
ஆண்களின் ஜனனேந்திரியங்கள், பீஜம், ஆண்குறி, இந்திரிய நரம்பு இவைகளுடன் இன்னும் பல உபயோகங்கள் கொண்டவை.
ஜனன இந்திரியங்கள் (The Sex Organs) ஆண்: ஆண்களின் ஜனனேந்திரியங்கள், பீஜம், ஆண்குறி, இந்திரிய நரம்பு இவைகளுடன் இன்னும் பல உபயோகங்கள் கொண்டவை. பீஜங்களை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் பைக்கு அண்டம் (Scrotum) என்று பெயர். இது இடது, வலது என இரண்டு பாகங்களாக உள்ளே மத்தியில் ஒரு தசைப் படுதாவினால் பிரிக்கப்பட்டிருக்கிறது இம்மாதிரியாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு பீஜம் இருக்கிறது. பீஜங்கள் (Testes) என்பவை மேலே கூறியபடி இரண்டு. இவை நீண்ட கோளவடிவமுள்ளவையாயும் சுமார் ஒன்றரை அங்குல நீளமுள்ளவையாயும் சுமார் ஒன்று அல்லது முக்கால் அங்குல கனமுள்ளவை யாயும் இருக்கின்றன. ஒவ்வொரு பீஜத்தின் உள்ளேயும் அனேக சிறிய குழாய்கள் இருக்கின்றன. இம்மாதிரியான பல்லாயி, கணக்கான குழாய்களினால் ஆக்கப்பட்ட பீஜம் மேற் சொன்னவாறு கோள உருவத்தை அடைந்துள்ளது முடிவில் இந்தக் குழாய்கள் மற்றொரு பெரிய குழாயில் சேர்ந்து அதன் பிறகு வேறு குழாய் வழியாக நீர்த்தாரையை அடைகின்றன. ஒரு சாதாரண மனிதனின் பீஜம் சுமார் அவுன்ஸ் கனமிருக்கும் பொதுவாக இடது வலது பீஜத்தைவிட சற்றுப் பெரியதாக இருக்கும் மேற்கூறியபடி ஒவ்வொரு பீஜத்திலும் பல்லாயிரக் கணக்கான சிறு குழாய்கள் இருக்கின்றன ஒவ்வொரு குழாயும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. இவைகள் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரு பெரிய குழாய் ஆகி மேலே செல்லுகிறது. இக்குழாயுடன் ஆர்டரிகளும் வெயின்களும் முறுக்கிக் கொண்டு ஒரு கயிறுபோல் ஆகிவிடுகிறது இந்தக் கயிறு போன்ற இந்திரிய நரம்புகளின் (Spermatic Cord) உதவியால் தான் பீஜங்கள் தொங்குகின்றன. இந்திரிய நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் பெரிய குழாய் முதலில் நீர்த்துவாரத்தில் முடிகிறது என்று சொன்னோம். அதாவது அது அடிவயிற்றைக் துளைத்துக் கொண்டு மேலே சென்று மூத்திரப்பையின் அடிபாகத்தில் தனியாகப் பிரிந்து நீர்த்துவாரத்தில் கலக்கின்றது. இது நீர்ப்பையின் அடிபாகத்திலிருந்து ஆன் குறியின் நுனியில் நீர் வெளிப்படும் துவாரம் வரையில் இருக்கும் தசைகளினால் ஏற்பட்ட குழாய் ஆகும். இக்குழாயின் வழியாக மூத்திரப்பையில் இருக்கும் நீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு மனிதனின் நீர்த்தாரை சுமார் 8 அல்லது 9 அங்குல நீளம் இருக்கும். ஆண் குறி விரைப்பாக இருக்கும்போது இந்த நீர்த்தாரை ஒரே வளைவாகவும் ஆண்குறி சுருங்கும்போது இரட்டை வளைவு உள்ளதாகவும் இருக்கிறது. நீர்த்தாரை மூன்று பிரிவுகளாக இருக்கிறது. நீர்ப் பையிலிருந்து