
நமது உடலுக்கு தேவைப்படும் முக்கியமான திரவங்களைச் சுரப்பதற்கென நமது உடலுக்குள் சுரப்பிகள் என்ற உறுப்புகள் அமைந்துள்ளன.
இருதயம், கல்லீரல், சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள் நமது உடலுக்கு தேவைப்படும் முக்கியமான திரவங்களைச் சுரப்பதற்கென
நமது உடலுக்குள் சுரப்பிகள் என்ற உறுப்புகள் அமைந்துள்ளன. பலவிதமாக அமைந்திருக்கும்
அந்தச் சுரப்பிகள் இரண்டு வகையாக அமைந்திருக்கின்றது. ஒரு வகைச் சுரப்பிகளுக்கு அவை சுரக்கும் திரவம் இரத்தத்தில்
சென்று கலப்பதற்கு வசதியாக நாளங்கள் என்ற சிறு குழாய்கள் அமைந்திருக்கும். இவற்றை நாளமுள்ள சுரப்பிகள் என்று கூறுவார்கள். வேறு வகை சுரப்பிகளுக்கு
நாளங்கள் இருப்ப தில்லை. அவை சுரக்கும் திரவம் நேரடியாக இரத்தத்தில் கலந்து விடும்.
இவற்றை நாளமில்லாச் சுரப்பிகள் எனக் கூறுவர். இந்தச் சுரப்பிகள் பிணிவாய்ப்பட்டு செயல் திறன் இழக்கும்போது
பலவிதமான நரம்பியல் பிணிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே இந்தச் சுரப்பிகள் குறித்தும்
ஓரளவுக்குத் தெரிந்துக் கொள்வது நல்லது. பிட்யூட்டரி
சுரப்பி என்று ஒன்று உண்டு. இது தலைக் கபாலத்தின் உட்புறமாக அமைந்துள்ளது. மனிதனின்
உணர்ச்சிபூர்வமான பல பணிகளுக்கு இந்தச் சுரப்பி ஆதாரமாக இருப்பதால் நரம்பு மண்டல இயக்கத்துக்கும்
இதற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஆண்- பெண்களின் இன்பியல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களது
பிறப்பு உறுப்புக்களை இவை செயற்பட உதவுகின்றன. பெண்களின் மார்பகத்தில் பால் சுரப்பதற்கு தூண்டுகோலாக இருப்பது இந்தச் சுரப்பிதான். பிரசவ நேரத்தில் பெண்களின்
கருப்பையை இயங்கச் செய்து குழந்தையை வெளிக் கொண்டு வருவதற்கு இந்தச் சுரப்பியின் செயற்பாடுதான்
காரணமாக அமைகிறது. பொதுவாக உடல் வளர்ச்சி உடலின் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு இந்தச்
சுரப்பியில் சுரக்கும் திரவம் அடிப்படை வகிக்கின்றது. இந்தச் சுரப்பியின் செயற்பாட்டில் கோளாறு ஏற்படும்போது ஒரு ராட்சசன்
போல மனிதன் பூதாகரமான அல்லது சித்திர குள்ளன் போல மனித உடல் அளவுக்கு அதிகமாக குட்டையாகி
விடக்கூடும். இந்தச் சுரப்பி பாதிக்கப்படும் போது ஏற்படும் முதல் குறைபாடு நரம்பு மண்டல இயக்கம் பாதிக்கப்படுவது தான். நரம்பு மண்டலக் குறைபாடு என்றால் மிகச் சாதாரணமான நரம்புத் தளர்ச்சிக்
குறைபாடுதான் ஏற்படும் என்று எண்ணிவிடக் கூடாது. உடல் உறுப்புககளின் இயக்கமே கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கால் கைகள் செயற்பட முடியாதவாறு தொய்ந்து விடும். சில சமயம் வாய் பேச முடியாமலும் போய் விடும். ஆகவே பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்த உடனே
அந்தக் குறைபாட்டை அகற்றிக் கொள்வதற்காகத் தகுந்த மருத்துவ சிகிச்சையினை மேற் கொள்ள
வேண்டும். கழுத்தின் முன்புறம் ஒரு சுரப்பி அமைந்துள்ளது. இதற்கு தைராய்டு
சுரப்பி என்று பெயர். இது சக்திமிக்க ஹார்மோன் ஒன்றைச் சுரக்கிறது. இரத்தத்தில் உள்ள அயோடின் உப்பு இந்த ஹார்மோன் உற்பத்திக்கு
ஆதாரமாக உள்ளது. நமது உடலின் உறுப்புக்களை நுண்மையாக இயக்குவதற்கான ஆற்றலை இந்த ஹார்மோன்
அளிக்கிறது. உணவின் மூலம் நாம் போதிய அளவுக்கு அயோடின் சத்தினைப் பெற முடியாத
போது தைராய்டு சுரப்பி பலவீனமடைந்து பலவிதமான பிணிகள் தோன்றுவதற்கு காரணமாகி விடுகிறது. கழுத்தின் முன்புறம் தைராய்டு சுரப்பியை ஒட்டி அமையும் ஒருவித
கட்டி இந்த சுரப்பி. பாதிப்பின் தீவிரமான நிலையாகும். சில சமயம் இந்தக் கட்டி அதிதீவிரமடையாமல் கரைந்து விடக்கூடும்.
