
மூக்குப் பொடியாகவும், சிகரெட்டாகவும், பீடி, சுருட்டு போன்ற உருவத்திலும் புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கம் நம்மக்களிடையே இருக்கிறது.
வாய்ப் புண், பற்கள் வலி, வயிறு வலி நிவாரணம் அடைய: மூக்குப் பொடியாகவும், சிகரெட்டாகவும், பீடி, சுருட்டு போன்ற
உருவத்திலும் புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கம் நம்மக்களிடையே இருக்கிறது. நம் மக்கள் மட்டுமென்ன புகை பிடிக்கும் வழக்கம் உலக முழுவதிலுந்தான் இருக்கிறது. நமது நாட்டில் புகையிலையினை வாயிலிட்டு சுவைக்கும் பழக்கம் அதிகப்படியாக
இருக்கிறது. உலகத்தில் இந்தப் பழக்கம் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. புகையிலையை எந்த உருவத்தில் பயன்படுத்தினாலும் அதனை உபயோகிப்பவர்கள்
கூறும் முக்கியமான காரணம் உடலில் சுறுசுறுப்பு உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. மனத்திற்கு
இதமாகவும், தெம்பாகவும் இருக்கிறது என்பது தான். இந்த நிலை புகையிலைப் பொருட்கள் நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும்
செயற்கையான கிளர்ச்சி காரணமாகத் தோன்றுபவைதான். நிர்பந்தமாகப் பலாத்காரமாக நரம்பு மண்டலத்தில் செயற்கையான கிளர்ச்சியினை
புகையிலைப் பொருட்கள் தோற்றுவிக்கின்றன. இந்தக் கிளர்ச்சியின்
விளைவாகத் தோன்றும் சுறுசுறுப்பு உற்சாகம் போன்றவை நிரந்தரமாக இருப்பதில்லை. இரண்டொரு
நிமிஷங்கள் தான் இவை நிலைத்திருக்கும். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் செயற்கை கிளர்ச்சி காரணமாக நரம்புகள்
அதிர்ச்சியும் பல வீனமுமடைந்து விடுகின்றன. தொடர்ந்து
புகையிலைப் பழக்கம் இருக்கு மானால் நரம்பு மண்டலம் சீரழிந்து இயல்பான செயல் முறையினின்றும்
கீழிறங்கி விடுகின்றன. இதன் விளைவாக பலவிதமான பயங்கரமான நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டு
மனிதனுடைய உடல் கெட்டழிந்து ஆரோக்கியம் குன்றி விடுகின்றது. ஆகவே நரம்பியல் கோளாறுகள்- பிணியி லிருந்து உடலைக் காப்பாற்றிக்
கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் புகையின் உபயோகத்தினால் ஏற்படக்கூடிய பயங்கரத் தீங்குகளைப் பற்றி
அவசியம் தெரிந்து அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முயல வேண்டும். வெற்றிலைப் பாக்கு போடும் வழக்கமுள்ள சிலர் வெற்றிலையுடன் புகையிலையையும்
சேர்ந்து மெல்லுகின்றனர். இவர்களில் சிலர் புகையிலைச்
சாற்றை விழுங்கி விடுவதுண்டு. சிலர் சுவைத்து மென்ற புகையிலையைக் கீழே உமிழ்ந்து விடுவதுண்டு.