ஆரம்பமாகும் முதலாவது பாகத்துக்கு சுக்கிலபாகம் (Prostatic Portion) என்றும் இரண்டாவது பாகத்துக்கு ஜவ்வு பாகம் (Memberancous Portion) என்றும், மூன்றாவது பாகத்துக்கு பஞ்சு பாகம் (Spongy Portion) என்றும் பெயர். சுக்கில பாகம் சுமார் ஒரு அங்குல நீளமுள்ள தாகவும் நீர்ப்பையின் அடிபாகத்திலும் இருக்கிறது. இந்த பாகம் தான் அதிக அகலமான பாகமாகும். இதைச் சுற்றிலும் சுக்கிலாசயம் (Prostatic Gland) என்னும் கோளம் இருக்கிறது. இந்த பாகத்தில் ஒரு நரம்பு இருக்கிறது. இதன் முக்கிய உபயோகம் சுக்கிலம் உள்நோக்கி போகாமல் தடுப்பதேயாகும். சுக்கில பாகத்திலிருந்து பஞ்சு பாகம் வரையிலும் உள்ள பாகத்துக்கு ஜவ்வு பாகம் என்று பெயர். நீர்த்தாரையின் நீளமான பாகம் அதனுடைய பஞ்சு பாகமே. இது சுமார் 6 அங்குல நீளம் இருக்கிறது. ஜவ்வு பாகத்தின் முடிவிலிருந்து ஆரம்பித்து ஆண்குறியின் நுனியிலிருக்கும் பிளவு போன்ற வெளித்துவாரம் வரையிலும் இது இருக்கிறது. இந்த நுனிப் பிளவை ஆங்கிலத்தில் மீடஸ் யூரினேரியஸ் யூரித்ரா (Mcatus Urinarious Urethra) என்று சொல்வார்கள். நீர்த்தாரையின் மிகவும் குறுகிய பாகம் இதுவே. குண்டிக்காய்களில் உற்பத்தியாகும் மூத்திர வெளியே போகுமளவும் மூத்திரப் பையில் தங்குகிற என்பதை முன்னொரு பாடத்தில் படித்தீர்கள். இதன் கழுத்து பாகத்தைச் சுற்றிலும் இருப்பது சுக்கிலா குமிழ் (Prostatic Gland) என்னும் கோளம். சுக்கில குமிழ் முத்திரப் பையின் கழுத்துப் பாகத்தையு மூத்திரத் தாரையின் முதல் பாகத்தையும் சுற்றி இருக் கிறது. இந்தக் கோளத்தின் முக்கிய வேலை பா போன்ற ஒருவித நீரை உற்பத்தி செய்வதாகும். ஜவ்வு பாகத்தில் முன் பாகத்தின் அடியில் மற்றும் இரண்டு மஞ்சள் நிறமுள்ள கோளங்கள் கின்றன. இவைகளுக்கு சுக்கிலக் இரு கோளங்கள் (Cowper's Glands) என்று பெயர். இவைகளின் பரிமாணம் பட்டாணிக் கடலை அளவு இருக்கும். சுக்கிலத்தில் ஸ்பைனல் ப்ளூயிட் (Spinal Fluid) உள்ள பதார்த்தங்களில் பெரும் பகுதி இந்த இரண்டு வகை யான கோளங்களினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள் சுக்கிலம் தங்கியிருக்கும் பைகளாகும். மூத்திரப்பையின் அடிப்பாகத்தில் ஒவ்வொரு பாகத் திலும் ஒவ்வொன்றாக இவைகள் இரண்டு இருக் கின்றன. இவைகளுக்குப் பின்னால் பெருங்குடலின் முடிவுப் பாகத்துக்கு முன்னால் தசைகளினால் ஆக்கப்பட்ட இரண்டு பைகள் போன்ற அவயவங்கள் இருக் கின்றன. இவைகள் பைகள் போல காணப்பட்டாலும் உண்மையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு நீண்ட குழாய்களே ஆகும். இவைகளை நீட்டினால் சுமார் 6 அங்குல நீளமும் ஒரு அங்குலத்தில் பத்தில் ஒன்று கனமும் இருக்கும். இவைகளின் மேல் பாகத்தில் துவாரமில்லாமலும் கீழ்ப்பக்கம் பீஜத் திலிருந்து