
மனித உடலில் மிக முக்கியமான பகுதி சுவாசகோஸமே (நுரையீரல்) ஆகும்.
தியானப் பலன்கள் மனித உடலில் மிக முக்கியமான பகுதி சுவாசகோஸமே (நுரையீரல்) ஆகும்.
ஏனென்றால், மற்ற பகுதிகள்
ஓய்வு எடுப்பதுண்டு. இது எடுப்பதில்லை. குறுகிய தூரத்தில் நல்ல சக்தியை பெற்று,
நீண்ட தூரத்துக்கு செலுத்த உதவுகிறது. மிகவும் சுருக்கி வைக்கப்பட்ட
மென்மையான பகுதியும் கூட. துல்லிய மாய் விரிந்து வேலை செய்கிறது. இது உலகத்தின் அண்ட,
பஞ்ச பூதத் தத்துவமும் ஆகும். கழிவுகளை வெளியேற்றுவதில் 3வது இடமும் வகிக்கிறது. சுருக்கி வைத்த நுரையீரலை விரித்தால்
1/2 டென்னீஸ் கோர்ட்டு அளவுக்கு விரியும். இதில் மூன்றில் ஒர் பகுதியைத் தான் பெரும் சிந்தனையாளர்,
கவிஞர், விஞ்ஞானி, மெய்ஞானி போன்றோர் பயன்படுத்துகிறார்களாம். (நாம் இன்னும் குறைவாகவே
பயன்படுத்துகிறோம்). மனிதன் முழு அளவும் உபயோகித்தால் பீமன் பலம் பெறலாம். ஒரு நாளைக்கு
21,600 முறை சுவாசிக்கிறோம். இதையே 48 மணி நேரம் ஆக்கினால் வாழ்
நாள் இரண்டாக நீடிக்கிறது. எனவே ஆழ்ந்த சுவாசத்துக்கு நல்ல உடலும்;
நல்ல உடலைப் பெற ஆசனமும் அவசியம். தூய காற்றைப் பெற மனிதன் இன்று
விஞ்ஞானத்தோடு போராடுகிறான். மனிதன் பிறக்கும் போதே வாழ்நாளும் முடிவு செய்யப்படுவதாக
சித்தாந்தம் கூறுகிறது. ஆரோக்கியத்தையும், ஆயுளையும் மனிதன் பிறக்கும் போது; இயற்கை அவன் 'கை' யிலே கொடுத்தனுப்புகிறது. எப்போதுமே உள்ளே போய், வெளியே வரும் மூச்சு, ஒருவேளை வெளியே போனால் உள்ளே வருவதில்லையே,
ஏன்? இதை எந்த விஞ்ஞானமும் சரியாய் விளக்க முடிவதில்லை. 'வினைப் பயன் முடிந்தது'
என்று வேதங்கள் கூறுகின்றன. அதை எப்படி உணர்வது?
'தீதும் நன்றும் பிறர் தர வாரா'
என்பது பழமொழி. எல்லாம் பழக்க தோஷம்தான். சில நோயைத் தவிர, பல பேர் நோய் என்ற பெயரில் மரணப் பயணத்துக்கு பயணச்சீட்டு பெறுகிறோம். "காற்று உள்ள
போதே தூற்றிக் கொள்" என்பதும் பழமொழியே. காற்று (சுவாசம்) உள்ள போதே,
தூற்றிக் கொள் (தீயவை நீக்கி) நீண்ட சுவாசத்தினால் நல்ல விஷயங்களை
மட்டும் சேகரித்து யோகம் செய்து வாழ்நாளை பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஆனால் இன்று
இதற்கு எப்படி எப்படியோ பொருள் வழங்குகிறது. தன் 'கை'யே தனக்கு உதவி என்பது சொந்த வேலைகளுக்கு மட்டுமல்ல,
ஆயுளுக்கும் தான். அவரவர் 'கை' அவரவர்களிடம் தான் இருக்கிறது. என் எண்ணத்தை என் 'கை'யாலே எழுதினேன். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.' செய்முறை: தியானத்துக்கு இருபொருள் தேவை. 1. தியானிக்கப்படும் பொருள்,
2. தியானிப்பவன். அவரவர்களுக்கு ஏற்ற சுகமான, ஓர் ஆசனத்தில் இருந்து கொண்டு முதுகுத் தண்டை நேரே நிமிர்த்தி
உடலில் எங்கும் விரைப்போ, இறுக்கமோ இல்லாமல் மேலாடை இல்லாமல் (பெண்கள் தவிர) அமர் வேண்டும்.