அவ்வாறு கரையாமல் முற்றிவிட்டால் ஏற்படும் பிணியை ஹைப்பர் தைராயிடிசம் (Hyper thyroidism) என்று குறிப்பிடுவார்கள். இந்தப் பிணி ஏற்பட்டால் கை கால்களில் நடுக்கம் இருக்கும். உடலில்
தொடர்ந்து ஒரு வித பதற்ற நிலை நிலவும். அடிக்கடி உடலில் வியர்வை தோன்றும். மனம் அமைதியற்று
விடும். இந்த நோய் சரியானபடி கவனிக்கப்படா விட்டால் கடுமையான நரம்பியல்
பிணிகள் ஏற்பட்டு அதன் விளைவாக மோசமான உடற் கோளாறுகளை எதிர்பார்க்க வேண்டி வரும். அட்ரினல் சுரப்பி என்ற பெயர் கொண்ட ஒன்று சிறு நீரகங்களுக்குச்
சற்று மேற்புறமாக அமைந்துள்ளது. இந்தச் சுரப்பியின் உட்பகுதி 'மெடுல்லா என
அழைக்கப்பெறும். • அட்ரினல் என்ற திரவம் இந்த
உட்பகுதியில் தான் சுரக்கிறது. • இந்தத் திரவம் மனித உடலின்
ஆரோக்கியத்தை முன்னிட்டு பல முக்கியமான பணிகளைச் செய்ய உதவுகிறது. • உணவின் மூலம்தான் உடலுக்குத்
தேவையான சர்க்கரை சத்து கிடைக்கிறது. இந்தச் சர்க்கரைச்சத்து சீராக உடலுக்குப் பயன்படுமாறு இந்தத் திரவம் செய்கிறது. • உடலில் இரத்த
அழுத்தம் ஒரே சீராக இருக்குமாறு கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் இது வகிக்கிறது. • இதயத்துடிப்பு ஒழுங்காக
இருக்குமாறும் இந்தத் திரவம் கவனித்துக் கொள்கிறது. • இருதயப் பகுதி பாதிப்புக்கு
இலக்கானால் இரத்த அழுத்தம் அதிகமாகும். இருதய துடிப்பு குழப்பமடையும். உணவின் மூலம்
பெறப்படும் சர்க்கரைச் சத்து உடலுக்குள் சீராக வினியோகிக் கப்படாததால் நீரிழிவு போன்ற
பிணிகள் தோன்ற வாய்ப்பு உண்டு. • அட்ரினல் சுரப்பியின் வெளிப்பகுதி
உடல் நலன் தொடர்புடைய முக்கிய பணிகளுக்கு ஆதாரமாக உள்ளது. • புரதம் - சர்க்கரை ஆகிய
சத்துக்களை உடல் கிரகித்து கொள்ள இது உதவுகிறது. • உடலின் நீர் எல்லா இடங்களிலும்
சமமாகப் பரவ இது உதவுகின்றது. • உடலின் உப்புச் சத்தையும்
ஒரே நிலையில் வைத்திருக்க இது துணை செய்கின்றது. கழுத்தில்
தைராய்டு சுரப்பியின் அருகில் டாரா தைராய்டு என்ற ஒரு சுரப்பி அமைந்துள்ளது. • இந்தச் சுரப்பி சுரக்கும்
திரவம் உடலில் கால்சியம் சத்து சீராகப் பரவிப் பயன்பட உதவுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சுரப்பிகள் கடுமையாகப் பிணிவாய்ப்படும்
போது முக்கியமாக நரம்பு மண்டலம் அழற்சிக்குள்ளாகி பலவிதமான நரம்புக் கோளாறுகள் ஏற்பட
வழி வகுப்பதால் சுரப்பிகள் எந்த நிலையிலும் பாதிப்படையாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். சுரப்பிகள் மிகவும் நுண்ணிய உறுப்புக்களான இவை பாதிக்கப்படும்போது
நாமாக தால் சிகிச்சை செய்துக் கொள்ள முடியாது. தகுந்த மருத்துவரை அணுகி அவர் உதவியுடன்
சிகிச்சை பெற வேண்டும். உடலில் இரத்தம் வளமாக உள்ள நிலையில்தான் உடல் முழு ஆரோக்கியமாக
இருக்க முடியும். இரத்தத்தின் வளம் - அல்லது செழுமை குறைவுபடும் போது ஏற்படும்
