
அளவுக்கு அதிகமான இரைச்சலைத் தொடர்ந்து செவிமடுப்பதைத் தவிர்க்கமுடியாத நிலையில் வாழும் ஒவ்வொருவரும் நரம்பு தொடர்பான பல பிணிகளுக்கு இலக்காக நேரிடும்.
இயற்கை வழிமுறை மருந்துகள் காது, மூக்கு மற்றும் தொண்டை: அளவுக்கு அதிகமான இரைச்சலைத் தொடர்ந்து செவிமடுப்பதைத் தவிர்க்கமுடியாத நிலையில் வாழும் ஒவ்வொருவரும்
நரம்பு தொடர்பான பல பிணிகளுக்கு இலக்காக நேரிடும். தற்காலம் காரணம் இருந்தும் இல்லாமலும் காது செவிடுபடச் செய்யும்
பேரிரைச்சலைச் சந்திக்க வேண்டி உள்ளது. நம்மில் ஒருவருடைய வீட்டிலே திருமணம் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஒலி பெருக்கி மூலம் இசைத்தட்டுப் பாடல்களை ஒலி பரப்பி அந்த வட்டாரத்தையே
கலகலக்க வைத்து விடுகிறோம். மூலைக்கு மூலை நடக்கும் பொதுக் கூட்டங்களில் பேசும் பேச்சாளர்களின்
பேச்சுக்கள் அரசியல் தொடர்பு இல்லாதவர்களின் செவிப்பறையினைக் கிழித்து காதுகளைச் செவிடாக்கி
விடுவனவாக உள்ளன. அக்கம் பக்கத்து வீடுகளைப் பற்றி - அங்கே வாழும் மக்களைப் பற்றிச்
சற்றும் கவலைப் படாமல் காதுகளைச் செவிடாக்கும் ஓசையில் வானொலி - தொலைக் காட்சிகளை இயக்கித்
தொல்லை கொடுப்பவர்களுக்கு இந்தக் காலத்திலே பஞ்சமில்லை. மற்றும் பேரிரைச்சலைத் தோற்றுவிக்கும் தொழிற்சாலைகள் ஒரு பக்கம், தெருவையே அதிரவைக்கும்
ஓசையுடன் ஓடும் பஸ், லாரிகள், இவை போன்றவையும் சூழ்நிலையில் பெரும் இரைச்சலை உண்டாக்குகின்றன. இந்த இரைச்சல் நரம்பு மண்டலத்தில் கடுமை அதிர்ச்சியினையும் கிளர்ச்சியினையும்
யான தோற்றுவித்து நரம்புத்தளர்ச்சி போன்ற பிணிகள் தோன்றுவதற்கு காரணங்களாக அமைகின்றன. சாதாரணமாக ஒலி என்று கூறுகிறோமே அதனை இரண்டு வகையாகப் பகுக்கலாம். ஒலி ஒருவித ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு உட் பட்டு சீராக - சரியாக
எழும்போது அதனை இசை என்ற பெயரால் அழைக்கிறோம். இசையின் மூலம் மனம் அமைதியையும், மகிழ்ச்சியையும் இன்பத்தையும்
அடைகின்றது. ஒழுங்கு முறைக் கட்டுப்பாட்டை மீறி சீரற்று ஒலி எழும்போது அது ஓசையாகிறது.
