
காதுகள் சப்த அலைகளைக் கிரகித்து அவைகள் மூளைக்கு எட்டும்படியாக நரம்பு உணர்ச்சிகளாக மாற்றுகின்றன.
காதுகள் (The Ears) கண்கள் பற்றிய குறிப்புகள்: காதுகள் சப்த அலைகளைக் கிரகித்து அவைகள் மூளைக்கு எட்டும்படியாக நரம்பு உணர்ச்சிகளாக மாற்றுகின்றன. வெளியே தென்படும் விரிந்த பாகத்தில் சப்த அலைகள் கிரகிக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளிக் காதில் குழாய் வழியாக அதன் உட்பாகத்தில் இருக்கும் செவியின் ஜவ்வில் தாக்குகின்றன. வெளிப்புறத்திலிருந்து ஜவ்வுவரை வெளிக் காது என்று சொல்லப்படும். ஜவ்வின் உட்பாகம் மத்திய செவி என்று சொல்லப்படும் ஒரு அறை போன்ற அவயவம். இந்த அறையின் பக்கங்கள் மியூகஸ் மெம்ரேன்களால் ஆக்கப்பட்டவை மத்திய செவியிலிருந்து சப்த பதத்துக்கு ஒரு சிறிய குழாய் செல்லுகிறது. இக்குழாய்க்கு யூஸ்டேகியன் குழாய் என்று பெயர். மத்திய செவிக்கும் தொண்டைக்கும் இவ்வாறு சம்பந்தம் இருப்பதால் மத்திய செவியில் எப்பொழுதும் காற்று இருக்கிறது. ஆகையினால் செவி ஜவ்வின் இரு பக்கங்களிலும் காற்றின் இறுக்கம் ஒரே மாதிரியாக இருக்கிறது. செவி ஜவ்வின் உட்புறத்திலிருந்து மூன்று சிறிய எலும்புகள் சங்கிலிபோல் பிணைக்கப்பட்டு மத்திய செவியில் உட்புறத்தில் முடிகின்றன. இவைகளின் வழியாகவே ஜவ்விலிருந்து சப்தம் உட்செவியை அடைகிறது. உட்செவி: பொட்டெலும்பின் உட்புறத்தில் முறுக்கப்பட்ட உருவத்துடன் எலும்புகளினால் ஆக்கப்பட்ட ஒரு அவயவம் இருக்கிறது. இதற்கு உட்செவி என்று பெயர். இந்த எலும்பினால் ஆக்கப்பட்ட உட்செவியின் உள்ளே அதே போல் முறுக்கப்பட்ட உருவத்துடன் தசைகளினால் ஆக்கப்பட்ட ஒரு பை போன்ற அவயவம் இருக்கிறது. இந்தத் தசைப் பையினுள்ளே தண்ணீர் போன்ற சுத்தமான ஒரு வகை நீர் இருக்கிறது. இந்த அவயவம் சப்தத்தை மூளைக்குக் கொண்டு போகும் அவயவங்களில் முக்கியமானது. இங்குதான் கபாலத்தின் 8-வது நரம்பாகிய சப்த நரம்பு முடிகிறது. ஒரு சப்தம் உண்டானால் அது காற்றில் அலைகளைக் கிளப்பி நாலா பக்கங்களிலும் செல்லும்படி செய்கிறது. இவ்வலைகள் வெளிக்காதில் வந்து அதன் குழாய் வழியாகக் காதின் ஜவ்வில் மோதுகின்றன. அலைகள் ஜவ்வின்மேல் மோதுவதால் ஒரு விதமான அதிர்ச்சியை அடைகிறது. இவ்வதிர்ச்சி அதன் உட்பாகத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி போன்ற எலும்புகளின் வழியாக உட்காதை அடைகிறது. இவ்வதிர்ச்சி உட்காதை அடைந்தவுடன் அதன் தசைப் பையிலுள்ள நீரில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் அவ்விடமிருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு சப்த உணர்ச்சி மூளையை அடைகிறது. காது கேட்காமை: மேலே கண்டவைகளிலிருந்து வெளிக்காதில் சப்த அலைகள் வருவதிலிருந்து அது உணர்ச்சியாக மூளைக்கு எட்டும் வரையில் பல மிகவும் நுட்பமான அவயவங்கள் வழியாகச் செல்லவேண்டியிருக்கின்றதென்பது தெரியவரும். அந்த நுட்பமான அவயவங்களில் ஏதாவது ஒன்றில் சிறு கோளாறு ஏற்பட்டாலும் சப்த உணர்ச்சி மூளைக்கு சரியாக எட்டாமல் இருக்கக்கூடும். ஆகவே காது கேளாமைக்கு அடியில் கண்ட ஏதாவதொரு காரணம் இருக்கக்கூடும். வெளிக்காதின் குழாய்களில் அடைப்பு, ஜவ்வு கிழிதல், நடுச்செவியில் இரணங்கள், யூஸ்டேகியன் குழாய்களில் அடைப்பு, உட்காதின் கோளாறுகள். சப்த நரம்புகளின் கோளாறுகள் அல்லது மூளையில் சப்தம் கிரகிக்கும் பாகத்தில் கோளாறுகள். கபால எலும்பின் முன் பக்கத்திலுள்ள இரு குழிகளில் கண்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கண்ணும் பந்து போன்ற ஒவ்வொரு கோளமாக இருக்கிறது. தவிர இரண்டாவது கபால நரம்பாகிய பார்வை நரம்பின் மூலமாக கண்கள் மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. பக்கத்தில் இமைகள் இமைகளினால் காப்பாற்றப் படுகின்றன. கண்களிலுள்ள தசைகளின் சுருக்கத் தினால் இமைகள் மூடிக்கொள்கின்றன. மேல் இமையில் ஒரு தனித் தசை அதை மேலே தூக்குவதற்கு பலமளித்துக்கொண்டிருக்கிறது. இமைகளின் உட்பாகம் மியூகஸ் மெம்ரேன்களால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு கஞ்சங்க்டிவா (Conjunctiva) என்று பெயர். கண்ணீர் கோளங்களினால் உண்டாக்கப்படும் ஒருவித உப்பு நீரினால் இந்த சஞ்சங்கடிவா ஈரப்பசையுள்ளதாக வைக்கப்படுகின்றது. இந்த நீர் இமைகளின் உட்புறத்தையும் கண்களின் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து விட்டு நாசியின் அருகேயுள்ள மூலையில் சேர்ந்து அவ்விடத்திலிருந்து ஒரு மெல்லிய குழாயின் வழியாக நாசித் துவாரங்களில் சென்றுவிடுகிறது. சில சமயங்களில் இந்த நீர் அதிகமாக உற்பத்தியாகி மேலே சொல்லிய மெல்லிய குழாய்களின் வழியாகச் சென்றதுபோக மீதியிருப்பது கன்னங்களின் வழியாக வழிகின்றது. இதையே நாம் கண்ணீர் என்கிறோம். கண் விழிகளில் வெண்மை, கருப்பு என பாகங்கள் இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும் வெண்மையான பாகத்துக்கு ஸ்க்லேரோடிக் என்று பெயர். இது கண்களின் வெளித்தோலாகும். இத்தோலில் இணைக்கப்பட்டு கருப்பு விழிகளின் மேல் இருக்கும் வெளித்தோலுக்கு கார்னியா என்று பெயர். இக்கார்னியா கண்ணாடி போன்ற