நிலையினை இரத்த சோகை எனக் கூறுவர். இரத்த சோகை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தத்தில் இரும்புச்
சத்து வெகுவாகக் குறைந்து விடுவதுதான். இரத்தத்தில் இரும்புச் சத்து குறைவுபடுவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. உணவின் மூலம்
தேவையான அளவுக்கு நல்ல சத்தினை உடல் பெற முடியாமல் போவதும் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால்
இரத்தம் உடலிலிருந்து வெளியேறி விடுவதும் இதற்கான ஒரு காரணமாகும். பெண்களுக்கு பிரசவ காலத்தில் அதிக அளவு இரத்தம் வெளியேறி விடுவதால்
இரத்தத்தின் செழுமை குறைந்து விடுவதுண்டு. இரத்தம் செழுமையாக
இருக்கும் போதுதான் உடல் உறுப்புகள் தங்களுக்குத் தேவைப்படும் சத்துக்களைத் தங்கு தடையின்றி
பெறமுடியும். இரத்தம் வளம் குன்றி சோகை நிலையடையும் போது அந்தப் பணி முடங்கி
விடுகின்றது. இதன் காரணமாக உடல் உறுப்புகளில் பெரும் பகுதி
செயலாற்றும் சக்தியிழந்து பலவீனமடைந்து விடுகின்றது. இரத்த சோகை காரணமாக நரம்புமண்டல அழற்சிக்குள்ளாகிறது. இதனால்
நரம்பு மும் தொடர்புடைய பிணிகள் தோன்றுகின்றன. ஆகவே இரத்த சோகை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணத்தை ஓரளவு விளங்கிக் கொண்டால் அந்தப் பிணி தோன்றாதவாறு
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். நமது இரத்தம் சிவப்பு நிறமாக இருக்கிறது என்பது அனைவருக்கும்
தெரியும். ஆனால் அந்த சிவப்பு நிறத்திற்குக் காரணம் என்னவென்று பலருக்குத் தெரியாமல்
இருக்கலாம். இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பது
இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களாகும். இரத்தச் சிவப்பு அணுக்களுக்கு நிறம் கொடுப்பது
ஹேமக்குளோபின் என்ற ஒரு பொருளாகும். ஒரு மனிதனுடைய உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் அவனுடைய
இரத்தத்தில் ஐம்பது லட்சம் சிவப்பு அணுக்கள் வரை இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. சிவப்பு அணுக்களுக்கு நிறம் கொடுக்கும் ஹேமக்குளோபினில் முக்கிய
சத்துப் பொருளாக உள்ளது இரும்புச் சத்துதான். இரத்தத்தில் இரும்புச் சத்திற்குப் பற்றாக்குறை
ஏற்படும்போது இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் ஆற்றல் குறைந்து விடும். உணவு மூலந்தான் இரும்புச் சத்து உருவாகிறது என்றாலும் அந்தச்
சத்து நேரடியாக இரத்தத்தில் கலப்பது இல்லை. இரத்தத்தில்
இரும்புச் சத்து கலக்கும் விதத்தில் அதைப் பக்குவப்படுத்த புரத சத்தும் வைட்ட மின்
'ஸி' சத்தும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இரத்தத்தில் இவ்வாறு இரும்புச் சத்து செரிமானமாகிக் கலக்கும்
போதுதான் செழுமை பெற்று உடலின் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக அமைகின்றது. முன்னரே நாம் சொன்ன மாதிரி ஏதாவது ஒரு காரணத்தால் இரத்தம் உடலிலிருந்து
