
தங்களை “பொறியான்” வலைத்தளம் வாயிலாக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
ஓமியோபதி சிகிச்சை முறை அன்புடையீர்! தங்களை “பொறியான்” வலைத்தளம் வாயிலாக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கட்டுரைகளில் ஓமியோபதி சிகிச்சை முறைகள் பற்றி அறிய இருக்குறீர்கள். பெரும்பாலோர் 'ஹோமியோபதி' வைத்தியர்களாய் தொழில் நடத்தியும் வருகின்றனர். ஹோமியோபதி வைத்தியத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் யாதொரு தடங்கலுமின்றி தம் தொழிலில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதுடன், பொதுஜனங்களின் நன்மதிப்பையும், நல்ல வருவாயையும் பெற்று வருகின்றனர். ஹோமியோபதிக்குரித்தான வைத்திய பாடங்கள் ஹோமியோபதி முறையில் சிறந்த அறிவும் திறமையும், போதனா சக்தியும் கொண்ட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் தெரியவேண்டுமென்று கருதுகிறோமோ அவை யாவும் உங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் தங்கும்படி செய்வதே எங்களுடைய இலட்சியம் ஆகும். இம் முறையைச் சற்று சுலபமாகக் கற்கும் பொருட்டு விஷயங்களைப் பல பிரிவுகளாக வகுத்திருக்கிறோம். முதலாவது ஹோமியோபதி வைத்திய சாஸ்திரத்தின் ஜீவாதாரமான கோட்பாடுகளை ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரைகளில் சரீரத்தின் பல பாகங்களும், அவைகளின் வேலை, உபயோகம் முதலிய விஷயங்கள் அடங்கிய உடற்கூறு அல்லது சரீர சாஸ்திரம், ஹோமியோபதி வைத்திய முறையில் உள்ள தோன்றும். பாடங்கள் கடினமாயிருப்பதுபோல் பலருடைய அனுபவமும் இதே. இதனால் மனச் சோர்வு அடைவது தவறாகும் மேன்மேலும் பல முக்கியமான ஔஷதங்கள் தெளிவாக எழுதப்படும். இப்பிரிவிலேதான் வியாதிகளின் காரணங்கள், குறிகள், உபயோகமாகும் ஒளஷதங்கள் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளன. இப்பாடம் பூர்த்தியானவுடன் சில்லரை ரண சிகிச்சை, வியாதிகளை ஆராயும் விதம், பொது விஷயங்கள், சிகிச்சை முறைகள் பற்றியும் கட்டுரைகள் தொடர்ந்து வரும். மேலும் சுருங்கக் கூறின், வைத்தியமென்றால் இன்னதென்றே தெரியாதவர்களுக்கு முதல் ஒன்றிரண்டு மாதங்கள் வரை புரியக் கஷ்டம் போலத் தோன்றினாலும் திரும்ப திரும்ப படிக்கும் போது தெளிவாகப் புரியும். "எறும்பூரக் கல்லும் தேயும்' என்னும் மூதுரைக் கிணங்க விடா முயற்சியுடன் பாடங்களைப் படித்துக் கொண்டு வந்தால் இவ்வைத்தியத்தை தக்கவாறு அறிய முடியும். அறிந்துக் கொண்டு நாம் வாழ்க்கையில் நல்ல ஆரோக்யத்துடன் மன மகிழ்ச்சியில் இருக்கலாம். தாங்கள் தெளிவுபடக் கற்கும் வகையில் போதிப்பதையே பணியாகக் கொண்டுள்ளோம். இதற்குத் தங்கள் ஒத்துழைப்பே எங்களுக்குத் தேவை. இம்முறைகளைக் கற்பதின் மூலம் தங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகக் கடவுளைப் பணிகிறோம். ஹோமியோபதி வைத்திய முறையை கண்டுப்பிடித்து உலகுக்கு