
விலங்குகளின் ஆயுளுக்கும் அவைகளின் மூச்சு செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பிராணாயாமம் விலங்குகளின் ஆயுளுக்கும் அவைகளின் மூச்சு செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனிதன் ஒவ்வொரு நிமிடமும் 18 முதல் 20 முறை மூச்சு இழுத்து விடுகின்றான். முயல் ஐம்பது முதல் அறுபது தடவை வரை மூச்சு விடுகிறதாம். அதனுடைய ஆயுள் மனிதனின் ஆயுளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாய் இருக்கிறது. குதிரை. ஆடு மற்றும் பிராணிகளின் ஆயுட்காலம் 15 முதல் 20 வருடங்களாகும். இவைகளின் மூச்சின் போக்கும் சராசரியாக முப்பது முதல் நாற்பது வரை உள்ளது. ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை தான் மூச்சு விடுகிறது. அதனுடைய ஆயுள் மற்ற பிராணிகளைப் பார்க்கும்போது சுமார் 300 ஆண்டுகளாக இருக்கிறது. ஆகையால். சுவாசிக்கும் வேகத்தைக் குறைத்தால். ஆயுட்காலம் அதிகரிக்கச் செய்ய முடியும். மூச்சுவிடுவது குறைகின்ற போது. மனிதனுடைய நடவடிக்கைகள் அச்சமின்றியும். சகஜமகாவும் அழகாகவும் காணப்படுகின்றன. பிராணாயாமம், மூச்சை இழுத்து விடுதலின் கட்டுப்பாட்டிற்கான முதல்படி பிராணவாயு அல்லது முச்சுக்காற்று நம்முள் உள்ள உயிரோட்டமுள்ள பிராணனின் வெளித்தோற்றம் தான். இந்த பிராணாயாமத்தால் மனிதன் உற்சாகமுள்ளவனாகவும். உணர்வுள்ளவனாகவும், நீண்டநாள் வாழ்பவனாகவும் ஆகின்றான். ஆசனங்கள் செய்பவர்கள் சுவாசப் பயிற்சி பற்றி அறிந்து கொள்வது அவசியம். எப்பொழுது மூச்சை வெளியிடுவது, உள்ளிருப்பது அல்லது நிறுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியம். இடபக்க நாசி வழியே வந்து போகும் காற்று இடகலை. வலது நாசி வழியே வந்து போகும் காற்று பிங்கலை எனப்படும். நாம் சுவாசிக்கும் போது மூச்சை உள்ளே இழுப்பதை பூரகம் என்றும். உள்ளிழுத்த மூச்சை வெளியே விடுவதை ரேசகம் என்றும், உள்ளிழுத்த மூச்சை உள்ளேயே நிறுத்துவதை கும்பகம் என்றும் அழைக்கின்றனர். இம்மூன்றையும். முறையாக. சரியான வழிகாட்டியின் உதவியுடன் கற்க வேண்டும். ஆரம்ப நிலை பயிற்சியின் போது கும்பகம் செய்யக்கூடாது. 1. பஸ்த்ரிகா (அ) பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் முதுகுத் தண்டு வளையாமல் உட்காரவும். (ஆ) வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும் (இ) உடனே வலது கை மோதிர விரலால் இடது நாசியை அமைத்துக் கொண்டு. வலது கை பெருவிரலை எடுத்து வலது நாசியின் வழியே மூச்சை வெளியே விடவும். (ஈ) பிறகு வலது நாசியின் வழியே மூச்சை உள்ள இழுக்கவும். மூச்சை உள்ளே நிறுத்தாமல் உடனே வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு வலது கை மோதிர விரலை எடுத்து இடது நாசியின் வழியே மூச்சை வெளியே விடவும். (உ) இப்பயிற்சியை பத்து முறை செய்யவும். பயிற்சியின் ஆரம்ப காலத்தில் மூச்சை உள்ளே எடுக்கும் நேரம். இரு நாசிகளிலும் வேறுபடலாம். பயிற்சி செய்யச்செய்ய சமமான கால அளவுக்கு செய்யலாம். பலன்கள்: சரீரத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகிறது. (அ) பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் முதுகு