
'யோக' என்பது சம்ஸ்க்ருதத்தின் 'யுஐ' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது.
யோகம் என்பது என்ன? 'யோக' என்பது சம்ஸ்க்ருதத்தின் 'யுஐ' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது. இதன் பொருள் சேர்த்தல் அல்லது இணைத்தல் என்பதாகும். அதாவது ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைத்தல்! நடைமுறையில், மனிதனை மேலும். மேலும் உயர்த்துவதற்குரிய எல்லா முயற்சிகளும் இந்த யோகத்தின் உள்ளே அடங்கியுள்ளது. "யோக: கர்மஷூ கௌஸலம் " என்று கீதை கூறுகிறது. அதாவது. எச்செயலையும் ஒருமுனைப்பட்டும். சமநிலையிலும் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் இது சாத்தியம் என்பது தெளிவு. ஆகையால் யோகம். மனத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைக்கும் வழி என்பதை நமது முன்னோர்கள் காட்டியுள்ளனர். பாரதத்தின் அடிப்படையான ஆறு தரிசனங்களில் யோகமும் ஒன்று. இதை அமைத்துத் தந்தவர் பதஞ்சலி முனிவர். ஒப்பற்ற அறிவு திறன் பெற்ற இந்த முனிவர். யோகம், இலக்கணம், ஆரோக்கியம் என்ற மூன்று விஷயங்களைப் பற்றிய நூல்களை இயற்றி மனிதகுலம் முழுமைக்கும் பெரிய உதவி செய்திருக்கிறார். யோகேன சித்தஸ்ய பதேன வாசா மலம் சரீரஸ்யச வைத்யகேன யோபாகரோத் தம் ப்ரவரம் முனீனாம் பதஞ்சலிம் ப்ராஞ்சலி ரானதோஸ்மி|| (பொருள்: யோகத்தின் மூலம் மனத்தின் அழுக்கையும் இலக்கணத்தின் மூலம் மொழி, வாக்கு இவற்றின் அழுக்கையும். மருத்துவ சாஸ்திரத்தால் உடலின் அழுக்கையும் போக்கியவரான பதஞ்சலி முனிவரை வணங்குகிறேன்) பதஞ்சலி முனிவரின் யோகதரிசனத்தின்படி மனப்போக்கைக் கட்டுப்படுத்துவதும், அடக்குவதுமே யோகமாகும். அதாவது, தன் மனப்போக்குகளை முறையாக உறுதி கொண்டவையாகவும். ஒருமுகப்பட்டதாகவும் செய்தபடி மனத்தின் அலையற்ற நிலையை அடைவதற்கான முயற்சிப் படிகளே அதில் விளக்கப்பட்டுள்ளன. யோகம் எட்டு உறுப்புகளைக் கொண்டது. அவை: 1. யமம். 2. நியமம். 3. ஆசனம். 4. பிராணாயாமம். 5. ப்ரத்யாகாரம். 6. தாரணை. 7. தியானம். 8. சமாதி என்பவைகளே. அஹிம்சை. சத்தியம். திருடாமை, பிரம்மச்சர்யம். எந்த பொருளையும் தனக்கு என்று வைத்துக்கொள்ளாத ஆசையின்மை போன்ற இந்த மனம் சம்பந்தப்பட்ட குணங்கள் 'யமம்' என்ற உறுப்பினில் அடங்கும். 'நியமம்' என்பதில் உடல் கட்டுப்பாடு. அகத்தூய்மை மகிழ்ச்சி. தவம். உரிய மெய்நூல் கற்றல், தெய்வநம்பிக்கை ஆகியவை அடங்கும். பலவகையான உடல் அசைவுகளின் மூலம் உடம்பில் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு, அதை மேலும் ஆரோக்கியம் உள்ளதாகவும், வலிவு கொண்டதாகவும், செய்வதே 'ஆசனங்க'ளின் செயலாகும். அவ்வாறான ஆரோக்கியமான உடலில்தான், ஆரோக்கியமான மனது அமைய முடியும். மூச்சை இழுத்தல். விடுதல் இவை பற்றிய கட்டுப்பாடு, 'பிராணாயாமம்' துறைக்கு உரியாது. 'ப்ரத்யாகாரம்' மூலம் இந்திரியங்களை. வெளிவிஷயங்களிலிருந்து திருப்பி. உள்நோக்கியதாக செய்ய முடியும். 'தாரணை' மூலம் அந்நிலை முறையாக மேலும், மேலும் ஒருமுகப்படுத்தப்படுகின்றது. 'தியானம்' என்பது தாரணையை விட உயர்ந்த நிலை. இதில் ஒரே பொருளின்மீது மனத்தை மிக எளிய முறையில் ஒருமுகப்படுத்தப்படுகின்றது. மனம். எண்ண அலைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு எண்ணையில் எரியும் சுடர்போல அசைவற்று நிற்கும் நிலையை அடைகின்றது. இந்நிலையில் தானும் ஒருமுகப்பட்டு நிற்கும் பொருளும் ஒன்று மற்றொன்றுடன் தம்மைப் பகிர்ந்து கொள்கின்றன. (தானும் அதுவாகி, அதுவும் தானாகி) இந்நிலையில், பொருளுடன் முழுமையாக ஒன்றிப்போதல் உருவாகி விடுகின்றது. இதை 'சமாதி நிலை' என்கின்றனர். இந்நிலை எய்த யோகிகள் முயற்சித்தே இருக்கின்றனர். 