
நரம்புத் தளர்ச்சி யுகம் என்று தகுந்த காலத்தைப் பற்றிக் கூறலாம். அந்த அளவுக்கு நரம்புத்தளர்ச்சிக்கு இலக்கான மக்கள் தற்காலத்தில் அதிக அளவுக்கு உள்ளனர்.
தலைமுடி, பொடுகு, மூட்டு வலிகள் போக்க மருந்துகள் நரம்புத் தளர்ச்சி யுகம் என்று தகுந்த காலத்தைப் பற்றிக் கூறலாம்.
அந்த அளவுக்கு நரம்புத்தளர்ச்சிக்கு இலக்கான மக்கள் தற்காலத்தில் அதிக அளவுக்கு உள்ளனர். சிலருக்கு ஏற்பட்டிருக்கிற நரம்புத்தளர்ச்சிப் பிணி வெளிப்படையாகத்
தெரியும். பலருக்கு அவர்கள் நரம்புத் தளர்ச்சிப் பிணிக்கு இலக்காகியிருப்பது வெளிப்படையாகத்
தெரியாது. தாங்கள் இப்படி ஒரு பிணிக்கு இலக்காகியிருக்கும் விஷயம் அவர்களுக்குக் கூட
தெரியாமல் இருக்கக் கூடும். நரம்புத் தளர்ச்சி என்பது ஒரு பிணியல்ல. ஆனால் மனித உடலில் பல
விதமான பிணிகள் தோன்றுவதற்கு இது காரணமாக அமைகின்றது. மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நரம்புத் தளர்ச்சியை வெளிப்படையாகத்
தோன்றும் சில குறிகளை வைத்துப் புரிந்து கொள்ள முடியும். பக்கவாதம் - முடக்கு வாதம் என்றெல்லாம் கூறப்படும் உடற்கோளாறு பற்றி பலர் அறிந்திருப்பார்கள். சிலருக்கு ஒருபக்கத்து கை, கால்கள் செயலற்று
விடும். இரண்டு கைகளும் கால்களும் கூட சிலருக்கு பாதிக்கப்பட்டு விடுவதும் உண்டு. இத்தகையவர்களால் எளிதாக நடக்க முடியாது. செயற்பட முடியாது. இரண்டு கைகளும் கால்களும் பாதிக்கப்பட்டவர்கள்
நாள் முழுவதும் படுக்கையில் கிடக்க வேண்டியதுதான். எழுந்து நிற்பதற்கும் நடப்பதற்குங் கூட இவர்கள் பிறர் உதவியை
எதிர்பார்க்கக் கூடிய பரிதாப நிலையில் இருப்பார்கள். இந்தக் குறைபாட்டுக்கு நரம்புத் தளர்ச்சிக் கோளாறின் தீவிர நிலைதான்
காரணம். சிலருக்கு வலிப்பு ஏற்படுவதைப் பார்த்திருப்பீர்கள். உதாரணமாகக் காக்கை வலிப்பைச் சொல்லலாம். இந்த மாதிரி வலிப்புகள் நரம்பு தொடர்புடைய கோளாறுகளின் பிரதிபலிப்புத்
தான். காக்கை வலிப்பிற்கு மூளைப் பகுதியில் ஏற்படும் நுண்ணிய ஒரு கட்டி
தான் காரணம் என்று கூறுவர். என்றாலும் வலிப்பின் இயங்கு நிலைக்கு நரம்பு தொடர்புடைய அதிர்வுதான் காரணமாக உள்ளது. மூளைக்
காய்ச்சல் என்ற நோய்க்கும் நரம்பு அதிர்வு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சிலருக்கு காரணம் தெரியாத பலவீனம் ஏற்படும். உடல் எப்போதும்
ஓய்ச்சலாக இருக்கும். எந்த வேலை செய்யவும் மனத்திலே உற்சாகம் இருக்காது. நாள் முழுவதும்
படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இந்த மாதிரியான குறைபாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சிதான் அடிப்படைக்
காரணம். சிலர் காரணமில்லாமலே திடீர் திடீரெனக் கோபத்தால் உணர்ச்சிகளுக்கு இலக்காவார்கள். இவர்கள் அற்ப காரணத்திற்காகவே கோப வேசமடைந்து விடுவார்கள். இவர்கள்
நரம்புக் கோளாறு வயப்பட்டவர்கள் என எளிதாகக் கூறி விடலாம். சிலர் எப்பொழுது பார்த்தாலும் தலை வலியால் அவதிப்படுவார்கள்.