தண்டு வளையாமல் உட்காரவும். (ஆ) இரு நாசிகளினாலும் மூச்சை வயிற்று தசைகளை உள்ளே அழுத்தி வெளியேற்றவும் தொடர்ந்து நிறுத்தாமல் 60 லிருந்து 120 முறை செய்யவும். பலன்கள்: சுவாசம் சீரடைகிறது. நுரையிரல், இதயம், வயிறு பென்ற உறுப்புகள் தூய்மை அடைகின்றன. (அ) பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் முதுகு தண்டு வளையாமல் நேராக உட்காரவும். (ஆ) நாசிகளினாலும் மூச்சை உள்ளே இழுத்து 5 முதல் வினாடி நேரம் நிறுத்தி பிறகு இரண்டு நாசிகள் மூலம் மெதுவாக வெளியே விடவும். இவ்வாறு 10 முறை செய்யவும். (அ) பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் நேராக உட்காரவும். (ஆ) நாக்கை வெளியே நீட்டி குழல் போன்று செய்து கொண்டு. அதன் வழியே காற்றை வேகமாக உள்ளே இழுக்கவும். மூச்சை நிறுத்தாமல் இரு நாசியின் வழியே மெதுவாக வெளியே விடவேண்டும் அவ்வாறு 10 முறை செய்யவும். (அ) பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் நேராக உட்காரவும். (ஆ) நாக்கை மடித்து. நுனி நாக்கு மேலண்ணத்தில் ஒட்டியிருக்கும்படி வைத்து வேகமாக காற்றை உள்ளே இழுக்கவும். மூச்சை நிறுத்தாமல் இரு நாசிகளினாலும் மெதுவாக வெளியே விடவும். இவ்வாறு 10 முறை செய்யவும். பலன்கள்: உஜ்ஜாயி. சித்தளை, சீத்காரி மூன்று பயிற்சிகளும் சரீரத்தின் சூட்டை தனிக்கின்றன. எனவே மனம் அமைதியடைகிறது. பதட்டம் குறைகிறது. (அ) பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் நேராக உட்காரவும். இரண்டு நாசிகளின் வழியே மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். சில வினாடிகள் மூச்சை நிறுத்தவும்.பிறகும் என்ற ரீங்காரத்துடன் மூச்சை வெளியேற்றவும். மூச்சை நிறுத்தவும். மீண்டும் மெதுவாக மூச்சை நாசிகள் மற்றும் வாய்மூலம் உள்ளே இழுக்கவும். இதே பயிற்சியை பல முறை திரும்ப செய்யவும் பலன்கள்: மனம் அமைதியடைகிறது. மன அழுத்தம் குறைகிறது. பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் நேராக உட்காரவும். கண்களுக்கு நேராக ஒரு விளக்கையோ தெய்வத்தின் படத்தையோ அல்லது ஓம் என்ற பிரணவ எழுத்தையாவது வைத்து கொள்ளவும். பிறகு இமை முடாமல் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்கவும். கண்களில் எரிச்சல் ஏற்பட்டாலே. நீர் வழிற்காலோ பொருட்படுத்த தேவையில்லை. இரண்டு நிமிடத்திலிருந்து ஆரம்பித்து படிப்படியாக நேரத்தை கூட்டவும். பலன்கள்: கண்பார்வை அதிகரிக்கிறது. கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுகின்றன. நேதி: நாசித்துவாரங்களை சுத்தப்படுத்துகிறது. இது ஜல நேதி சூத்ரநேதி துக்த நேதி. க்ருத நேதி என்று நான்கு விதமாக செய்யப்படுகிறது. தௌதி: தொண்டையிலிருந்து இரைப்பை வரையிலானகுடல் பகுதி சுத்தமாகிறது. இது மூன்று வகையில் செய்யப்படுகிறது. ஜலதௌதி, வஸ்திர தௌதி, தண்ட தௌதி நெளலி: அடிவயிறு. குடல் பகுதிகளை சுத்தப்படுத்துகிறது. இது உட்டியானா, மத்யம நௌலி. தக்ஷிண வாம நௌலி, நௌலி சாலனா என்று நான்கு முறைகளில் செய்யப்படுகிறது. குறிப்பு: இந்த கிரியைகளை சரியான வழிகாட்டியிடமிருந்து கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். ஹடயோகத்தில் பந்தங்கள் முக்கியமான இடம் வகிக்கின்றன பந்தம் என்பது மூச்சை அடக்குவதாகும். மனித உடலில் மறைந்திருக்கும் சக்தியை வலிமையுள்ளதாக ஆக்க பந்தங்கள் உதவுகின்றன. இவற்றை வழிகாட்டி உதவியுடன் கற்றுக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும். 