'யோகம்' ரிஷி முனிவர்களுக்கும். காட்டில் தவம் செய்பவர்களுக்குமே உரியது: சாதாரண மக்களுக்கு அல்ல என்ற எண்ணம் பல இடங்களிலும் காணப்படுகிறது. உண்மையில் இந்த எண்ணம் ஒரு பிரமைதான். யாவரும் இதைக் கையாண்டு பயன்பெறலாம். சிறிதளவு வழிகாட்டுதலைக்கொண்டே யோகப் பயிற்சியை தொடங்கமுடியும். ஆனால் தகுதி வாய்ந்த வழிகாட்டி மூலம். யோகவழியில் மிகக்குறுகிய காலத்திலேயே மனிதன் மிக அதிக உயர்வை அடையமுடியும். இதில் யாதொரு ஐயமும் இல்லை. ஆரோக்கியம் உள்ள ஒருவனே யோகாசனத்தை செய்யமுடியும் என்பது சரியில்லை. ஆரோக்கியம் உள்ள உடலைப் பெறுவதற்காகவே யோகத்தை. ராம பாணத்தைப் போல குறி தவறாத கருவியாக. மிகவும் நன்மை விளைவிக்கும். முழுமையான உடற்பயிற்சியாகக் கொள்ள வேண்டும். பிரத்யாகாரம், தாரணை, தியானம் போன்ற உயர்ந்த படிகளை விட்டுவிட்டாலும்கூட, ஆசனங்களின் மூலமாகவே மனிதன் மிக உயர்ந்து உடல்திறனை பெற்றுவிட முடியும். சிறுவர். வாலிபர், முதியவர். நோயாளி என அனைவரும் யோகத்தைப் பயின்று பயனடையலாம். யுவா, விருத்'தோதிவ்ருத்தோ’வா வ்யாதிதோ' துர்ப்லோபி வா| அப்யாஸாத் ஸித்தீதீமாப்னோதி ஸர்வோ யோக' ஷ'தந்தி'ரித'|| யோகப் பயிற்சியினால் ஒருவனுடைய உடல் வலிவு பெற்றதாய் உறுதி கொண்டதாய். துடிப்பு மிகுந்து. நோயற்றதாய் ஆகின்றது. அவனுடைய அறிவு தீவிரமாகவும். நுட்பமாகவும் வளர்ச்சி பெறுகின்றது. அவன் நீண்ட ஆயுளைப் பெறுகின்றான். வாழ்க்கையிலே மகிழ்ச்சியை அனுபவிக்கின்றான். யதா லாகிவம் கிர்ம ஸாமர்த்ய தீப்தா'க்'னி: மேதி'ஸ: க்ஷய: விபக்தி கிணகாத்ரத்'வம் வ்யாயாமாத்' உபஜாயதே'|| யமம், நியமம் இவைகளைக் கடைபிடிக்க, மனிதனிடம் உடல் வலிமை வேண்டும். அதாவது. வாழ்வதற்கு சக்தி பெற யோகம் உதவிகரமாக இருக்கிறது. மகரிஷி அரவிந்தரின் கூற்றுபடி. உடல், மனம், புத்தி, ஒழுக்கம். ஆன்மீகம் முதலான எல்லா உயர்வுக்கும் அதாவது மனிதனின் முழுமையான எல்லா உறுப்புகளின் மலர்ச்சிக்கும் யோகம் மிகமிக உதவிகரமாக இருக்கிறது. அஷ்டாங்கயோகத்தின் ஒரு பகுதியான யோகாசனத்தின். உதவியுடன் சரீரத்தில் (உடலில்) கட்டுப்பாடு கொண்டுவந்து. சரீரத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். மேலும், மனத்தைக் கூட படிப்படியாக சமநிலை பெறச் செய்ய முடியும். மனம் துடிப்புடன் இருக்க, முதுகெலும்பு செயல்படக் கூடியதாய், வளைந்து கொடுக்கக் கூடியதாய். இயல்பான நிலையில் தொடர்ந்து இருப்பதும் அவசியம், முதுகெலும்பின் ஒவ்வொரு இணைப்பும் கோளாறுகள் இல்லாமல் இருக்கவேண்டும். முதுகெலும்பை சரியான நிலையில் வைக்க 1. முன்னும் பின்னும் வளைவது. 