ஹோமியோபதி மருந்துகளின் குணங்கள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Properties of Homeopathic medicines - Medicine Tips in Tamil

ஹோமியோபதி மருந்துகளின் குணங்கள் | Properties of Homeopathic medicines

ஹோமியோபதி மருந்துகள், திரவ ரூபமாகவும் (Tinctures) பெரிய உருண்டைகளாகவும் (Pilules) சிறிய உருண்டைகளாகவும் (Globules) மாவாகவும் (Triturtions) பில்லைகளாகவும் (Pills) தயார் செய்யப்படுகின்றன.

ஹோமியோபதி மருந்துகளின் குணங்கள்


ஹோமியோபதி மருந்துகள், திரவ ரூபமாகவும் (Tinctures) பெரிய உருண்டைகளாகவும் (Pilules) சிறிய உருண்டைகளாகவும் (Globules) மாவாகவும் (Triturtions) பில்லைகளாகவும் (Pills) தயார் செய்யப்படுகின்றன.

திரவரூபம்: தாவர வர்க்கங்களும் மற்றும் இதா வர்க்கங்களும், அல்கஹால் (Alcohol) என்னும் மது சாரத்தில் நன்றாய்க் கலக்கப்பட்டிருக்கின்றன. இவை உள்ளுக்குச் சாப்பிட்டவுடனேயே சரீரத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவதாக சொல்லுகின்றனர். ஆனால் உருண்டைகளாகவுள்ள மருந்துகளும் நன்றக உடனேயே வேலைசெய்கின்றனவென்பதை நாம் அனுபவத்தில் பார்க்கின்றோம். ஹோமியோபதி வைத்திய முறைப்படி மருந்து எவ்வளவுக்கெவ்வளவு சிறிய அணுப்பிரமாணத்தில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்றாய் வேலை செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.

உருண்டைகள்: இவை சிறியவையாகவும் பெரியவையாகவும் பல தினுசுகளில் கிடைக்கின்றன. இவ்வுருண்டைகள் சுத்தம் செய்யப்பட்ட கரும்பு சர்க்கரையினால் ஆக்கப்பட்டவையாதலால் திரவ ரூபமான மருந்துகளை இவற்றின் மேல் ஊற்றும்போது அம்மருந்துகளின் சத்தைக் கிரகித்துக்கொள்கின்றன. இவைகள் பல வருடங்கள் கெடாமலும் இருப்பதுடன் வியாதியஸ்தர்களுக்குக் கொடுப்பதற்கும் செளகரிய மானவை. திரவ ரூபமான ஒளஷதங்கள் காற்றில் ஆவியாக மாறிவிடும்.

மாவுகள்: சுத்தம் செய்யப்பட்ட தாவர கரையை மருந்துகளுடன் நன்றாய் அரைத்து இம்மாதிரியாக வைக்கப்பட்டிருக்கின்றன. மது சாரத்தில் கரையாத சில மருந்துச் சரக்குகளை இம்மாதிரியாகவே தயாரிக்கவேண்டியிருக்கிறது.

மாத்திரைகள்: இவைகளைப் பில்லையென்றும் சொல்வது உண்டு. இதை உருண்டைகள் போலவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இதன் அளவு சற்றுப் பெரியதாய் இருக்கும். சாதாரணமாக ஒவ்வொரு மாத்திரையும் சுமார் ஒரு குன்றுமணி எடையுள்ளதாய் இருக்கும்.

