
மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் ஒரு முழு அத்தியாயத்தில் தியானத்தைப் பற்றி வருகிறது.
தியானம் பற்றிய கருத்துக்கள் மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் ஒரு முழு அத்தியாயத்தில் தியானத்தைப் பற்றி வருகிறது. இங்கு அனுபவம் வாய்ந்த திறமையுள்ள போர் வீரர் பீஷ்மாச்சாரியார் தியானத்தின் நான்கு வழிகளைச் சொல்லிய பின் முனிவர்கள், “இவ்வழிகளை அறிந்து அதன் மூலம் நிரந்தரமாக நலனை அடையலாம்" என்கிறார்கள். தியானத்தையே யோகம் என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்து யோகத்தின் உயிரே தியானம் தான் என்பது விளங்கும். “தியானத்தின் நான்கு வழிகள்" 1. பிராணாயாமம். 2. சூரிய ஒளியை தியானித்தல் 3. நாசி நுனி அல்லது நாவை நினைத்தபடி தியானம். 4. தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் உள்ள நிலையில் தியானம். தியானத்தின் பலன் மனத்தை அடக்குவது. இதை முழுமையாக சாதிக்க உதவும் உள்னதமான முறை பிராணாயாமமே. இதன் செய்முறை உள்ளே மூச்சை இழுக்கும் போதும் வெளியில் விடும் போதும் 1:2 என்ற முறையில் காலம் அமைத்துச் செய்யலாம். அதாவது ஓம் என்று ஒருமுறை சொல்லி மூச்சை இழுத்து இரண்டு முறை ஓம் சொல்லும் வரை மூச்சை வெளியிடலாம். மூச்சை உள்ளிழுக்கும் போது 'ஸ' என்றும் வெளிவிடும்போது 'ஹம்' என்றும் ஆக 'சோஹம்' என்று மூச்சை விடுவது நான்தான் அவன் என்று நினைப்பதாகும். இந்தச் சொல்லை சுவாசத்தின் மூலம் ஜெபிக்கும் பொழுது ஜெபிப்பவர்கள் தம்முள் இருக்கும் தெய்வத் தன்மையை உணருவார்கள். இது தியானம் நன்கு அமைய உதவியாகும். வேறு ஒரு வழியைச் சிலர் பின்பற்றுகிறார்கள். இதில் மூச்சை இழுக்கும்போது பிரபஞ்சத்தின் சாராம்சம் தம்முள் வருவதாகவும் வெளியே விடும் போது தம்முள் உள்ள அழுக்கு வெளியேறுவதாகவும் நினைக்கிறார்கள். இதைப் பயிற்சிப்பவர்களுக்கும் தியானம் நன்கு வரும். மூச்சை இழுப்பதும் வெளியிடுவதும் மிகவும் நிதானமாகவும், மெதுவாகவும் நடக்கவேண்டும். காலையிலும், மாலையிலும் 15 நிமிடங்கள் இப்பயிற்சியைச் செய்ய வேண்டும். இம்முறையில் தியானத்திற்கு இரண்டு வகையில் நன்மை இருக்கிறது. இதைப் பயின்றபடியே தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு எளிதாக வெற்றி கிட்டும். புதிதாக பழகுபவர்கள் முரட்டுத்தனமாக அதிகம் சிரமப்படக் கூடாது. ஏதாவது ஒரு வடிவத்தை தியானத்திற்கு வைத்துக்கொள்வது நல்லது. சிலர் ஒரு சிலையையோ அல்லது படத்தையோ உபயோகிக்கலாம். இதை முன்பே விவரித்திருக்கிறோம். ஆத்ம போதகர்களில் சிலர் தங்கள் முன்பு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக்கொண்டு அதில் தெரியும் தங்கள் வடிவையே மனதில் வைத்து தியானம் செய்கிறார்கள். இது நல்ல பலன் தரும் முறையாக உள்ளது. தியானத்திற்கு ஒரு நெய் விளக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த விளக்கு கண்களுக்கு எரிச்சலைக் கொடுக்காது. தியானத்திற்கு மேலே சொல்லிய பொருள்களுடன் செய்ய வேண்டிய பயிற்சிக்கு புருவ மத்தியில் மனத்தை அமைத்தல் என்று பெயர். இம்முறை தியானத்திற்கு உதவி செய்வதோடு கண்களுக்கும் கூர்மையான பார்வையை கொடுக்கிறது. இதற்கு நாம் எடுத்துக்கொண்ட பொருளை சுமார் 60 செ.மீ.