
தினந்தோறும் அதிகாலையிலே சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும்.
நோய் வராமல் நலமாக வாழ வழிமுறைகள் 1. தினந்தோறும் அதிகாலையிலே சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும். 2. மலம் நிவர்த்தி செய்ய வேண்டும். 3. பல் நன்றாக துலக்க வேண்டும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ஆகவே ஆலமரக்குச்சி அல்லது வேலங் குச்சியினால் பல் துலக்குதல் நல்லது. 4. குளிர்ந்த நீர் அல்லது வெந்நீரில் தினந்தோறும் நீராட வேண்டும். தலையை நீக்கி நீராடக் கூடாது. சுத்தமான உலர்ந்த துணியினால் துவட்டிக் கொள்ளவும். 5. கடவுள் வழிபாடு உள்ளத்திற்கு அமைதியைத் தரும். தியானம் நல்லது. 6. சிற்றுண்டி அருந்திய பிறகே தொழிலில் ஈடுபட வேண்டும். உணவருந்தும் போது பேசவே கூடாது. நன்றாக மென்று சுவைத்துச் சாப்பிட வேண்டும். 7. தண்ணீரைக் கொதித்து ஆறிய பின் பருகுவது நல்லது. தினசரி உணவு வகையில் காய்கறிகள், கீரை, பழங்கள், நெய், மோர் சேர்க்க வேண்டும். 8. பகல் உணவை விட இரவு உணவு குறைவாகவும், எளிய வகையாகவும் இருக்க வேண்டும். 9. வாரம் இருமுறை அல்லது சனிக்கிழமையாவது நல்லெண்ணெய் தேய்த்து ஊறி, நீராட வேண்டும். 10. ஆண்கள் இடப்பக்கமும், பெண்கள் வலப்பக்கமும் படுத்து தூங்க வேண்டும். உண்ட உணவு சுலபமாக சீரணமாகும். 11. விந்து விட்டாயோ நொந்து கெட்டாயோ என்ற பழமொழிக்கு ஏற்ப விந்துவை என்றும் பாதுகாக்க வேண்டும். மாதம் ஒன்று இரண்டு முறையே மனைவியோடு மருவ வேண்டும். உணவிலிருந்து தாம்பத்திய உறவு வரை மிதம் வேண்டும். 12. மது அருந்துதல், புகை பிடித்தல், பொடி போடுதல், புகையிலை, பான்பராக் போன்றவற்றை மெல்லுதல் போன்றவை தவிர்ப்பது நல்லது. 1. காலையில் 2 கி.மீ நடப்பது நல்லது. 2. உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள்தோறும் நல்லது. 3. காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். 4. கீரையும், தயிரும் இரவினில் வேண்டாம். 5. உப்பு, புளி, காரம் குறைத்துண்ணலே உகந்தது. 6. கசப்பும் உணவில் கட்டாயம் சேர்த்து உண்ண வேண்டும். 7. மரங்களின் அடியில் இரவினில் உறங்க வேண்டாம். 8. வெளிச்சமும், காற்றும் வீட்டினுள் வர வேண்டும். 9. பகலில் தூக்கம் தவிர்த்தல் நன்று. 10. தினமும் எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காதே. 11. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. 12. நாய்,பூனைகளுடன் கொஞ்சுவது கேடு. 13. மலர்களை இரவில் மறந்தும் முகரக் கூடாது. 14. வடதிசை தலை வைத்து தூக்கம் கொள்ளக் கூடாது. 15. எண்ணெய் குளியல் எழில் சேர்த்திடும். 16. கொழுப்பு உணவுகள் குறைத்தல் நல்லது. 17. கருணை தவிர மற்ற கிழங்குகளை உண்ண வேண்டாம். 18. உண்டவுடனே உறக்கம் கொள்ள வேண்டாம். 19. உள்ளாடைகள் மிகவும் இறுக்கமாக அணியக் கூடாது. 20. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பேண வேண்டும். 1. தெரியாத தொழிலை செய்யக் கூடாது. 2. நாணயம் கெட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது. 