2. வலது புறம். இடது புறம் வளைதல், 3. வலது பக்கமாகவும். இடது பக்கமாகவும் உடலை திருகுதல் (முறுக்குதல்) போன்ற உடல் அசைவுகளின் ஆறுநிலைகள் உதவுகின்றன. இந்த எல்லா ஸ்திதிகளும் சூர்யநமஸ்காரம் மற்றும் ஆசனங்களின் மூலம் ஒருவனுக்கு கிடைக்க முடியும். மனிதனுடைய பொதுவான வளர்ச்சி புவியிர்ப்பு விசைக்கு எதிராக இருக்கிறது. ஆகையினால் புவியீர்ப்புக்கு எதிராக நடைபெறும் அசைவுகளில் மனிதன் தான் லாவகமாக இருப்பதையும், லேசாக இருப்பதையும் அநுபவத்தில் அறிகிறான். சிரஸாசனம். சர்வாங்காசனம், ஹலாசனம் ஆகிய ஆசனங்களின் மூலம் இத்தகைய அநுபவம் நேரிடுகிறது. யோகத்தின் காரணமாக உடம்பில் வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்படமுடியும். உடலுறுப்புகளின் அனிச்சை செயல்களில் எதிர்பார்க்கப்படும் மாறுதல்களை உண்டாக்கிவிடலாம். ஏனென்றால். மாறுதல்கள் நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. யோகாசனங்களின் மூலமாக பிட்யூட்டரி, தைராய்டு முதலான நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அவைகளில் தேவையான சமநிலை ஏற்படச் செய்யலாம். யோகாசனம் செய்வதனால் இரத்த ஓட்டத்தின் விளைவுகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக. வஜ்ராசனம் செய்வதால் இடுப்புக்கு கீழ்பகுதியில் இரத்த ஓட்டம் குறைந்து மேல் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. யோகாசனத்தினால், நரம்புகளிலும் நல்ல மாற்றம் உண்டாகிறது. நரம்புகளின் அமைப்பு பெரும்பாலும் கரும்பு போல் நார் நிறைந்ததாய் உள்ளது. இவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலும், வலிமையை அதிகரிக்கும் வேலையை. அதே சமயம் அவைகளில் தேவையில்லாத விறைப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது யோகாசனத்தின் வேலையாகும். இவ்வாறாக. யோகாசனங்களின் மூலமாக ஒருவன் உடல். மனம் இவைகளின் உளைச்சலையும் நோயையும் தவிர்த்து ஆரோக்கிய நிலையை அடையலாம். அனைத்தும் அடங்கியது யோகம்: யோகாசனம் பரிபூரணமான. எல்லா உறுப்புகளுக்கும் தேவையான உடற்பயிற்சியாக உள்ளது போலவே. அது தன்னைத்தானே முழுமையாக அறிந்து கொள்வதற்கும் கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு. தனக்குள் ஒரு முழு தரிசனம். விஞ்ஞானம். கலை என எல்லாமாகவே அமைந்துள்ளது. கல்வியின் மூலமாக மனிதனிடம் விதைவடிவமாக உள்ள திறமைகள் வெளிப்பட்டு பரிமளிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. யோகத்திலும் அத்தகைய தகுதி உள்ளது. தர்சனம் என்பது வழிகாட்டுதல் என்பதாகும். ஆகையால் மனிதனுக்குத் தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி முன்னேற வைக்கின்ற ஒரு பொருளே யோகதர்சனம் ஆகும். யமம், நியமம் இவைகளை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் யோகப் பயிற்சியின் மூலம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அதனால் அது ஒரு ஒழுக்கக் கோட்பாடு ஆகும். (அதாவது யோகமுறைக்குக்கூட யமம், நியமம் முதலான நடைமுறைகள் தேவை. இதில் உணவு, பழக்கவழக்கம் முதலான துறைகளில் வேண்டிய கட்டுப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது) உடல் நலத்திற்கு ஊட்டம் அளிக்கும் வகையில் உணவு முறை:- ● சத்துள்ள அறுசுவை உணவை உண்ண வேண்டும். ● பசிக்கும்போது மட்டுமே உணவை உண்ணவேண்டும். ● சத்துள்ள உணவாக. சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும். ● இரவு நேரத்தில் சிறிதளவே உண்ண வேண்டும். சில நாட்கள் இரவு உணவு சாப்பிடாமலும் இருக்கலாம். ● தண்ணீர் குடிக்கும் போது மெதுவாக சுவைத்து அருந்த வேண்டும். ● கால நிலைக்கு ஏற்ற உணவு வகைகளையே உண்ண முயற்சிக்கவும். முடிந்த அளவுக்கு பழங்களை சேர்த்துக் கொள்ளவும். ● இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு சுவை உள்ள