தலைவலிக்கான சரியான காரணம் இவர்களுக்கு விளங்காது. தலைவலி மாத்திரைகளை விழுங்கினாலும்
தலைவலி நிற்காது. இந்த மாதிரியான தலைவலிக்கும் நரம்புத் தளர்ச்சி காரணமாக அமைவதுண்டு. இவ்வாறு எவ்வளவோ சொல்லலாம்! சுருங்கச் சொன்னால் ஏதாவது ஒரு விதத்தில்
நரம்புக் கோளாறுக்கு இலக்காகாத மனிதரே கிடையாது என்று கூறலாம். இந்த நரம்புத் தளர்ச்சிக் கோளாறுகள் குறித்து விரிவாக ஆராய்வதற்கும்
நரம்புத் தளர்ச்சியை அகற்றிக் கொள்ள வழி கண்டுபிடிப்பதற்கும் முன்னால் மனித உடலில்
நரம்பு மண்டலம் எவ்வாறு அமைந்து செயற்படுகிறது என்பதை விளங்கிக் கொள்வோம். மனித உடலில் உணர்ச்சிகளுக்கு அடிப்படை யாக இருப்பது நரம்பு மண்டலம்தான். மனிதனுடைய
மூளை இடுகின்ற உத்தரவு களை நரம்பு மண்டலம் அனுப்புகிறது. உணர்ச்சிகளை பிற உறுப்புகளுக்குக்
கொண்டு சென்று சேர்க்கும் முக்கியமான பொறுப்பினை நரம்புகள் தான் வகிக்கின்றன. நமது உடலில் ஏராளமான செல்கள் அமைந்து உடலை இயக்குகின்றன. நரம்பு
அணுவும் இந்தச் செல்களில் ஒன்று ஆகும். இந்த நரம்பு செல்லில் நரம்பும், நரம்பு நார்
களும் அமைந்துள்ளன. நரம்பு அணுவில் கருவும், கருவை ஒட்டிப்
பசை போன்ற அமைப்பும் உண்டு. நரம்பு நார்கள் ஒவ்வொன்றும் பல கிளை களாகப் பிரிந்து செல்கின்றன.
ஓர் அணுவிலுள்ள நரம்பு நாரின் கிளைகள் மற்றோர் கிளைகளோடு இணைந்திருக்கும். அணுவின் இதே போன்று
நரம்பு மண்டலம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று இணக்கமான – நெருக்கமான தொடர்பினைப்
பெற்றதாக உள்ளன. நரம்பு அணுக்கள் இரண்டு விதமாகச் செயற்படுகின்றன. ஒரு வகை நரம்பு அணுக்கள் உடலின் உணர்வுகளின் இயக்கத்திற்கு அடிப்படையாக
உள்ளன. பிறிதொரு வகை நரம்பு அணுக்கள் உடலின் செயல்களுக்கு அடிப்படையாக
உள்ளன. மூளையின் செய்திகளுக்கு ஏற்ப நரம்புகள் இயங்குவதற்கு நரம்பு
அணுக்களில் ஏற்படும் மின் சக்தி உதவுகின்றது. உணர்வுகளானது
நரம்புகள் வழியாக மிகத் துரிதமாகப் பரவுகின்றன. குறிப்பாக
நொடிக்கு ஐம்பது மீட்டர் வேகத்திற்கு செய்திகள் நரம்புகள் மூலம் பயணம் செய்கின்றன. இதன் விளைவாகத்
தான் நமது உணர்வுகள் சிந்தனைகள் மிகவும் துரித கதியில் இயங்க முடிகிறது. மேலே நாம் குறிப்பிட்ட மின் சக்தி மட்டுமில்லாமல் ஒரு விதமான
