
பாரா 70. உடல் நலத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற ஒரு மாற்றத்தை நாம் நோய் என்கிறோம்.
நாட்பட்ட நோய்கள் பற்றி ஆர்கனான் விளக்கம் பாரா 70. உடல் நலத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற ஒரு மாற்றத்தை நாம் நோய் என்கிறோம். இயற்கையாக ஏற்பட்ட ஒரு நோயை மருந்தினால் குணப்படுத்த முடியாது என்பது தம் எல்லோருடைய அனுபவமாகும். பாரா 71. நோய் என்பது குறிப்பிட்ட குறிகளைக் கொண்ட தொகுப்பாகும். அதை மருந்தின் மூலம் அழித்தோ மாற்றியோ நலமாக்கலாம். ஒரு நோயை சுத்தமாக - உண்மையாக குணப்படுத்துவது என்பது நோய்க்குறிகளைப் போல் தோற்றுவித்த ஒரு மருந்தை அதேபோலுள்ள நோய்க்குறிகளைக் கொண்ட நோய்க்கு அம் மருந்தைக் கொடுத்து குணப்படுத்துவதாகும். (1) நோயைக் குணப்படுத்த முறையாக ஆராய்ந்து தேவையானவை எது என்று மருத்துவர் அறிதல் வேண்டும். (2) இயற்கையினால் ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த பொருந்தக்கூடிய கருவியையும், நோயின் வளர்ச்சி (Pathogenetic) ஆரம்பம் ஆகியவைகளின் சக்தி கொண்ட மருந்துகளை எவ்விதம் பெறுவது என்றும் அறிதல் வேண்டும். (3) இயற்கை நோயை குணப்படுத்த மிக அதிகமாக பொருந்தக்கூடிய செயற்கை முறையால் தோற்றுவித்த நோய்க்குறிகளைக் கொண்ட பொருள்கள் (மருந்துகள்) என்ன என்று அறிதல் வேண்டும். பாரா 72. மனிதனின் உயிர்ச்சக்தியானது இயற்கைக்கு மாறுபட்ட நிலையில் அதாவது சக்தி கெட்டுள்ள நிலையில் நோய் வேகமாகத் தாக்கி அதைச் சீக்கிரமாக கூடவோ, குறைத்தோ முடிவுக்கு கொண்டு வரும் நிலைமையை ஒவ்வொரு சமயமும் மிதமான காலத்தில் அமைக்கிறது. இதைக் கடுமையான நோய்கள் (Acute diseases) என்கிறோம். இதே குணங்கொண்ட நோய்கள், சிறிய அளவில் அடிக்கடி புலப்படாத குறிகளுடைய ஆரம்பங்களுடனும், உயிருள்ள உறுப்பில் மாற்றமும், அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புப் பிரிவுடனும், படிப்படியாக உடல் நலத்திலிருந்து விலகச் செய்தும், உடலைப் பாதுகாக்கும் உயிர்ச்சக்தியானது ஆரம்பத்தில் நோயை எதிர்த்துப் பிறகு முடியாமல் போய். நோய் வளரும்போது அவைகள் குறைபாடுகளுடனும் தகுதியற்றும் எதிர்க்கும் சக்தி பயனற்றும், அவைகளை அழிக்க இயலாமல் போனதால், நோய் பரவி, மேலும் மேலும் அதிக அளவில் கெடுத்து உறுப்பு அழியும் வரை, துணைபுரிய ஏதுமில்லாமல் துன்பப்படும் நிலையை. நாட்பட்ட நோய்கள் (Chronic Diseases) என்கிறோம். ஒரு நாட்பட்ட மியாசத்துடன் சேர்ந்த சக்திவாய்ந்த தொற்று நோயால் இவைகள் ஏற்படக் காரணமாகிறது. பாரா 73. கடுமையான நேரங்களில் தனி மனிதனைத் தாக்க, சூழ்நிலையை கொண்டும் தீங்கிழைக்கிற செல்வாக்கினாலும் அவை வெளியே காணப்படும். அதிக உணவும், அல்லது தேவைக்குக் குறைவான உணவும், தாங்க முடியாத உடல் குறிகள், குளிர், அதிகச் சூடு, சக்தி வீணாக்குதல், மிக்க முயற்சி, எரிச்சலடைதல், மனத்தில் எழுச்சி, கடுமையான