தூரத்திற்கு வைத்து அதில் மனதை நிறுத்த வேண்டும். கண்களை இமைக்காமல் 1 நிமிடம் அந்தப் பொருளை பார்க்கவேண்டும். கண்களுக்கு சிரமம் ஏற்பட்டால் காலத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கண்களில் நீர் வடிந்தால் அவற்றை மூடிக்கொண்டு ஓய்வெடுத்து சிறிது நேரம் சென்று பயிற்சியைத் தொடரவேண்டும். இப்பயிற்சியில் கூடுமான வரையில் தீபத்தையே பார்க்கவேண்டும். இப்பயிற்சியை தொடக்க காலத்தில் 15 நிமிடங்களுக்கு காலை, மாலை, இரவு எப்போதாவது முடிந்த போது செய்து வரலாம். இப்பயிற்சி தியானத்திற்கு தேவையான மன உறுதியைத் தருகிறது. ஒரு தட்டில் நீரை வைத்துக்கொண்டு அதையே பார்த்தும் பயிற்சிக்கலாம். இந்த மன ஒருமையைப் பெறச் செய்யும் பயிற்சியை மூக்கு முனையை பார்த்தும், நாக்கின் நுனியைப் பார்த்தும் கூடச்செய்யலாம். இப்படிச் செய்வது சரியல்ல என்று சிலர் சொல்கிறார்கள். அதையெல்லாம் நம்பவேண்டாம். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலைக்கு மேல் செய்யும் தியானம்: ஒருவன் படுக்கைக்கு போகும் பொழுது மனம் குறைந்த அளவில் செயல்படும். அப்பொழுது தியானத்திற்காக மன ஒருமையை அடைவது எளிது. படுக்கைக்கு போகும் பொழுது அல்லது படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது சில நிமிடங்களாவது தியானத்தில் ஈடுபடவேண்டும். இம்மாதிரியான தியானம் மனத்தை வெகுகாலத்திற்கு நல்ல நிலையில் வைக்கிறது. இந்தக் காரணத்திற்காகத் தான் படுக்கைக்கு போகும் போதும், படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதும் கடவுளைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறோம். ஆத்மாவைப் பற்றி மன ஒருமையுடன் நினைக்க வேண்டுமென்று நம்முடைய மத நூல்களும் சொல்கின்றன. உன்னதமான பிரம்மச்சாரியான பீஷ்மர் மூன்று விதங்களாக தியானப் பயிற்சியாளர்களைப் பிரித்திருக்கிறார். 1. சாதாரண பயிற்சியாளர்கள். 2. சுமாரான பயிற்சியாளர்கள். 3. மேன்மையான பயிற்சியாளர்கள். 1. சாதாரண பயிற்சியாளர்கள்: ஓர் இஷ்ட தெய்வத்தின் விக்ரகம் அல்லது படம் வைத்துக்கொண்டு அதையே பயபக்தியோடு பூஜை செய்து வருவார்கள். அவர்களுடைய மனம் படிப்படியாக மன ஒருமையை அடைந்து தியானத்திற்குத் தயாராகும். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களின் மனங்களில் எண்ணங்கள் ஸ்திரமாக இராது. ஆனாலும் இந்த இடர்களை கடந்து தியானத்தில் வெற்றியடைவார்கள். 2. சுமாரான பயிற்சியாளர்கள்: தங்கள் மனத்திற்குள்ளேயே ஒரு வடிவத்தைப்பற்றி தியானம் செய்கிறார்கள். இதில் மனத்தின் செயல்கள் ஒரு குறிப்பிட்ட பாதை வழியே செல்கிறது. 3. மேன்மையான பயிற்சியாளர்கள்: தியானத்தின் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் தங்களுக்கு தேவையான போது தியானம் செய்வார்கள். தியானம் சாதாரணமாக நமது செயல்களுக்கும் உணர்வுகளுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் வழியாகிறது. இதன் 9-ஆவது அத்தியாயம் தியானம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது. ''உலகப் பாசங்களை அழித்து எல்லாத் துன்பங்களையும் குணப்படுத்தும் மருந்தாகிய தியானத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இந்த தியானம் பரம்பொருளை அடைய வழிகாட்டுகிறது என்று ஒருவன் உணர வேண்டும். பரம்பொருளும் தியானமும் வெவ்வேறாக