அதன் வழியாக பார்க்கக்கூடிய ஒரு வஸ்து. ஸ்க்லெரோடிக் தோலுக்குள்ளே இருக்கும் இரண்டாவது தோலுக்கு கொராய்டு தோல் என்று பெயர். இதற்குச் சரியாக கருப்பு விழியிலுள்ள பாகத்தில் இதனுடன் இணைக்கப்பட்டிருப்பது ஐரிஸ் என்னும் ஒரு படுதா. கொராய்டு தோலின் உபயோகம் கண்களின் உள்ளே இருட்டாகச் செய்வதாகும். ஐரிஸ் என்னும் படுதாவின் மத்தியிலிருக்கும் துவாரம் சிறியதாகவும் பெரியதாகவும் ஆகக்கூடியது. மிகவும் பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்கும்போது இதிலிருக்கும் துவாரம் மிகச் சிறிய தாகிவிடும். இந்த இரண்டு தோல்களுக்கும் உள்ளே ரெடினா என்னும் மூன்றாவது தோலும் இருக்கிறது. இந்த ரெடினா என்னும் தோலில் தான் நாம் பார்க்கும் பிம்பங்கள் விழுகின்றன. ரெடினாவில் பார்வை நரம்பு முடிகிறது. ஆகவே நாம் பார்க்கும் பிம்பங்களின் உணர்ச்சி அதன் மூலமாக மூளைக்குக் கொண்டு போகப்படுகிறது. ஐரிஸ் என்னும் தசைப் படுதாவிற்குப் பின்னால் லென்ஸ் என்னும் கண்ணாடி பில்லை போன்ற ஒரு உறுப்பு இருக்கிறது. ஆகவே வெளியே இருக்கும் வஸ்துக்களின் பிம்பம் இந்த உறுப்பின் மூலமாய்ச் சென்று ரெடினாவில் விழுகின்றது. அம்மாதிரி விழும் உருவம் தலைகீழாக இருக்கும். இவ்வுருவத்தின் பிம்பம் நிறம் முதலியவைகள் நமது மூளைக்குக் கொண்டு போகப்பட்டு நாம் இந்தவிதமான பிம்பத்தை காண்கிறோமென்று உணர்கிறோம். நம் கண்களின் அமைப்பு ஒரு போட்டோ காமிராவின் அமைப்பைப் போன்றதேயாகும். சமீப திருஷ்டி, தூரதிருஷ்டி முதலிய பார்வைக் கோளாறுகள் கண்களின் லென்ஸ் நாம் பார்க்கும் வஸ்துவுக்குத் தகுந்தபடி உப்பியும் மெல்லியதாகவும் ஆகக்கூடிய சக்தியை இழப்பதினாலும் இன்னும் இதர காரணங்களாலும் ஏற்படுகிறது. 1. கண் இமைகள் சிவந்தும், எரிச்சலுடன் கொட்டும் வலியும், இமையின் கீழ்ப்பகுதியில் பை போலும், சூடான எரிச்சலுள்ள கண்ணீரும். தண்ணீரில் கழுவினால் குறையும். - அபிஸ்மெல் 3-6 2. கண்கள் வீக்கத்துடன், கடுமையான, மஞ்சள் நிறமுள்ள சீழ் போன்ற கசிவு. பிறந்த குழந்தைக்கு கண்நோய். - அர்ஜன்டம் நைட்ரிகம் 3.30 3. சிபிலிஸ் நோயால் கருவிழி (Iris) பாதிப்பு. வெளிச்சம் சேராமை, இரட்டைப் பார்வை மற்றும் பாதி பார்வை. பொருள்கள் கண்ணின் கீழ்ப்பாதியில் தெரியும். மேல் பாதியில் தெரியாது. - அவ்ரம் மெடாலிகம் 3-30 4. கருவிழியில் புண். கசிவு மஞ்சளாகவும் சுயிறுபோன்று இருக்கும். வலியோ சிவந்தோ வீக்கமோ வெளிச்சம் சேராமையோ இருக்காது. - காலிபைக்ரோம் 3-30 5. திடீரென்று கண்களில் வலியும்,வீக்கமும், சிவந்தும், பாப்பா (Pupil) விரிந்தும், மணல் உள்ள உணர்வும், கண்களை தேய்த்தால் குறைதலும், அதிக கூசுதலும் இருத்தல். - பெல்லடோனா 3.6 6. நரம்பு தொல்லைகளால் ஏற்படும் கண்பொறை (cataract) கண்முன் தீப்பொறி, கரும்புள்ளிகள் தோன்றுதல். வலதுகண் இமையில் பாரிச வாயு. - காஸ்டிகம் 3-30 7. பொருள்கள் யாவும் மஞ்சளாகத் தெரியும். கண்கள் தீப் பொறி போன்றும், எரிச்சலும் இருக்கும். - காந்தாரிஸ் 6.30 8. கண் முழுவதும் சிவந்தும், மூக்குப் பகுதி முனையிலிருந்து புருவத்தின் வழியாக பொறிப்பகுதி முனைக்குச் செல்லும் கடுமையான வலி. - சின்னாபரிஸ் 1×-3x 9. வலது கண் பெரிதாகவும், அமுக்கி வெளியே தள்ளுவது போன்ற உணர்வு.சூட்டடுப்பு (ஸ்டவ்) பக்கத்திலிருப்பின் அதிகமாகுதல். - கோமோ கிளாடியா 3-30 10. கண்ணில் அடிபட்டபின் ஏற்படும் பொறை (cataract). சிறிய சிராய்வோ புண்ணோ இருந்தால் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் நீர் ஒழுகுதல். கண்முன் சுரும்புள்ளிகள் தெரிதல். - கோனியம் 6-30 11. கண்ணில் எப்பொழுதும் காரமுள்ள நீர் ஒழுகுதல். கூசுதல், வலி. பொறையுடன் நீர் வடிதல். இமைகளில் வீக்கமும், எரிச்சலும், மங்கலான பார்வை. - யூபரேசியா 3-6 12. கண் சிவந்து, வீங்கி எரிச்சலுடன், இமைகளின் கீழ் மணல் இருப்பதுபோல் உணர்வு. அசைத்தால் வலி, செயற்கை ஒளி கூசுதல். - பெர்ரம் பாஸ் 9x-6x 13. ஒரு பாப்பா விரிந்தும் மற்றொரு பாப்பா சுருங்கியும் இருக்கும். இரட்டைப் பார்வை. இமைகள் தொங்கியிருப் பதால் திறக்க இயல்வது கடினம். மங்கலான, புகை மூடியது போன்ற பார்வை. சரியாக தேர்ந்தெடுத்து பொருத்தப்பட்ட கண்ணாடியினால் அசௌகர்யம் இருந்தாலும் சரி செய்யும். - ஜெல்சிமியம் 3-6 14. கண் சிவந்து வீங்கி இருக்கும். இமைகளில் படை, வெடிப்பு வலி, கட்டி தோன்றல். படிக்கும்போது எழுத்துகள் சேர்ந்தது போலவும், எழுதும்போது இரண்டாக இருப்பது போலவும் தெரியும். - கிராபைடிஸ் 6-30 15. வெண் விழிபடலத்தில் ஏழ், கோத்தல், புண், பொருள்கள் சிவப்பாகவும் பெரிதாகவும் தெரியும். பாதி பார்வை. - ஹிபார்சல்ப் 6.30 16. கண்வலி கருவிழி அழற்சி. இரவில் அதிக வலி. இமைகள் கீல்வாத நோயால் விறைப்பாக இருத்தல். - கால்மியா 6.30 17. வெண் விழிப்படலத்தில் புண், பொறை, கண்மங்கல், வெள்ளை சளிபோல் கசிவு. - காலிமூர் 3.6 18. பிறந்த குழந்தைக்கு கண் நோய். சீழும், இமைகளில் பொருக்கும், மஞ்சள்கசிவும் இருத்தல். - காலிசல்ப் 3.6 19. இமைகள் துடித்தல். கண்ணீர் அதிகம் வருதல், வலி, ஓரக்கண் பார்வை. - மெக்னீசியம் பாஸ் 