அதிக சத்தமோ, உஷ்ணமோ,
குளிரோ இல்லாத இடமாகவும் தேர்ந்தெடுப்பது நல்லது. கீழே ஏதாவது
பலகை, துணி,
கம்பளம், தர்ப்பை, மான் தோல் (கூட) போட்டுக் கொள்ளலாம். பின் விருப்பமான ஆசனத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து,
பார்வையை தாழ்த்தித் தரையில் (உடலுக்கு முன்பாக) சில நிமிடங்கள்
வைத்து, பின் மெதுவாய்
இரு கண் பார்வையையும் குவித்து மூக்கு நுனியை உற்றுக் கவனிக்கவும். சில நிமிடம் அப்படியே
கண்களை மூடி, உங்களின் சுவாச
ஓட்டத்தை உற்றுக் கவனியுங்கள். மூச்சு ஓட்டம் மிகவும் நிதானமாகவும்,
மெல்லியதாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லையானால் உணவு ஜீரணமாகாமல் இருக்கக் கூடும். அல்லது
மலம் தேக்கம் இருக்கும். இதனால்தான் தியானத்துக்கு அதிகாலை அல்லது மாலை நேரம் ஏற்றது
என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உங்கள் எண்ணத்தை, மூச்சு ஓட்டத்தில் வையுங்கள். சுவாசம் ஒரே சீராய் அடி வயிறு
வரைக்கும் (மூலாதாரம் வரை) சென்று பின் அங்கிருந்தே புறப்பட்டு மூக்கு நுனி வரை வந்து
போவதை ஒவ்வொரு தடவையும் உற்று நோக்குங்கள். இது சகஜ தியானமாகும். பலநாள் பயிற்சிக்குப்
பின் மூச்சு கூட மறந்து போகும். ஒன்றுமில்லா சூன்ய பிரதேசத்தில் இருப்பது போல் இருக்கும்.
ஆரம்ப பயிற்சியாளர்களுக்கு இதுபோதும். செய்ய வேண்டிய நேரம்: ஐந்து நிமிடத்தில் ஆரம்பித்து இருபது நிமிடம்
வரை செய்யலாம். அவரவர்கள் உடல்நிலை, ஆசன இருக்கை நிலை பொருத்துக் காலத்தை நிர்ணயம் செய்து கொள்ள
வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அலையும் மனதிற்கு அமைதி தேவை. அது தியானத்தினால்தான் செலவில்லாமல்
கிடைக்கும். மன அமைதி கிடைத்து விட்டால் பல நோய்கள் குணமாகும். அதிக இரத்த அழுத்தம் இருதய நோய், மன அழுத்தத்தால் வரும் கவலைகள் அனைத்தும் தீரும். ஆஸ்த்மா நோய்,
நரம்புத் தளர்ச்சி, ஹைப்பர் டென்ஷன்களுக்கு தியானமே உகந்த சிகிச்சை என்று மனோதத்துவ
நிபுணர்களே சொல்கிறார்கள். தியானம் செய்வதால் உங்கள் சுவாசப் பகுதியும் மற்றும் உள் உறுப்புக்களும்
ஓய்வு பெற்று நோய் நீங்கக் காரணமாகின்றன. இரத்த ஓட்டம் சமன்பட்டு நாடி,
நரம்புகளுக்கு மீண்டும் புதுத் தெம்பைக் கொடுக்கிறது. தியானம்
செய்வதால், எந்தப் பிரச்னை
யையும் அறிவுப்பூர்வமாக நின்று நிதானித்து முடி வுக்கு வரும் மனநிலையைப் பெறுவீர்கள்