இல்லை என்றும் உணருகிறான். தியானிப்பவரின் உணர்வுகளையெல்லாம் உன்னத நிலைக்கு கொண்டு வருபவராக உள்ளவரும், பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருப்பவரும், வடிவமில்லாதவரும், எல்லா உலகப் பொருள்களையும் விட மேலானவராக இருப்பவரும், யோகேஸ்வரராக இருப்பவரும் ஆன பரம்பொருளை அடைவேன் என்று தியானிக்க வேண்டும். அல்லது ஒருவன் தன்னைத்தானே உண்மையின் சொரூபம் என்றும், எல்லா வல்லமையும் உள்ளவர் என்றும் அறிவு, ஆனந்தம் உள்ள ஒரே ஒரு பொருளின் சொரூபம் என்றும் முதல், இடை, முடிவு இல்லாத புலன்களுக்கு அப்பால் உள்ளவர் என்றும் ஒப்புயர்வு அற்றவர் என்றும் நினைத்தபடி தியானம் செய்ய வேண்டும். இம்மாதிரி தியானம் ஒழுங்காகச் செய்தால் ஒருவன் தன்னை அறிவதுடன் பரம்பொருளையும் அறிகிறான். இக்குறிக்கோளை அடைந்தவுடன் தனிநபர் பரம்பொருளோடு ஐக்கியமாகி விடுகிறார். அந்த தியானத்தின் முறை கீழே சொல்லப்படுகிறது. யோகி ஒரு தனியிடத்தில் ஓர் இருக்கையில் இருக்க வேண்டும். தன் சரீரத்தையும் மனதையும் பிராணாயாமம் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். அநாவசியமான ஆசைளை விட்டு விட்டு தன் மனதை கடவுளுடன் இணைக்க வேண்டும். இலேசாக உள்ள புல், பாய் அல்லது மான்தோல் இல்லையேல் சாதாரண் துணி மேல் உட்கார்ந்துகொண்டு தன் அறிவை மனத்தில் ஒன்றுபடச் செய்து யோகம் செய்யவேண்டும். அப்போது அவள் தன் உடல், தலை, கழுத்து ஆகியவற்றை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். வேறெங்கும் பார்க்காமல் தன் நாசி நுனியை பார்க்கவேண்டும். கூடுமானவரையில் தன் மனத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். தன் மனதை அடக்கி ஆண்டவனில் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ள முயல வேண்டும். தியானத்தின் போது மனத்தின் இருப்பை காற்றில்லாத இடத்தில் உள்ள தீபத்தோடு கிருஷ்ணர் ஒப்பிட்டு இருக்கிறார். தியானம் சரியாக நடப்பதற்கு பகவான் கிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு சொல்கிறார். தியானிப்பவன் அதிகமாக சாப்பிடக்கூடாது. அதற்காக பட்டினியும் இருக்கக்கூடாது. அதிகமாகத் தூங்கவும் கூடாது. அதிகமாகக் கண் விழித்திருக்கவும் கூடாது. ஏனெனில், எதிலும் அளவை மீறுதல் தியானம் செய்ய விடாது. வயிறு முழுவதும் ஆகாரம் இருந்தால் தூக்கம் தான் வரும். தியானத்தில் ஈடுபட இயலாது. பயிற்சியின் தொடக்கத்தில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் மேலும் மேலும் முயலவேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் சொல்லுகிறார். யோகம் மூலம் மனம் கட்டுப்படுகிறபொழுது அது பரமானந்தத்தைத் தருகிறது. பயிற்சி செய்கிறவர் ஆனந்தத்தை அடைகிறார். சில அடையாளங்கள் முன்கூட்டியே தெரியும். உலகத்தில் உள்ள மிகப்பெரிய துன்பம் அவனுக்கு வந்தாலும் அதனால் கலங்கமாட்டான். இந்த புராணத்தில் 58 ஆம் பகுதியில் தியானத்திற்கான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை: பத்மாசனத்தில் உட்கார். கெட்ட எண்ணங்களை எல்லாம் மனத்திலிருந்து அகற்று. ''ஓம்'' என்ற பிரணவ மந்திரத்தை தொடர்ந்து ஜெபி. தொப்புள் பக்கம் உள்ளங்கையை வைத்துக்கொண்டு பிராணாயாமத்தின் மூன்று நிலைகளை பழகு. அதாவது உள்ளே மூச்சை இழுத்தல், மூச்சை