விஷக்கடிகள், தலைவலி, கண்வலி தீர்வுகள்

சித்த மருத்துவம்

[ சித்த மருத்துவம் ]

Remedies for poison bites, headache, eye pain - Siddha medicine in Tamil

விஷக்கடிகள், தலைவலி, கண்வலி தீர்வுகள் | Remedies for poison bites, headache, eye pain

புரசு மரப்பட்டை சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க பாம்பு நஞ்சு தீரும்.

விஷக்கடிகள், தலைவலி, கண்வலி தீர்வுகள்


பாம்புக்கடிக்கு நிவாரணம் :

1. புரசு மரப்பட்டை சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க பாம்பு நஞ்சு தீரும். 

2. பல்லி கடித்து விட்டால் உடனே சிறிது பனை வெல்லத்தை சாப்பிட நஞ்சு முறியும்.


எலிக்கடிக்கு நிவாரணம் :

1. 100 மி.லி நல்லெண்ணையை அப்படியே தனியாக குடிக்கவும்.

2. ஒரு பிடி கீழாநெல்லி இலைகளை எடுத்து 100மி.லி. நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி எண்ணையை கடிவாயில் தடவ வேண்டும். மேலும் காய்ச்சி வறுத்த இலைகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட விஷம் குறைந்து விடும்.


தேள்கடிக்கு நிவாரணம் :

1. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணமாகும்.

2. நாட்டு வெங்காயத்தை நசுக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.


தேனீ, குழவி கடிக்கு நிவாரணம் :

கொட்டிய பகுதியில் கருப்பங்காடியை பூச அந்த பாதிப்பு குணமாகும்.


பூச்சி, வண்டு கடிக்கு நிவாரணம் :

இலவங்கப்பட்டை சோம்பு. சுக்கு. கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு இடித்துப் பொடி செய்து 200மி.லி தண்ணீரில் கலக்கி நன்றாக கொதிக்க விட வேண்டும். நான்கில் ஒரு பங்காக அந்தக் கொதிநீர் வற்றிய பின் இறக்கி ஆற வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இரு வேளைகள் நீரைக் குடித்து வந்தால், நாள்பட்ட பூச்சி, வண்டு கடி வெகு விரைவில் குணமாகிவிடும். வயிற்று வலி, குன்ம வலி ஆகியவற்றிற்கும் மேற்குறிபிட்ட வைத்திய முறை சிறந்த நிவாரணியாகும். வாயு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. ஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தாலும் இந்த மருந்து குணப்படுத்தும். மேலே குறிப்பிட்ட பக்குவத்தில் மருந்தை சாப்பிடச் சொல்லவும். கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும்.


பூனைக் கடிக்கு நிவாரணம்:

அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போனால் ஊசிப் போட்டுக் கொள்ளலாம். குப்பைமேனி செடி தெரியுமா? அதை வேருடன் ஏழெட்டு பறித்து வாருங்கள். செடியை வெட்டிவிட்டு, வேரை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். வேரை கழுவி சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரையுங்கள். வெண்ணெய்ப் பதமாக எடுத்து. ஒரு டம்ளர்] பசும் பாலில் கரைத்துக் குடிக்க வேண்டும். காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வர குணம் ஏற்படும்.

பத்தியம் : மருந்து சாப்பிடும் நாட்களில் உப்பு, உறைப்பு| நீக்க வேண்டும். வெறும் பால், மோர் சோறு சாப்பிட்டு வரவும்.


தலை [சிரசு]

"மதி வேண்டும் நின் கருணை நிதிவேண்டும் - நோயற்ற வாழ்வில் நான் வாழ வழி வேண்டும்" என்ற வள்ளலார் பாடலுக்கு ஏற்ப நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்குமிணங்க நல்வாழ்வு மலர உடல் நோயுற்றால் செல்வத்தை செலவு செய்ய நேரும். எனவே நாம் நோயின்றி வாழ வழி செய்வதே இக்கட்டுரையின் கோட்பாடாகும்.

எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதற்கு இணங்க தலையும், அதனைச் சார்ந்த ஐம் பொறிகளைப் பற்றியும் பார்ப்போம்.

"பித்தம் தலைக்கு ஏறிடுச்சா" என்று சமயத்துல கிண்டல் பேச்சு, எட்டிப் பார்க்கும் சித்தம் இருந்தா.... வேலையே ஓடாது. இது மாதிரியான சமயத்தில் அவசியம் மருந்து தேவைப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பது தேவவாக்கு போன்ற தேவையான வாக்கு.


