உறுப்புகள் - நோய்கள் - மருந்துகள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Organs - Diseases - Medicines - Medicine Tips in Tamil

உறுப்புகள் - நோய்கள் - மருந்துகள் | Organs - Diseases - Medicines

குளிப்பதனாலும், இரைப்பை கோளாறினாலும் தலைவலி.

உறுப்புகள் – நோய்கள் - மருந்துகள் 

தலை வலி ( HEADACHE)


1. தலையின் உச்சிப்பாகம் பறப்பது போலவும், அங்கே நரம்பு வலியுடன் மண்டை ஓட்டின் அடிப்பாகத்திலிருந்து மேல்பாகத்திற்கு ஒரு தடித்த இரும்பைக் கொண்டு அதனுள்ளே செலுத்துவதுபோலவுமான வலியும், அதறுடன் கண்களில் கடுமையான வலியும் இருத்தல். 

- சிமிசிபியூகா 3-30.


2. குளிப்பதனாலும், இரைப்பை கோளாறினாலும் தலைவலி. 

- ஆன்டிமோனியம் குருடம் 6.30


3. மூளை, தண்டுவட நோயால் தூக்கத்தில் கிரீச் என்ற ஒலி யுடன் கத்துதலும், முக்கியமாக தோல் நோயை அமுக்கிய தால் ஏற்பட்ட நிலையில். 

- அபிஸ்மெல் 6.30


4. ஒற்றைத் தலைவலிக்காக துணியைக்கொண்டு வலியைப் போக்க இறுக்கிக் கட்டுதல். தலை மிக பெரிதாக உள்ளது என உணர்தல். 

- அர்ஜன்டம் நைட்ரிகம் 6.30


3. முன்தலையின் குறுக்கே மத்தமான வலியும், தலையின்மேல் கனமும், கண்களில் பாரமும், குமட்டலும் உள்ள நிலை. 

- ஆலோ 6-30


5. வலி தலையின் பின்புறம் காலையில் ஆரம்பித்து மேல்நோக்கி நகர்ந்து வந்து வலது கண்ணில் தங்குதல். கடுமையான வலியால் ஒலி, ஒளியை பொறுக்கமுடியாமலும், வாந்தி எடுத்தலும், தலையைத் தலையணையினுள்ளே புதைத்தோ அல்லது கட்டியான பொருள்மீது அமுக்கியோ குணம் பெறுதல், கன்னப் பொறியின் சிரை நரம்பு தடித்திருத்தல். 

- சாங்கினேரியா கனடென்சிஸ் Q6


7. தெரிக்கும் தலைவலி, சிவந்த முகம், தலையில் அதிக இரத்தத் தேக்கம். கழுத்து தமனிகள் தெரித்து ஓடுதல், கூர்மையான வலியால் கத்துதல். முடி வெட்டியபின் வலி.

- பெல்லடோனா 3-6


8. ஆழ்ந்த மந்தமான தெரிக்கும் தலைவலி. வலி கண்களின் உள்ளும் வெளியிலும், அசைந்தால் அதிகமாதல். நெற்றியில் பிளக்கும் வலியுடன் தலைவழியாக கழுத்து, தோள்கள் முதுகுக்குச் செல்லுதல், 

- பிரையோனியா 3.6.


9. மண்டை ஓட்டின் இணைப்பு அருகில் தலைவலி. 

- கல்காரியாபாஸ் 3.0.


10. தலையின் மேலே திறப்பதும், மூடுவதும் போன்று உணருதல், வயிறு உப்புசமுள்ளபோது தலைவலி. 

- கன்னபிஸ் இன்டிகா 3.6.


11. மூளையின் அடிப்பாகமான தலையின் பின்பக்கத்திலிருந்து புருவங்களுக்குப் பரவும், மந்தமான பாரமுள்ள தலைவலி, 

- கார்போ விஜிடபிள் 6.30 


12. தலையின் பின்பக்கம், பிடரி ஆகியவைகளில் வலியினால் தலையை பின்பக்கம் கொண்டுசெல்லல் பின்பக்கத் தலை நிறந்து மூடுவது போன்று உணருதல். 

- காக்குலஸ் 6-30.