இரசாயன தொடர்பு சாதனங்கள் உடலில் பல இடங்களில் உணர்வுகள் பரவுவதற்கு உதவி செய்கின்றன. நரம்பு நார் கிளைகளின் முடிவில் உடல் உள்ளுறுப்புக்களின் மற்ற
பகுதிகளுக்கும் இடையே இந்த வகைச் சாதனம் அமைந்திருக்கிறது. இந்த இரசாயன சாதனங்கள் வழியாக
மூளை அனுப்பும் செய்திகள் செல்லும் போது அவசியத்தை முன்னிட்டு வேகம் சிறிது கட்டுப்பாட்டுக்கு
இலக்காகிறது. ஆனால் வலி போன்ற உணர்வுகள் மட்டும் இந்தக் கட்டுப்பாட்டுச் சாதனத்தை
மீறித் துரித மாக மூளையை எட்டுகிறது. மூளை இடும் கட்டளையும் மிகத் துரிதமாகப் பாதிக்கப்பட்ட
உறுப்பைச் சென்றடைகிறது. துரிதமாகச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லாத ஸ்பரிச உணர்வு, அழுத்த உணர்வு
போன்றவை மெதுவாகவும், வலி, பதற்றம், நினைவு போன்ற அவசரமான உணர்வுகள் துரிதமாகவும் செல்லும். நரம்புகளை மூடியவாறு ஒருவகை காப்புச் சுவர் அமைந்துள்ளது. நரம்புகளின்
செயற்பாடு குழப்பமில்லாமல் அமைவதற்கு இந்தக் காப்புச் சுவர் உதவுகிறது. நமது உடலில்
திடீரெனத் தோன்றும் ஓர் உணர்வு நரம்புகளின் மூலம் மூளையை அடைந்து அங்கிருந்து அவசரச்
செய்தி நரம்பு மூலம் உரிய இடத்தைச் சென்றடைகிறது. உதாரணமாக நடந்து செல்லும் போது காலில் ஒரு முள் குத்தி
விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கண்மூடித் திறப்பதற்குள் நரம்புகள் மூலம் அந்தச் செய்தி மூளையைச்
சென்றடைகின்றது. மேற் கொண்டு நடக்காமல் நின்று காலில் தைத்த முள்ளை அகற்றுமாறு மூளையிலிருந்து
நரம்பு மூலம் உத்தரவுச் செய்தி உரிய உறுப்புக்களை சென்றடைகின்றது. உடனே நாம்
சட்டென நின்று காலைத் தூக்கி கைகளால் காலில் தைத்திருந்த முள்ளை எடுக்கிறோம். நரம்புகள் மீது காப்புச்சுவர் ஆழ்ந்து அமைந்திருப்பதனால்தான்
மூளை அனுப்பும் செய்தி தவறாமல் குறிப்பிட்ட உறுப்புக்களை சென்றடைகிறது. காப்புச்சுவர்
இல்லா விட்டால் மூளை அனுப்பும் செய்தி வழிமாறி தேவையற்ற உறுப்புக்களைச் சென்றடைந்து
பயனில்லாமல் போய் விடக்கூடும். காலில் முள் தைத்த செய்தி காதுக்கோ, மூக்கிற்கோ
எட்டி என்ன பயன்? இவ்வாறு குழப்பம் நேர்ந்து விடாமல் தடுப்பதற்கு காரணமாக இருப்பது
நரம்புகளை மூடி அமைந்துள்ள காப்புச் சுவராகும். இந்தக் காப்புச் சுவர் எதாவது ஒரு காரணத்தால் பழுதடைய நேர்ந்தால்
பலவிதமான நரம்புப் பிணிகள் ஏற்படக் கூடும். இரசாயனத் தொடர்பு