ஒளஷதம் கொடுக்கும் விதம்: ஹோமியோபதியின் சட்டத்திற்கு இணங்க சரியானபடி கொடுக்கப்பட்டால் நாம் எதிர்பார்க்கும் குணம் ஒரே ஒளஷதம் வேளை ஒளஷதத்தில் ஏற்படவேண்டும். ஒரு வியாதி யஸ்தருக்கு ஏற்பட்ட சரியான ஔஷதத்தை ஒரு வேளை கொடுத்த உடனேயே அவ்வியாதி குணமடைய ஆரம்பிக்கும். ஆனால் ஆரம்பத்தில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் ஒவ்வொரு வியாதியஸ்தருக்கும் அம்மாதிரியாகச் சரியான ஒளஷதத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பது எளிதல்ல. ஆகையால் ஒன்றிரண்டு வேளைகள் ஒரு ஒளஷதத்தைக் கொடுத்துப் பலன் ஏற்படாவிட்டால் வேறு மருந்துகளைக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படும். அனுபவம் முதிர முதிர எல்லாவியாதிகளுக்கும் முதலிலேயே சரியான மருந்துகள் கொடுக்கும் ஆற்றல் தானாகவே ஏற்பட்டுவிடும். வியாதியஸ்தரின் வியாதி, வயது, ஆணா, பெண்ணா, சரீர பலம் இவைகளை அனுசரித்து மருந்துகளின் வீரியத்தையும் அளவையும் நிர்ணயிக்க வேண்டும்.

சாதாரணமாகத் திரவ ரூபமான ஒளஷதங்களை வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு சொட்டுகளும் பெரிய உருண்டைகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று. சிறிய உருண்டைகளில் 6 அல்லது 8ம் கொடுக்கலாம். மாவாக இருக்கும் மருந்துகளை வேளையொன்றுக்கு ஒரு குன்றுமணி எடை (one grain) கொடுக்கலாம். மேற்சொன்ன அளவு வயது வந்தவர்களுக்கேயாகும். குழந்தைகளுக்கு இதில் பாதியளவும், சிசுக்களுக்கு இதில் மூன்றில் ஒரு பங்கும் போதுமானது. திரவரூபமான ஒளஷதங்களை நல்ல சுத்தமான தண்ணீரில் கலக்கி களாகவும் பிரிக்கலாம். ஆனால் அநேக பாகங் தண்ணீர் மிகச் சுத்தமாக இருக்கவேண்டும். அல்லது ஒளஷதங்களை சுகர் ஆப் மில்க் (Sugar of Milk) என்னும் பால் சர்க்கரை மாவில் கலந்து அப்படிக் கலந்த மாவைப் பல பாகங்களாகவும் பிரித்துக் கொள்ளலாம்.

உட்கொள்ளும் விதம்: உருண்டைகளாகவும் மாவாகவும் உள்ள ஔஷதங்களை அப்படியே நாக்கில் போட்டு கரையும்படி செய்து மெதுவாக உட்கொள்ள வேண்டும். திரவ ரூபமான ஔஷதங்களை மேலே கூறியபடி தண்ணீரிலோ, பால் சர்க்கரை மாவிலோ கலந்து சாப்பிடலாம். மருந்துகள் உட்கொள்ளுமுன் நல்ல சுத்த ஜலத்தால் வாய்க்கொப்பளிப்பது நலம்.

உட்கொள்ளும் நேரம்: அதிகாலையில் படுக்கையை வீட்டு எழுந்த உடனேயும் இரவு படுக்கைக்குப் போகும் போதும் ஒளஷதம் புசிப்பது உத்தமம் அடிக்கடி உட்கொள்ள வேண்டியிருந்தால் ஆகாரம் உட்கொள்வதற்குக் குறைந்தது அரைமணி நேரம் முன்பாகவோ அல்லது பிறகோ உட்கொள்ளலாம். வியாதியஸ்தர் தூங்கிக்கொண்டிருக்கும்போ ஒளஷதம் புசிப்பதற்காக அவரை எழுப்பக்கூடாது.

வியாதிகளுக்குத் தகுந்தபடி ஒளஷதம் புசிக்கும் வேளைகளை நிர்ணயிக்கவேண்டும். அதிகக் கடுமையாக இல்லாத வியாதிகளில் தினமொன்றுக்கு ஒன்றிரண்டு வேளைகள் போதுமாவை. சுரம், வயிற்றுவலி முதலிய கடுமையான வியாதிகளில் ஒன்றிரண்டு மணி களுக்கு ஒரு முறையாகக் கொடுக்கலாம். காலரா, சன்னி, வலிப்பு முதலிய மிக அவசரமான உபாதிகளில் 10, 15 நிமிஷங்களுக்கு ஒரு முறையாகவும் கொடுக்கலாம். வியாதி சற்று தணிந்தால் வேளைகளையும் குறைத்துக்கொள்ளலாம்.