என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. இன்றைய நிலையில் எல்லோருக்கும் இது கிடைத்தாலே
போதும். ஆனால் பின்பு தொடர்ந்து செய்யச் செய்ய அனுபவ முதிர்ச்சியால் முக்தியையே அடையலாம். செய்முறை: பத்மாசனம் அல்லது முதுகுத் தண்டு நேராக அமையும் ஆசனத்தில் நிமிர்ந்து
உட்கார்ந்து கொண்டு வலது கை கட்டைவிரலால் வலது நாசியை மூடி. இடது நாசியினால் மெதுவாக
மூச்சை உள்ளே இழுக்கவும். பின் வலது மோதிர விரலாலும், கண்டு விரலாலும் இடது நாசியை அடைத்து வலது நாசியைத் திறந்து
மெதுவாக மூச்சை வெளியே விடவும். இதுபோல் வலது நாசியில் மூச்சை விட்ட உடனே,
அதே நாசியினால் மூச்சை உள்ளே இழுத்து. வலது நாசியை மூடி. இடது
நாசியினால் மூச்சை வெளியே மெதுவாக விடவும். இது ஓர் சுற்று ஆகும். அல்லது ஓர் பிராணயாமம் ஆகும். இதுபோல் அவரவர்கள் சக்திக்குத் தக்கவாறு 6 தடவை அல்லது 8 தடவை செய்யவும். கண்களை
மூடி சிரமம் இல்லாமல் செய்யவும். உடல் வேர்க்கக் கூடாது. வேர்த்தால் எண்ணிக்கையைக்
குறைத்துக் கொள்ளுங்கள். பயன்கள்: சாதாரணமாய் மனிதன் ஓர் நிமிடத்துக்கு சுமார் 15 முறை மூச்சு விடுகிறான்.
இதையே இன்னும் மெதுவாக செய்தால் கூட நிமிடத்துக்கு 10 முறை வரும். இந்த வகையில்
எண்ணிக்கைகள், அளவுகள் இல்லாமல்,
பூரகம், ரேசகம் (உள்ளே இழுப்பதையும், வெளியே விடுவதையும்) செய்வதை மெதுவாக மிகவும் கவனமாக மெல்லிய
தைல தாரைபோல், நூல் போல்
செய்யவும். அளவு 4 முறையில் ஆரம்பித்து அவரவர்
சக்திக்குத் தகுந்தாற்போல் 8 முறை வரையிலும் செய்யலாம்.
6 மாதத்துக்குப் பின் 12 முறை அல்லது 16 முறை வரையிலும் செய்யலாம்.
இப்பிராணாயாமம் செய்வதால் நாடி, நரம்புகளுக்கு வெப்ப சக்தி, குளிர் சக்தி சமமாக ஒரே சீராக வலப்பாகமும் இடபாகமும் சென்று;
(இட கலை, பிங்கலை) நாடிகள் உயிர்த்துடிப்புறுகிறது. ஆஸ்த்மா,
ஈஸனோபீலியா, சயம் ஆகிய நோய் தீரும். ஓர் பக்க தலைவலி,
கை, கால்வலி, வாதம் போன்றவை குணமாகும். செய்முறை: பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி இரு கைகளை பக்கவாட்டில்
தோள்பட்டைக்கு இணையாய் உயர்த்தி அந்தந்த பக்க காதுகளை ஆள்காட்டி விரல்களால் அடைத்து;
இரு மூக்காலும் மெதுவாய் மூச்சை உள்ளே இழுத்து (தொண்டைக் குழியில்
'ம்'
என்ற ஒலி எழுமாறு) வெளியே விடவும். இது ஓர் சுற்றாகும். அல்லது
ஓர் முறை ஆகும். இதேபோல் 10 முறை வரை செய்யலாம். பயன்கள்: தொண்டைப் பகுதித் தசை வலுப்பெ நாடக கலைஞர்,