13. இரத்தசோகைத் தலைவலி. மண்டை ஓடு வெடித்து விடுவது போலவும், மூளையில் அலைகள் தோன்றி ஓட்டில் மோதுவது போலவும், கடுமையான தெரிக்கும் தலைவலி. 

- சைனா 6.30


14. எண்ண உணர்வால் தலையில் இரத்தம் சேருதல். ஆணியைக் கொண்டு மண்டை ஓட்டின் இருபக்கங்களிலும் செலுத்துவதுபோலுள்ள தலைவலி. ஒற்றைத் தலைவலி. 

- கபியா 6-200


15. மூளையின் அடிப்பாகத்தில் தெரிக்கும் தலைவலி. தலையில் அதிக இரத்தம் சேர்வதால் நாடி துடிப்பது தெரியும். சிவந்த முகமும், சில்லென்ற கால்களும், நடுநிசியில் வலி அதிகமாதலும். தலை வெடித்துவிடும்போல் உணருதல்.

- பெர்ரம் மெட்டாலிகம் 3.0.


16. மந்தமான, கண் இமைகள் பாரமுள்ள வலி. பிடரியில் ஆரம்பித்து தலைமேலே சென்று கண்ணில் வலி தங்குதல். காலையில் அதிகமாகுதல். பொறியில் தோன்றி காதுக்கு செல்லல்.

- ஜெல்சிமியம் 6-30.


17. தெரிக்கும் தலைவலி. சூரியன் தோன்றும்போது அதிகமாகி மறையும்போது குறைதல். பின்பக்கம் தலையை வளைத் தால் வலி அதிகமாதல். ஒரே இடத்தில் நில்லாமல் நடந்து கொண்டிருந்தாலும், துணிகளை நீக்கினாலும் குறைதல். 

- குளோனைன் 6.30.


18. தலையின் வலது பக்கத்தில் ஆணியைக்கொண்டு செலுத்துவதுபோன்ற தலைவலி. 

- ஹிபார்சல் 6-30.


19. தலையின் மேலிருந்து ஆணியைக்கொண்டு செலுத்துவது போன்ற தலைவலி. வாந்திக்குப்பின் சிறுநீர் அதிகமாக கழித்த பின்பும் தலைவலி நீங்குதல். புகைபிடித்தாலோ, புகையிலையை முகர்ந்தாலோ வலி அதிகமாதல். தலை பாரமுள்ளபோது குனிந்தால் வலி குறையும்.

- இக்னேசியா 6.30


20. தசை எலும்புகள் சிராய்த்தோ, நசுக்குவதுபோலவோ உணருதல். வலி பற்களுக்கும் நாக்கின் அடிபாகத்திற்கும் பரவுதல். ஒரு கண்ணின்மேல் ஒருபக்கத் தலைவலியுடன் கொடூரமான குமட்டலும் உள்ள நிலை. 

- இபிகா 6-30


21. முக்கியமாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் தலைவலி. வலி ஆரம்பிக்கும்போது கண்பார்வை மங்கும். வலி உச்சநிலை அடையும்போது கசப்பான, புளிப்பான தலைவலி. வாந்தி ஏற்படல். ஒற்றைத் தலைவலி

- ஐரிஸ் வெர்சிகலர் 6-30 


22. குறிப்பிட்ட காலத்தில் வலதுகண் புருவத்தின்மீது அதிக அளவில் தலைவலி வருமுன், கண்பார்வையை இழப்பர். தலைவலி மிகுதியாகும்போது மீண்டும் பார்வையைப் பெறுவர். 

- காலிபைக்ரோம் 30-200


23. சூரிய வெப்பத்தால் இடதுபக்க கண்ணின்மேல் வலி. சலியோ, மாதவிடாயோ தோன்றினால் வலி குறைந்து விடும்.

- லாக்சிஸ் 30-200


24. மூளையே வெடித்து விடுவதுபோன்ற தெரிக்கும் நெற்றித் தலைவலி. தலை மிக பாரமாகவும் விளங்கும். மூக்கில் இரத்த ஒழுகலோ, மாதவிடாயோ ஏற்பட்டால் வலி குறைந்துவிடும்.