பித்த நிவர்த்தி மருந்துகள்

1. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும். 

2. 100 கிராம் திராட்சை உலர்ந்ததை, 200 கிராம் கடுக் காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர பித்தம், வாந்தி, வாய்கசப்பு தீரும்.

3. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்ச வேர், கிராம்பு ஆகிய வைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து அந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும்.

4. திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூளை விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.


தலைவலி மற்றும் ஐலதோஷம் நீங்க:

1. செலவின்றி தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துளக்கியவுடன். வாயைச் சுத்தம் செய்யும் போது முதுகை நன்றாக வளைத்து, அவ்வாறு செய்யும் போது உணவு குழல் வழியாக உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்தநீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதை தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியேறும். எனவே தினசரி (சளித்தொல்லை இருந்தாலும். இல்லையென்றாலும்) இது போலச் சுத்தம் செய்து சளியையும், பித்தநீரையும் வெளியேற்றினால் பல்வேறு நோய்களுக்கான மூல காரணங்களும், வெளியேற்றப்பட்டு மூச்சுவழி காற்றுப் பாதையும் சரியாகி விட்டால் இருதயம், வயிறு, சிறுநீர் உபாதைகள் வரை நீங்கி உடல் ஆரோக்கியம் இயற்கையாகவே சரி செய்யலாம்.

2. அ) நாட்டு வெங்காயம் இரண்டு, மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டாலும்,

ஆ) கொண்டக் கடலையை லேசாக வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர தலைவலி, தலைபாரம், இருமல் தீரும்.

3. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும்.

4. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும்.

5. துளசி இலைசாறு. வில்வ இலைசாறு வகைக்கு 100 மிலி எடுத்து, அத்துடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறுசுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும்.

6. அ) பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இதனை இரவில் தூங்கப் போகிறதுக்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும். 

ஆ) எளிமையான மருந்து மிளகை ஊசியால் குத்தி தீயில் சுட்டு அதனுடைய புகையை மூக்கு மூலியம் உள்ளுக்கு இழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும்.

7. நொச்சி இலையை தலையணைக்குள்ளே பரப்பி வச்சி தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி, சளிப் பிரச்சினையும் விலகி விடும். 

8. திப்பிலி ஒரு பங்கு & துளசி இலை 3 பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும்.

9. மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து. இடித்து தூள் செய்து சிறிது வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சாப்பிட துளி அகலும். 

10. தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை, மாலை 2 நாட்கள் சாப்பிட சளி அகலும்.

11. சூடான சுக்கு, மல்லி காப்பியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும்.

12. இஞ்சிச் சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி, சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தைலத்தை நன்றாகத் தேய்த்து 20 நிமிடம் ஊறியதும், பயத்தமாவு & அரப்புத்தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால், தலைவலியை இந்த தைலம் குணப்படுத்தும்.

13. சித்தரத்தை, சுக்கு, மிளகு, சதகுப்பை, திப்பிலி இவைகளை சம அளவு எடை எடுத்து நன்கு பொடித்து கால் லிட்டர் நீரில் போட்டு அது பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி மூன்று பங்காக்கி, ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் மேற்கூறிய நோய்கள் நீங்கும்.

14. முள்ளங்கி சாறு அல்லது மாதுளம்பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.


கண்

அ) கண் வலி வரக் காரணங்கள் பல உள்ளன. உடலில் பித்தநீர்- மேகநீர் - மூலச்சூட்டு - மலக்கட்டு தலை வரட்சி - ஆழ்ந்த பார்வை போன்ற காரணங்களால் கண் நோய் வரும். ஆ) உடலில் பித்தாதிக்கம் அதிகமானால் கருவிழியில் பாதி உளுந்து அளவில், வெள்ளையாகத் தோன்றும். வெள்ளை விழியும் நீர் படர்ந்து நீர் வழியும். 

இ) மோகநீர் - மிக்க பெண்ணிச்சை மூலச்சூட்டின் மிகுதியாகும் 

ஈ) மலக்கட்டு மற்றும் ஆழ்ந்த பார்வையால் கண்ணைச் சுற்றி வடுவு (வரை) உண்டாகி அரிக்கும். கண் சிவந்து வலிக்கும். 

உ) மாலைக்கண்: மாலை நேரத்தில் இருள் பிடித்தது போல் காணும்.