பாடகர்கள், மேடைப் றும். பேச்சாளர்கள், நடிகர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாதஸ்வர, நடனக் கலைஞர்கள் ஆகிய ஆடவர், மகளிர் அனைவரும் அவசியம் செய்ய வேண்டும். குரலில் தங்குதடை இல்லாமல்
நீண்ட நேரம் பேசவும் பின் அதனால் ஏற்படும் சிரமங்களைப் போக்கிக் கொள்ளவும் இந்தப் பயிற்சி
உதவும். விசுத்தி சக்கரத்தை இயக்கி பூரணமாய் கலையில் மேன்மை பெறவும் செய்யும். தலையிலுள்ள ஞானேந்திரியங்கள் நன்கு ஒளிபெறும். மேலும் மூளை பகுதிகள்,
கண், காது, மூக்கு, வாய் நன்கு இயங்கி வயோதிகத் தளர்ச்சியைத் தடுக்கும். ஆயுட் காலம்
வரை இந்திரியங்கள் சரியாக வேலை செய்யும். நல்ல தேஜசும், அழகும் பெற வாய்ப்புண்டு. தொண்டையில் சிறுவர்களுக்கு ஏற்படும் சகை வளர்ச்சி (டான்சில்ஸ்)
மறைந்து போகும். மனதுக்கு சாந்தி அமைதி கிடைக்கும். தேனி போல் அறிவுப் பூர்வமான ஆற்றல்
பெருகும். தேனீ தேனைத் தானே குடிப்பதில்லை. அதுபோல் ஞானிகள் (மெஞ்ஞானியானாலும்,
விஞ்ஞானியானாலும்) தனது ஆற்றலைப் பிறருக்கு பொதுமக்களுக்கு வழங்கும்
மன நிலையுடன் மகாத்மாவாக விளங்கச் செய்யும். வளர்ந்து வரும் விஞ்ஞான நாகரிக உலகில் உணவைப் பற்றிய பல உண்மைகளை
நாம் உணர்வதில்லை. உணவு என்பது உன்னத உணர்வைத் தருவதாய் அமைய வேண்டும். உணவு உண்ணுதல்
என்பது மனிதனை உயர்த்துவதற்காகவே; உணவியல் ஆராய்ச்சி நிறையச் செய்யப்பட வேண்டும். இந்த வகையில் நாம், மேலை நாட்டினரைக் காப்பியடித்து, கீழ் நோக்கிய நிலையில் (ருசிக்காகவே சுவையைக் கருதியே உணவை உட்கொள்கிறோம்.
இது நம் நாட்டு, தட்ப வெப்ப
நிலைக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதில்லை. எனவே சூரியனால் அமைக்கப்பட்ட பஞ்ச பூதக் கலவையில் உற்பத்தியான,
கீரை, காய்கறி, பழங்கள், தானியங்கள், உன்னதப் படைப்பான தேங்காய், வாழ வைக்கும் வாழைப் பழம் இவைகளை உணவாக எடுத்துக் கொள்வதால்
ஆரோக்கியம் விருத்தியாவதுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலும் பெருகும். உடல் பெருத்து தொல்லை
தராது. எளிதில் ஜீரணமாகி உடலோடு சேரும். மலம் ஜலம் உபாதை தராமல் எளிதில் வெளியேறும். சமைத்த உணவு 4 மணி நேரத்தில் ஜீரணமாகும்.
சமைக்காத இயற்கை உணவு இரண்டே மணி நேரத்தில் நேரத்தில் ஜீரணமாகும். அதிலும் ஒரு வேளைக்கு
ஒரே வகையான உணவை உட்கொள்வது மிகவும் சாலச் சிறந்தது. ஒரு நாளைக்கு இரு வேளை உணவே போதும்.
