
இது துரிதமாய் வேலை செய்யும் ஓர் ஒளஷதம்.
ஹோமியோபதி மருந்துகளின் பெயர்கள் மற்றும் குணங்கள் இது துரிதமாய் வேலை செய்யும் ஓர் ஒளஷதம், ஆகவே அவ்வப்போது தோன்றி மறையும் சுரம் முதலிய வியாதிகளில் நன்றாய் வேலை செய்யும். அநேகமாய் எல்லா வியாதிகளுக்கும் ஆரம்பத்தில் சில வேளைகள் இதைக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கப்பட்டால் பல வியாதிகள் முளையிலேயே கிள்ளப்பட்டுவிடும். அல்லது தோன்றினாலும் அதிகக் கடுமையில்லாமல் இருக்கும். எந்த வியாதியாயினும் முன்னெச்சரிக்கையின்றி திடீரென்று தோன்றி அதிக வலி, படபடத்த நாடி, சரீர உஷ்ணம் அதிக அமைதி பின்மை முதலியவைகளுடன் இருக்குமானால் இவ் வெளஷதம் கொடுக்கப்பட்டால், நிச்சயமான பலன் உண்டாகும். அதிக சுரம், தாகவறட்சை, கெட்டியான அதிக வேகமுள்ள நாடி, சாவைப் பற்றிய பயம், சரீர வலி இவைகள் இருந்தால், அது எந்த வியாதியாயினும் இவ்வௌஷதத்தால் பயன் உண்டு. இவ்வௌஷதத்தில் முக்கியமான மனோ நிலைமை சாவைப் பற்றிய பயம். தவிர எல்லா விஷயங்களிலும் பயம், அல்லது எல்லாக் கோளாறுகளும் பயத்தினாலேயே ஏற்பட்டதாகவும் இருக்கலாம். அதாவது இருட்டில் பிசாசு, பேய் என்று பயந்து கொண்டவர்களுக்கு சில சரீரக் கோளாறுகள் ஏற்படும் அல்லவா? அதற்கு இது நல்ல ஔஷதமே. இந்த அதிர்ச்சியினால் ஏற்பட்ட கோளாறுகளை அகோனைட் நிவர்த்திக்க வல்லது. நம் கையில் அகோனைட் இருந்தால் மந்திரவாதியைத் தேடவேண்டிய அவசியம் இருக்காது. இதைத் தவிர குளிர்காலத்தில் அடிபட்டதால் ஏற்படும் சுரத்துக்கும் காயம் பட்டதினால் ஏற்படும் சுரத்துக்கும் மிக்க உபயோகமுள்ள ஒளஷதமாகும். நிமோனியாவாக இருந்தாலும் இன்புளூயன் இருந்தாலும் அல்லது கீல்களில் வீக்கத்தினால் ஏற்பட்ட வாயு சுரமானாலும் வியாதி ஆரம்பித்தவுடன் இவ்வௌஷதத்தைக் கொடுத்தால் வியாதியை வலுக்க வொட்டாமல் செய்து அதைச் சமனப்படுத்தும். அகோனைட்டம் மூத்திர சம்பந்தமான உபாதிகளிலும் பிரயோஜனப்படும். நீர் துவாரத்தில் இரணம் ஏற்படுதல். இதனால் இரத்தம்போல் மூத்திரம், மூத்திரம் குறைதல், வெளிவராமல் தடைபடுதல், மூத்திரமே உற்பத்தியாகாமல் இருத்தல் முதலியவைகளுக்கும், அதிர்ச்சியினால் மூத்திரம் வெளியாகாமல் தங்கு வதற்கும் உபயோகமாகும். சிசுக்கள் பிறந்தவுடன் நீர் இறங்காமல் இருக்கும். இதற்குக் காரணம் பிறந்த அதிர்ச்சியினால் இருக்கலாம். ஒரு சிறிய அகோனைட் மாத்திரையைத் தண்ணீரில் கலந்து அச்சிசுவின் நாக்கில் தடவ உடனே நீர் வெளிப்படும். பிரசவித்த ஸ்திரீகளுக்கு மூத்திர அடைப்பு ஏற்பட்டால் உடனே காஸ்டிகம் என்னும் ஒளஷதம் உபயோகமுள்ளது. வயிற்றுக் கடுப்பிலும் வயிற்றுப் போக்கிலும் கூட வியாதியின் ஆரம்பத்தில் அகோனைட் நல்ல மருந்தாகும். அகோனைட்டத்தின் மற்ற குறிகள் இருந்தால் நன்றாக வேலை செய்யும். 