- மெல்லி லோடஸ் Q-6


25. சளி, காது, பல் வலியுடன் தலைவலி. தலையில் பட்டையால் கட்டி இருப்பது போன்ற உணர்வு. 

- மெர்கூரி 6.30 


26. வெயிலில் நடந்தால் தலைவலி. கோடைகால வலி நோயாளி சிறிது தூரம் நடந்தாலும் களைப்படைவார்.

- நேட்ரம் கார்ப் 6.30


27. மலச்சிக்கலுடன் காலையில் சுத்தியால் அடிப்பதுபோன்ற தலைவலி. சூரியன் தோன்றி மறையும்வரையும், மாதவிடாயின்போதும், முன்பும் பின்பும் படிக்கும்போதும், கண்களை அசைக்கும்போதும், முகத்தை சுளிக்கும்போதும், பள்ளி குழந்தைகளுக்கும் ஏற்படும் தலைவலி. 

- நேட்ரம் மூர் 6.30


28. தலையில் ஏதோ காரணத்தினால் அடிபட்டதன் பின் விளைவுகளால் ஏற்படும் தலைவலி, வலியுடன் உமிழ்நீர் கரத்தல், ஒலியால், குனித்தால், மாதவிடாய் காலத்தில் வெளிச்சத்தில், உண்பதால் வலி ஏற்படல். இருட்டறையில் இருந்தால் குறைதல். 

- நேட்ரம் சல்ப் 6-30


29. தலையின் பின்பக்கமும், நெற்றி, புருவங்களின்மீது ஏற்படும் வலி. மவச்சிக்கலுடன் மூலமும், காபி புகையிலை மற்றும் மதுவை அதிக அளவில் பயன்படுத்தியதாலும், பித்தத்தாலும், காலையில் எழுந்தவுடனும் ஏற்படும் வலி.

- நக்ஸ்வாமிகா 6-30


30. பக்கவாட்டில் பார்த்தால் தலைவலி குறையும்.

- ஒலியாண்டர் 3.30


31. இடதுபக்கத் தலைவலி. கண்களை வருத்தியதாலும், தலைச் சுற்றலுடன் தலையின் பின்பக்கவலி: காலையில் எழும்போது நெற்றியிலும், தலை பின்பக்கத்திலும் வலி, 

- ஓனாஸ்மோடியம் 30.200


32. தலை உச்சியின் குறுக்கேயும், ஒரு காதிலிருந்து இன்னொரு காதுக்கும் வலி பரவுதல். 

- பல்லாடியம் 6.30 


33. தலை உச்சியில் புண் போலவும், சீப்பைக் கொண்டு கூந்தலை வாரிவிட முடியாமையும், கயிறுகொண்டு கண்களை தலையின் பக்கத்திற்கு இழுப்பதுபோலவுமுள்ள தலைவலி. தலை விரித்தும், பெரிதாகவும்-இடதுபக்கம் மரத்து உள்ளதான உணர்வு. நாட்பட்ட தலைவலி. 

- பாரிஸ் குவாடிரிபோலியா 3-6


34. கண்ணுக்குச் செல்லும் நரம்புகளால் ஏற்படும் தலைவலி. மூளையில் மணி அடித்தாற்போல் ஓசை ஏற்பட்டதால் விழித்துக்கொள்ளுதல். கண்களுக்கு மேலும், பொறிகளிலும் எரிச்சலுடன் கூடிய வலி. தலை பாரம்.

- பெலாண்டிரியம் 3.6


35. தலைமீது அடிவிழுந்தாற்போல் உண்டான உணர்வால் இரவில் விழித்துக்கொள்ளல். நாட்பட்டத் தலைவலி, 

- செலினியம் 6-30


36. மந்தமான, பேதைமையுள்ள, திகைப்புள்ள, குழப்பமுள்ள ஒழுங்கீனமுள்ள உணர்வு தலையில் ஏற்படன் மூக்கின் அடிப்பாகத்திற்கு நெற்றியிலிருந்து வலி பரவுதல். ஓலி, அசைவு, கண்களைத் தேய்த்தல், இரவில் அதிகமாதல். 