ஈந்தவர் டாக்டர் சாமுவேல் ஹானிமென். இவர் இன்றைக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மன் தேசத்தில் இருந்தார். சிறுவயது முதல், தான் ஒரு வைத்தியராகப் பணியாற்ற வேண்டுமென்ற ஆவல் அவருக்கு இருந்தது. அன்னாரின் குடும்ப நிலைமை முதன் முதலில் அவர் வைத்தியக் கல்லூரியில் சேருவதற்கு இடமளிக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்களின் உதவியைக்கொண்டு வைத்தியம் கல்லூரியில் சேர்ந்து தேர்ச்சி பெற்று சிறிது காலத்தில் வைத்தியத் தொழிலிலும் புகழ்பெற்றார். அப்படிப் புகழ் பெற்ற போதிலும் அவர் மனதில் சந்தேகம் தோன்றியது. அதாவது நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட ஒளஷதங்கள் அவர் நினைத்த அளவுக்கு நோயைக் குணப்படுத்தவில்லை என்று கருதினார். மேலும் நோய் தீரும் பொருட்டுக் கொடுக்கப்படும் ஔஷதங்கள் நோயை குணம் செய்யாமல் தீங்குகளை விளைவிக்கின்றனவோ என்றும் சந்தேகித்தார். இவ்விதமான எண்ணங்களால் அவர் மனம் மிக்க குழப்பத்தை அடைந்தது. நோயுற்றோருக்கு உண்மையான சிகிச்சை செய்வதற்கு வேறு நல்ல சாதனங்களையும், முறைகளையும் கண்டுப்பிடிக்க வேண்டுமென்று ஆலோசிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு இம்மாதிரியாகவே மற்ற ஒளஷதங்களையும் சோதனை செய்தார் தேகாரோக்கியமுள்ளவர்களிடத்தில் கொடுத்த பிறகு அந்தந்த ஒளஷதங்கள் கண்டிக்கக்கூடிய நிஜ வியாதிகளின் குறிகளை ஒழுங்காக எடுத்துத் திரட்டினார். ஒத்த குறிகளை ஏற்படுத்தின. அப்படி ஏற்பட்ட குறிகளைப் பற்றி ஹானிமனுக்குப் பிறகு, அவருடைய மாணவர்களில் பலரும் இவ்விதமான சோதனைகளைச் செய்தனர். இச்சோதனைகளையும் சோதனைகளினால் உண்டான குறிகளையும் ஒழுங்காக எடுத்துத் திரட்டுவதை ஹோமியோபதியில் "ஒளஷத நிர்ணயம்" (Drug proving) என்று சொல்லுவார்கள் இம்மாதிரியே ஹானிமென் 6 வருஷம் இச்சோதனைகளை இடைவிடாது நடத்தி தன்னுடைய ஆராய்ச்சிகளை வெளியிட்டார். அப்பொழுதும் தன் ஆராய்ச்சிகளைப் பற்றி அவருக்கு முடிவான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் 14 வருஷங்கள் சோதனைகள் நடத்திய பிறகே தன் ஆராய்ச்சியைப் பற்றி உறுதியாகப் பேச அவருக்கு நம்பிக்கை பிறந்தது. ஆரம்பத்தில் ஹோமியோபதி வைத்திய முறையைப் பலர் எதிர்த்தனர். ஏன்? அம்முறை நல்லதல்ல வென்றோ? இல்லவே இல்லை. அம்முறையை என்ன வென்றே அறிய முயற்சிக்காமல் மூடத்தனத்தாலும், பொறாமையாலும் சிலர் பிதற்றினர். அவ்வளவுதான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அநேகர் இம்முறைகளைக் கையாண்டு சோதனைகள் செய்து உலகிலேயே உயர்ந்த இம்முறையின் பெருமையை உள்ளவாறு அறிந்தனர். ஆகையினால் ஹோமியோபதியை வியாதிக்கு வேண்டிய ஒளஷதத்தை நிர்ணயிக்கும் ஓர் சட்டமெனச் சொல்லலாம். எல்லா ஒளஷதங்களும் நல்ல தேக ஆரோக்கியமுள்ளவர்களிடத்தில் அவை போக்கக் கூடிய வியாதிகளின் குறிகளை ஏற்படுத்துகின்றன. அப்படி ஏற்படுத்தப்படும் குறிகள் அதே