3 முதல் 30 வரையிலுள்ள பல விரியங்களில் உபயோகப்படும். குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் காலத்திலும் அசீரணத்திலும், வெயிற் காலங்களிலும் ஏற்படும் வாயாலெடுப்புக்கு இது நல்ல மருந்து. இக்குழந்தைகள் அதிக பலவீனமாயும் தலையை நிமிர்த்தி வைத்துக்கொள்ள முடியாமலும் கால்கள் தள்ளாடியும் இருக்கும். எப்பொழுதும் தூக்கக் கலக்கமாகவும் தூங்குவது போலவும் இருக்கும். அதனால் பாலைச் சீரணிக்க முடியாது. ஆகவே, பால் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் தயிர்க்கட்டிகள் போல் வாயாலெடுக்கும். இதனால் பலவீனமும் மயக்கமும் வருவது இயல்பே. இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, இது சிசுக்களுக்கும் குழந்தைகளுக்கும் அடிக்கடி தேவைப்படும் ஒளஷதம் என்பதே. சாதாரணமாக அதிக ஆகாரங்களை உட்செலுத்தப்படும் குழந்தைகளுக்கு, அதாவது சில தாய்மார்கள் சிசு அழும்போதெல்லாம் அதற்குப் பசி என்று பாலையூட்டி அதன் ஜீரண சக்தியைக் கெடுத்து விடுவார்கள். இம் மாதிரி ஜீரணம் கெட்டுப்போன குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சஞ்சீவிபோல உதவும். இம்மாதிரி குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்குக் காலாகாலத்திலும் குறிப்பிட்ட வேலைகளிலுமே ஆகாரம் ஊட்டவேண்டுமென்று உபதேசிப்பது நமது கடமையாகும். இம்மாதிரிச் செய்தால் தான் மறுபடி அக்குழந்தைகளுக்கு ஜீரணக் கோளாறு ஏற்படாமலிருக்கும். 30 வீரியத்தில் உபயோகிக்க நல்ல பலன் தரும் நீர்க்கொள்ளுதல் என்னும் சளிக்கும், ஜலதோஷத்துக்கும் முக்கியமானதோர் ஒளஷதம். ஜலதோஷத்தில் பலவகைகள் உண்டென்பது உங்களுக்குத் தெரிந்ததே. இம்மருந்து உபயோகப்பட வேண்டிய நீர்க்கொள்ளுதல் எப்படி இருக்கும் என்பதை நாம் விவரிப்பதை விட, நீங்களே தெரிந்துகொள்ளும் கண்கள் முறையில் ஒருவாறு சொல்லி விடலாம். ஒருவன் வெங்காயத்தை நறுக்கும்போது அவன் கனகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் தண்ணீர் வருவதைச் கவனியுங்கள். அத்துடன் நாசித் துவாரங்களில் எரிச்சலும் முகத்தில் எரிச்சலும் தொண்டையில் கறகறப்பும் ஏற்படும். இம்மாதிரியாகவே சாதாரணமாக ஜலதோஷம் ஏற்படுமாயின் இது கைகண்ட ஒளஷதமாகும். இதுதான் ஹோமியோபதி சட்டம். இத்துடன் மந்தமான தலைவலி, மாலையில் அதிகரித்தல், கண் களில் எரிச்சல் முதலியவை. இன்புளூயன்சா என்னும் சுரத்திற்கு இது நல்ல மருந்து. இவ்வியாதியில் நாசித்துவாரங்களில் எரிச்சலும் கண்களில் நீர் வடிதலும் தண்ணீர்போல் மூக்கிலிருந்து சளியும், சளி அதிகமாயிருந்தால் தொண்டையிலிருந்து காதுவரையில் குத்து வலியும் இருக்கும். சாதாரணமாக அவ்வப்போது தோன்றும் உபாதிகளில் இது ஒரு நல்ல மருந்தே. 