிரத்திலேயே சிரமமில்லாமல் குணமாகிவிடும் அல்லது வந்தாலும் மிகவும் கடுமையானதாக இல்லாமல் இருக்கும். இவ்வியாதிக்கு மிகவும் உபயோகமான ஔஷதம் டிரோஸிராருடொண்டபோலியா, இதர மருந்துகள் ஆர்னிகா, குப்ரம், இபிகாக்உனா, பல்ஸடில்லா, ஆண்டிமோனியம், டார்டாரிகம் முதலியன.


இன்புளுயன்ஸா (Influenza)

இது ஒட்டுவாரொட்டி சுரம். இதுவும் பெருவாரியாகத் தோன்றும். வியாதி ஆரம்பத்தில் ஜலதோஷம், தலைவலி, நாக்கில் மாசு படிதல் இவைகளுடன் அதிக சுரம் இருக்கும். வியாதி நீங்கிய பிறகு வியாதியஸ்தர் மிகவும் பலவீனமாக இருப்பார்.

காரணங்கள்: இது ஒரு சிறு வியாதிக் கிருமியால் ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள். சாதாரணமாக அதிக பலமுள்ளவர்களையே இவ்வியாதி பற்றுகிறது குளிர் காற்றில் அடிபடுதல். அதிகக் களைப்பு முதலியவை இவ்வியாதி வருவதற்குக் காரணங்கள் ஆகின்றன.

இவ்வியாதி, வேறு இதர வியாதிகள் இருக்கும் போதும் அவ்வியாதிகளுடன் கலந்துகொண்டு உபத்திரவம் செய்யும். அதாவது, வேறு சுரங்களுடன் இன்புளூயன்ஸாவும் சேர்ந்து வரும். மிக முக்கியமான குறிகள்: முழுவதும் தாங்கமுடியாத வலி அதுவும் இடுப்பிலும், தலையிலும் அதிக வலி இவைகள் திடீரென்று ஏற்படும். உடனே கடுமையான சரீர உஷ்ணமும் அதிகமான ஜலதோஷமும் மூக்கிலிருந்து அதிகமான சளி வருவதும், இக்குறிகள் சுரம் சௌகரியம் ஆனபிறகும் நீடிக்கும். தொண்டை இரணமாகிவிடும். மேலே கூறியவைகள் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான குறிகள் இவைகளில் அவ்வப்போது சில மாறுதல்களும் ஏற்படலாம். இந்த சுரம் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரையிலும் சிற்சில சமயங்களில் அதற்கு மேலும் நீடிக்கும்

சிக்கல்கள்: இவ்வியாதியில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கடுமையாகி விட்டால் காற்றுக் குழாயையும், பிராங்கைல் குழாய்களையும் பாதிக்கும். மேலும் சுவாசகோசங்களையும் பாதித்து நிமோனியா சுரமும் ஏற்படலாம். சில சமயங்களில் இருதயமும் பாதிக்கப்படும். இவ்வாறு சிக்கல்கள் ஏற்பட்டால் அச்சிக்கல்கள் தனி வியாதியாகவே மதிக்கப்பட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

அகோனைட், பாப்டீஷியா, யூபடோரியம் பர்ப், பிரயோனியா, ஸிமிஸிப்யுகா, பெல்லடொன்னா முதலியவை முக்கியமான ஒளஷதங்களாகும்.


பிரசவ சுரம் (Puerperal Fever)

பிரசவத்திற்குப் பிறகு ஸ்திரீகள் படுத்திருக்கும் காலங்களில் சில சுரங்கள் ஏற்படலாம். அவைகளுக்கு ஆங்கிலத்தில் பூயெர்பெரல் சுரம் (Puerperal Fever) என்பார்கள். இச்சுரம் ஒருவித வியாதிக் கிருமிகளால் ஏற்படுவதாகவும், அக்கிருமிகளின் ஜனனேந்திரியங் களில் ஏற்படும் இரணங்களின் வழியாக சரீரத்தில் புகுவதாகவும் சொல்லுகிறார்கள். இச்சுரம் பிரசவத்திற்குப் பிறகும் அல்லது கர்ப்பச் சிதைவுக்கு (Abortion) பிறகும் ஏற்படலாம். சாதாரணமாக ஆயுதப் பிரயோகங்களினால் ஏற்படும் பிரசவங்களிலும் மிகவும் கஷ்டமான பிரசவங்களிலும் இச்சுரம் உண்டாகலாம்.

சிகிச்சை: வியாதி ஆரம்பத்தில் அகோனைட் பெல்லடொன்னா முதலியவை உபயோகப்படும். அதிகமான மூளைக்கோளாறுகள் இருந்தால் பெல்ல டொன்னா, ஸ்ட்ரமோனியம், ஓபியம், ஹெல்லிபோரல் முதலியவைகளும் உபயோகமாகும். விரைட் என்னும் ஒளஷதமும் உபயோகப்படும் பைரோஜன் என்னும் மருந்து 6 வீரியங்களிலும் எக்னீஷியா என்னும் தாய்த் திராவக ஔஷதமும் இவ்வியாதிக்கு மிகவும் உபயோகமாகும்.


கீல்வாயு சுரம் (Rheumatism)

கீல்வாயு சுரமும் ஒருவிதமான கிருமிகளால் தான் உண்டாகிறது என்று எண்ணப்படுகிறது. ஏதாவது ஒன்று அல்லது பல மூட்டுக்களின் பக்கங்களிலுள்ள தசைகளிலும் தசை நார்களிலும் அழற்சியேற்பட்டு மூட்டுகளில் உள்ள இடுக்குகளில் நீர் தங்குவதும், அதனால் சுரமேற்படுவதும் இவ்வியாதியின் குறிகளாகும். ஒரே காலத்தில் பல மூட்டுக்கள் வியாதியுறலாம். அல்லது வியாதி மூட்டுக்கு மூட்டு மாறிக் கொண்டும் இருக்கலாம். வியாதியுள்ள மூட்டுகளின் மேல் தோலில் பிசின்போல் ஒட்டிக்கொள்ளும் வியர்வை ஏற்படும்

மருத்துவ குறிப்புகள் : காய்ச்சல் பற்றிய மருத்துவ விளக்கம் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Medical description of Fever - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்