3.5 20. இமைகள் சிவந்து, தடித்து, வீங்கி, எரிச்சலுடன் காரமுள்ள கடுவும், வார்ப்பு பட்டறை ஒளியால் கருவிழி அழற்சியும். மூடுபனிபோன்ற பார்வை. - மெர்கூரியம் 4.60 21. கண் எரிச்சல், வலி, கரிவு கன்னத்தில் பட்டு தோல் உரிதல். கண்ணைச் சுற்றியுள்ள எலும்புகளில் கிழிக்கும் வலி. சிபிலிஸ் நோய் பாதிப்புக் கண் நோயிக்குச் பிறந்தது. - மெர்கூரிகரோசிஸ் 6-30 22. ஆரம்ப நிலை கண்பொறை (Cataract Inciplent) படிக்கும். போது எழுத்துக்கள் ஓடுவதுபோல் தோன்றல் இருமும் போது கண்நீர் ஒழுகல். கீழே பார்க்கும்போது கண்வலி. - நேட்ரம்மூர் 6.30 23. கண் பொறை (Cataract) ஆரம்ப நோயில் எழுத்து வெப் பாகத் தெரியும். தூசியோ, திரையோ மூடியுள்ளதான பார்வை. கரும்புள்ளி கண்முன் மிதப்பதாகவும் எழுத்து சிவப்பாகவும் தெரிதல். அதிக உடலுறவால் பார்வை குறைதல். - பாஸ்பரஸ் 6-30 24. கண் தசைகளை சுண்டி இழுத்தல். கண்களை வருத்துதல். இரவில் கண் தெரியாமை. வளரும் கிட்டப் பார்வை (Myopia). coma) நோய். அடிபட்டபின் ஏற்படும் கிளக்கோமா (Glau பைசோஸ்டிக் மா 3.6 25. திரும்பத் திரும்ப வரும் கண்கட்டி, கண் இமை அழற்சி கெட்டியாகவும், மஞ்சளான அதிக கசிவு. ஏதோ கண்ணை மூடியிருப்பதாக கருதித் தேய்த்துவிடல். - பல்சாடில்லா 3.30 26. கண்ணுக்கு பின்னால் வலி. அசைந்தால் அதிகமாதல். இமைகள் விரைப்பாக ஓட்டிக்கொண்டு, காய்ந்து மூடி இருத்தல். சிறு கொப்புளங்களால் அழற்சி ஏற்படல், மஞ்சள் கீழ் உள்ள அதிக கசிவு. - ரஸ்டாக்ஸ் 6-30 27. படித்தாலோ, தைத்தாலோ, கண்கள் சிவந்து சூடாக வலியுடன் இருக்கும். மங்கிய பார்வை. தவறான ஒளி விலகலால் (Refraction) கண் பாதிப்பு. - ருடா 3.6 28. இமை ஓரங்களில் அரிப்பு, கட்டி, குழி விழுந்த கண். சுற்றிலும் நீல வளையங்கள். சூரியனைப் பார்த்தால் சூடான கண்ணீர் வருதல். சிபிலிஸ் கண் நோயினால் கண்கள் வெடித்து விடுவது போலவும், எரிச்சலுடனும் வலியும் இருத்தல், - ஸ்டாபிசாகிரியா 3.30 29. அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு ஏற்படும் எண் பொறை (Cataract). கண்ணீர்ப்பைக் குழாய் வீக்கம், பகல் ஒளியைக் கண்டால் வெறுப்பு. இமையில் கட்டி கொப்புளங்கள். - சிலிகா 6-30 30. கண்ணில் ஊசி குத்துவதுபோன்ற வலி. எரிச்சலுடன் வெட்டும் வலி, ஒளியைப் பார்த்தால் பொறுக்க முடியாது. அதிகக் கண்ணீர் சுரக்கும். கடுமையான நாட்பட்ட கருவிழி நோய். கண்முன் தூசி பறப்பதுபோல் தெரிதல், - சல்பர் 6-30 31. எண் பெரிதாக இருப்பதாக உணர்தல். கண்ணைத் திருப்பினால் அமுக்கும் வலி