30-க்கும் குறைந்த வீரியங்களில் உபயோகிக்க நல்ல பலன் ஏற்படும். வயிற்றுப்போக்குக்கு இது ஒரு நல்ல ஒளஷதம் வெளிக்கு வருவது போலிருக்கும் க்ஷணத்திலே போகா விட்டால் அபானத்தின் பலவீனத்தால் உடனே துணியுடன் போய்விடுதல். வயிற்றில் அதிக கனம், அது விம்மி இருத்தல். அபானத்தில் மூலம் ஒரு கொத்துத் திராட்சை போல் வெளிவருதல். வயிற்றுப் போக்கில் ஏதாவது ஆகாரமோ தண்ணீரோ சாப்பிட்டவுடன் வெளிக்குப் போகுதல். காலையில் தூங்கி எழுந்த வுடன் வெளிக்குப் போகுதல். இம்மாதிரிப் போவதும் மிக்க அவசரமாக ஓடவேண்டும் வாயு பிரியும்போது மலமும் கசிதல். அபானவாயு பிரிந்தவுடன் அபானத்தில் எரிச்சல். வயிற்றுப் போக்கில் சில சமயம் பெரிய உருண்டைகளாகவும் அவைகளுடன் சீதமும் கலந்து போகும். அம்மாதிரி பெரிய உருண்டைகளாகப் போவது சில சமயம் வியாதியஸ்தருக்குத் தெரியாமலேயே படுக்கையில் போய்விடும். மறுபடி யாராவது படுக்கையையோ அல்லது துணியையோ மாற்றும் போதுதான் தெரியவரும்.வயிற்று உப்பிசத்துடன் வயிற்றில் அதிக சப்தமும் இருக்கும். 6 முதல் 30 வரையிலுள்ள பல வீரியங்களில் உபயோகிக்கலாம். இது நமது செங்கொட்டையிலிருந்து செய்யப்படுவது. இம்மருந்து கொடுக்கபட வேண்டிய வியாதியஸ்தருக்கு பலவிதமான மனத்தோற்றங்களும் அபிப்பிராயங்களும் இருக்கும். மன பலவீனம், ஊக்க மில்லாமை. இவை அதிகமில்லாவிட்டாலும் கொஞ்சமாவது இருக்கும். அவருக்கு அதிக ஞாபகமறதி இருக்கும். அதை நினைத்தே கவலை அடைந்து கொண்டிருப்பார். தான் செய்து வந்த தொழிலுக்கு லாயக்கு இல்லாமல் போய்விடுதல். எப்பொழுதும் சுவப்பானத்திலேயே இருப்பதுபோல் இருத்தல் போக்கிரித்தனமும் இதரர்களுக்குக் கெடுதி செய்வதில் சந்தோஷமும் ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு விதமான, ஆனால் மாறுபட்ட அபிப்பிராயம். தன் இரு தோள்களிலும் இரு ராக்ஷசர்கள் உட்கார்ந்து கொண்டு ஒருவன் நல்லது செய்யும்படி தூண்டுவது போலவும் மற்றொருவன் கெடுதல் செய்யும்படி தூண்டுவது போலவும் பிரமை. நடந்து சென்று கொண்டு இருக்கும்போது தன்னை யாரோ தொடர்ந்து வருவதாக நினைத்து வேகமாக நடத்தலும் ஓடுதலும். தன் பக்கத்தில் இருப்பவர் எல்லோரையும் எல்லா சாமான்களையும் சந்தேகித்தல், விசித்திரமான மன நிலமை, சாதாரண விஷயங்களில் மும்மரமாய் இருத்தலும், முக்கியமான விஷயங்களில் அலட்சியமாய் இருத்தலும். சில சமயம் தானே ஒரு ராக்ஷசன் என்று நினைத்துக்கொண்டு வைதல், அடித்தல். மேற்கூறியவைகளைப் பார்க்கும் போது இது சித்தப்பிரமைக்கு ஒரு நல்ல மருந்து என்று தெரியவில்லையா? ஆம். இது சித்தப்பிரமைக்கு நல்ல ஒளஷதமே மேலே கூறியவை