அடக்குதல், வெளியே மூச்சை விடுதல் ஆகியவற்றை பயிற்சி செய். இது சூரிய வழியில், சந்திர வழியில், சுழுமுனை வழியில் அதாவது மூவகை நாடிகளில் மூச்சை விடுதல் ஆகும். இதனால் உடலில் உள்ள உயிரை காக்கக்கூடிய ஐந்து வகை பிராணங்களை சுத்தம்செய். முதலில் உன் கவனத்தை கால் விரலில் வைத்துப் பழகு. அதன்பின் உயிரின் சக்தி மேலே வந்து தொப்புளில் நகராமல் இருப்பதாக மனத்தில் நினை. புகையில்லாத அக்னியோடு ஒப்பிடப்படக்கூடிய பரம்பொருளோடு உயிரின் சக்தியையும் பற்றி தியானம் செய். இதற்குப் பிறகு இந்த உயிரின் சக்தியை மேலே கொண்டு போய் இதயத்தில் நிலையாக இருக்கும்படி செய். இப்போது இந்த உயிரின் சக்தியை சந்திரன் வடிவில் தியானம் செய். இதற்குப் பிறகு இந்த உயிரின் சக்தியை மூளைக்குக்கொண்டு போய் சூரியனின் வடிவில் தியானம் செய். இறுதியாக இப்பேர்ப்பட்ட தியானம் மூலம் மனிதனின் உயிர்ச்சக்தி சூரியனுடைய உலகத்திற்கு எடுத்துக்கொண்டு போகப்படுகிறது. இந்தப்பழைய ஞான நூலில் மனத்தின் நிலை மிகவும் முக்கியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் வசிட்ட முனிவர் மூவுலகங்களும் மனத்தினாலேயே படைக்கப்பட்டவை என்று சொல்கிறார். மேலும் அவர், பேராட்டங்களினாலும் பொருள்களின் கவர்ச்சியினாலும் வாழ்க்கை என்பது கெடுக்கப்பட்ட மனத்தின் மோசமான உணர்வுகளால் உண்டான செயல்களால் ஏற்பட்டது என்கிறார். மூன்று உலகத்தை பற்றியுள்ள சங்கதிகள் எல்லாவற்றையும் மனம் தன்னுள் சேமித்து வைத்திருக்கிறது. தக்கசமயம் வரும்போது இந்த சங்கதிகள் மனிதனின் நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றன. மனிதன் தான் செய்கிற காரியங்ளுக்கு எல்லாம் காரணம் தன் இனம் ஒன்று தான் என்று அறிய வேண்டும். மனதால் தான் வாழ்க்கை உருவாக்கப்படுகிறது. ஆகவே, மனதை தியானப்பயிற்சியின் மூலம் உறுதியாகவும், பலமானதாகவும், நிதானமானதாகவும் வைக்கவேண்டும். மனம் உள்ளவன்தான் மனிதன் என்பவன். உலகில் நடக்கின்ற அத்தனை காரியங்களும் மனத்தையே காரணமாக உடையன. ஓர் உதாரணம் பார்ப்போம். ஒரு ராணி ஒரு கற்றவருடன் காதல் கொள்கிறாள். அவ்விருவரும் சிரித்த முகத்துடன் பலவகை சிரமங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு வந்த துன்பங்களை அவர்களை ஏன் உணரவில்லை என்று கேட்டதற்கு கற்றவன் பதிலளிக்கிறான் "என்னுடைய உலகம், வாழ்க்கை எல்லாம் என்னால் நேசிக்கப்படுகிற பெண்மணியிடம் ஒன்றி இருக்கிறது. எனவே, எனக்கு வரும் வேதனைகள் எதுவும் என்னை ஒன்றும் செய்யமுடியாது. இதே போலவே அந்த ராணியும் உணர்கிறாள்.'' இப்படியே உலகம் எல்லாம் மனத்திலேயே இருக்கிறது. ஆகவே துக்கத்தில் துடிக்க வேண்டிய காரணம் இல்லை. "ஓ அரசனே! என் மனம் எப்படி இருக்கிறதோ அப்படியே நான் இருக்கிறேன். மனம் தான் மனிதன்" என்று வசிட்டர் ராமபிரானுக்கு சொன்னதாக நூல் தெரிவிக்கிறது. மனம் வேறு, உடல் வேறு அல்ல. எண்ணெய் வித்தும் எண்ணெயும் வேறல்ல என்பது போல. மனம் மனிதனின் மற்றொரு சரீரம் என்று பிரம்மா சொல்கிறார். அதற்கு தனி இருப்பு கிடையாது. இந்த மனம் தியானத்தின் மூலம் பலப்படுத்தப்பட்டு நிதானம் உள்ளதாக்கப்பட்டால் வாழ்க்கை நலமாகும். பிறர் நம்மைப்பற்றிப் பேசும் பழிச்சொல் நம்மை பாதிக்காது. நீர், தீ, கூர்மையான அம்புகள் கற்களில் விழுந்தால் எப்படி