இந்த இரண்டு வகையும் உடலில் மோசமான விளைவுகளைத் தோற்றுவித்துவிடும். புகையிலைச் சாற்றை விழுங்கா விட்டாலும் கொஞ்சமாவது வயிற்றுக்குள்
சென்று விடும். புகையிலைச் சாறு வயிற்றுக்குள் செல்லா விட்டாலும் வாய், தொண்டை, நாக்கு போன்ற பகுதிகளில் புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலை வழியமைத்துவிடும். புகையிலைச் சாற்றை விழுங்க நேர்ந்தால் அந்தச் சாறு உணவு மண்டலத்தில்
நுழைந்து இரத்தத்தில் முழு அளவு ஈர்க்கப்படுவதால் புகையிலையின் தீயவிளைவுகள் அத்தனையும்
அவர்களுக்கு ஏற்படுகின்றன. குறிப்பாக உணவு மண்டலத்தின்
பகுதி களான உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் தோன்றும். புகையிலையைச் சுவைக்கும்போது நரம்புகளால் அவற்றின் விறுவிறுப்புச் சுவை
ஈர்க்கப்படுவதால் நரம்பு மண்டலம் கிளர்ச்சிக்கும் அழற்சிக்கும் இலக்காகி நரம்புகள்
பலவீனமடைகின்றன. புகையிலைத் தூளை மூக்குப்பொடியாகப் பயன்படுத்துவதாலும் மூக்கின்
நுண் உணர்வு நரம்புகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. இதனால் வாசனை அறியும் ஆற்றலே
அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். மற்றும் மூக்குப் பொடியை
வேகமாக உறிஞ்சும் போது உணவுக்குழாய் மூளைப் பகுதி ஆகியவற்றில் அது சென்றடைய நேரிடுகிறது.
இதன் காரணமாக தொண்டையில் அழற்சியும் சில சமயம் புற்று நோயும் ஏற்பட வழியுண்டு. மூளையில்
கடுமையான உறுஞ்சுதல் ஏற்பட்டு மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள நரம்புகள் பெரிய பாதிப்புக்கு
உள்ளாகும். புகையிலையைப் புகைப்பதனால் ஏற்படக் கூடிய
தீங்கினை அளவிட்டுக் கூற முடியாது. இந்தப் பழக்கம் உயிருக்கே உலை வைக்கக் கூடியதாகும். புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் நிச்சயமாகத் தன் மரணத்துக்கு
தானே அடிகோலிவிடுகிறார். அவர் மரணத்திலிருந்து மீளுவது என்பது நடவாத காரியம். புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு சுவாசக் குழாயில் சளி பிடிப்பது மிகவும் சாதாரண விஷயமாகும்.
இதனை "பிராங்கைட்டிஸ்" (Bronchitis) என்ற பெயரில் மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். புகை பிடிப்பவர்கள்
எந்த வயதினராக இருந்தாலும் சதா 'லொக் லொக்' என இருமிக் கொண்டிருப்பதைக் காணலாம். சுவாசக் குழாயில் ஏற்படும் இந்தப் பாதிப்பு நாளடைவில் ஆஸ்துமா, இருதய நோய்
என்றெல்லாம் வளர்ந்து விடக்கூடும். வயிற்றுப் புண் உள்ளவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால்
வயிற்றுப்புண் வாழ்நாள் முழுவதும் ஆறாது. அந்தப் புண் பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடக்கூடிய
அபாயமும் உண்டு. புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய மற்றொரு
அபாயகரமான விளைவு கண் பார்வை பாதிக்கப்படுவதாகும். புகைப் பிடிக்கும் பழக்கம் தொடர்ந்து உள்ளவர்களுக்கு கண்பார்வைக்கு
உரிய முளையிலிருந்து உருவாகி வரும் ஆப்டிக் (Optic nerve) நரம்பு