ஏற்படல். உள்ளேயும், சுற்றிலும் வலி. - ஸ்பைஜீலியா 6.30 32. கண்ணின் வெண்படலத்தில் திட்டான சதை வளர்ச்சி. இமைக் கட்டிகள். இரவில் இமை ஓட்டிக்கொள்ளுதல், குளீர்ச்சியாய் இருப்பதுபோல் உணருதல். - நூஜா 6.30 33. கண் மங்கல், பொறை (Cataract) - சினிரேரியா - கண் சொட்டு மருந்து 34. மிருதுவான கண் பொறை (Soft eataract) கண் மங்கல். - நாப்தலின் 3-6x 35. கண்முன் மீறுக்மீனுக்கென்று பொறி பறத்தல், கண் வலி, கண் பொறை (Cataract). - கல்காரியா புளோர் 30x-200x 36. குழிவிழுந்த கண்களைச் சுற்றியுள்ள ஓரம் நீலதிறம், முக்கிய மாக வயதான பெண்களுக்கு ஏற்படும் ஆரம்ப கண் பொறை (Cataract). - ரீகேல் கார்னூடம் 6.30 37. வானவில் நிறங்கள் தோன்றுதல். சுய இன்பத்தால் (Masturbation) கண் பார்வை மங்குதல். - பாஸ்பாரிக் ஆசிட் 1-3 38. இமைகளில் சதைக் கட்டி (Cyst)களைக் கரைத்தல் - பிளான்டனஸ் ஆக்சிடென்டலிஸ் -வெளிப்பூச்சுக்கு. - பெர்ரம்பைரோ பாஸ்பேட் 3.6. - உட்கொள்ள. 1. திடீரென்று தோன்றும் பொறுக்கமுடியாத துளைக்கும் வலி. ஒரு காதிலிருந்து இன்னொரு காதுக்குச் செல்லுதல் - பெல்லடோனா 3.30 2. காதின் பின்புற எலும்புகளில் வீக்கமும், காதின் மையத்தி லிருந்து நாட்பட்ட நீர் ஒழுகலும், எரிச்சலும், குத்தும் வலியும். - காப்சிகம் 3.6 3. காதில் குறும்பி அதிகம் சேருதல். தன் பேச்சின் ஒலி தன் காதிலிருந்து எதிரொலித்தல். - காஸ்டிகம் 6-30. 4. காதில் ஒழுகல் கெட்டியாக நாற்றமுடன் இருத்தல். குழந்தைகளின் காதுவலியானது கூர்மையாகவும், கிழிப்பதுபோலவும் இரவில் அதிகமாகும். - பல்சாடில்லா 6-30 5. பொறுக்கமுடியாத புண் போல் வலியும், வீக்கமும். வலியால் பைத்தியம் பிடித்ததுபோல் அலைதல். - சாமோமில்லா 6.30 6. கடுமையான காது வலி. ஆரம்ப வீக்கத்தையும், சீழ் பிடிப்பதையும் தடுக்கும். - பெர்ரம்பாஸ்3x-6x 7. காதில் சளிபோன்ற ஒழுகலால் காது கேளாமை. - ஹைடிராஸ்டிஸ் 6-30 8. காது குழல் வீக்கத்தால் காது கேளாமை. நாட்பட்ட மையக்காது தொல்லைகள். காது சுரப்பி வீக்கம். திடீர் ஒலி கேட்டல். - காலிமூர் 3x-12x 9. தொண்டை வலியுடன் காதுவலி. காதுக் குறும்பி வறண்டு கெட்டியாக இருத்தல். காது ஒலி, விரலை வைத்தால் நின்றுவிடுதல். - லாச்சஸ் 30-200 10. நாட்பட்ட மையக்காது நோயாலும், சளி பிடித்தலாலும் காது கேளாமையும், ஒலியும் ஏற்படல். காது செவிப்பறை கெட்டிப்படுதல். - மெர்கூரிடல்சிஸ் 3x-6x 11. மனிதனின் பேசும் ஒலி கேளாமை. எதிரொலி கேட்டல். மையக் காதும், காதின் பின்புற எலும்பும் வீங்குதல். - பாஸ்பரஸ் 6-30. 