வரும் குழாயுடன் சம்பந்தப்பட்டும் இருக்கின்றன. சுக்கிலக் குழியிலிருந்து 15 அல்லது 20 துவாரங்கள் நீர்த்தாரையில் செல்லுகின்றன. இதைத் தவிர சுக்கிலாசயம் என்னும் ஸெமினல் வெஸிகிள் (Seminal Vesicle) ஜவ்வினால் ஆக்கப்பட்ட கோளங்களிலிருந்து வரும் குழாய்கள் இந்தப் பாகத்தில் நீர்த் தாரையில் சேருகின்றன. இந்தக் குழலுக்கு ஸ்கலிதக் குழல் என்று பெயர். சுக்கிலக் குழியில் உற்பத்தியாகும் ஒருவிதப்பால் போன்ற நீர், நீர்த்தாரையில் ஈரப்பசையுள்ளதாகச் செய்து சுக்கிலம் வெளிப்பட இலகுவாகின்றது. சுக்கிலக் கோளங்களில் உற்பத்தியாகும் நீர் சுக்கிலத்திலேயே கலந்து விடுகிறது. மேலே கூறியவைகளிலிருந்து நமது சரீரத்தில் சுக்கிலம் உற்பத்தியாவதற்கு மிகவும் சிக்கலான பல இந்திரியங்கள் வேலை செய்கின்றனவென்பது தெரிய வரும். சுக்கிலம் தடிப்பான வெண்மை நிறமுள்ள நீர் போன்ற வஸ்து. சுக்கிலத்தைப் பூதக்கண்ணாடியினால் பார்த்தால் முட்டை போன்ற பருத்தத் தலையும் நீண்ட வால்களும் உள்ள நூற்றுக்கணக்கான கிருமிகள் ஒருளித நீரில் முன்னோக்கி நீந்தி கொண்டிருப்பது தெரியவரும். இக்கிருமிதான் சிக உற்பத்திக்குக் காரணம். அவைகள் இருக்கும் இடத்தைவிட்டு வெளியே கொண்டு வரப்பட்டால் 5 நிமிஷங்களுக்கு மேல் உயிருடன் இருக்கா. தவிர குளிர்ந்த அல்லது புளிப்புள்ள பதார்த்தங்கள் இவைகளின் மேல் பட்டாலும் இவை இறந்துவிடும். ஆண்குறி மூன்று பாகங்களை உடையதாக இருக்கின்றது. அதாவது ஆண்குறியின் வேர், நடுப்பாகம் நுனிப்பாகம் எனப்படும். வேர்பாகம் இருப்பக்கங் களிலும் தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளது. நடுப்பாகம் நேராய் நிற்கக்கூடிய சக்தியுள்ள மாமிச் சத்துக்களையும், அவற்றையும் ஊடுருவிச் செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களையும் உடையதாக இருக்கிறது. அது விறைப்பாக நிற்கும் சமயத்தில் மூலைகள் மழுங்கப்பட்ட முக்கோண வடிவுள்ளதாக இருக்கும். ஆண் குறியின் மேல் உள்ள மெல்லிய தோல் முடிவில் பின் புறத்தில் மடக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இம்மாதிரியாக மடக்கக்கூடிய பாகத்தில் உள் தோலுக்கு முன்தோல் (Prepuce) என்று பெயர். அந்த பாகத்தின் உள்ளே இருப்பதுதான் நுனிப்பாகம் (Glans Penis). ஆண்குறி மூன்று உறுதியான நார்போன்ற குழாய்களினால் ஆக்கப்பட்டிருக்கிறது. இவைகளில் இரண்டு மேல் பாகத்திலும் மூன்றாவது குழாய் கீழ் பாகத்திலும் இருக்கிறது இவைகளின் மேலே இருப்பவைதான் இவ்வுறுப்பின் முக்கிய பாகங்கள். இவைகள் இரண்டு உருண்டை ஸ்தம்ப வடிவமுள்ள குழாய்கள். இந்த உறுப்பு சில சமயங்களில் அதிக இரத்தத்தை இழுக்கும் படியாக ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே எப்பொழுதெல்லாம் இவ்வுறுப்பில் அதிக