பெரிதும் பாதிக்கப்படுகிறது. சுங்கான் என்னும் குழாய்ப் புகையிலையை அடைத்து புகை பிடிப்பவர்களுக்கு
இந்த மாதிரி குறைபாடு அதிக அளவில் ஏற்படும். இந்தக் குறைபாடு காரணமாக கண் பார்வைக்கு ஆதாரமான நரம்புகள் பாதித்து
செயல் திறனை இழந்து பார்வையே அற்று விடும். அவர்கள் பார்க்க முடியாத குருடர்கள் ஆகி விடுவார்கள். புகை பிடிக்கும் பழக்கத்தினால் உணவுக் குழாயில் அழற்சி தோன்றி
வயிற்றின் மேற்புறம் எப்போதும் எரிச்சல் இருந்து கொண்டேயிருக்கும். புகைபிடிக்கும் பழக்கம் நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை இறுக்கமடையச்
செய்து மாரடைப்பு நோய் ஏற்பட வழியமைத்து விடுகிறது. நுரையீரல் புற்று நோய் புகைப் பிடிக்கும் வழக்கமுடையவர்களுக்கு
ஏற்படக் கூடிய மிகக் கொடுமையான நோய் ஆகும். நுரையீரல்
புற்றுநோய்க்கு இலக்கானவன் சிறுகச் சிறுக தன் வாழ்க்கையைச் சித்திரவதை செய்துக் கொண்டு
கடைசியில் பரிதாபமாக மரணத்தை தழுவுகிறான். புகைப் பிடிப்பதன் காரணமாகத் தோன்றக் கூடிய எந்த வகை பாதிப்பும்
ஏதாவது ஒரு விதத்தில் நரம்புமண்டலத்தை அழற்சிக்குள்ளாக்குவ தாகத்தான் அமைகிறது. புகைபிடிக்கும் பழக்கமுள்ள சிலருக்கு மேலோட்டமாக எந்த விதமான
குறைபாடும் தெரியாது. ஆனால் அவர்கள் உள்ளுக்குள் படுமோசமான நரம்பு நோய்களுக்கு இலக்காகி
இருப்பார்கள். புகைப் பிடிக்கும் வழக்கத்தினால் ஏற்பட்ட கோளாறுகள் - பிணிகளுக்கு
சிகிச்சை முறை சொல்வதனால் ஒருவித பயனும் இல்லை. என்ன சிகிச்சை மேற்கொண்டாலும், புகை பிடிக்கும்
வழக்கத்தை நிறுத்தினாலொழிய எந்தக் குறைபாட்டினையும் சரி செய்யவே முடியாது. ஆகவே முதலில் புகைப் பிடிக்கும் வழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள்.
அதற்குப் பிறகு அந்தப் பழக்கம் காரணமாக ஏற்பட்ட எல்லாப் பிணிகளும் தானாகவே எந்தவிதத்
தீவிரமான சிகிச்சையையும் மேற்கொள்ளாமலே குணமாகிவிடும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாய் வேக்காடு, வாய்ப்புண்
உண்டாகும். இதை வில்வப்பழம் போக்கி விடும். வில்வப்பழத்தின் சதை பாகத்தில் இரண்டு ரூபாயெடை
எடுத்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பிசைந்து, காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு விட வேண்டும். இந்த விதமாக தொடர்ச்சியாக மூன்றே நாள் சாப்பிட்டால்
போதும், வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமாகும். குறிப்பு
நரம்பு தொடர்பான பிணிகளைத் தோற்று விப்பதில் புகைப்பிடிக்கும்
பழக்கத்தைவிட குடிப்பழக்கம் மிகவும் தீவிரமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியதாகும். புகைப் பழக்கமாவது வேறு பல பிணிகளைத் தோற்றுவித்து அதன் காரணமாக
நரம்பு மண்டலத்தைச் சீர்குலைக்கிறது. குடிப் பழக்கமோ எடுத்த எடுப்பிலேயே நரம்பு மண்டலத்தைப்
பாதித்து அதனைச் சீர்குலைத்து பிணி வாய்ப்பட வைக்கிறது. மது அருந்தும் ஒருவன் உணர்ச்சி சீர்குலைவுக்கு இலக்காகிறான்.
நரம்பு மண்டலத்தின் குழறுபடியான செயற்பாடுதான் இதற்கு காரணமாகும்.