காய்ச்சல் முதலியவைகள் யாவும் மறைந்துள்ள சோராவின் தற்காலிக வெளித்தோன்றல்களாகும். கடுமையான நோயானது கொடூரமான நிலையில்லாததும் சீக்கிரமே தணியக் கூடியதாகக் கொண்ட குறிகளிருந்தால், அவை இயற்கையாகவே செயலற்ற நிலைக்குச் சென்று விடுகிறது. அல்லது அவை பலரை ஒரே நேரத்தில் அங்கும் இங்குமாக (Spordaically) தாக்கவும் அதேபோலுள்ள நோய் எல்லா இடங்களிலும் பரவி (Epidemically) பலரைத் தாக்கவும், இந்த நோய் பொதுவாகத் தொற்று நோயாக (Contagious) மாறி, மக்கள் கூட்டம் எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு தாக்கும். அப்போது காய்ச்சலைத் தோற்றுவித்து, அவை ஒவ்வொன்றும் தனிக் குணங்குறிகளை நோய்க்கு ஏற்றவாறு கொண்டும் இருப்பதால், அவைகளை ஒரு மிதமான காலம் முடியும் வரை அப்படியே விட்டுவிட்டால் இறப்பிலோ, அல்லது குணம் பெறுவதிலோ முடியச் செய்யும். சூழ்நிலையால் தோன்றும் போரின் பேராபத்துக்களும், வெள்ளப் பெருக்கமும், பஞ்சமும் எப்படி அடிக்கடி நிகழாதோ, அதே முறையில் தனிக்குணத்தோடு கூடிய கடுமையான மியாசம் (Acute-mlasm) நபர்களை வாழ்நாளில் ஒருமுறையோ, அடிக்கடியோ தாக்குகிறது. உதாரணம்:- கக்குவான், தாளம்மை முதலியன. பெரியம்மை, பாரா 74. அலோபதிக் மருத்துவமுறையில், உக்கிரமானதும், தீரமானதுமான மருந்துகளை அதிக அளவில் நீண்ட நாட்கள் கொடுத்துச் சிகிச்சை செய்யும்பொழுது, சில நேரங்களில் உயிர்ச் சக்தியானது பலகீனப்படுத்தப்பட்டும், அதை நாம் கட்டுப்படுத்த இயலாத நிலையில் மெதுவாக அதிகரித்து ஒவ்வொரு மருந்துப் பொருளின் சிறப்புத் தன்மை (Peculiar manner) யால் அதிகக் கெடுதல், இவ்வகையில்- ஏற்படுவதால் உடலுக்கு சேராததும் அழிக்கச் செய்யும் தாக்குதலால் உறுப்புகளில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்து அதை விரிவடையச் செய்தோ, சுருங்கச் செய்தோ, தளர்த்தியோ, கட்டியாகவோ, அல்லது குறிப்பிட்ட பகுதி முழுவதும் அழிந்தோ, முறையற்று தாறுமாறாக வளர்ந்தோ உறுப்பில் இங்கும் அங்குமாக உள்ளும் வெளியும் அழிக்கும் சக்தியால் ஏற்படுத்தப்படுகிறது பாரா 75. அலோபதிக் முறையின் குணமாகாத கலையால் நாட்பட்ட நோயின் பாதிப்புமூலம் உடல் பாதிக்கப்படுவதைக் கண்டு மிக அதிகமாய் இரக்கப்படுவதோடு, மிக அதிகமாய் குணமாகாத நிலையாக உள்ளன. அவை ஒரு குறிப்பிட்ட உயரத் திற்கு சென்றடைவதால் வெளிப்படையாக அதை கண்டுபிடிப்பது அல்லது ஏதாவது மருந்துகளைத் தந்து அதை குணப்படுத்துவது முடியாமல் போகிறது. பாரா 76. இயற்கை நோய்களுக்கு மட்டும், நமக்கு ஓமியோபதி மூலம் நன்மை செய்கிற அனுமதி தெய்வீகத்தன்மையால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மனித உறுப்புகளுக்கு அழிவும், அங்கவீனமும், உள்ளேயும், வெளியேயும் பொய்யான மாயமான மருத்துவக்கலையால் கெடுதல் உண்டாக்கும் மருந்து சிகிச்சையால் தாராளமாக ஆண்டுக்கணக்கில் அடிக்கடி தோன்ற காரணமாகத் திகழ்கிறது. இவ்வாறு ஏற்படுவதற்கு அதன் பின்னாலே ஏதாவது ஒருநாட்பட்ட மியாசம் மறைந்துள்ளது என்பதையும், அதை நீக்க உயிர்ச்சக்தியால்தான் இயலும் என்பதையும் கருதவேண்டும். 