மருந்துகளின் வீரியம்: ஒவ்வொரு ஹோமியோபதி மருந்தும் பல வீரியங்களில் கிடைக்கும். வீரியம் எண் பதை மருந்தின் சூட்சும சக்தியென்றும் சொல்லலாம். ஔஷதங்களின் அணுக்கள் எவ்வளவு பரம அணுக் களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ அவ்வளவுக்கு அதிக வீரியமாக வேலைசெய்யும். உதாரணமாக பெல்லடொன்னா (Belladonna) என்னும் ஒரு மருந்தை எடுத்துக் கொள்வோம். இது தாவர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு செடி. இதன் சத்தை மதுசாரத்தில் கலந்து ஒரு திராவகம் செய்யப்படுகிறது. இதற்குத் தாய் திராவகம் என்று பெயர். இதன் ஹோமியோபதி வீரியம் '0' தாய் திராவகத்திற்கு ஆங்கிலத்தில் Mother Tincture என்பர்.

இந்தத் தாய் திராவகத்தில் ஒரு பாகத்துடன் 9 பாகங்கள் மதுசாரத்தைச் சேர்த்தால் 1x என்னும் வீரியமாகும். 1x வீரியத்தின் ஒரு பாகத்துடன் 9 பாகம் மதுசாரத்தைச் சேர்த்து மறுபடியும் வீரியப் படுத்தினால் 2x என்னும் வீரியம் ஆகும். இதில் ஒரு பாகத்துடன் மறுபடி 9 பாகங்கள் மதுசாரத்தைச் சேர்த்து வீரியப்படுத்தினால் 3x ஆகும். இம்மாதிரியே முந்திய வீரியத்தில் 9 பாகங்கள் மதுசாரம் சேர்த்து வீரியப்படுத்துவதற்குத் தசாம்ச வீரியம் (Decimal potency) என்று பெயர். மருந்துகளின் பெயர்களுக்குப் பின்னால் வீரியத்தின் எண்ணிக்கையையும் எழுதி என்ற எழுத்தும் எழுதப்படும். உதாரணம் பெல்ல டொன்னா 6x.

மற்றொரு வீரியப்படுத்தும் முறையும் இருக்கிறது. இதற்குச் சதாம்ச வீரியம் (Centesimal Potency) என்று பெயர். இதற்கு முந்திய வீரியத்தின் ஒரு பாகத்துடன் 99 பாகங்கள் மதுசாரம் சேர்த்து வீரியப்படுத்தப்படும். இம்மாதிரியாக வீரியப்படுத்தப்பட்ட ஒளஷ தங்களின் பெயர்களுக்குப் பின்னால் வீரிய எண்ணை மாத்திரம் எழுவது வழக்கம். இவ்விதம் வீரியப்படுத்தப்படுவது, இருநூறு, ஆயிரம், பதினாரயிம். குயிர இதற்கு மேலும் ஒவ்வொரு ஒளஷதத்தில் உண்டு.

சாதாரணமாக 6x, 6 முதலிய வீரியமுள்ள ஒளஷதங்களின் வேகம் சரீரத்தில் சில மணி நேரங்களுக்குத் தான் இருக்கும். 200 வீரியமுள்ள ஒளஷதங்களின் அவைகளின் இயற்கைக்குத் சுமார் ஒரு வாரம் இருக்கும். ஆயிரம் அல்லது வேகம் தகுந்தபடி அதற்கு மேற்பட்டதுமான வீரியங்கள் ஒரு வேளை உட்கொண்டால் சுமார் ஒரு மாதகாலம் வரையில் சரீரத்தில் வேலை செய்யும் ஒருவேளை மருந்து சில சமயங்களில் சுமார் 8 மாதகாலம் வரை வேலை செய்தலுமுண்டு. 