வியாதியால் உண்டாகும் குறிகளைப் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஆகையால் தேகாரோக்கியமுள்ளவர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட வியாதியை விளைவிக்கக்கூடிய மருந்து தான் அவ்வைத்திய முறையின் சித்தாந்தம். நமது பெரியோர்களும் அதே சித்தாந்தத்தில் தான் உஷ்ணம் உஷ்ணேன சாம்யதி, அதாவது சூடு, சூட்டைப் போக்கும் என்றும், வைரத்தை, வைரத்தால் அறுக்கலாமென்றும் கூறியுள்ளனர். ஒரே வியாதியினால் பீடிக்கப்பட்டிருக்கும் குறிகள் ஒரே மாதிரியாக இருக்கமாட்டாவென்பதை நீங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள். அதற்கு அவரவர் ‘தேகவாகு’ தான் காரணம். ஆகவே ஒளஷதங்களைக் கொடுக்கும் போது ஒவ்வொரு வியாதியஸ்தருடைய குறிகளும் எப்படி எப்படி இருக்கின்றனவென்பதை நன்கு தெரிந்து கொண்டு பிறகு அந்தக் குறிகளுக்குக் கிட்டத்தட்ட ஒற்றுமையுள்ள ஒளஷதத்தைக் கொடுக்க வேண்டும். இப்படி ஆராய்ந்து ஒளஷதம் கொடுப்பது தான் ஹோமியோபதியின் முக்கிய சட்டமாகும். இதில் இரு பிரிவுகள் உண்டு. முதலாவது, ஒளஷதங்கள் தேகாரோக்கியம் உள்ளவர்களிடத்திலேயே பரீக்ஷை செய்யப்பட்டு அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு வியாதியை குணப்படுத்த வேண்டும். இரண்டாவது பிரிவு அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒளஷதத்தைச் சிறிய அளவாகக் கொடுக்கவேண்டும். என்? ஹோமியோபதி சட்டத்தின்படி ஒரு வயிற்றுப் புண்ணை நிவர்த்திக்க வேண்டுமானால் எந்த ஒளஷதம் நல்ல தேகாரோக்கியம் உள்ளவர்களிடத்தில் வயிற்றுப் புண்ணை உண்டாக்குமோ அதையே கொடுக்கவேண்டும் அல்லவா? சிறிய அளவாகக் கொடுக்காமல் அவ்வௌஷதத்தை அதிகமாகக் கொடுத்தால் அதனால் வயிற்றுப்புண் அதிகரிக்குமல்லவா? ஆகவே மிகச் சிறிய அளவாக உட்கொண்டால்தான் அவ்வியாதியை நிவர்த்திக்கும் வகையில் ஒளஷதம் வேலை செய்யும். ஹோமியோபதி ஒளஷதங்கள் சிறிய அளவில் கொடுக்கப்படுகின்றன என்றால் அணுப்பிரமாணங்களிலும், பரம அணுப்பிரமாணங்களிலுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. யாதொரு வியாதியும் இல்லாதவர்கள் இம்மாதிரியாக பரம அணுப்பிரமாணங்களிலுள்ள ஒளஷதங்களை உட்கொண்டால் இவை யாதொரு கெடுதலும் செய்வது கிடையாது. எனினும் வியாதியுள்ள சரீரத்தில் அந்தந்த வியாதிக்கு ஏற்பட்ட ஒளஷதத்தை பரம அணுப்ரமாணத்தில் ஒரு சிறிது உட்செலுத்தினால் அது பாம்பைக் கண்ட கருடனைப் போல் சீறி அவ்வியாதியை அறவே ஒழித்துவிடுகிறது என்பது உறுதி. ஹோமியோபதி ஔஷதங்களின் முக்கிய குணம் இதில்தான் உள்ளது. அதாவது ஒரு வியாதிக்குக் கொடுக்கப்படும் ஒளஷதம் அதற்கு ஏற்பட்டதாய் இருந்தால் உட்கொள்ளப்பட்ட உடனே அது வேலை செய்ய ஆரம்பித்து அந்த வியாதியை அறவே ஒழிக்கின்றது. ஆனால் அதே ஒளஷதம் அவ்வியாதிக்கு ஏற்பட்டதாய் இல்லாவிட்டால் சாதாரணமாக அதனால் நல்லது ஏற்படாதே தவிர யாதொரு கெடுதல்களும் ஏற்படாது. மேற் கூறியவைகளிலிருந்து ஹோமியோபதி வைத்திய முறை ஒருவராலும் மாற்ற முடியாத ஒரு சட்டத்தினால் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதென்பது