மனக் குறிகள் சரீரக் குறிகளை ஆராய்வோம். மனக்குறிகளுடன் கூட தலைவலி. அது ஆகாரம் சாப்பிட்டால் நிற்கும், படுத்திருந்தாலும் தலைவலி இருக்காது. ஆனால் நடக்கும்போது, ஏதாவது ஆலோசனை செய்தால், பசியாய் இருந்தால் தலைவலி வந்துவிடும். வயிற்றில் ஆகாரம் இல்லாதபோது வலி அதாவது ஆகாரம் சாப்பிட்டால் உடனே நின்று விடும். அடிக்கடி வெளிக்கு வருவது போலிருத்தல், ஆனால் வருவதில்லை. இது பெருங்குடலின் பல வீளத்தால் ஏற்படுவது. சரீரத்தின் பல பாகத்திலும் முள் கம்புகள் வைத்தது போல் வலியும் தோற்றமும். வீரியம் 6 முதல் 200 வரை. இம்மருந்து பாலகருக்கும் கிழவர்களுக்கும் அதிக உபயோகமாகும். கிழவர்களுக்குக் காலை வேளைகளில் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்படும். அல்லது சில சமயங்களில் மலச்சிக்கலும் ஏற்படும். சிற்சில சமயங் களில் மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும் மாறி மாறி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இம்மாதிரியான உபாதிகளுக்கு இது ஏற்ற ஒளஷதமாகும். சிசுக்களுக்கு எப்பொழுதும் சிடுசிடுத்துக்கொண்டு, சதா அழுதுகொண்டும் யார் சமீபத்தில் வந்தாலும் வீறிட்டு அழுதுகொண்டும் இருந்தால் இது உபயோகமாகும். அதிக வருத்தம், வாழ்க்கையில் வெறுப்பு, முக்கிய மாய் இல்வாழ்க்கையில் தான் எதிர்பார்த்த பலன் ஏற்படாததினால் ஏற்பட்ட வெறுப்பு. நுனி மூக்கில் இரணமும், வெடிப்பும். ஆறுகளில் முழுகினால் உடனே தலைவலி, போதை அல்லது மது உண்டவுடன் தலைவலி, சீரணம் சரிவர ஆகாமை புளிப்புள்ள பதார்த்தங்களையும் பழங்களையும் உட் கொண்டதனால் அசீரணம் ஏற்பட்டும் அதனால் பலவித உபத்திரவம். அதிக ஆகாரம் உட்கொண்டதினால் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுகள். இம்மருந்து கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கு முக்கியமான குறி பால் போன்ற வெண்மையான. தடித்த மாசு படிந்த நாக்கு, இதைக் கவனிக்கவும். கோடையிலும், குளிர்ந்த தண்ணீரில் முழுகுவதினாலும் எல்லா உபாதிகளும் அதிகரிக்கும். வெய்யிலில் போக முடியாது, சாதாரணமாக 12 அல்லது 30 வீரியத்தில் உபயோகிக்கலாம். இதுவும் ஆண்டிமோனியம் க்ரூடம் போலவே குழந்தைகளுக்கும் கிழவர்களுக்கும் உபயோகப்படக் கூடிய ஒரு ஒளஷதமாகும். குமட்டலும் வாயாலெடுப்பும். அதிக பலவீனம் குளிர்ச்சியான வியர்வை, மயக்கம் முதலியவை முக்கியமான குறிகள். குளிர் காற்றிலும் சதுப்புள்ள இடங்களில் வசிப்பதினாலும் ஏற்படும் வியாதிகள். நூமோ காஸ்ட்ரிக் என்னும் வேகஸ் நரம்புப் பலவீனத்தால் ஏற்படும் மூச்சுக் கோளாறுகளும், இரத்த ஓட்டக் கோளாறுகளும், வியாதியஸ்தர் இருமும்போது மார்பில் அதிக சளி அடைத்திருத்தலினால் களகள வென்று