ஹோமியோபதி வைத்திய முறையில் பல ஔஷதங்களை ஒன்றாகக் கலந்து கொடுப்பது வழக்கமில்லை. ஒரு வியாதிக்கு ஒரே ஔஷதம் தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்படவேண்டும். அப்படி ஒரு வியாதியின் எல்லாக் குறிகளுக்கும் ஒரு ஒளஷதமே போதாமல் இரண்டு அல்லது மூன்று ஒளஷதங்கள் கொடுக்கப்பட வேண்டியிருந்தால் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை வீதம் மாற்றி மாற்றி ஒன்றன்பின் ஒன்றாய் கொடுக்கலாம்.

பத்தியம்: ஹோமியோபதியில் ஒளஷதம் புசிப்பதற்கு யாதெரு பத்தியமும் கிடையாது. ஆனால் நாம் ஆகாரமென்று நினைத்து உட்கொள்ளும் சில வஸ்துக்கள் ஹோமியோபதி ஔஷதங்களுக்கு முறிவாக இருக்கின்றன. இவைகளை அகற்றுவது அவசியமாகும். காபி, தேயிலை, கள், சாராயம், புகையிலை, அதிக வாசனை, காரம் உள்ள பதார்த்தங்கள், கசப்பான காய்கறிகள் ஆகியவைகளும் மற்ற மருந்துச் சரக்குகளும் இவ்வௌஷதங்களுக்கு முறிவுகளாகும்.


ஹோமியோபதி ஒளஷதங்களைத் தயார் செய்தல்:

ஹோமியோபதி படிப்பதில் ஒளஷதங்களைத் தயாரிக்கத் தெரிந்துகொள்வது இப்பாடங்கள் வரை அவசியமில்லை. ஏனென்றால் சாஸ்திரீயமாய் ஒளஷதங்கள் தயாரிப்பதற்கு பலவித இயந்திரங்களும், மற்ற சாதனங்களும் தேவையாகும். தவிர சில ஒளஷதம்களைத் தயாரிக்க சில வருடங்களும் பிடிக்கும். ஆகவே நாம் சுயமாக ஒளஷதங்களைத் தயாரிப்பதற்கு அதிக சிரமமும், ஏராளமான பொருள் செலவும் ஆகும். உலக முழுவதற்கும் வேண்டிய ஹோமியோபதி ஒளஷதங்களை அமெரிக்காவில் இருக்கும் பேரிக் அண்ட் டாபல் என்னும் கம்பெனியார் தயார் செய்து வருகிறார்கள். இந்தியாவில் எப்பொழுதும் வேண்டிய அளவுக்கு ஔஷதங்கள் கிடைக்கும். நமது மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய ஹோமியோபதி பயோகெமிஸ்டிரி ஔஷதங்களை இந்தியன் ஹோமியோபதி இன்ஸ்டிடியூட், வியாபார இலாக்காவிலிருந்து தருவித்துக் கொள்ளலாம். இனி முக்கியமான ஹோமி யோபதி ஒளஷதங்களின் குணங்களை ஆராய்வோம்.


குறிப்பு : ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கும், தமிழில் படித்தவர்களுக்கும் ஒளஷதங்களின் பெயர்களை உச்சரிப்பதில் யாதொரு வித்தியாசமும் இல்லாதிருக்க, ஒளஷதங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் உச்சரிக்கும் மாதிரியாகவே தமிழ்ப் படுத்தப்பட்டிருக்கின்றன. 


ஆஸிட் மியூரியாடிகம் (Acid Muriaticum)