1. மூலபந்தம்:- பூரகம் செய்யும் போது செய்ய வேண்டும். பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் உட்கார்ந்து குதிங்காலை ஆசன வாயிற்கும். பாலுறுப்புக்கும் இடையே வைத்துக் கொண்டு ஆசனவாயை உள்ளே சுருக்கி நிறுத்தவும். இதன் மூலம் அபான (விந்து) சக்தி மேல் நோக்கி உந்தப்படுகிறது. 2. உட்டியான பந்தம்:- ரேசகம் செய்யும் போது செய்ய வேண்டும். மூச்சை வாய் வழியாக முழுவதுமாக வெளியேற்றவும். வயிற்று தசைகளை முடிந்த அளவு உள்ள அழுத்தி சிறிது நேரம் நிறுத்தவும். பிறகு மெதுவாக காற்றை உள்ளிழுக்கவும். 3. ஜாலந்திர பந்தம்:- மூச்சை நன்கு உள்ளிழுத்து நிறுத்தி. தாடையை மார்பின் மீது படும்படி அழுத்தவும். இப்போது மூச்சு தொண்டையில் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் பிராண சக்தி கீழ்நோக்சி உந்தப்படுகிறது. இந்த பந்தங்களை பயிற்சி செய்வதனால் மனம் ஒரு நிலைப்படுகிறது. பிராணசக்தி நன்கு அடக்கப்படுகின்றது. தியானத்தின் உயர்ந்த நிலையான சித்திகளைப் பெறலாம். யோகக் கலையின் தந்தை யோகக் கலை, உலகிற்கு பாரதம் அளித்துள்ள தனித்துவமான ஒரு கலை, உடல், மனம், ஆன்மா இம்மூன்றையும் உயிர்மூச்சான பிராணனில் நிலைநிறுத்தி கட்டுக்குள் வைப்பதை விவரிக்கிறது இக்கலை. கோனார்ட் மாவட்டத்தில் பிறந்த பதஞ்சலி முனிவரே இந்தக் கலையின் கண்டுபிடிப்பாளர், ஸ்தாபகர். யோகக்கலையினால் ஒருவர் முழு ஆரோக்கிய முடன் வாழவும், மன மகிழ்வுடன் இருக்கவும் முடிகிறது. உடலில் இயங்கும் பல்வேறு உறுப்புகள், குறிப்பாக. இரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம், நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம் போன்றவற்றை கட்டுக் கோப்பாக இயங்க வைக்க. 84 விதமான யோக விளக்கங்களை அளித்துள்ளார். கடவுளை அடைவதற்கான வழிமுறையாக சமாதி நிலையை விளக்கும் பதஞ்சலி முனிவர். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம். பிரத்யாகாரம். தாரணை, தியானம் மற்றும் சமாதி போன்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து உயர்வுபெறலாம் என்று கூறுகிறார். யோக அறிவியல் கலை. இவரது விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பாரதத்தின் பிரதான ஆறு தத்துவங்களில் ஒன்றான யோகக்கலையை நிறுவிய பதஞ்சலி முனிவர், என்றென்றும் நினைவில் கொள்ளத் தக்கவர், போற்றுதற்குரியர்.பயிற்சி முறைகள்:-
2. கபாலபாதி:-
3. உஜ்ஜாயி
4. சீத்தளை (சீதலி):-
5. சீத்காரி :-
6. ப்ரமரி:-
7. த்ராடகம்:-
ஹடயோகத்தில் கூறப்படும் மேலும் சில கிரியைகள்:-
பந்தங்கள்
பதஞ்சலி (காலம் கி.மு.200)
ஆரோக்கிய குறிப்புகள் : பிராணாயாமம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Pranayama - Health Tips in Tamil [ Health ]