இரத்தம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் அது விரைப்பாக இருக்கின்றது. இது மத்தியில் ஒரு கோடு போன்ற துவாரத்துடன் கூடிய மொட்டு போன்ற குவிந்த வடிவுடையது. மேலே விவரிக்கப்பட்ட ஒவ்வொரு பாகமும் அவைகளிடம் இருக்கும் ஒருவிதமான தசைகளின் உதவியால் ஒருவிதக் குழகுழப்பான கொழுப்புப் பதார்த்தத்தை உற்பத்தி செய்கிறது. தவிர ஆண் குறியின் நுனிப்பாகத்தில் நரம்புக் கூட்டங்கள் திரளாகச் சேர்ந்திருப்பதால் அதிக கூச்சம் ஏற்படக் கூடிய பாகமாகவும் இருக்கிறது. ஸ்திரீகளின் ஜனனேந்திரியங்கள் அவைகளின் ஸ்தானங்களைப் பொருத்து உள் அவயவங்கள் என்றும் வெளி அவயவங்களென்றும் இருவகையாகப் பிரிக்கப்படலாம். வெளி அவயவங்கள் ஸ்தனங்கள். கடிதமம் (Pubes) நிதம்பம் உதடு (Labia) மூத்திரத் தாரை (Urethra) பூநரம்பு (Clitoris) யோனித் துவாரம் (Vulva) முதலியவைகளாகும். உள் அவயவங்கள் கருப்பை (Uterus) சினைப்பைகள் (Ovaries) யோனி (Vagina) முதலியவைகளாகும். ஸ்தனங்கள்: இவைகள் தாங்களாகவே ஜனனேத் திரியங்களாக இல்லாவிட்டாலும் அவைகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. மார்பின் உயர்ந்த பாகத்துக்கு ஸ்தனங்கள் என்று பெயர். ஆண்களிடையே இந்த அவயவம் பெயருக்குத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்தீரீகளிடையே இவைகள் காரியார்த்தமாக இருக்கின்றன. அவைகளின் முக்கிய உபயோகம் சிசுக்களுக்குப் பால் கொடுக்கவே என்பது யாவருக்கும் தெரிந்த விஷயம். இவைகளின் நடுவேயுள்ள காம்பிற்கு முலைக்கண் அல்லது முலைக்காம்பு (Nipple) என்று சொல்லப்படும். அதைச் சுற்றிலுமுள்ள நீல நிறமான பாகத்திற்கு எரோலா (Acrola) என்று பெயர். ஸ்தனங்களின் உள்ளே முக்கியமான அனேக குழாய்கள் இருக்கின்றன. இக்குழாய்களின் மூலமாகவே பால் சுரக்குங் காலங்களில் உற்பத்தியாகும் பால் முலைக்காம்பிலிருக்கும் வெளித்துவாரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு ஸ்திரீ தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதை ஆங்கிலத்தில் லாக்டேஷன் (Lactation) என்று சொல்லுவார்கள். இக்காரியத்துக்காகவே ஸ்திரீகளுக்கு சிருஷ்டியில் ஸ்தனங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஸ்தனத்தின் உள்ளேயும் அனேக ஸ்தனக்கோளங்கள் இருக்கின்றன. இக்கோளங்களில்தான் பால் உற்பத்தியாகிறது. ஒவ்வொரு ஸ்தனக்கோளமும் ஒரு திராக்ஷைக் கொத்துபோல் கொத்துக் கொத்தாக இருக்கிறது இவைகளில் பல ஒன்று சேர்ந்து பெரிய கொத்துகளாகி இம்மாதிரியாகவே படிப்படியாக பெரியவையாகின்றன. இக்கோளங்களில் உற்பத்தியாகும் பால் மெல்லிய குழாய்களின் வழியாக முலைக் காம்பின் அடிப்பாகத்துக்கு வந்து சேருகிறது. இப் பாகத்துக்கு வந்த பால் தங்குவதற்குத் தொட்டிகள் (Reservoirs) இருக்கின்றன. ஒவ்வொரு