- பிடிலியா டிரைபோலியேடா 6.30


37. நெற்றியில் ஒரு பலகையை கட்டிவைத்தாற்போலுள்ள தலைவலி.

- ரஸ்டாக்ஸ் 6-30


38. தேனீர் குடிப்பதால், சூரிய வெப்பத்தால், மணத்தால், இடது கண்ணின் மேலே ஏற்படும் தரம்புத் தலைவலி. 

- செலினியம் 6.30


39. காலையில் தலைவலி ஆரம்பித்து வளர்ந்து அதிகமா தூங்கினால் குறைந்துவிடுதல். நோயாளி அழுகையுடன் வருத்தமுடன் இருப்பார். மாதவிடாய்க் குறைவாக உள்ள போது, கடைக்கு சாமான் வாங்குதல், மூளைக்கு வேலை தருவதால் அதிகமாதல். 

- செபியா 30-200


40. வலி பிடரியில் ஆரம்பித்து தலைக்குச் சென்று நெற்றி கண் பகுதியில் தங்குதல். உபவாசத்தால் வலி. ஒலி, ஒளி, படித்தல், உழைத்தல், வலதுபுறம் அதிகமாதல். வெப்பு மான துணியால் தலையை மூடினால் வலி குறையும். 

- சிலிகா 6-30


41. வலி தலையின் பின்பக்கத்தில் .ஆரம்பித்து, தலைக்குமேவே வந்து இடது சுண்ணில் தங்குதல். காலமாறுதல், ஒலி, சூரியன் தோன்றும்போது ஆரம்பித்து நண்பகளில் அதிகமால் மாலையில் குறைதல். 

- ஸ்பைஜிலியா 6.30


42. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தலைவலி. தலையின் உச்சியில் அடிக்கடி ருடு ஏற்படுதல். தலையில் பட்டை கட்டியுள்ளதுபோன்ற உணர்வு.

- சல்பர் 6.30


43. பொறுக்கமுடியாத தலைவலியால் தலையைச் சுவரில் மோதிக்கொள்ளுதல். தலை வெடித்துவிடுவதுபோல் உள்ள ஆழ்ந்த அமுக்கும் வலி, பொறிகளின் குறுக்கே ஏற்படுதல்.

- சிபிலினம் 200


44. குறிப்பிட்ட காலத்தில் இடது கண்மீது தெரிக்கும் வலி. சூரிய வெப்பம், ஒலி, பயங்கரக் குமட்டல். கண்களை மூடினாலோ, அசைத்தாலோ தலைவலி, வலியுடன் கீ39 படுக்க இயலாமை. 

- தெரிடியான் 6.30


45. இடதுபக்க தலைவலி. ஆணியைவிட்டு குடைவதுபோல் வலி, நோயாளியைக் கீழே படுக்கவைக்கும். 

- தூஜா 6.30


46. பிடரியிலிருந்து வலி ஏற்படுவதால் தலையைத் தூக்கமுடிவ தில்லை. தமனிகள் தெரித்து செல்லுதல், தலையிலும், இரண்டு கண்களுக்கு இடையிலும் வலி. 

- விராட்ரம்விர்டி 3.6


47. விட்டுவிட்டு வரும் கடுமையான நரம்புத் தலைவலி, வலியால் தூக்கமின்மை.

- ஜிங்கம் வலேரியன் 1×-2x 


48. தெரிக்கும் தலைவலி, சாப்பிட்டால் குறையும். வயிறு காலியான பின் மீண்டும் வரும். உண்டபின் குறைதல்.

- லித்தியம் கார்ப் 3×-6x


49. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணாவிட்டால், தலைவலி வருதல்.

- லைக்கோபோடியம் 6.30


50. தலையின் பின்பக்கம் வலி தோன்றி தண்டுவடத்திற்குப் பரவுதல். படுத்தாலோ, மலம் கழித்தாலோ, வாயு பிரித்தாலோ தலைவலி குறைதல், 

- எதுசர சைனாபியம் 3.30


மருத்துவ குறிப்புகள் : உறுப்புகள் - நோய்கள் - மருந்துகள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Organs - Diseases - Medicines - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்