தெரிய வரும். ஹானிமென் காலத்திற்கு முன் மாதிரியான வரையறுக்கப்பட்ட சட்டம் வைத்திய முறைகளில் இருக்கவில்லை. அவ்வப்போது அவரவர்களுக்குத் தோன்றியபடி ஒளஷதங்கள் கண்டுபிடிப்பதும் மறுபடி வேறொரு புது ஒளஷதம் கிடைத்தால் முந்தியதைக் கைவிடுவதும் சர்வ சாதாரணமாயிருந்தன. அதற்குக் காரணம் அவ்வைத்திய சாஸ்திரங்கள் சரியானபடி விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்படுத்தப்படாதது தான். மனித வர்க்கத்தில் வியாதிகளுடன் போராடி உயிர்களை காப்பாற்றும் சாஸ்திரமாகிய ஒரு வைத்திய முறைக்குச் சரியான விஞ்ஞானமும் விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கப்பட்ட சட்டமும் அவசியமல்லவா? விஞ்ஞானத்தினால் ஏற்பட்ட உண்மையான சாஸ்திரம் என்றால் என்ன? ஒரு விஷயம் இன்றைக்கு உண்மை போலவும் காலம் செல்லச் செல்ல ஒவ்வொருவருடைய அபிப்பிராயத்திற்கும் தகுந்தபடி மாறிக்கொண்டும் போகுமானால் அதை விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட சாஸ்திரம் என்று எப்படிச் சொல்லமுடியும்? வேண்டுமானால் அதை அபிப்பிராயம் என்று சொல்லலாம். மனிதர்களும் அவர்களின் அபிப்பிராயங்களும் அடிக்கடி மாறுபவை. ஆகவே அனுபவத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்படுவதை ஒரு சாஸ்திரம் என்று எங்ஙனம் சொல்லமுடியும்? அனுபவமும் வேண்டியதுதான். அசைக்கமுடியாத ஒரு சாஸ்திரத்தின் தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் அனுபவத்தையும் சேர்த்துக்கொண்டு செய்யப்படும் காரியம்தான் நல்லதாக இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அனுபவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு வைத்திய சாஸ்திரம் பழகுவது உபயோகமற்றதாகும். எல்லா தத்துவ சாஸ்திரங்களிலும் ஒரு உண்மை போதிக்கப்படுகிறது. அதாவது உலகில் தோன்றும் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூல காரணம் உண்டு என்பதே. ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு மூல காரணம் உண்டு. நாம் வியாதியால் காணும் சரீர கோளாறுகளுக்கும் ஒரு மூல காரணம் இருக்கவேண்டும். சாதாரணமாக ஆங்கில வைத்தியரால் ஒரு வியாதிக்குக் கூறும் காரணங்களில் ஒன்று ஏதோ ஒரு நுண்ணிய வியாதிக் கிருமி நுழைந்து, அதனால் வியாதி ஏற்பட்டதாகவோ ஏதோ அவயவத்தில் இரணம் இருக்கிறது என்றோ சொல்லுகின்றனர். ஒரு அவயவத்தில் இரணம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதை ஒரு வியாதி என்று கூறுவதற்கில்லை. ஆனால் அதை ஒரு வியாதியின் விளைவு என்று சொல்லலாம். ஒரு வியாதி ஏற்பட்டு அதன் விளைவாக இந்த இரணம் ஏற்பட்டிருக்கிறதே தவிர அதற்கு ஒரு மூல காரணம் இல்லாமல் இரணம் ஏற்பட்டிருக்க முடியாது. வியாதிக்கு விஷக் கிருமிகளைத் தவிர வேறு காரணங்களுமுண்டு: சரீரத்தில் வியாதிக் கிருமிகள் நுழைந்து அதனால் வியாதி ஏற்படுகிறது என்பதையும் நாம் ஒப்பு கொள்ள முடியவில்லை, ஏனென்றல் ஒரு