ஒரு மனிதன் மது அருந்திய உடன் இரத்தத்தில் கலக்கின்ற அந்த மது மனிதனின் முக்கிய இன்றியமையாத முளை நரம்பு மண்டலத்தைச் சென்றடைகின்றது. இந்த நிலையானது மது அருந்திய சில
மணித் துளிகளிலேயே ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு மூளை நரம்பு மண்டலத்தை அடைந்த மதுவானது மூளை நரம்பு
மண்டலத்தை உடனடியாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதன் காரணமாக மூளை நரம்பு மண்டலம்
பலவீனமடைந்து தளர்ச்சி அடைகின்றது. இதன் விளைவாக முதலில் தலைச்
சுற்றல் ஏற்படும். பின்னர் ஒரு மாதிரியான சிறுகிறுப்பு தோன்றும். அடுத்து மது அருந்தியவன்
நடையில் தள்ளாட்டம் காணப்படும். இரத்தத்தில் ஒரு லிட்டரில் 500 மில்லி கிராம் அளவுக்கு மது இருந்தால் கண் பார்வை மங்கிவிடும்.
பேச்சு தடுமாறி உளறலாக வெளிப்படும். கண்கள் இரத்தச் சிவப்பேறி சுழலத் தொடங்கும். இரத்தத்தில் ஒரு லிட்டரில் மூன்று கிராம் அளவில் மது இருந்தால்
கை கால்களில் தடுமாற்றமும் நடுக்கமும் ஏற்படும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும். சுருங்கச் சொன்னால் மதுப்பழக்கம்
மனித உடலின் இயல்பு நிலையை படுமோசமான சீர் குலைவுக்கு உள்ளாக்கி சிதைத்து
விடுகின்றது. மது அருந்துபவர்களின் உடலில் எடுத்த எடுப்பிலேயே நரம்பு மண்டலந்தான் பாதிப்புக்கு இலக்காகிறது. முக்கியமாக நரம்பு மண்டலத்தின் தலைமைப்பீடம் எனக்
கருதப்படும் மூளை பெரும் அதிர்ச்சிக்கும் சிதைவுக்கும் இலக்காகிறது.
நீடித்த மதுப் பழக்கம் நரம்பு மண்டலத்தை முற்றிலும் பலவீனமாக்கி
வேறு எந்த வகையிலும் அதனைச் சீர்திருத்த முடியாத அளவுக்குப் பாழ்படுத்தி விடுவதால்
எந்தவிதமான தீவிரமான சிகிச்சை முறைகளினாலும், சக்தி வாய்ந்த
மருந்துகளினாலும் உடலைச் சீர்செய்யவே முடியாத நிலை ஏற்படும். ஆகவே நரம்பு தொடர்பான பிணிகள் வராமல் தடுக்க, குடிப் பழக்கத்தை முதலில் விட்டே
ஆக வேண்டும். இது இயற்கையில் ஒரு விநோதமான பழம். எல்லா வகையான பழங்களுக்கும்
அதன் விதை அல்லது கொட்டை பழத்தின் உள் பாகத்தில், நடுவில் அமைந்திருக்கும்.
ஆனால் இந்த முந்திரிப் பழத்திற்கு மட்டும் பழத்திற்கு வெளிப் பக்கமாக கொட்டை ஒட்டிக்கொண்டிருக்கும்.