அந்த ஓசை எல்லை மீறி ஓங்கும் போது பேரோசை யாகிறது. இந்த ஓசை மன அதிர்ச்சியையும், மனத்திலே அமைதிக்குறைவையும், எரிச்சலையும்
தோற்றுவிக்கிறது. மனச் செயற்பாடு என்பது நுட்பமாக நரம்பு மண்டலத்துடனும்
மூளையுடனும் தொடர்பு கொண்டதாக உள்ளது. ஆகவே இசையும், ஓசையும் நரம்பு
மண்டலத்தைப் பாதித்து மனத்தின் இயக்கத்துக்கு - செயற்பாட்டுக்கு ஆதாரமாக அமைகின்றது. ஆகவேதான் இனிய இசை மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பேரோசை மனத்திலே அதிர்ச்சியையும் எரிச்
சலையும் தோற்றுவிக்கிறது. இனிய இசையினைத் தொடர்ந்து கேட்டு மகிழும் வாய்ப்பு பெற்ற மனிதன்
நல்ல பண்பும், நாகரிகச் செயற்பாடும், அன்பு போன்ற
அக உணர்வு மிக்கவனாகவும் இருக்கிறான். பேரோசையினால் மன அதிர்ச்சிக்கு உள்ளாகு பவன் பண்பு கெட்டவனாகவும், வன்முறையிலே
நாட்டமுள்ளவனாகவும், சமூக விரோதியாகவும் சட்டத்தை மீறுபவனாகவும் மாறி விடுகிறான். நல்ல மன நிலையில் உள்ள ஒருவன் தவிர்க்க இயலாத நிலையில் அதிக
அளவுக்கு பேரிரைச் சலைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால் சில
சமயம் அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும். 'டெசிபல்' என்ற சொல்லால் அறிவியலார் ஒலியின் தன்மையை அல்லது சக்தியைக்
குறிப்பிடுகின்றார்கள். சாதாரணமாக 90
'டெசிபல்' அளவு ஒலியைத்தான்
நாம் காதாரக் கேட்டு மனச் சம நிலை இழக்காமல் இருக்க முடியும். நம் காதில் விழக் கூடிய ஓசையின் ‘டெசிபல்' அளவு எத்தகையதாக
உள்ளது என்பதை இனி கவனிப்போம். தெருவிலே விரைந்தோடும் மோட்டார் சைக்கிள் 110 டெசிபல் அளவு ஓசையை எழுப்பு கின்றது. ஒருமனிதன் 'ஓ' என்று உரக்கக் கத்துகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது
அவன் 90 'டெசிபல்' அளவு ஓசையை எழுப்புகிறான். ஜெட் விமானங்கள் 150 'டெசிபல்' அளவு ஓசையை
எழுப்புகின்றன. ஓர் ஆலையின் சங்கு எழுப்பக் கூடிய ஒலி யின் அளவு 125 டெசிபல்கள் ஆகும். ஜன நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் எழும் ஆரவார ஒலி காரணமாக
80 டெசிபல் அளவு ஓசை எழுகின்றது. அன்றாடம் நாம் வாழ்க்கையில் காதுகளில் வாங்கித்தான் ஆகவேண்டும்
என்ற நிலையில் உள்ள ஓசைகளின் அளவைத்தான் மேலே குறிப்பிட்டுக் காண்பித்தோம். 90 டெசிபல் ஓசையை மட்டுமே
தாங்கக் கூடிய மனிதன் மேற் சொன்ன அளவு கர்ண கடூர ஓசைகளைக் காதுகளிலே வாங்கியாக வேண்டிய
நிர்பந்ததுக்கு உள்ளாகும் போது அவன் மன இயல்பு என்ன கதியடையும்? உலக முழுவதும் மன நோயாளிகள் இன்று அதிகமாக இருப்பதற்குக் காரணம்
பேரோசைகளுக்கு நடுவே மனிதன் வாழ்ந்தாக வேண்டியிருப்பதுதான். இந்த அளவில் மனித வாழ்க்கை தொடர்ந்தால் பிற்காலங்களில் உலக மக்களில்
முக்கால்வாசிப்பேர் செவிடர்கள் ஆகி விடுவார்கள். அல்லது பைத்தியம் பிடித்தவர்களாக ஆகிவிடுவார்கள்
என்று பேரறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். மனவியல் கடுமையான இரைச்சலால் உடல் தாக்குறும் போது உடலில் ஏற்படக் கூடிய
விளைவுகளைப் பற்றி அமெரிக்க மருத்துவ இயல் அறிஞர் ஜான் விக்சின்ஸின் என்பவர் கீழ்க்கண்டவாறு மொழி கின்றார். "செவிப் புலன் வழியாக இரைச்சல் வந்து சேரும்போது தசைகள் மிகக்
கடுமையாக முறுக்கேறுகின்றன. வயிற்றுப் பாகத்தைச் சேர்ந்த இரத்தக் குழாய்கள் குறுகி
தசைகளுக்குத் தேவைகளுக்கு அதிகமாக நிர்ப்பந்தமாக இரத்தத்தைப் பாய்ச்சும். குமட்டல்
ஏற்படுவது போன்ற ஒரு வித உணர்வு தோன்றும். கல்லீரல் குளுகோசை அதிகமாகச் சுரந்து காரணமற்று
தசைகளை இயங்க வைக்கும். இந்த நிலை தொடர்ந்து தோன்றும்போது உடல் சோர்வும், மனச் சோர்வும்
ஒருங்கே தோன்றும். இந்த நிலைமை காரணமாக நரம்பியல் நோய்கள் மிகவும் எளிதாகத் தோன்றிவிடும்." பேரிரைச்சல் காரணமாக நரம்பு மண்டல அதிர்ச்சிக்குள்ளாகும் மனிதனது மன நிலை பெரிதும் பாதிப்புக்கு
உள்ளாகும். ஒரு மாதிரியான எரிச்சல் மனப்பான்மை அவனிடம் குடிகொண்டு விடுகிறது. அவன்
சிடுமூஞ்சிக்காரனாக மாறி விடுகிறான். பொறுமைக்குணம் அவனை விட்டுப் பறந்து விடுகிறது.