முலையிலும் 10 அல்லது 15 பால் தொட்டிகள் இருக்கின்றன. மனித சரீரத்தின் இடுப்பெலும்புகளை பற்றியும் அவைகள் ஒரு கூடைபோல் இருப்பதையும் அவைகள் எவ்வாறு மற்ற எலும்புகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதையும் நீங்கள் ஏற்கனவேயே படித்திருக்கிறீர்கள். ஸ்திரீகளின் இடுப்பு புருஷர்களுடையதை விட சற்று அகலமுள்ளதாகவும், கனக்குறைவுள்ளதாகவும் இருக்கிறது. இது ஏனென்றால் ஸ்திரீகளுக்கு இடுப்பில் பல்வேறு கருப்பாசய உறுப்புக்கள் இருக்கின்றன. கருப்பாசயங்கள் அகலமான பந்தனிகளால் இணைக்கப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. இதைக் கருப்பை என்றும், கருப்பாசயமென்றும் சொல்லுவார்கள். சாதாரண நாட்களில் ஒரு தட்டையான அத்திப்பழம் போன்ற உருவத்துடன் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் எடை யுள்ளதாக இருக்கிறது. பல குழந்தைகளை ஈன்ற ஸ்திரீகளுக்கு இது சற்று பெரியதாக இருக்கும். இவ்வளவு சிறியதாக இருக்கும் கருப்பாசயம் கருப்பு காலத்தில் அதனுள் வளரும் சிசுவுக்கு தகுந்தவாறுப் பெரியதாகிறது. பிரசவம் ஆனபிறகு கருப்பாசயம் விரைவில் சுருங்கி விடுகிறது. அதாவது ஒரு ஸ்திரி பிரசவித்த 5 வாரங்களுக்குள் அது அனேகமாக தள் முந்திய சாதாரண நிலைமையை அடைந்து விடுகிறது. கருப்பாசயத்தின் மேல் பாகத்துக்கு உடல் (Body) என்றும், அதன் கீழ்ப்பாகத்துக்கு கழுத்து (Cervix or neck) என்றும் சொல்லப்படும். இந்த கழுத்து யோனி (Vagina) என்று சொல்லப்படும் உறுப்பின் உள்ளே சிறிது தூரம் நீட்டிக்கொண்டே இருக்கிறது. கருப்பாசயத்தினுள்ளே இருக்கும் மியூகஸ் மெம்ரேன், எண்டோமெட்ரியம் (Endometrium) என்னும் பெயரால் அழைக்கப்படும். ஒரு ஸ்திரீ நிமிர்ந்து நிற்கும்போது அவளுடைய கருப்பாசயம் கிட்டதட்ட படுக்கையிலேயே இடுப்பின் பின்பாகத்திலிருந்து அதாவது ரெக்டம் என்றும் பெருங்குடலுக்கு முன்னிருந்து ஆரம்பித்து முன் பக்கத்தில் சிறுநீர்ப் பையின் மேல் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே மலச்சிக்கலினால் ரெக்டத்தில் அதிக கனமிருக்குமாயின் கருப்பை முன்பக்கத்தில் கீழே அமுக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியாக இருப்பதற்கு ஆங்கிலத்தில் ஆண்டிப்ளெக்ஷன் (Antiflextion) என்பார்கள். அப்படியில்லாமல் சிறுநீர்ப்பையில் அதிக நீர்த்தேக்கம் இருந்து, அது பெரியதாயிருந்தால் கருப்பாசயம் மேல் பக்கமாகவும் பின்புறமாகவும் தள்ளப்பட்டிருக்கும். இப்படி இருப்பதற்கு ரிட்ரோ ப்ளெக்ஷன் (Retroflexion) எனப்படும். நீடித்த மலச்சிக்கலினாலும் இன்னும் இதர காரணங்களினாலும் சில ஸ்திரீகளுக்கு கருப்பை இடம் பெயரல் (Displacement) என்று சொல்லப்படும் உபாதியில் கருப்பை இம்மாதிரியாக ஒரு