சாதனங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் பலவிதமான நரம்புப் பிணிகள் தோன்றக் கூடும். மூளையில் நரம்புகளின் செயல் முறையினைக் கட்டுப்படுத்தும் அமைப்பு முறை இரண்டு பிரிவாக அமைந்துள்ளது. உடலின் ஒரு பகுதியை ஒரு
பிரிவும், மறு பகுதியை மற்றொரு பிரிவும் கட்டுப்படுத்தும் பொறுப்பை வகிக்கிறது. இதில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் நமது உடலின் வலது
பகுதி நரம்புகளை இயக்கும் பிரிவு, மூளையின் இடது பகுதியிலும், இடது பகுதி
உடல் நரம்புகளை இயக்கும் பகுதி மூளையின் வலது பகுதியிலும் அமைந்திருப்பதுதான். நமது உடலின் வலது பக்க உறுப்புகள் செயற்பட இயலாத அளவு பாதிக்கப்பட்டால்
மூளையின் இடதுப் பக்கப் பகுதி தொடர்புடைய நரம்புகள்
பிணிவாய்ப்பட்டிருக்கின்றன என உணர வேண்டும். இதே போன்று
தான் இடதுபுற உறுப்புகள் செயலிழக்கும் போது மூளையின் வலதுபுற தொடர்புடைய நாம்புகள்
பாதிக்கப்பட்டன என அறிய வேண்டும். நாம் பல விதங்களில் செயற்படுகிறோம். நமது செயல்களில் பலவற்றை
நமது விருப்பப்படி செய்கிறோம். உதாரணமாக நாம் உணவு உட்கொள்ளச்
செல்லுகின்றோம் என்றால் உணவு உண்ண வேண்டும் என்று நாமாகத் தீர்மானித்துத்தான் அந்தச்
செயலில் ஈடுபடுகிறோம். நமக்கு பசி உணர்வு ஏற்படும் காரணத்தால் உணவு உட்கொள்ள நினைக்கிறோம்
என்றாலும் பசி இருந்தாலும் நமக்கு அவசரமான பணியிருந்தால் நமது விருப்பப்படி உணவு உண்ணுவதைத்
தள்ளிப்போட்டு விடுகிறோம் அல்லவா! இவ்வாறு நாமாக விரும்பிச் செய்யப்படும் நிலையை விருப்பச் செயல்
எனக் குறிப்பிடலாம். சில சமயம் நமது விருப்ப தொடர்பு இல்லாமல்
நாம் திட்டமிடாமலே சில செயல்களைச் செய்ய வேண்டி உள்ளது. உதாரணமாக நாம் நம்மையறியாமலே அதிகச் சூடான ஒரு பொருளில் கைவைத்துவிடுகிறோம்.
அது சூடான பொருள் என்று நமக்கு முன்னதாகத் தெரியாது. கைவிரல் அந்தப் பொருளில் பட்ட உடனே திடீரென கைவிரலை இழுத்துக்
கொள்கிறோம். சூட்டு நிலை நமது விரலைப் பாதித்த காரணத்தால் சூட்டினின்றும் உடலை-விரலைக்
காப்பாற்றிக் கொள்வதற்காக விரலை எடுத்து விடுகிறோம். இது நாமாகத் திட்டமிட்ட செயல் அல்ல. அவசியத்தை - அவசரத்தை முன்னிட்டு நம்மையறியாது ஏற்படும் உணர்ச்சித்
தூண்டுதல் கையை அந்தப் பொருளிலிருந்து துரிதமாக எடுக்கத் தூண்டுகிறது. நாம் செயற்படுகிறோம்.