முன்கோபம் அவனைப் பற்றிக் கொண்டு விடுகிறது. இம்மாதிரி கோளாறுகள் தனிப்பட்ட மனிதனிடம் அமைந்தாலும் இது ஒரு
சமுதாயக் கோளாறாக மாறிவிடுகிறது. பல தனி மனிதர்கள்
சேர்ந்தது தானே சமூகம் அல்லது சமுதாயம். இத்தகைய நரம்பியல்
குறைபாடுகளுக்கு இலக்கான குடும்பங்களிலே நிம்மதி இருக்காது. மகிழ்ச்சி நிலவாது. சதா
சண்டை குடி கொண் டிருக்கும். குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைதான் சமுதாயத்திலும் நிலவும். இந்த மாதிரியான குறைபாடுகளிலிருந்து மனிதன் மீண்டு நிம்மதியுடன்-
மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால் சுற்றுப்புறச் சூழ்நிலையில் இரைச்சல் இல்லாத நிலையினை
முடிந்தமட்டில் அமைத்துக் கொள்ள வேண்டும். தற்காலத்து சூழ்நிலையில் சிற்றூராக இருந்தாலும் பெரிய நகரமாக
இருந்தாலும் இரைச்சலை விட்டு மக்கள் ஒதுங்கி வாழ்வது என்பது சாத்திய மற்ற ஒன்றுதான்.
என்றாலும் சூழ்நிலையில் இரைச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க மும் தனிப்பட்ட மனிதர்களும்
இணைந்து பாடுபட வேண்டும். இரைச்சல் சூழ்ந்த இடங்களில் வசித்தாக வேண்டிய நிர்பந்த நிலையில்
உள்ளவர்கள் இரைச்சல் வீட்டுக்குள் புகாதபடி தடுப்பு ஏற்பாடுகளைச் செய்துக் கொள்ளலாம். வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் போன்றவற்றிற்கு கண்ணாடியினால் ஆன
தடுப்புக்களை அமைத்துக் கொள்ளலாம். முழு அளவுக்குக் கண்ணாடித்
தடுப்புக்களை அமைத்துக் கொள்ள இயலாவிட்டாலும் படுக்கை அறை போன்ற ஓர் அறைக்கு மட்டுமா
வது இரைச்சல் உட்புகாத அளவுக்குக் கண்ணாடித் தடுப்புக்களை அமைத்துக் கொள்ளலாம். இரைச்சலின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மரஞ் செடிகளுக்கு
உண்டு. வீட்டைச் சுற்றிலும் அடர்த்தியாக மரஞ்செடிகளை வைத்துப் பயிராக்கினாலும் இரைச்சல்
தொல்லையிலிருந்து ஓரளவுக்கேனும் விடுபட முடியும். இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் பணிபுரிவோர் மாலையில் - அல்லது
இரவில் இரைச்சல் இல்லாத திறந்த வெளி அல்லது காற்றோட்டமுள்ள இடங்களில் குறிப்பிட்ட நேரம்
உலாவி வருவதை வழக்கமாகக் கொள்ளலாம். அரசாங்கமும் சுற்றுப்புறச் சூழ்நிலையின் இரைச்சலைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதிக இரைச்சலை எழுப்பக்கூடிய போக்கு வரத்து சாதனங்களை நகரத்தின்
உட்புறம் அதிகமாக வரவிடாமல் நகரத்தின் சுற்றுப் புறமாகச் செல்ல ஏற்பாடு செய்யலாம். நகரத்திற்குள் வந்தாக வேண்டிய அவசியம் உள்ள பேருந்துகள் போன்றவற்றில்
இரைச்சல் தடுப்பு சாதனங்களை அமைக்குமாறு கட்டாயப்படுத்தலாம். கிராமமாக இருந்தாலும் நகரங்களாக இருந்தாலும் ஏராளமான அளவில்
மரங்களை நடுமாறு செய்யலாம். நகரம் அல்லது கிராமங்களை ஒட்டி
அடர்ந்த காடுகளை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ள வானொலி, தொலைக்காட்சி
சாதனங்களை அதிக ஓசை எழாத வண்ணம் செயற்படுத்தும் வழக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கலாம். நகரங்களில் - அல்லது கிராமங்களில் வீடுகளை மிக நெருக்கமாக அமைக்காமல்
ஒவ்வொரு வீட்டிற்குமிடையே நல்ல இடைவெளி இருக்கு மாறு அமைத்தாலும் இரைச்சல் வேகம் மட்டுப்
படும். இன்று 60 வகையான எலுமிச்சைகள் உண்டு.