அளவுக்கு அதிகமாக வெளியேறுவதனாலும் இரத்த சோகை ஏற்படக்கூடும். முன்னரே குறிப்பிட்ட மாதிரி பிரசவ காலத்தில் பெண்களுக்கு அதிக
அளவு இரத்தம் வெளி யேறுவதால் இரத்த சோகை ஏற்படலாம். ஒரு பெண் கருவடைந்த நிலையில் கருவில் வளரும் குழந்தைக்கான இரும்புச்
சத்து தாயின் இரத்தத்திலிருந்துதான் செல்ல வேண்டும். கர்ப்பிணிப் பெண் சத்தான உணவை உட் கொள்ளாவிட்டால் தாய்க்கும்
கருவில் வளரும் குழந்தைக்கும் தேவையான இரும்புச் சத்திற்குப் பற்றாக்குறை ஏற்படும்
காரணத்தால் தாய்க்கும் இரத்த சோகை ஏற்படும். கடுமையான மலேரியா நோயாளிகளும் இரத்த சோகைக் குறைபாட்டிற்கு இலக்காவது
உண்டு. மலேரியா நோய்க் கிருமிகள் நோயாளியின் இரத்தத்தில் பிரவேசித்து
இரத்த அணுக்களை அபகரித்துவிடுவதன் காரணமாகவே இந்த நிலை ஏற்படுகிறது. பொதுவாக இரத்த சோகைக்கான முக்கிய காரணம் நமது மக்கள் சீரான சத்துக்கள்
அடங்கிய உணவை உட்கொள்ளாத நிலைதான். இரத்த சோகை நோய்க்கு இலக்கானவர்களை எளிதாக அடையாளம்
கண்டு கொள்ளலாம். உடலில் எப்போதும் சோர்வு குடி கொண்டிருக்கும். சிறிய வேலைகளைச்
செய்தாலும் களைப்பு தோன்றும். பொதுவாக உடல் எப்போதுமே பலவீனமாக இருப்பது
போன்ற உணர்ச்சி இருக்கும். மயக்கம், தலைசுற்றல் என்ற குறைபாடுகளும் சிலருக்கு இருக்கும். இரத்த சோகைக்கு இலக்கான மனிதனின் கண், வாய், நாக்கு போன்ற
உறுப்புகள் உலர்ந்து வெளுத்துக் காணப்படும். இரத்த சோகையை அகற்றிக் கொள்வதற்கான முறையான சிகிச்சையினை தக்க
மருத்துவர் அல்லது மருத்துவமனையில் தான் பெற முடியும் என்றாலும் சில விஷயங்களை மனத்தில்
கொள்ளலாம். நல்ல சத்துள்ள குறிப்பாக இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை
அன்றாடம் உட்கொள்ள முயற்சிக்க வேண்டும். தேவைப்படும்
வைட்டமின் சத்து மாத்திரை மருந்துக்கடைகளில் கிடைக்கும். அவசர நோக்கத்தில் அவற்றை வாங்கி
உட்கொள்ளலாம். என்றாலும் சத்துக்களை தரமாக உணவின் மூலம்
பெறுவது தான் சிறந்த வழியாகும்.
உணவுப் பழக்கம் மூலந்தான் உயிர்ச் சத்துக்களைத் தேவையான அளவு
பெற முயற்சி செய்ய வேண்டும் மேலே அறிவுறுத்திய சத்துணவுத் திட்டத்தை முறையாகவும் சரியாகவும்
நடைமுறைப்படுத்தும் போது உடல் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும். இந்த நிலையில் நரம்புத்
தளர்ச்சி போன்ற நோய்கள் தோன்றுவதற்கு வழி இல்லை. நரம்புகளின் வலிமைக்கும், வன்மைக்கும், அவற்றின் சீரான
செயற்பாட்டுக்கும் சத்துணவு ஒரு முக்கியமான அம்சம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்
சுரப்பிக் கோளாறுகள்
இரத்தச் சோகையினால் தோன்றும் நரம்பு நோய்கள்
சித்த மருத்துவம் : இருதயம், கல்லீரல், சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Relieves heart, liver, kidney stones - Siddha medicine in Tamil [ Health ]