டைபாய்டு, இன்புளுயன்சா போன்ற சரீரத்தை அதிகமாக பலவீனப்படுத்தும் சுரங்களில் அதிகப் பலக் குறைவும் இரணங்களும் ஏற்பட்டு இருக்கும்போது உபயோகப்படும். டைபாய்டு சுரத்தில் சுமார் 3-வது வாரத்தில் அதிக மனக் குழப்பம் இல்லாவிட்டாலும் சரீரத்தில் அதிக பலவீனம் காணும். ஏற்கனவே அமைதியற்று இருந்தாலும் இப்போது படுக்கையில் திரும்பக்கூட முடியாத நிலைமையில் வியாதியஸ்தர் இருப்பார். சுயநினைவின்றியே மலமும் மூத்திரமும் வெளியாகுதல், மலத்துடன் இரத்தம் கலந்திருத்தல்; வாயினுள் நீலநிறமான புண்கள், வாய்திறந்திருத்தல் நாக்கு தோல்போல தடித்தும் ஈரப்பசை இல்லாமலும் சுருங்கியும் இருத்தல், அதனால் பேச முடியாமை. ஈறுகள் வீங்கி தடித்து இரத்தம் கசிதல் மேலே கூறிய குறிகள் டைபாய்டு சுரத்திலோ அல்லது வேறு எந்த வியாதியிலோ இருக்குமாயின் அது மிகவும் அபாயகரமானதும் மரணக் குறியுமாகும். இந்நிலைமையில் ஆஸிட் மியூரியாடிகம் கொடுக்கப்பட்டால் வியாதியஸ்தர் பிழைக்கவும் வழி உண்டு.

சாதாரண நீடித்த வியாதிகளில் மூலத்திற்கு இது மிகவும் உபயோகமுள்ளது. மூலம் வீங்கியும் நீல நிறமாயும் வெளித்தள்ளியும் இருக்கும்.

அபாயகரமான வியாதிகளில் 3 அல்லது 6 வீரியத்திலும் நீடித்த வியாதிகளில் 12 அல்லது 30 வீரியத்திலும் கொடுக்கலாம்.


ஆஸிட் நைட்ரிக் (Acid Nitric)

உதடுகள், அபானம், முதலிய சரீரத்தின் பாகங்களும் மியூகஸ் மெம்ரேனும் சந்திக்கும் இடம் களில் இரணம் ஏற்படுதல். அதாவது மேல் உதடும் கீழ் உதடும் சந்திக்கும் இடத்தில் இரணம். இவ்வி, பாதாக ணங்கள் ஸிபிலிஸ் என்னும் கிரந்தி ரோகத்திலும் அதிக உஷ்ணத்தினாலும் அல்லது சம்பந்தமான ஒளஷதங்களை உட்கொண்ட தினாலும் ஏற்படலாம். பாதரச சம்பந்தமுள்ள ஒளஷதங்க உட்கொண்டால் வாய். ஈறு முதலியவைகள் இரணமாகி விடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்கு இவ்வெளஷதம் நல்ல முறிவு. சரீரத்தில் இருக்கும் பாதரச விஷத்தை நீக்கி அதனால் ஏற்பட்ட இரணங்களை ஆற்றிவிடும். 

எந்த வியாதியாயினும் மலம் கழித்தவுடன் அபானத்தில் அதிக வலியும் எரிச்சலும் இருந்தால் இது உபயோகமாகும். அதாவது மலம் வெளிவந்து விட்டால் அபானத்தில் தாங்கமுடியாத எரிச்சல், வலி. இது வயிற்றுக்கடுப்பிலும் மூல உபாதிகளிலும் சாதாரணமாகத் தென்படும்.

இவ்வௌஷதம் கொடுக்கப்பட வேண்டிய இன்னுமொரு முக்கியமான குறியை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது மூத்திரம் வெளியாகிச் சிறிது நேரங்கழித்து அதில் எறுப்பு நாற்றம் ஏற்படுவது சகஜம். ஆனால் ஒரு வியாதி யிலோ அல்லது நபருக்கோ மூத்திரம் வெளியாகும் போதே குதிரை மூத்திரம் போன்ற அவ்வளவு எறுப்பு நாற்றம் இருந்தால் இவ்வௌஷதம் அதைக் குணப்படுத்தவல்லதாகும்.

அவ்வப்போது தோன்றி மறையும் வியாதிகளில் 6 அல்லது 12 வீரியத்திலும் நீடித்த வியாதிகளில் 30 அல்லது 200 வீரியங்களிலும் கொடுக்கலாம்.