இவற்றில் நாம் பயன்படுத்தும் பழவகைகள் இரண்டு தான். ஒன்று நாட்டு எலுமிச்சை; மற்றது கொடி
எலுமிச்சை. நம் நாட்டில் எலுமிச்சம் பழம் என்று கூறும் இந்தப் பழத்திற்கு
வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு பெயர் உண்டு. தெலுங்கில் 'நிம்மப்பண்டு
என்றும், கேரளப் பகுதியில் 'எலுமிச்சை
தேசிக்காய்' என்றும், ஆங்கிலத்தில் 'லைம்-லெமன்' 'சைட்ரிஸ் மெடிக்கா' என்றும் வடநாட்டில்
'நிம்பூக்-நிம்பு என்றும் கூறுகின்றனர். எலுமிச்சை நாரத்த மரவகையைச்
சேர்ந்தது. இதைப் பழவகையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இதைத் தனிப்பட்ட
உரித்துச் சாப்பிடுவது கிடையாது. சமையல் வகைக்குத்தான் இதை அதிக அளவில் பயன்படுத்துன்றனர்.
சர்பத்துடன் கலக்கவும் பயன்படுகிறது. வைத்திய முறைகளுக்கும் பயன்படக்கூடியதாக இருக்கிறது.
மற்றும் சுப காரியங்களில் மற்ற பழங்களை விட இதற்கே முதலிடம் தரப்படுகிறது. இதில் செம்புச் சத்து நிறைய இருப்பதால், திருஷ்டி பரிகாரத்திற்கும், மந்திர, தந்திர
காரியங்களுக்கும் இந்த எலுமிச்சம் பழத்தையே பயன்படுத்துகின்றனர். மேல் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்தான் எலுமிச்சம்பழத்தின்
பயனை அறிய ஆரம்பித்தனர். ஆராய்ச்சியில் இறங்கினர். அதன் காரணமாக எலுமிச்சம் பழத்தின்
விதை, அதன் தோளைத் கொண்டு பல வியாதிகளைத் தீர்க்கும் அரிய மருந்துகளைத்
தயாரிக்க ஆரம்பித்தனர். அருமையான வாசனைப் பொருள்களையும், ரசாயன உப்புகளையும்
தயாரித்கின்றனர். இன்னும் விடாமல் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். எலுமிச்சம் பழத்தில் செப்புச் சத்து இருப்பதால், மற்றவிதமான
பழங்களைவிட இது மேன்மையடைந்ததாக இருக்கிறது. எலுமிச்சம் பழத்தை ஊறுகாய் போட்டு அதைத்
தினசரி ஆகாரத்துடன் சேர்த்து உண்பது நம் பழங்கால வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
எதுமிச்சம் பழத்தில் கீழ்க்கண்ட
உயிர்ச் சத்துக் அடங்கியுள்ளன. வைட்டமின் A உயிர்ச்சத்து - 7 மி.கி. வைட்டமின் BI - 6 மி.கி வைட்டமின் B2 – கிடையாது. வைட்டமின் C - 18 மி.கி. சுண்ணாம்புச் சத்து – 2.5 மி.கி. இரும்புச்சத்து - ௦.1 மி.கி. இதன் உஷ்ண அளவு - 17 காலரி.
எலுமிச்சம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய சஞ்சீவி ஆகும்.
குறைந்த செலவில் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பழம் எலுமிச்சம் பழம் ஒன்று
தான் என்று துணிந்து கூறலாம்.காதுக்கு பேரிரைச்சல் தோற்றுவிக்கும்
நரம்புக் கோளாறுகள்
எலுமிச்சைப் பழம்
சித்த மருத்துவம் : இயற்கை வழிமுறை மருந்துகள் காது, மூக்கு மற்றும் தொண்டை: - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Natural Remedies Ear, Nose and Throat: - Siddha medicine in Tamil [ Health ]