அதிலும் உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை பார்ப்போருக்கு
மூன்று வேளை உணவு தேவையில்லை. பச்சைக் காய்கறிகளை உண்பதால் நார்ப் பொருள் உடலில் சேர்வதால்,
தாது உப்புக்களும், விட்டமின்களும், உடலுக்கு நேரடியாய்க் கிடைக்கின்றன. கீரைகளைத் தினமும் உண்பதால்
மலத்தேக்கம் வராது. (3 கிலோ காய்கறிக்கு சமமான சத்து 1 கிலோ கீரையில் கிடைக்கிறது)
இரத்தம் சுத்தம் ஆவதுடன் உடலில் கொழுப்பும் கரைகிறது. சிறிது அமிலத்தன்மை உடைய அகத்தி,
முருங்கை போன்றவைகளை ஆவி யில் வேக வைத்து உண்ணலாம். தானியங்களை
அவித்து, வருத்து,
தோலுரித்துத் தின்பதை விட முளைக்கட்டி உண்டு வந்தால் உடலில்
எளிதில் ஜீரணம் ஆகும்; வாயுத்
தொல்லை ஏற்படாது. மேலும் தானியங்கள், முளை விட்டதும், தானிய நிலையிலிருந்து தாவர நிலையை அடைந்து விடுகின்றன. வேர்க்கடலை, எள், தேங்காய் போன்ற எண்ணை வித்துக்களை முளைக்கட்டி சாப்பிடும்போது
கருப் பட்டி அல்லது வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வதால்,
கொழுப்பு சேர்வது குறையும். பின்பு கரையும். முளைக்கட்டிய தானியங்களை காலை உணவோ டுதான் உண்ண வேண்டும். இரவில்
சேர்க்கக் கூடாது. தானியத்தையே தனி உணவாக (அரிசியையே பிரதானமாய்) உட்கொள்ளும் ஜீவராசி
வேறு எதுவுமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்!
கனிகளை மட்டும் தனி உணவாக உட்கொண்டு வாழலாம். கனிகளிலும், உயர்ந்த நிலையில் உற்பத்தியாகும் தெங்கு,
மா, பலா, நெல்லி, பேரீச்சை, இலந்தை, நாவல், சப்போட்டா,வாழை, பப்பாளி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை, தக் காளி என்ற வகையில் வரிசைப்படுத்தி முதல் தரமானவைகளை அதிகம்
பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அந்தந்தப் பிரதேசங்களில் பயிராகும் தானியம்,
பழம், கீரை, காய்கறிதான் அந்தந்தப் பிரதேச மக்களுக்கு சரியான உணவு வகையாகும். கனிகளில் சத்துக்களும், கனிமங்களும், பரிணாம வளர்ச்சிப்படி பூர்ணமாய் நிறைந்து உள்ளன. பல்வேறு நோயாளர்களுக்கும்
பழங்கள், பழச்சாறுகளையே
தனி உணவாகக் கொடுத்து நோயைப் போக்க முடியும். கொஞ்ச காலத்திற்கு முன் விரத நாளில்,
பழ உணவு உட்கொண்டு வாழ்ந்த மனிதர்கள் கூட நோயின்றி இருந்தார்கள்.
இன்றோ, ஆகாரங்கள்
பலவாகி இட்லி, தோசை,
பூரி, வடை, பரோட்டா என ஆகிவிட்டது. மனித உணவில் 80 விழுக்காடு காரத்தன்மையும்,
20 விழுக்காடு அமிலத் தன்மையும் அமைய வேண்டும். இந்த 4:1 என்ற விகிதாச்சாரம் மாறும்போது
கழிவு அதிகமாகி நோய் ஏற்படுகிறது. இந்த வகையிலும், பச்சைக் காய்கறி, கீரை, முளைக்கட்டிய தானியம், பழங்கள், எல்லாமே காரத் தன்மை உடையவைகளே. எனவே கனிகளை உண்போம்,
பிணிகளை வெல்வோம். ஏதடா, இவன் கிழங்குகளைப் பற்றியே சொல்லவில்லையே என நீங்கள் நினைப்பது
தெரிகிறது. அது பற்றியும் சொல்வேன். உணவு உண்ணும் போது, முதலில் இனிப்பு சுவையையும், மென்மையா னவைகளையும் உண்டு, கடைசியில் முடிக்கும் சமயம் கசப்புச் சுவையையும்,
கடினமான வகைகளையும் உண்டு முடிக்க வேண்டும். உணவு வகைகளில் தரை மட்டத்திலிருந்து அதிக வானளாவிய மரங்களில்
கிடைப்பவையே மிகச் சிறந்தவை. இந்த வகையிலேதான் பழங்கள் உயர்வாகச் சொல்லப்படுகின்றன.