77. (செயற்கை நாட்பட்ட நோய்). உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியவைகளான மது அருந்துதல் போன்றவைகளை வழக்கமாக பயன்படுத்துவதால் உடல்நலத்தை பலகீனப்படுத்துதாலும், உபவாசமிருத்தலாலும், சுகாதாரமற்ற சதுப்புநிலத்தில் வாழ்வதாலும், ஈரமுள்ள தரையில் படுத்தலாலும், மனத்தாலும் உடலாலும் வருத்திக் கொள்வதாலும், தொடர்ந்து ஒருவருக்கு கவலை முதலியன இருத்தலாலும், பொய்யான மருத்துலகக் கலையாலும் ஏற்பட்ட தகுதியற்ற நோய்களை நாட்பட்டவைகள் எனப் பெயரிட்டனர். ஒருவர் நலமற்ற நிலையில் இருக்கும்போது, முன்னேற்றமான வாழ்வை அவர் கடைபிடித்து வந்து, அதன்மூலம் அவருடைய நோய் தானாகவே மறைந்துவிட்டால், அங்கே நாட்பட்ட மியாசம் பதுங்கி இருக்கவில்லை எனக் கருதவேண்டும். ஆகையால், அவருக்கு ஏற்பட்ட நோயை நாட்பட்ட நோய் என அழைக்கக் கூடாது. பாரா 78. (இயற்கை நாட்பட்ட நோய்) ஒரு நாட்பட்ட மியாசத்தினால்தான் உண்மையான இயற்கையான நாட்பட்ட நோய்கள் தோன்றுகின்றன. அவைகளை தக்க மருந்து கொடுத்து நீக்காமல் விட்டுவிட்டால், மனமும் உடலும் நன்றாக இருப்பினும், நோய் அதிகமாகி வளர்ந்து நோயாளிக்கு கடும் வேதனையை சாகும்வரை தந்து, எப்போதும் அதிக துன்பத்தில் நோயாளியை ஆழ்த்திவிடும். மியாசங்கள் அதிக அளவில் இம்மானிட இனத்திற்கு எண்ணற்ற கொடுமைகளைத் தருகிறது. அதிக திடகாத்திரமும், கட்டுக்கோப்பான உடலமைப்பையும், முறையான வாழ்வையும், பலம் வாய்ந்த உயிர்ச் சக்தி இருந்தும் மியாசங்களைப் போக்க இவைகள் போதுமானவையல்ல. பாரா 79. இதுவரையில் சிபிலிஸ் நோயை மட்டுமே ஒரு நாட்பட்ட மியாசமுள்ள நோய் எனக் கருதினார்கள். குணமாகாதவர்களுக்கு உயிரைப் போக்கின. அதைப் போலவே மரு, பாலுண்ணி போன்ற சைக்கோசிஸ் நோயையும் ஒரு சிறப்புத் தன்மை வாய்ந்த நாட்பட்ட மியாசம் கொண்ட நோயாக அக்கீகரிக்கப்படவில்லை. இவை இரண்டையும் சரியான மருந்தளித்து சிகிச்சை அளிக்காமல் விட்டால், உயிர்ச்சக்தியால் அவைகளை வேரறுக்க முடியாது. தோலின் மீது வளர்ந்துள்ளவைகளை அழித்துவிட்டால் நோயாளியைக் குணப்படுத்திவிட்டதாக மருத்துவர்கள் நினைத்துக்கொண்டனர். ஆனால், உடலில் உறுதியுடன் தங்கியுள்ள நோயின் நஞ்சு மருத்துவர்களின் பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் அச்சமயம் தப்பித்துக் கொண்டது. பாரா 80. சிபிலிஸ்,சைக்கோளிஸ் இந்த இரண்டு நாட்பட்ட மியாசங்களைக் காட்டிலும் மதிப்பிட இயலாத மிகப் பெரியதும், அசட்டை செய்ய முடியாததுமான நாட்பட்ட நோய் சோரா வாகும். இரண்டு மியாசங்களில் ஒன்றான சிபிலிஸ்ஸால் வலியில்லா புண்ணும், சைக்கோரிஸால் மருபோன்ற சதை வளர்ச்சியும் ஏற்படுவதற்கு காரணம் அவைகள் தன்னுடைய