
சூர்ய நமஸ்காரம் பல ஆசனங்களின் தொகுப்பு ஆகும்.
சூர்ய நமஸ்காரம் சூர்ய நமஸ்காரம் பல ஆசனங்களின் தொகுப்பு ஆகும். ஆகவே, ஆசனத்தைப் பற்றிக் கூறிய அனைத்தும் இதற்கும் பொருந்தும். இது தவிர. யோகாசனத்துடன், வழிபாட்டு அம்சமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மனிதன் மனமகிழ்ச்சியையும் மன உறுதியையும் அடையலாம். சூர்ய நமஸ்காரின் ஒவ்வொரு ஸ்திதியும் சரியானபடி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு பூரண ஸ்திதி பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அந்த பூரண ஸ்திதி அடைவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெளிவு இருக்க வேண்டும். ஒவ்வொரு ஸ்திதியிலும் எந்த நுணுக்கமான விஷயத்துக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஸ்திதியையும் பிரித்துப் பிரித்து பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும். துவக்கநிலை:- (அ) சமஸ்திதியில் நிற்கவும். உள்ளங்கைகள் கைகூப்பி வணங்குவது போல் நெஞ்சுக்கு நேராக இரண்டு. முழுங்கைகளும் தரைக்கு இணையாக கட்டை விரல்களின் கணுக்களும் (பின் பகுதிகள்) 'சூர்யசக்ர' குழியின் மேல். (ஆ). தோள்கள் பின்னால் தள்ளியபடி தலை சமநிலையில் கழுத்து நேராக. பார்வை நேராக. ஸ்திதி 1 : (அ) மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி விறைப்புடன் இருக்கட்டும். முழங்கையில் வளைவு இல்லாதிருக்கும் பொருட்டு தோல்களை புஜங்களை உட்பக்கமாக விறைப்பாக வைக்கவும். (ஆ) இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியை. இடுப்பிலிருந்து பின்னால் வளைக்கவும். (இ) தலையைப் பின்பக்கம் தொங்கவிட்டு. இரண்டு கைகளையும் விறைப்பாக வைத்தபடி. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். கைகளை காதுகளுடன் இணைக்க முயற்சிக்க வேண்டாம். பார்வை இரண்டு உள்ளங்கைகளும் சேரும் கரமூலவில் நிலைத்தபடி கரமூல பகுதியை அழுத்தியபடி பின்பக்கமாக இழுக்கவும். (ஈ) முட்டிகள் வளையாமல் இருக்கும்பொருட்டு, பாதங்கள் மற்றும் கால்களின் அடிமெத்தைகளை பூமியில் நன்றாக அழுத்தியபடி இருப்பது அவசியம். ஸ்திதி 2: (அ) ஸ்திதி 1 ல் ஏற்பட்ட முதுகின் வளைவை அப்படியே வைத்தபடி மூச்சை வெளியே விட்டுக் கொண்டு கால் தொடைப் பகுதியிலிருந்து குனிய ஆரம்பிக்கவும். (ஆ) ப்ருஷ்டத்தை மேல்நோக்கி வளைக்கவும். (இ) தொடையின் மேல்பகுதியிலிருந்து படிப்படியாக தொட்டபடி வயிற்றை முழங்காலின் மேல்பகுதிக்கும் மார்பிளை முழங்கால்களின் கீழுள்ள பகுதியுடனும் ஒட்டியபடியும் முடிவில் நெற்றியை கீழ்காலுடன் ஒட்டி இருக்கும்படி செய்யவும். இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கால்களுக்குப் பக்கமாக பூமியில் நன்றாக அழுத்தியபடி. கால்விரல்கள் கைவிரல்கள் ஒரே நேர்கோட்டில் வைக்கவும். முதுகு நீண்டு கூனல் இல்லாதவாறு இருக்கட்டும். ஸ்திதி 3: (அ) இடது காலை நேராகப் பின்னால் எடுத்துச் செல்லவும். முட்டி பூமியின் மேல்படும்படி (ஆ) வலது காலின் குதிகாலை பூமியில் அழுத்தவும். வலது முட்டியை எவ்வளவு மு ல் கொண்டுவர முடியுமோ அவ்வளவு முன்னால் கொண்டு வரவும். குதிகாலின் மேலுள்ள தசைகளில் இறுக்கம் இருப்பதை நாம் உணரவேண்டும். (இ) வலது தோள்பட்டை, வலது