இம்மாதிரி நாம் விருப்ப உணர்வு இன்றி நமது விருப்பமின்றி செயற்படும் நிலையை அனிச்சைச் செயல் எனக் கூறுவர். விருப்பமும், அனிச்சையும்
கலந்து சில சமயம் நாம் செயற்பட வேண்டிவரும். நல்ல குளிர்காலத்தில் அதிகாலையில் நீர் நிலை யொன்றிற்கு நீராடச்
செல்லுகிறோம். குளிக்க இயலாத அளவுக்கு நீர் குளிர்ந்திருக்கிறது
என்று நமக்குத் தெரியும். என்றாலும் எந்த அளவுக்குக்
குளிராக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணி நீரில் ஒரு விரலை வைத்துப் பார்க்கிறோம். பனிக்கட்டி போல நீர் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்திருக்கவே சட்டென கையை நீரிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். இந்தச் செயலில் நம் இச்சையும் அனிச்சையும் கலக்க செயற்படுகின்றோம். மேற்சொன்ன மூவகைச் செயல்முறைகளும் மூளை, நரம்பு மண்டலம்
இந்த இரண்டும் சேர்ந்து தொடர்புடைய தசைகளை இயக்குவதன் மூலம் நடைபெறுகின்றது. பொதுவாக உணர்ச்சிகள் நரம்புமண்டலத்தின் இயக்க அடிப்படையில் தான்
தோன்றுகின்றன. அந்த உணர்ச்சிகளை மூளை கட்டுப்படுத்தி இயக்குகின்றது. மூளையுடன் சேர்ந்து நரம்பு மண்டலம் சீராக ஒழுங்காக, முறையுடன்
செயற்படும் போதுதான் மனிதன் உயர்ந்த பண்பினனாக சிறந்த ஒழுக்கமுள்ளவனாகச் செயற்பட முடிகின்றது. நரம்பு மண்டலம் மூளையுடன் இணைந்து முறையற்று செயற்படும் போதுதான்
மனிதன் பண்பு கெட்டவனாக ஒழுக்கங்கெட்டவனாக மாறுகிறான். இந்த அளவுக்கு நரம்பு மண்டலம் மனிதனிடம் முக்கியத்துவம் வகிக்கின்றன.
நரம்பு நோய்களும் நீக்கும்
வழிகளும்
நரம்புகளின் அமைப்பும் செயற்பாடும்
மூவகைச் செயல் முறைகளும் நரம்புகள்
பொறுப்பும்
நரம்புக் கோளாறுகள் உடலியல்
காரணங்கள்
நரம்பு தொடர்புடைய பிணிகள் தோன்றுவதற்கு உடலியல் ரீதியிலான முக்கிய
காரணம் போதுமான சத்துணவு உண்ணாத நிலைதான். பொதுவாகவே நமது நாட்டில் தோன்றுகின்ற நோய்கள்
அனைத்திற்குமே உணவுச் சத்துக் குறைவே காரணமாக உள்ளன.
பசி நேரத்தில் எதையாவது சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறோம்
என்பதற்கு மேலாக உணவு பற்றி நாம் அதிகமாக சிந்தனை செய்வதில்லை. திட்டமிட்டு சத்து நிறைந்த உணவு வகைகளை உண்ணுவதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடலில்
எந்த விதமான நோயும் அணுகாது. நரம்புத் தளர்ச்சிக்கும் இது பொருந்தும்.
நரம்புத் தளர்ச்சி ஏற்படாமல் தவிர்க்க அல்லது நரம்புகளுக்கு வலிமையூட்ட தனியாக சத்துணவு உண்ண வேண்டும்
என்பதில்லை. பொதுவான சத்துணவைத் தொடர்ந்து உண்டு வந்தாலே
நரம்புகள் பலமடையும். நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. சத்துணவு என்று சொல்லும் போது அதற் காக அதிகமாக பணச் செலவு செய்ய
வேண்டி. வரும் என்று சிலர் அச்சப்படுவதுண்டு. இந்த எண்ணம் அறியாமை காரணமாக எழுவது
தான். உணவுப் பொருட்களைப் பற்றி சரியான தகவல்களை நாம் தெரிந்துக்கொண்டால் மிகவும் குறைந்த
செலவிலேயே நல்ல சத்துணவை நம்மால் பெறமுடியும்.
உதாரணமாக எந்தக் காலத்திலும் மிகவும் மலிவாக கிடைக்கும் கீரை
வகைகள் அருமையான சத்துகளைக் கொண்ட உணவுப் பொருளாகும். ஆகவே நரம்புக் குறைபாடுகள் அகற்றும் உணவுச் சத்துக்களைப் பற்றி
இப்போது தெரிந்துக்கொள்வோம்.
சித்த மருத்துவம் : தலைமுடி, பொடுகு, மூட்டு வலிகள் போக்க மருந்துகள் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Remedies for hair, dandruff, joint pain - Siddha medicine in Tamil [ Health ]