சப்தம். எவ்வளவு இருமினாலும் சளியை வெளியே கொண்டுவர முடியாமை. முகம் நீலநிறமாகி குளிர்ச்சியான வியர்வைத் துளிகள் வெளிப்படுதல். இறப்பதற்குமுன் சுவாசம் வாங்குவதுபோல மூச்சுத் திணறல், மயக்கம், அதிகத் தூக்கம், விழிக்க முடியாமை, சிசு பிறந்தவுடன் மூச்சு சரியாய் வராமை. இம்மருந்து கொடுக்கப்பட வேண்டிய வியாதியஸ்தர்கள் இறப்பதற்கு முன் சுவாசம் வாங்குவது போலவே மூச்சு விடுவார்கள். வலது பக்கத்து நிமோனியா சுரம். 3 முதல் 200 வரையுள்ள வீரியங்களில் உபயோகிக்கலாம். சருமத்திலும், கை கால்களிலும் ஏற்படும் பல வியாதிகளுக்கு இது ஒரு நல்ல ஒளஷதம். பாண்டு வீக்கம் என்று சொல்லப்படும் வியாதிக்கு இது ஒரு நல்ல ஒளஷதம். இந்த வீக்கத்துடன் சருமத்தில் சிவப்பு நிறம் கொண்ட சொறிகளும் கொப்புளங்களும் ஏற்படும். சில சமயங்களில் மிகக் கடுமையாகவும் தோலின் மேல் மாத்திரமல்லாமல் வாயினுள்ளேயும் தொண்டையிலும் இன்னும் இதர உள் பாகங்களிலும் ஏற்படலாம். மனக்குறிகளில் முக்கியமானவை எப்பொழுதும் வருத்தமாயிருத்தல்; எதிலும் கெடுதியையே திடீரென சிந்திப்பது முதலியவை. குழந்தைகளின் உபாதிகளில் மூளையும் சம்பந்தப்பட்டிருக்கும்போது வீறிட்டுக் கத்துவது இருக்கும். குழந்தை தூங்கும் போதும் அல்லது விழித்துக் கொண்டிருக்கும்போதும் திடீரென்று தேள் கொட்டினாற்போல் வீறிட்டு அழும். பாண்டு வீக்கத்தில் கண்களின் கீழே அல்லது கீழ் இமைகளில் வீங்கி அவை பைகளைப்போல் தொங்கும். கைகள், பாதங்கள், வயிறு, முகம் முதலியவை வீங்கும். சாதாரணமாக இம்மாதிரியான வீக்க வியாதிகளில் வியாதியஸ்தருக்கு அதிகமான தாகம் இருப்பது இயல்பு. ஆனால் அபிஸ் மெல்லிபிகா கொடுக்கப்பட வேண்டிய வியாதியஸ்தர்களின் இவ்வளவு வீக்கத்துடன் சிறிதளவுகூட தாகம் இருக்காது. ஆகையினால் இம் மருந்து கொடுக்கப்படவேண்டியதற்கு இது ஒரு முக்கியமான அடையாளம். மகோதரம் என்னும் வயிற்றில் நீரினால் வீக்கம் ஏற்படும் வியாதிக்கு இது உபயோகம் உள்ளதாகும். சிறுநீர்: மூத்திரத் துவாரங்களில் இரணமும், நீர் விடும்போது வலியும் கஷ்டமும் கொஞ்சமாகவும் இரத்தத்துடனும் கலந்து வலியுடனும் அடிக்கடியும் போகுதல். வயிற்றுப் போக்கு : சருமத்திலுள்ள சொறி சிரங்குகள் போன்ற வியாதிகள் வெளிப்பூச்சு ஒளவு தங்களை உபயோகித்ததால் உள்ளே அமுக்கப்பட்டு அதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு. சில குறிகள் சரீரத்தின் வலது பாகத்தில் ஏற்படுதல் அல்லது எல்லாக் குறிகளுக்கும் சரீரத்தில் வலது பாகத்தில் அதிகமாயிருத்தல். வலது விரை வீக்கம் ஸ்திரீகளின் வலது வலியும் ஓவரியில் வீக்கமும் ஓவரி என்பது கருப்பையுடன் சம்பந்தப்பட்ட வயிற்றினுள் இருக்கும் ஒரு அவயவம் என்பது