ஊரில் காலரா பரவி வருவதாக வைத்துக் கொள்வோம். அல்லோபதி டாக்டர்களின் அபிப்பிராயப்படி காலரா ஒருவிதக் கொடிய விஷக் கிருமிகளால் ஏற்படுகிறது. குடி தண்ணீரில் அக்கிருமிகள் இருப்பதாகவும் அதனால் வியாதி பரவுவதாகவும் சொல்லுகின்றனர், ஒரு வீட்டில் ஒருவருக்கு காலராவானால் அவர் சமீபத்தில்தான் அவருடைய நெருங்கிய பந்துக்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் வியாதியஸ்தருடைய மல மூத்திராதிகளையும் எடுத்து அப்புறப்படுத்துகின்றனர். அவர்களுடைய சரீரத்தில் விஷ கிருமிகள் நுழைந்தே தீரவேண்டுமல்லவா? ஆனால் அப்படி ஒரு சீக்காளியின் சமீபத்தில் இருக்கும் எல்லோருக்குமே அவ்வியாதி வருவதில்லை. அடுத்த படியாகப் பத்து வீடுகளுக்கு அப்பாலுள்ள ஒருவருக்கு வியாதி காண்கிறது. தவிர குடிதண்ணீரினால் விஷம் கிருமிகள் உள்ளே சென்று வியாதியை உண்டாக்கும் என்றால் அவ்வூரில் இருப்பவர் அனைவரும் ஒரே தண்ணீரை உபயோகிக்கின்றனர். அதில் சிலருக்குச் தான் வியாதி காண்கிறதே தவிர பலர் அவ்வியாதி வராமலும் இருக்கின்றனர். ஆகவே வியாதிக்கு இவைகளை எல்லாம் விட வேறு உண்மையான காரணங்களும் இருக்கவேண்டுமல்லவா? அக்காரணங்களைப்பற்றி அடுத்து வரும் பக்கங்களில் விரிவாக எழுதுவோம். மேலும் எந்த ஒரு பொருளையும் அந்த பொருளை எந்த அளவுக்கு நீர்த்து போகச் செய்யும் தன்மையை அடையச் செய்கிறோமோ, அந்தப் பொருளானது அந்த அளவுக்குச் சக்தி பெற்றதாக உருவாக வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஹோமியோபதி ஒற்றைத் தீர்வுக் கொள்கையின் படி பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு மருந்துகள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டு, நோயின் அளவு மற்றும் தன்மையின் படி அதிகரிக்கும் முறையை குறிப்பது ஆகும். இந்த மருத்துவத்தை படித்தவர்கள் மட்டுமே இதை மேற்கொள்ள வேண்டும். ஹோமியோபதி மருத்துவர்கள் நேச்சுரோ மருத்துவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மருந்து அளவுகள் சிறியதாய் எடுத்தாலும் பெரிய நிவரானத்தை தருகிறது என்று சொல்கிறார்கள். மேலும் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவத்தில் இருந்து இந்த ஹோமியோபதி மருத்துவம் முற்றிலும் வேறுபாடு உடையது. இதில் அறுவை சிகிச்சை இருப்பது இல்லை. இந்த மருத்துவ முறையில் நோய் வரும் காரணங்கள் மற்றும் அறிகுறிகளை தெரிந்துக் கொள்ளலாம். குணமாக நீண்டக் காலம் பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் உடலில் எதிர்ப்பு சக்திகளின் ஆற்றலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்றும் சொல்கிறார்கள். வரும் கட்டுரைகளில் விரிவாகக் காண்போம்.ஹோமியோபதி என்றால் என்ன?
உண்மையான விஞ்ஞானம்:
மூல காரணம்:
மருத்துவ குறிப்புகள் : ஹோமியோபதி என்றால் என்ன? - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : What is homeopathy? - Medicine Tips in Tamil [ Medicine ]