அப்படிப் பார்க்கும்போது கிழங்குகள் மட்டமானவையே! ஆனாலும் மஞ்சள், இஞ்சி, கருணைக் கிழங்கை மருந்தாகப் பயன்படுத்தலாம் என பதார்த்த குண
சிந்தாமணி கூறுகிறது. ஜீவ ராசிகளில் கீழ்த்தரமான பன்றியின் உணவு தான் கிழங்குகள்.
அது மனிதனுக்குத் தேவையில்லை. ஏனென்றால் அவை சூரிய ஒளியினால் நேரடியாய் விளைவிக்கப்படுவதில்லை.
மேலும் அவித்தாலும் வருத்தாலும் வாயுத் தொல்லைகளை உண்டுபண்ணும். கிழங்குகளில் இருந்து
கிடைக்கும் சத்துக்களை, முளைத்த தானியங்கள்,
கீரை, காய்கறி, பழங்களிலிருந்து பெற முடியும். பால் மனித உணவே இல்லை! தாய்ப்பாலுக்குப் பின் பல் முளைத்த பிள்ளைகளுக்கும்
(இரண்டு வயதுக்கு மேல் உள்ள), மனிதர்களுக்கும், பாலை ஜீரணிக்கச் செய்யும் ரெனின் என்ற திரவம் சுரப்பதில்லை. பால் தேவையே இல்லை. மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் மற்ற
பிராணியின் பாலை குடிப்பதில்லை. உலகிலுள்ள ஆடு, மாடு, எருமைகளெல்லாம் மனிதப் பாலை குடிக்கப் புறப்பட்டால் நம் தாய்க்குலத்தின்
கதி என்னவாகும். சற்றே கற்பனை செய்து பாருங்கள். இதற்கு அடுத்த மட்டமான உணவு, புலால். அதனாலேயே அது 'மட்டன்' என்று பெயர் பெற்றிருக்கிறது. உடலைப் பெருக்குமே தவிர அதற்கு
உயிராற்றல் மிகக் குறைவு தான். சதையைத் தின்று சதையைப் பெருக்க வைப்பதின் பயனைவிட அதனால்
ஏற்படும் தொல்லைகளே அதிகம். புலாலுடன் நெய், மசாலா, உப்பு சேர்வதாலேயே இதயநோய், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருகின்றன. மட்டன் சாப்பிட
விரும்பினால் எதுவும் சேர்க்காமல் தனியே சாப்பிடுவது தானே! முடியுமா?
உடலுக்கு பாரம், உறுதி என்பதெல்லாம் கற்பனை எண்ண ஓட்டமே தவிர வேறு இல்லை. உலகில்
அதிக பலமுள்ள, சக்தியுள்ள
மிருகங்கள் அதாவது யானை, குதிரைகூட இலை தழைகளையும், மூங்கில் புல்லையும் தானே தின்கிறது. மேலும் மனித உடல் கூறு
புலால் உண்ணும் பிராணிகளைப் போன்றதல்ல என்பதை நவீன உடற்கூறு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள். எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஏற்புடைய
தல்ல என்பதை உணர்ந்து இயற்கை உணவை ஏற்றுக் கொள்ள வாருங்கள். மூச்சு பற்றி சிறு விளக்கம்
தியானம்
பயன்கள்:
பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி)
சமவிருத்தி பிராணாயாமம்
பிரம்மரி பிராணாயாமம்
இயற்கை உணவின் சில சிறப்பு
இயல்புகள்
ஆரோக்கிய குறிப்புகள் : தியானப் பலன்கள் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Meditation Benefits - Health Tips in Tamil [ Health ]