உங்களுக்குத் தெரியும். முறைச்சுரம்: குளிர் பிரதி தினமும் மாலை மூன்று மணிக்குச் சரியாய் ஆரம்பிக்கும். முறைச்சுரத்தில் மாத்திரம் வியாதியஸ்தர்களுக்குத் தாகம் இருக்கும். வீக்கமுள்ள வியாதிகளில் தாகம் இருக்காது. வியாதியஸ்தர் குளிர்ந்த பதார்த்தங்களை விரும்புவார். உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உட்கொள்வதினாலும் உஷ்ணம் சரீரத்தில் படுவதாலும் எல்லாக் குறிகளும் அதிகரிக்கும். 6 முதல் 200 வரையிலுள்ள எல்லா வீரியங்களிலும் உபயோகிக்கலாம். அபிஸ் மெல்லிபிகா படித்தவுடன் அபோஸினம் படிப்பது பொருத்தமானது. ஏனென்றால் இரண்டும் பாண்டு வீக்கத்திற்கு ஏற்ற மருந்துகள். அபோஸினம் சாப்பிடவேண்டிய நபர்களுக்கு அடியிற்கண்ட குறிகள் இருக்கும். வியர்வையும், சிறுநீரும் குறைந்துபோய் அதனால் வீக்கம். வீக்கம் உள்ள வியாதிகளில் அபிஸ் மெல் பிகாவுக்கும், இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் அபிஸ் கொடுக்கப்படவேண்டிய வியா யஸ்தர்களுக்கு தாகமே இருக்காது. ஆனால் அபோகக்னம் கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஏராளமான தாகம் இருக்கும் சாதாரணமாகச் சுரம் முதலிய சர் சக்தியை வெகுவாகக் குறைக்கும். வியாதிகளுக்கும் பிறகு அந்த பலவீனத்தால் வீக்கம் ஏற்படும். ஸ்திரீகளுக்கு, முக்கியமாய் வாலிபப் பெண் களுக்கு மாதவிடாய் ஆகாமல் தடைபடுதலுக்கு இத்துடன் இதன் நிமித்தமாக வயிறும், பாதங்களும் வீங்கியிருந்தால் இது இரு கோளாறுகளையும் நீக்கும். மாதவிடாய் அதிகம் ஆவதற்கும் இது பிரயோச் னப்படும். அதிக மாதவிடாய், கட்டி தட்டிய இரத்தம், இத்துடன் குமட்டல்,வாயாலெடுப்பு. பட படப்பு வேகமான நாடி. சரீரத்துடன் பலம் முழுவதும் போய் விட்டது போன்ற உணர்ச்சி. படுக்கையில் தலையை உயர்த்தினாலும் உடனே மயக்கமடைதல். இது கருப்பமாயிருக்கும்போது ஏற்படும் வறட்டு இருமலுக்கு நல்லது. ஆனால் இங்கே உயர்ந்த வீரியத்திலே கொடுக்கப்படவேண்டும். சாதாரணமாக 6 முதல் 30 வீரியம் வரை உபயோகிக்கலாம்.அகோனைட்டம் நாபில்லஸ் (Aconitum Nappellus)
எதூசா சைனுாபியம் (Aethusa Cynapium)
அல்லியம் சீபா (Allium Cepa)
ஆலே ஸகோட்ரினு (Aloe Socotrina)
அனகார்டியம் ஓரியண்டேல் Anacardium (Orientale)
ஆண்டிமோனியம் க்ரூடம் (Antimonium Crudum)
ஆண்டிமோனியம் டார்ட்டாரிகம் (Antimonium Tartaricum)
அபிஸ் மெல்லிபிகா (Apis Mellifica)
அபோஸினம் கன்னபின்னம் (Apocynum Cannabinam)
மருத்துவ குறிப்புகள் : ஹோமியோபதி மருந்துகளின் பெயர்கள் மற்றும் குணங்கள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Names and properties of homeopathic medicines - Medicine Tips in Tamil [ Medicine ]