ஆஸிட் பாஸ்பாரிகம் (Acid Phosphoricum)

இவ்வௌஷதம் அவ்வப்போது தோன்றி மறையும் கடுமையான வியாதிகளிலும் உபயோகப்படும். நீடித்த சுரங்களில் முதலில் சரீர பலவீனம் தோன்றி அதன் பிறகு மன பலவீனம் வருமாயின் ஆஸிட் மூரியாடிகம் உபயோகமாகும். மன பலவீனம் என்பது பிரக்கினையின்மை, மயக்கம், பிதற்றல் முதலியவைகளைக் குறிக்கும். இவ்வியாதியஸ்தர் பக்கத்தில் நடப்பது யாதொன்றும் தெரியாமல் மயக்கமாய்ப் படுத்திருப்பார். ஆனால் எழுப்பினால் பிரக்கினையுடன் பதில் சொல்லுவார். இவ்விதமான மனோநிலைமை சுரம் முதலிய வியாதிகளுமின்றி நீடித்தும் சிலருக்கு இருக்கும். அதாவது சிலர் சாதாரணமாகவே மனோ பலவீனத்தினால் பிறருடன் பேசாமல் ஏதாவது கேட்டால் என்னுடன் பேசாதீர் என்று சொல்லிக் கொண்டும், பிரமை பிடித்தவர்போல் இருப்பார். அவர்களுக்கும் இது நல்லதாகும். மனோ பலவீனம் தோன்றிய பிறகு சரீர பலவீனம் தோன்றுவதற்கு இவ் வௌஷதம் உபயோகம். வியாபாரம் முதலிய தொழில் தொல்லைகளினாலும் நெருங்கிய பந்துக்களின் மரணத்தினாலும் இன்னும் இம்மாதிரியான பல காரணங்களினாலும் ஏற்படும் மனக்குழப்பத்திற்கு இது ஏற்றது.

ஆஸிட் பாஸ்பாரிகத்துக்கு ஒரு முக்கிய குறி,பா வணாம்பு போன்ற வெண்மையான மூத்திரம். நீர் வெளியாகும் போதே வெண்மையாய், அல்லது சுண்ணாம்பு கரைக்கப்பட்டது போல் இருக்கும். 

இவ்வௌஷதத்தில் மற்றொரு விசேஷம் என்ன வென்றால் வியாதியஸ்தருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுமானால் மற்ற உபாதிகள் சௌகரியமாகும். அதிக மான வயிற்றுப் போக்கு இருந்தாலும் அதற்கு வேண்டிய அளவு பலவீனம் இருக்காது. சிசுக்களுக்கு இம்மாதிரி ஏற்படுமானால் அவ்வளவு மலமும் சிசுவின் வயிற்றில் எப்படி இருந்ததென்று பிரமிக்க நேரும். இவ்வளவுக்கும் சிசு சிரித்துக்கொண்டு ஒருவித வியாதியும் இல்லாததுபோல் இருக்கும். இவ்விதமான நோய்க்கு ஆஸிட் பாஸ்பாரிகம் மிகவும் நல்லது.

மர்ம ஸ்தானங்களில் பலவீனம். இந்திரிய ஸ்கலிதம். ஸ்திரிகளுக்கு வெள்ளைப்பாடு எனப்படும் லூகோரியா (Leucorrhoea). முக்கியமாய் மாதவிடாய்க்குப் பிறகு இத்துடன் நமைச்சல், பலவீனம், படிக்கும் பெண்களின் பலவீனம், தலைவலி, சதையே இல்லாமல் உயரமாய் வளருதல்.

வியாதியஸ்தரின் எல்லாக்குறிகளும் உபத்திரவங்களும் அதிக சிற்றின்ப போகத்தினாலும் குளிரினாலும் மன உழைப்பினாலும் அதிகப்படும். இந்நிலைமை கவனிக்கப்படாவிட்டால் சரீரம் நாளடைவில் இளைத்து பலவீனமும் அதிகரித்து க்ஷயம் என்னும் வியாதியும் தோன்றக்கூடும். (Tuberculosis) எல்லா வீரியங்களிலும் உபயோகமாகும்

மருத்துவ குறிப்புகள் : ஹோமியோபதி மருந்துகளின் குணங்கள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Properties of Homeopathic medicines - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்