உடலில் பித்தம், மோகம் மூலச்சூட்டாலான மலக்கட்டு நீங்க

1. அருகு, ஆமணக்கு, எலுமிச்சை, கடுக்காய், கரிச்சாலை, கற்றாழை. கொத்துமல்லி (தனியா). சீரகம், நெல்லி, பொண்ணாங்கன்னி, வில்வம் போன்ற இயற்கை உணவே இதமான மருந்தாகும்.

2. அதிக நேரம் ஆழ்ந்த பார்வையாக (கம்ப்யூட்டரில்) வேலை பார்ப்பவர்கள் தொடர்ச்சியாக அமராமல் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை தொலைவில் உள்ள பொருளைப் பார்த்து கண்ணை இலகுவாக்குவதும். கண்களைக் கழுவுவதும் அவற்றை புத்துணர்ச்சி ஆக்கும்.

3. துண்டு வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைத்து 10 நிமிடம் கண்களை மூடிக் கொள்ளும். 

4. சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு சேர்த்து பருக, கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியடைவதுடன், உடலில் உஷ்ணம் குறையும்.

5. சிறுகீரையை வாரம் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து பார்வை பிரகாசமும் ஆகும்.

6. பனை மரத்தின் வேரை நறுக்கிப் போட்டு, அதனுடன் இரண்டு பங்கு தண்ணீர் விட்டு வெயிலில் வைத்த நீரை காலை, மதியம், மாலை ஆக மூன்று வேளையும் அருந்திவர கண்நோய்கள் எதுவும் வராது. 

7. கல்யாண முருங்கை அல்லது சாதாரண முருங்கை கீரையை சமையலில் சேர்த்து சாப்பிட்டாலும் கண்நோய்கள் வராது.

8. பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைந்து கண் நோய்கள் அகன்று விடும். 

9. செம்பருத்தி பூக்களை தயிர்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பிறகு குளித்து வந்தால் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் குணமாவதுடன் தீராத தலைவலியும் தீரும்.

10. அருகம்புல்லை இடித்து பிளிந்த சாற்றைக் கண்ணுக்குள் பிளிய கண்நோய் தீரும். அருகம்புல் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண்நோய், கண்களில் நீர் வடிதலுடன் தலைவலியும் தீரும். 

11. கடுகுரோணி அல்லது படிகாரத்தைப் பொறித்து தூள் செய்து சீசாவில் பத்திரப்படுத்தி அதில் 3 அரிசி எடைதூளை தாய்ப்பாலில் கஷ்ந்து கண்ணில் 4 துளிகள் வீதம் விட கண் வலி, பூலை தள்ளுதல் தீரும்.

12. வெங்காய சாற்றை சம அளவு விளக்கெண்ணெயில் ஆமணக்கு எண்ணெய்) கலந்து அடுப்பில் ஏற்றி நன்றாக காய்ச்சி, ஆறியவுடன் வடிகட்டி சுத்தமான கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தி அதில் ஒரு சொட்டு கண்ணில் விட்டால் போதும் கண் வலியும், கண் சிவப்பும் நீங்கும்.

13. மிளகு அரைத்து முசு முசுக்கை இலை சாறெடுத்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சியோ அல்லது ஒரு வாரம் வெயிலில் காய வைத்தோ, பிறகு வாரம் இருமுறை இந்த எண்ணெயில் குளித்து வர நாளடைவில் கண் சார்பான வெப்பமும், எரிச்சலும் தீரும்.

14. நந்தியா வட்டை பூவை சுத்தமான வெள்ளைத் துணியில் முடிந்து அந்த முடிச்சைத் தாய்ப்பாலில் ஊறவைத்து சில துளிகள் கண்ணில் பிழிந்து வர ஒரு வாரத்தில் கண்ணில் பூ விழுந்தால் மறைந்துவிடும். நந்தியா வட்டை பூவைக் கொண்டு வந்து கண்களில் ஒத்தடம் கொடுக்க கண்வலி நீங்கும்.

15. பொன்னாங்கண்ணி கீரையை தினமும் துவையல் செய்து சாப்பாட்டில் சாப்பிடவோ, உப்பில்லாமல் வேக வைத்து 40 நாட்கள் உண்ண கண்நோய், கருவிழி நோய் தீரும்.

சித்த மருத்துவம் : விஷக்கடிகள், தலைவலி, கண்வலி தீர்வுகள் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Remedies for poison bites, headache, eye pain - Siddha medicine in Tamil [ Health ]