3. பல வருடங்கள் நம்பிக்கையாய் இருந்தவரை திடீரென்று சந்தேகிக்கக் கூடாது. 4. மொத்த வருமானத்தில் 5ல் ஒரு பங்கு சேமிக்க வேண்டும். 1. பெண்கள் இரவு விளக்கு வைத்த பின்னர் அழக் கூடாது. 2. காலை ஆட்டக் கூடாது. மல்லாந்து படுக்கக் கூடாது. 3. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது. 4. திருமணமான பெண் கையில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது. 5. கன்னிப் பெண்கள் சாந்து பொட்டையும், திருமணமான பெண்கள் குங்குமப் பொட்டையும் வைத்துக் கெள்ள வேண்டும். அ) வாந்தி ( குமட்டல்) 1. சாப்பாட்டிற்கு முன் 2 கி. ஏலரிசிப் பொடியை தேவையான எனுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள் உட்கொண்டு வர கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் குமட்டல், வாந்தி தடுக்கலம் 2. சுத்தமான நல்லெண்ணை சிறிதளவு பூப்பெய்தும் இளம்பெண்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்தால் கருமுட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகிறது கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது 3. இளம் தென்னம்பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை 2 பமையண்டி அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியன குணமாகும். 4. தென்னம்பாலை இளசாகக் கொண்டு வந்து இடித்து சாறாக்கி அத்துடன் பசும்பால் சேர்த்து அருந்தி வர பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், பெரும்பாடு ஆகியன குணமாகும். 5. மாவிலிங்கப்பட்டை அல்லது இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர சுரம், வெள்ளை, வெட்டை, கல்லடைப்பு, சூதகப்பட்டு மற்றும் உடலில் ஏற்படும் குத்தல், குடைச்சல் குணமாகும். ஆ. தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்க 1. மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றி பால் சுரக்கும். மார்பகத்தில் நீர்கட்டிகள் கரைந்து விடும். 2. தர்ப்பை புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவில் பாலில் கலந்து குடித்து வர பிரசவித்த தாய்மார் களுக்கு அதிகமாய் பாலைச் சுரக்கச் செய்யும். இ. ஆண் குழந்தை வேண்டுமா? 1. சோடியம், பொட்டாசியம் அதிகமுள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அதே நேரத்தில் தந்தையின் உணவுப் பழக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 3-10-2010 தினமலர் வாரமலரில் குறிப்பிட்டுள்ள செய்தி. 2 ஆண் விந்தணு சிறிய (நாட்டு) வெங்காயம், வாழைப்பழம் தவிர மாதுளம் ஜூஸ், மாமிச உணவுகளில் உள்ளன என்பது நாடறிந்த உண்மை. ஈ. பெண் குழந்தை வேண்டுமா? ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வின் மூலம் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், எனவே பீன்ஸ், சீஸ் & முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் மேலே கண்ட சத்துக்கள் உள்ளன என்றும் வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்றும் 3-10-2010 தினமலர் வாரமலரில் குறிப்பிட்டுள்ள செய்தி. தற்சமயம் நாட்டின் மக்கள் பெருக்கத்தை குறைப்பதற்கு அரசினரே ஆவண செய்து வருவதால் நாமும் அதைப்பற்றி சிறிது கூறியுள்ளோம். இவற்றுள் சில நிரந்தரமாகவும், சில அவ்வப் போதும் கருத்தடைய உண்டு பண்ணுவதாகும். நிவாரணங்கள் 1. பப்பாளிப்பழம், அன்னாசிபழம், எள்ளு, வெல்லம் இவை சமன்கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு வலி, மாதவிலக்கு சமயம் உண்டு வர கருத்தரிக்காது. 2. கடம்பப் பழச்சாறும், தேனும் கூட்டி பார்லி கஞ்சியுடன் மாதவிடாயின் போது உட்கொள்ளவும். 3. பப்பாளி காயும், பெருங்காயமும் கூட்டிய குடிநீரை 100 கி. அளவில் 5ம் நாளில் இருந்து மூன்று நாட்கள் மூன்று வேளையும் குடித்து வர கரு உண்டாகாது. 4. செம்பருத்தி பூவை அரைத்து 50 கிராம் எடையில் சம அளவு பழைய வெல்லம் கூட்டி, மாதமான கருங்கருவை 6 அன்னக்காடி நீரில் கரைத்து பெண்கள் வீட்டுக்கு விலக்கான 4 நாட்கள் முடிந்தவுடன் மூன்று தினமும் காலை, மாலை உட்கொள்ள கருத்தரிக்காது. 5. குன்றிமணிப் பருப்பை (தோல் நீக்கி) மாதவிடாய்க்குப் பின் ஒன்று வீதம் 3 நாளும் உட்கொண்டு இளஞ்சூடு நீரரருந்தவும், ஒரு முறை உண்ணும் மருந்துக்கு ஒரு ஆண்டு வரை கருத்தறிக்காது. ஒரு குன்றிமணிப் பருப்புக்கு மேல் உண்ண. அதுவே உடலுக்கு நஞ்சாகும். மேற்படி குன்றிமணிப் பருப்பு முறிவு வெங்காரம் உட்கொள்ளவும். 6. செண்பக இலையை அரைத்து இரவில் நீரில் ஊறவிட்டு காலையில் தெளிவை வடித்து, மாதவிடாயின் போது அருந்த ஒரு வருடம் கரு உண்டாகாது. 7. மாதவிலக்கு வரும் நாள் என்ற கவலையுடன், சுபகாரியம் அல்லது வெளியூர் செல்ல வேண்டிய ஆர்வம் இருக்கும் பெண்கள். இதற்கு 3 நாட்கள் முன்பே தினசரி இரவு பாலுடன் பொட்டுக்கடலையை தூள் செய்து ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் தள்ளிப்போகும். கண்ட மாத்திரைகளைச் சாப்பிடுவதை விட இது மிகவும் ஆரோக்கிய மான எளிய முறையாகும். 8. செம்பருத்திப் பூவை நீர்விட்டு அரைத்து, கோதுமைக் கஞ்சியுடன் சூதக சமயம் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கரு உண்டாகாது. 9. அதளைக் கிழங்கு, மஞ்சள், கருஞ்சீரகம், கருப்பட்டி இவைகளை சமன் கூட்டி அரைத்து எலுமிச்சையளவாக தினசரி காலை, மாலையாக இரண்டு வேலையாக மாதவிடாய் ஆன 5ம் நாளிலிருந்து மூன்று நாட்கள் உண்ணக் கருத்தடையாகும்.(கருச் சிதைவும் ஆகும்). 10. கழற்சிப் பருப்பு மூன்று, சமனெடை முருங்கைப் பட்டையும் கருப்பட்டியும் கூட்டி இடித்து நீர் கூட்டிப் பிசைந்து வடித்து அருந்த கரு உண்டாகாது. 11. அரசாங்கம் வெளியிட்டுள்ள நிரோத் அல்லது காண்டம் அணிந்து உடலுறவு செய்தால் கருத்தரிக்காது என்றாலும் ஒரு சிலர் உடம்புக்கு அதிலுள்ள ரப்பர் சத்து ஒத்துக் கொள்ளாது. 12. மாதந்தோறும் மாதவிடாய்க்கு பிறகு 5ம் நாளிலிருந்து மூன்று நாட்கள் கோவேறு கழுதையின் சிறுநீர் 100கிராம் அருந்தி வரும் மங்கைக்கு கருத்தரிக்காது. 13. பப்பாளிக்காய் துண்டுகளை வெள்ளாட்டு நீரில் பிட்டவியல் செய்து பிழிந்து சாற்றை 3 நாட்கள் இரண்டு வேளையாக சாப்பிட்டு வரக் கருத்தடையாகும். 