முட்டியுடன் ஒட்டியவாறு தலை மேலே தூக்கி மேலே பார்க்கவும். இடது முட்டியின் முன்பாகத்தில் இறுக்கம் இருப்பதை உணரவேண்டும். இந்த ஸ்திதியில் முழங்கை பகுதியில் முட்டி வளைந்திருப்பது அவசியம். (ஈ) இடது காலின் முன்னங்கால்களை (விரல் பகுதியை வளைக்கக்கூடாது. (உ) இடுப்பை கீழ்நோக்கி அமுக்க வேண்டும். (மற்றவர் உதவியை நாடவும்) (ஊ) மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். ஸ்திதி 4: (அ) வலது காலை பின்னால் எடுத்துச் சென்று இடது காலுடன் சேர்க்கவும். முட்டிகளை இறுக்கியபடி தலைமுதல் கால்வரை ஒரே நேர்கோட்டில் வைக்கவும். (ஆ) பார்வை உடம்பிலிருந்து நேர் கோணமாக இருக்கும். (இ) மூச்சு சாதாரண நிலையில் ஸ்திதி 5: (அ) இரண்டு கை முட்டிகளையும் மடக்கி முழு உடம்பையும் பூமிக்கு இணையாக வைக்கவும். (ஆ) இரண்டு கால்களின் கட்டைவிரல்களும். குதிகால்களும் சேர்ந்த நிலையில். (இ) மார்பு மற்றும் கால் முட்டிகளை பூமியில் பதிக்கவும். (ஈ) இரண்டு தோல்களையும் மேலே உயர்த்தி இரண்டையும் அருகே கொண்டு வரவும், இதன் மூலம் மார்பு விரியும், தரையிலும் படும். நெற்றி பூமியில் படவேண்டும். ஆனால் மூக்கு பூமியைத் தொடக்கூடாது. (உ) மூச்சை வெளியே விட வேண்டும். ஸ்திதி 6: (அ) இரண்டு குதிகால்களும் அருகில் முட்டிகள் ஒன்று மற்றொன்றுக்கு அருகில், (ஆ) உடம்பை முன்னால் தள்ளி கை முட்டிகளை நேராக்கிக் கொண்டே மார்பை மேலே எழுப்பவும். இடுப்பு மற்றும் நாபியை கைகளுக்கு நடுவில் கொண்டுவர முயற்சி செய்யவும். தலை பின்புறமாக தோள்களை பின்னால் இழுக்கவும். (இ) மூச்சை உள்ளே இழுக்கவும். ஸ்திதி 7: (அ) உடலைப் பின்னுக்கு இழுத்து பிருஷ்டங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மேலே தூக்கவும். (ஆ) உள்ளங்கால்களை பூமியில் பதிக்கவும். ஆனால் கால்களை முன்னால் கொண்டுவரக் கூடாது. உடம்பை பின்னால் இழுக்கவும். (இ) முட்டிகளின் பின்பகுதியை இறுக்கவும். (ஈ) கைகள் நேராக (வளைவு இல்லாமல் முதுகை அழுத்தவும் தோள்களுக்கு இடையே முதுகில் பள்ளம் ஏற்படும்படி இறுக்கவும் (உ) தலை கீழ்பக்கம் தொங்கியபடி (ஊ) மூச்சை வெளியே விட வேண்டும். ஸ்திதி 8: ஸ்திதி 3ஐப் போல் ஸ்திதி 9: ஸ்திதி 2ஐப் போல் ஸ்திதி 10: சூர்யநமஸ்கார் ஸ்திதி. சூர்யநமஸ்கார் மந்திரம்: சூர்யநமஸ்கார் மந்திரங்களையும். இரண்டு ஸ்லோகங்களையும் சூர்யநமஸ்கார் ஸ்திதியில்தான் சொல்ல வேண்டும். தீயேயஸ் ஸதா' ஸவிதி'ரு மண்டல மத்யவர்த்'தி' நாராயண: ஸரஸிஜாஸன ஸன்னி விஷ்டாஹா கே'யூரவான் மகி'ர கு'ண்ட்டலவான் கிரீடீ ஹாரி ஹிரண்மயவபுர் திருத'ஷங்க: சீக்ராஹா || 1. ஓம் மித்ராய நமஹ 2. ஓம் ரவயே நமஹ 3. ஓம் சூர்யாய நமஹ 4. ஓம் பா'னவே நமஹ 5. ஓம் ககா'ய நமஹ 6. ஓம் பூஷ்ணே நமஹ 7. ஓம் ஹிரண்யகர்பாய நமஹ 8. ஓம் மரீசயே நமஹ 9. ஓம் ஆதித்யாய நமஹ 10. ஓம் சவித்ரே நமஹ 11. ஓம் அர்காய நமஹ 12. ஓம் பாஸ்கராய நமஹ 13. ஓம் ஸ்ரீ சவித்ரு சூர்யநாராயணாய நமஹ ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி தினே தினே ஆயுஹ் ப்ரக்ஞா பலம் வீர்யம் தேஜஸ் தேஷாஞ் ச ஜாயதே
ஆரோக்கிய குறிப்புகள் : சூர்ய நமஸ்காரம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Surya Namaskar - Health Tips in Tamil [ Health ]