12. காதில் அதிக ஒலியும், நாற்றமுள்ள ஒழுகலும், செவிப்பறையில் துளையும். காதின் பின்பக்க எலும்பு சொத்தையாகுதல். - சிலிகா 6.30. 13. மஞ்சள் நிற நாற்றமும் இரத்தமும் கலந்த ஒழுகல். இரவில் அதிக வலி. - மெர்கூரி சோல் 6-30 14. நாட்பட்ட காது வலியுடன் நீர் ஒழுகல். - வெர்பாஸ்கம் Q 15. தண்ணீரில் வேலை செய்வதால் காது கேளாமை. சளி போல் ஒழுகல். சுரப்பிகள் வீக்கம். - கல்காரியா கார்ப் 6.30 16. காதிலிருந்து நாற்றமுள்ள சீழ் வடிதல். அதனால் காது கேட்பதில் கடினம். காது குழாயில் கீழ்க் கொப்பளங்கள். - ஹிபார்சல் 6.30. 17. பிறந்ததிலிருந்து காதில் ஒழுகல் திரும்பத்திரும்ப வருதல். காது கேளாமை. காதுப் பாதிப்பால் கண்களில் வலி. - வயோலா ஓடோரடா 3-6 18. மாத விடாய்க்குமுன் காது கேளாமை. பல்வலி காது கண்களுக்குப் பரவுதல். காதில் தந்திக் கம்பியைப் போல் இரைச்சல். - பெரம் பிக்ரிகம் 3×-6x. 19. மையக் காதிலிருந்து வரும் நீர்க்கசிவு காரமாகவும், மீன் ஊறுகாய் போல வாடையும். குழாயில் அரிப்பும், வீக்கமும், தெரிக்கும் வலியுடன் இருத்தல். - டெல்லூரியம் 6.30 20. காது நரம்பில் கடுமையான வலி. குளிர்ந்த காற்றாலோ குளிர்ந்த நீரில் முகம் கழுத்தைக் கழுவினாலோ வலி அதிகமாகுதல். - மெக்னீசியம் பாஸ் 3×-6×. 21. காதில் உடைவது (Cracking) போன்ற ஒலி. - பாரிடா கார்ப் 6.30 22. மெல்லும்போது, விழுங்கும்போது, தும்மும்போது காதில் வலியும், "உஸ்" (Whizzing) ஒலியும், தேனீ ரீங்கார ஒலி (Buzzing)யும் ஏற்படல். - பாரிடாமூர் 6-30 23. காதில் "ஹிஸ்" (Hissing) என்னும் சீறும் ஒலி. - கிராபைடிஸ் 6.30 24. காதில் "ஹம்" ஒலி (Humming). கர்ஜனை (Roaring) ஒலி. - லைக்கோபோடியம் 30-200 25. காதில் "ஹம்" ஒலி (Humming): தேனி ரீங்கார ஒலி. - காலிபாஸ் 3-6. 26. காதில் மணி ஒலி (Ringing) கேட்டல். - சைனா 6.30 27. காதில் மணி ஒலி (Ringing), கர்ஜனை ஒலி கேட்டல். - சலிசிலிக் ஆசிட் 3-6 28. காதின் உள்ளே பலவித ஒலிகள் (Tinnitus) கேட்பது. - கார்போனியம் சல்ப் 3-6 29. காதில் 'உஸ்' (Whizzing) ஒலி கேட்டல். - சல்பர் 6-30 30. காதில் கர்ஜனை ஒலி (Roaring) கேட்டல். - சிலிகா 6.30நமக்கு காது கேட்பது எப்படி?
கண்களும் பார்வையும் (The Eyes and Vision)
கண் நோய்கள் (EYE DISEASES )
காது தொல்லைகள் [EAR TROUBLES]
மருத்துவ குறிப்புகள் : காதுகள் (The Ears) கண்கள் பற்றிய குறிப்புகள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Notes on The Ears, Eyes - Medicine Tips in Tamil [ Medicine ]