14. எலுமிச்சம் பழ விதையும், வெற்றிலைக் காம்பும் கூட்டி அரைத்து சுண்டையளவு வீதம் மாதவிடாயின் போது உண்ண மலடாவாள். 15. முருங்கை விதைப் பருப்புடன், பசுவின் நெய்யும். தேனும் கூட்டி விழுதாக்கி மாதவிடாய்க்கு மூன்று நாள் முதல், மூன்று நாளைக்கு கழற்சிகாய் அளவில் யோனியினும் பூசி வைத்திருந்து கழுவிவிடக் கருத்தரிக்காது. 16. எள்ளும், கருப்பட்டியும் கூட்டி இடித்து பிழிந்து எண்ணெய் வடித்து புணரும் முன் ஆண்குறியில் குளிரப் பூசுவதோடு சிறிதளவு பெண் குறியினுள்ளும் செலுத்தி வர கருத்தரிக்காது. 17. சம்பங்கி வேர் பட்டையின் சூரணத்தை ஒரு சிட்டிகையளவு தேனுடன் உட்கொள்வதோடு, உடலுடறவு கொண்டவுடன் ஒரு சிட்டிகையளவாக யோனியினுள் தேய்த்து விட கருத்தரிக்காது. 18. நன்கு விளைந்த மாசிக்காயை மர உலக்கையால் இடித்து சலித்து கல்வத்திலிட்டு நன்கு பொடித்து மண்பாண்டத்திலிட்டு கவசமிடவும். அதை ஒரு இளந்துணியிலிட்டு ஒரு முழ அளவு நூலை விட்டுக்கட்டி 12 மணி நேரம் யோனியினுள் செலுத்தி வைத்திருந்து பின் நூலை இழுத்து பொட்டலத்தை நீக்கிய பின் உடலுறவு கொள்ள கருத்தரிக்காது. 19. பூவரன் பூ 300 கிராம்,பூவரசன்பட்டை 100 கிராம். இந்துப்பு 150 கிராம், சீமைகாசுகட்டி 150 கிராம் வீதம் சூரணித்து மாத விலக்கு நாள் முதல் 9 நாளைக்கு காலையில் வெறும் வயிற்றில் 100கிராம் அளவில் பசுவின் பாலுடன் உட்கொள்ள ஒரு வருடம் கருத்தரிக்காது. 20. பூவரங்காயின் சாற்றை 50 கிராம் அளவு மாதவிடாயின் மூன்று நாளும் காலை, மாலை உட்கொள்ள மலடாவாள். 21. வெற்றிலைக் கொடியின் சல்லிவேர் கைப்பிடியளவும் சிறிது மிளகும் கூட்டி அரைத்து மாத விலக்கு சமயத்தில் 3 நாட்கள், காலை & மாலை இரண்டு வேளை சாப்பிட மலடாவாள். 22. வெள்ளைப் பூண்டு, வெங்காயம், பெருங்காயம், மிளகாய் புகையிலை, காபி & டீ ஆகியவற்றை சாப்பாட்டில் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் காம உணர்வு, கோப எண்ணம் தவிர சோம்பேறித்தனம் அதிகரிக்கும். காபி & டீ குடிப்பவர் என்றால் அதற்குப் பதில் சுக்கு காப்பியாக குடிக்கலாம். எனவே கட்டுரைகளில் கூறியுள்ள வைத்திய முறையை பின்பற்ற குறைந்த செலவிலே இயற்கையோடு இணைந்த உணவுகளை உண்டு. ஆயுளுக்கும் ஆரோக்கியமாக வாழ வழி வகுப்போம். மேலும் எந்த நோயும் எட்டிப் பார்க்காத பாரம்பரிய முறை ஒன்று (பெரியவர்களுக்கு மட்டும்) உள்ளது. அரை கொட்டைப் பாக்கு அளவு காலையில் இஞ்சி, மதியம் சுக்கு. மாலை கடுக்காய் என்று தினசரி உணவுக்கு முன்பாக மென்று தின்று, உடனே நீர் அருந்தி விட வேண்டும். இவ்வாறு நாற்பது நாட்கள் சாப்பிட்டால் தேகம் வைரமாகும்.ஆரோக்கிய வாழ்விற்கு சில யோசனைகள்
ஆண்களுக்கு சில யோசனைகள்
பெண்களுக்கு சில யோசனைகள்
கர்ப்பக் கால பிரச்சினை
கருத்தடை வழிமுறைகள்
சித்த மருத்துவம் : நோய் வராமல் நலமாக வாழ வழிமுறைகள் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Ways to stay healthy without getting sick - Siddha medicine in Tamil [ Health ]