முந்திரிப் பழம் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை நீளமுள்ளதாக இருக்கும். இதன் நுனிப் பாகம் சுமார்
6 செ.மீ குறுக்களவுள்ளதாக
வரவரக் குறுகி கடைசியில் 2 செ.மீ அளவில் முடிவடைந்து
விடும். பழத்தின் முன் பக்கம் 4 முதல் 5 செ. மீ நீளமும் செ.மீ குறுக்களவுமுள்ளதுமான
முனை சுருங்கி, அடி பெருத்த பக்க வாட்டில் சப்பை வடிவத்திலுள்ள முந்திரிக்கொட்டை
ஒட்டிக் கொண்டிருக்கும். பொதுவாக முந்திரிப் பழம் சிவப்பு நிறமாக இருக்கும். சில வகை
முந்திரிப்பழம் மஞ்சள் நிறமாகவும், சிலவகை முந்திரிப்பழம் மஞ்சள் நிறம் கலந்துமிருக்கும். இது மிருதுவாக
இருந்தாலும் நார் போன்று பலமுள்ளதாக இருக்கும். தோலுடன் மஞ்சள் நிறமான சதைப் பற்றும்
ஒட்டிக் கொண்டிருக்கும். தோலையும் சதைப் பற்றையும் தனியே பிரிக்க முடியாது. பழத்தின் உட்புற சதைப்பற்றும் கூட நார் உறுதியாக ஆனால், பஞ்சு போல போன்று இருக்கும். இதன் ருசி இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு
கார்ப்பு கலந்ததாக இருக்கும். அதில் தனிப்பட்ட ஒரு நெடி உண்டு. இது தொண்டையை கரகரக்க
வைக்கும் முந்திரிப்பழத்தில் எந்தவிதமான வைட்டமின் உயிர்ச் சத்துக்களும் கிடையாது.
சுண்ணாம்புச் சத்து மட்டுமே அதிக அளவில் இருக்கிறது. முந்திரிப் பழத்திலுள்ள சுண்ணாம்பு, இரும்புச்சத்தின் அளவு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வைட்டமின் A,B,C
உயிர்ச்சத்து எதுவும் கிடையாது சுண்ணம்புச் சத்து -
3 மி.கி. இரும்புச் சத்து -
௦.1 மி.கி. இதன் உஷ்ண அளவு - 14 காலரிகள்.
முந்திரிப் பழத்தைச் சாப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான கெடுதலும்
செய்யாது. நன்மையும் ஏற்படாது. எலும்புகளுக்கு உறுதியைத் தரும். பற்களுக்குப் பலத்தைத்
தரும். கோடை காலத்தில் முந்திரிப் பழத்தை தேவையான அளவு வாங்கி வந்து, கொட்டைகளை
நீக்கி விட்டு, பழத்தை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசைந்து, சாறு பிழிந்து, சாறு உள்ள
அளவில் பாதியளவு சர்க்கரையைப் போட்டுக் கலக்கி வெய்யிலில் வைத்தால் அடியில் சுண்ணாம்பு
வண்டல் அப்படியே படிந்து விடும். மேலே தெளிந்த நீர் நிற்கும். தொண்டை கரகரப்பு ஏற்படாது. கோடையில் தணிக்கும்.
ஏற்படும் தாகத்தைத் முந்திரிப் பழத்தைப் பலர் விரும்பிச் சாப்பிட
மாட்டார்கள். இதிலுள்ள கரகரப்பு பலருக்குப் பிடிக்காது.
முந்திரிக் கொட்டையினுள் பருப்பு இருக்கும். முந்திரிக்கொட்டையை பதமாகச் சுட்டு. உடைத்து
பருப்பை எடுப்பார்கள். முந்திரிப் பருப்பு ருசியாக இருக்கும். பலகாரங்களுடன் முந்திரிப்
பருப்பைச் சேர்ப்பார்கள். சில வகை பதார்த்தங்கள், - பொங்கலிலும் முந்திரிப் பருப்பைப் போடுவார்கள். இதற்கு ஒரு தனிப்பட்ட
ருசி உண்டு.புகையிலைப் பழக்கமும் நரம்பு
நோய்களும்
வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு
மது அருந்துதலும் நரம்பியல்
பிணிகளும்
முந்திரிப் பழம்
சித்த மருத்துவம் : வாய்ப் புண், பற்கள் வலி, வயிறு வலி நிவாரணம் அடைய - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : To get relief from mouth sore, toothache, stomach ache - Siddha medicine in Tamil [ Health ]