ஒரு பயனும் இருக்காதோ அதே போல சுடுவார்த்தைகள் நம்மை பாதிக்காது. எதற்காக இவ்வுலகத்தில் வந்து பிறந்தோம் என்பதைப் பற்றி, பரம்பொருளைப் பற்றி தியானத்தினால் அடையும் அறிவு நிரந்தரமானது. பிரம்மா வசிட்டரிடம் தியானத்தின் மூலம் முழுமையை அடைந்தவனை போராட்டங்கள், நோய்கள், சாபங்கள் எந்த ஒன்றும் பாதிக்கமுடியாது என்றார். கல் எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ அவ்வளவு பலத்தை தியானத்தின் மூலம் மனம் அடைகிறது. கல்லை எதுவும் பாதிக்காது போல தியானம் பெற்ற மனத்தையும் எதுவும் பாதிக்காது. தியானத்தின் மூலம் மனதை கட்டுப்படுத்துபவனுக்கு ஐம்புலன்களையும் அடக்குவது மிகவும் எளிது. ஆகவே தியானத்தின் மூலம் ஒருவன் உன்னதமான நிலையை அடைகிறான். நிதானமில்லாத மனது நிதானமாக மூச்சை இழுத்து விடுதலாலும் ஓரிடத்தில் தனியாக இருந்து தியானம் செய்வதாலும் சரியாகும். இந்த மிகப்பெரிய கட்டுரையில் தியானத்தின் மூலம் மனத்தை சரியான நிலைக்கு கொண்டு வருவது அதிக முக்கியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவயோகிகள் தங்களுடைய மனதைப்பார்க்க கண்ணில் படக்கூடிய பொருள்களின் மேல் மனதை அதைப்பற்றியே எண்ணி மன ஒருமையை அடைந்த பிறகு வைத்து தியானத்திற்கு செல்வதாக வேதவியாச முனிவர் கூறுகிறார். ஏனெனில் மனம் இப்பயிற்சியால் நிதானமாக இருக்கும். அவரது கருத்தின்படி தியானம் என்பது ஒரு பொருளின் மேல் தொடர்ந்து கவனத்தைச் செலுத்துவது தான். அப்புறம் அந்தப் பொருள் பார்வையிலிருந்து அகன்று விடும்போது தியானம் தன்னைத்தானே அறிந்துக்கொள்ளும் முறை என்றே கருதப்படுகின்றது. நன்கு பயிலுபவர்களுக்குள்ள தகுதிகள் யாதெனில், அவன் அறிவு உள்ளவனாக இருக்கவேண்டும். உலகத்தில் உள்ள பொருள்களில் எதன் மேலும் பாசம் வைக்கக்கூடாது. அவனுடைய மனம் நிதானமாக இருக்க வேண்டும். தியானம் போன்ற புனிதமான வேலை வேறு ஒன்றுமில்லை. தியானத்திற்கு ஒப்பான நல்லது எதுவுமில்லை. யாகத் தீயைக் கூட தியானத்துடன் ஒப்பிட முடியாது. ஆகவே சரியான முறையில் தியானம் செய்யவேண்டும். பெரிய தத்துவ ஞானியும், அத்வைதத்தை நிறுவிய சங்கராச்சாரியாரும் விவேகசூடாமணி என்ற தம் நூலில் தியானத்தைப் பற்றிக் கூறி இருக்கிறார். உன்னுள் உள்ள உன்னதமான 'நான்' என்பதில் 'தான்' என்ற புத்தியோடு ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி மனதை அமைதியாகச் செலுத்து, நீயும் பரம்பொருளும் ஒன்றேதான் என்ற எண்ணத்துடன் இருந்து ஆரம்பமில்லாத அறியாமை என்னும் இருட்டைப் போக்கு. யோகத்தின் முதற்படி: 1. பேச்சை அடக்குதல், 2. எதையும் எதிர்பார்க்காமல் இருத்தல், 3. தேவையற்ற சங்கதிகளில் தலையிடாமல் இருத்தல், 4. தனியிடத்தில் இருத்தல். தனியிடம் நம் புலன்களை அடக்குவதற்கு உதவியாக இருக்கும். கட்டுப்பட்ட மனம் 'நான்' என்ற அகங்காரத்தை அழிக்கிறது. இதைத்தொடர்ந்து பேரானந்தம் வருகிறது. சிந்திக்கக் கூடிய எந்த மனிதனும் மனதை அடக்கவே முயற்சிக்க வேண்டும்.பிராணாயாமம்
ஜாப உபநிடதம்:
சம்பா (சாம்ப) புராணம்:
யோக வசிஷ்டம்:
சிவபுராணம்:
விவேக சூடாமணி:
ஆரோக்கிய குறிப்புகள் : தியானம் பற்றிய கருத்துக்கள் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Thoughts on meditation - Health Tips in Tamil [ Health ]