நஞ்சை உடலிலுள்ள உள்ளுறுப்புகளை எல்லாம் தாக்கி, தொந்தி, செயல் முழுதும் முடிந்தபின் வெளியே தெரிவிக்கின்றன, தோலின்மீது கொப்புளங்களும், சில நேரங்களில் அரிப்பும் ஏற்பட்டதால், சொரியும் போது பொறுக்க முடியாத அளவிற்கு நீர் கோர்த்த கொப்பளங்களும் தொடர்ந்துவரும். இது உள்ளே இருக்கும் பயங்கரமான நாட்பட்ட மியாசமே அந்த சோராதான், எல்லா எண்ணற்ற நோய்களையும் தயாரிக்கக்கூடிய உண்மை யான அடிப்படை காரணகர்த்தா, இந்த சோரா ஒன்றேயாகும். நரம்பு பலகீனம், தன்னிச்சையை இழக்கச்செய்யும் நோய், தன் உடலைப்பற்றிய அதிக ஆதங்கம், பித்து, பைத்தியம், துக்கம், மனோதிடமில்லாமை, வலிப்பு, எல்லாவித இரிவுகள், எலும்பு மிருதுவாருதல், தண்டுவடம் வளைதல், எலும்பு சொத்தையாகுதல், புற்றுநோய்க் கட்டிகள், காமாலை, மூலம், வாதம், மாதவிடாய் தாமதம், இரத்தபோக்கு, ஆஸ்துமா, நுரையீரல் புண், வீரியக் குறைவு, ஒற்றைத் தலைவலி, காதுகேளாமை, கண்புறை, கண்மங்கல், சிறுநீரில் கற்கள், பரரிசவாயு, பலவித வலிகள் முதலியன எல்லாம் "நோயும் அதன் காரணங்களும்" என்கிற பெதாலஜி முறையில் சிறப்பாகவும், தனிப்பட்ட நோயாகவும் கருதப்படுகிறது. பாரா 81. மிகப்பழங்காலத்தில் தொற்றிய நோய்ப்பொருள், மெதுவாக நூற்றுக்கணக்கான தலைமுறைகளில் கோடிக்கணக் கான மனித உறுப்புகளில் ஊடுருவி, நம்ப இயலாத அளவிற்கு வளர்ச்சியடைந்து, தற்போது இப்பெரிய மனித குடும்பத்தில் என்னிலடங்கா நோய்களை அமைத்துக்கொண்டும், முக்கியமாக சூழ்நிலைகளால் பங்கு கொண்டும், பலவிதமான நாட்பட்ட நோய்களை உற்பத்தி செய்கிறது. இது சோராவின் இரண்டாம் நிலைக்குரிய குறிகளாகும். மேலும் இவைகள் உடலமைப்புக் கேற்றவாறு பிறவியிலேயே பலவகைகளில் மாறுபட்டு விவரிக்க முடியாதவாறு உள்ளுறுப்புகளில் சேர்த்து தீங்கிழைத்து, கணக்கற்ற பலவித குறைபாடுகளையும், ஊடுருவி, சோராவுடன் கெடுதல்களையும், துன்பங்களையும் தோற்றுவித்துள்ளன. இதை பலவிதமாகத் தனிப்பெயரிட்டு அழைக்கின்றனர். சில காரணங்களால் சோராவின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, நாட்பட்ட நோயாக மாற்றப்பட்டு, சில நேரங்களில் தட்பவெப்பநிலை. வசிக்கும் இடத்திற்கேற்ப உடலில் ஏற்படும் குணங்கள், உணவு. காதல், பழக்கவழக்கங்கள். இளைஞர்களின் மனத்திலும் உடலிலும் பயிற்சியால் ஏற்படும் குணங்கள், நடத்தைகளினாலும் ஏற்படுகின்றன. பாரா 82. நாட்பட்ட நோய்களின் பூர்வீகத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பதுடன்கூட சோராவிற்கு ஏற்ற ஓமியோபதி மருந்தையும் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முற்படும்போது ஒவ்வொரு தனி மனிதனையும் ஆராய வேண்டும்.
மருத்துவ குறிப்புகள் : நாட்பட்ட நோய்கள் பற்றி ஆர்கனான் விளக்கம் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Organon explanation of chronic diseases - Medicine Tips in Tamil [ Medicine ]