ஸ்தானத்தை சாசுவதமாகப் பெற்று விடுகிறது. கருப்பையின் மேல் பாகத்தில் இரு பக்கங்களிலும் இரு கொம்புகள் போன்ற உறுப்புகள் இருக்கின்றன. இவைகளிலிருந்து இரண்டு குழாய்கள் இரு பக்கங் களுக்கும் செல்கின்றன. இக்குழாய்களுக்கு பெல்லோ பியன் (Fallopean) குழாய்கள் என்று பெயர். இவைகள் கருப்பாசயத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் முனையில் மெல்லியதாகவும் மற்றைய முனையில் அகலமாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு பெல்லோபியன் குழாயும் சுமார் 4 அங்குல நீளமுள்ளதாக இருக்கிறது. இக் குழாய்களின் மற்றைய முனையில் ஓவரிஸ் (varics) என்று சொல்லப்படும் சினைப்பைகளிருக்கின்றன. சினைப்பைகள் இரண்டு சிறிய கோளங்களாகும். இவைகள் பெல்லோபியன் குழாய்களின் பரந்த முனைகளில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இவை களுக்குத்தான் கருப்ப வித்துக்களிருக்கின்றன. இக்கருப்ப வித்துக்களுக்கு ஓவா என்று பெயர். சினைப்பைகள் சுமாராக வாதுமைக் கொட்டையின் உருவத்தையும் அளவையும் கொண்டதாக இருக்கின்றன. அதாவது சுமார் ஒன்று முதல் ஒன்றரை அங்குல நீளமிருக்கும். ஒவ்வொரு சினைப்பையிலும் சுமார் 15,000 முத 20,000 ஓவாக்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்பொழுது பிறந்த சிசுவின் சினைப்பையில் கூட ஓவாக்கள் காணப்படும். யோனி என்பது கருப்பையிலிருந்து வெளியே வரும் குழாய் போன்ற வழியாகும். யோனியில் வெளிப் பாகத்துக்கு யோனித் துவாரம் எனப்படும். இது தசைகளால் ஆகிய உருண்டையான குழாய் போன்ற அவயவம். சாதாரணமாக யோனியின் உள் நீளம் 3 முதல் 4 அங்குலம் வெளி நீளம் சுமார் 5 முதல் 6 அங்குலமும் குறுக்களவு சுமார் முக்கால் முதல் ஒரு அங்குலம் வரையிலும் இருக்கும். யோனியில் இருக்கும் வளையமான தசைகள் நீளவும் சுருங்கவும் சக்தி வாய்ந்தவையாகையால் பிரசவ காலத்தில் சிசு யோனியின் வழியாக வெளியே வர அது விரிந்து கொடுக்க முடிகிறது. யோனியின் வெளித்துவாரத்துக்கு யோனித் துவாரம் எனப்பெயர் என்று சொன்னோம். இத் துவாரத்துக்குக் சுமார் அரை அல்லது முக்கால் அங்குலத்திற்கு மேல் ஒரு சிறு பிளவு காணப்படும். இது நீர்த்தாரையின் வெளித்துவாரம். இதற்கு மேல் ஒரு சிறிய முளை போன்ற உறுப்பு இருக்கிறது. இதற்கு கிளிடோரியஸ் (Clitoris) அல்லது பூ நரம்பு என்று பெயர். யோனித் துவாரம், நீர்த்துவாரம், பூ நரம்பு இவை எல்லாவற்றையும் இருபக்கங் களிலிருந்து மிருதுவான மியூகஸ் மெம்ரேன்களால் ஆக்கப்பட்ட தோல் மூடிக்கொண்டிருக்கிறது. இத் தோலுக்கு சிறு உதடுகள் (Labia Minora) என்று பெயர். ஆனால் சாதாரணமாக இது வெளியே தென் படாது. அதன்மேல் பெரிய உதடுகள் (Labi Majora) மூடிக்கொண்டிருக்கின்றன. இப்பெரிய உதடுகள் மேலேயும் கீழேயும் கூடுகின்றன. இவைகள் உட் பக்கத்தில் மியூகஸ் மெம்ரேன்களாலும் வெளிப் பக்கத்தில் மயிர்களுள்ள தோலினாலும் செய்யப் பட்டிருக்கின்றன. இவைகளின் கீழ்ச் சந்திப்பிற்கும் அபானத்துக்கும் இடையே உள்ள பாகத்துக்கு பெரீனியம் (Perenium) என்று பெயர். இந்த உதடுகளுக்கு வெளியேயுள்ள ரோமங்கள் நிறைந்த மேடான இடத்துக்கு கடிதமம் (Pubes) என்று பெயர். இது ஆண், பெண் இருபாலருக்கும் உண்டு. ஒருவர் பிரவிடை, அதாவது வாலிபப் பருவம் அடையுங்காலத்தில் இவ்விடம் ரோமங்கள் தோன்றுகின்றன. இவைகள் சற்று சிவப்புக் கலந்த மஞ்சள் நிற முள்ள சிறிய நீண்ட வட்டமான கோளங்கள். இவைகள் இருக்கும். சுமார் மொச்சைகொட்டை அளவு யோனியின் ஆரம்பத்தில் பக்கத்திற் கொன்றாக இரு பக்கங்களிலும் இவைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன இக்கோளங்களில் இருவகையான நீர் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. கோளங்களிலிருந்து நீண்ட குழாய்களின் வழியாக இந்நீர் வந்து சிறிய உதட்டின் உட்பாகத்தில் முடிகிறது தவிர இவ்விடங்களிலுள்ள தோல்களின் மடிப்புகளில் உள்ள தசைகள் ஒரு வகையான சத்தையும் உற்பத்தி செய்கின்றன கொழுப்பு, ஸ்திரீகளின் நீர்த்தாரை குறுகிய தசைகளினால் ஆக்கப்பட்ட ஒரு குழாய் ஆகும். அது சுமார் ஒன்றரை அங்குல நீளமிருக்கிறது. ஆண்களுக்குள்ளது போலவே ஸ்திரீகளின் நீர்ப்பையின் கழுத்தில் வளையமான சுருங்கக்கூடிய தசைகளிலிருக்கின்றன. ஸ்திரீகளின் நீர்ப்பை சாதாரணமாக சுமார் 16 அவுன்ஸ் சிறுநீர் தங்கியிருக்க முடியும்., ஆனால் சிற்சில சமயங்களில் சுமார் 24 அவுன்ஸ் சிறுநீர் தங்கும்படியாக அவ்வளவு விரிந்து கொடுக்கவும் சக்தி வாய்ந்த தசைகளினால் அது ஆக்கப் பட்டுள்ளது. பிரவிடையான கால முதல் ஒவ்வொரு ஸ்திரீக்கும் அவ்வப்போது ஜனனேந்திரியங்களிலிருந்து இரத்தமும் ஒருவகை நீரும் வெளிப்படுகிறது. இதற்கு மாத விடாய் என்கிறோம். சாதாரணமாக இம்மாதிரியாக வெளியாகும் இரத்தம் 3 முதல் 6 நாட்கள் வரையிலிருக்கும் அத்துடன் சாதாரணமாக 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது. இது இருக்கும் சமயங்களில் அந்த ஸ்திரீ கருத்தரிக்கக்கூடிய நிலைமையிலிருக்கிறாள் என்பதற்கு ஒரு விதமான அறிகுறியாகும்.நீர்த்தாரை (Urethra)
மூத்திரப்பை
சுக்கிலாசயம்
சுக்கிலம் (Seminal Fluid)
ஆண்குறி (The Penis)
ஆண்குறியின் நுனி (The Glans Penis)
ஸ்திரீகளின் ஜனனேந்திரியங்கள் (Female Genital Organs)
கருப்பை (The Uterus)
கருப்பாசயத்தின் ஸ்தானம்
யோனி (The Vagina)
பார்த்தலின் கோளங்கள்
நீர்த் தாரை (The Urethra)
மாதவிடாய்
மருத்துவ குறிப்புகள் : ஜனன இந்திரியங்கள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : The Sex Organs - Medicine Tips in Tamil [ Medicine ]