பொருட்களை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ● தேவையெனில் இனிப்பிற்கு - தேன். பழங்கள். புளிப்பிற்கு எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம். ● துவர்ப்பு (வாழைப்பூ, அத்திக்காய், பாக்கு), கசப்பு (பாகற்காய், மணத்தக்காளி, சுண்டைக்காய்). சுவை உள்ள பொருள்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ● உணவை உடல் நலத்திற்கு ஏற்ப உண்பது சிறந்த யோக வாழ்க்கைக்கு துணை செய்கிறது. யோகசனம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விசயங்கள்:- ● நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும். ● பருத்தியாலான விரிப்பு அல்லது பாயின் மீது செய்யலாம் வெறும் தரையில் செய்யக் கூடாது. ● காலையிலோ அல்லது மாலையிலோ பயிற்சி செய்யலாம். ● பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ குளிக்கலாம். ஆனால் அரை மணி நேரம் இடைவெளி அவசியம் ● பயிற்சியின் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். ● மாலை நேரத்தில் செய்வதாக இருந்தால் மதிய உணவுக்குப் பிறகு 4-5 மணி நேரம் கழித்து செய்யலாம். ● பயிற்சியின் போது இறுக்கமான உள்ளாடையும். மேலே மெல்லிய துணியால் ஆன ஆடையும் அணியலாம். ● ஒவ்வொரு ஆசனத்திற்கும் இடையே சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ● பெண்கள் மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் பயிற்சி செய்வதை தவிர்க்கவும். ● பயிற்சியின் இறுதியில் சவாசனம் செய்யவும். சமஸ்திதி: நின்று செய்யும் ஆசனங்களின் துவக்கநிலை சமஸ்திதி. உடம்பின் பளு, இரண்டு கால்களின் மேல் சமமாக இருக்க வேண்டும். அதற்காக. (அ) குதிகால்களும், கால்களின் கட்டைவிரல்களும் பரஸ்பரம் சேர்ந்து வைக்கவும். (ஆ) கால்களின் விரல்களை மேல்நோக்கி இழுத்து அதன்மூலம் விரல்களின் பின்பகுதிகளிலுள்ள எலும்புகளும் குதிகால்களும் முழுமையாக பூமியின் மேல் இருக்கட்டும். (இ) முதலில் இரு கால்களின் சுண்டு விரல்களை முழுமையாக பூமியில் பதியவைக்கவும். இதன் மூலம் இரண்டு பாதங்களும் முழுமையாக பூமியில் பதிய வைக்கமுடியும். பிறகு மற்ற விரல்களையும் பூமியில் பதிய வைக்கவும். இந்நிலையில் பாதங்களின் மத்தியிலுள்ள வளைவுகள் மேலே இழுக்கப்பட்டு இருக்கும். (ஈ) முழங்கால்களின் சிப்பிகளை மேலே இழுத்து பிடிக்கவும். முழங்கால்களின் பின்பகுதியிலும். கணுக்காலின் பின்பகுதி தசைநார்களும் மேலே இறுகியபடி இருக்கும். (உ) மலத்துவாரத்தை சுருக்கியபடி. ப்ருஷ்ட பாகங்களை இறுக்கி கடுமையாக்க வேண்டும். (ஊ) வயிறு உள்ளே இழுத்து மார்பும் எலும்புகளும் மேல் எழுந்தபடி இருக்க வேண்டும். (எ) கைகள் நேராக. பக்கவாட்டில் உடலுடன் ஒட்டியபடி உள்ளங்கைகள் கணுக்கால்களை நோக்கி. விரல்கள் விறைப்பாக இருக்க வேண்டும். (ஏ) தோள்பட்டைகள் பின்பக்கமாக. இழுத்து தலை சமநிலையில், கழுத்து நேராக, பார்வை நேராக. அமைதியான முகம். நாக்கு இறுக்கமில்லாமல் இருக்க வேண்டும். சமதள ஸ்திதி : உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் துவக்கநிலை சமதள ஸ்திதி. இரண்டு கால்களையும் முன்பாக நேராக நீட்டி பரஸ்பரம் சேர்த்து, தரையின் மேல் உட்காரவும். உள்ளங்கைகளை ப்ருஷ்டங்களின் இரு பக்கங்களிலும் தரையில் வைத்து. கைகளை நேராக்கவும். தோள்கள் உயர்ந்து பின்பக்கம் விறைத்தபடி இருக்கட்டும்.அஷ்டாங்க யோகம்
யோகத்தைப் பற்றிய பிரமைகள்:
யோகத்தினால் ஏற்படும் பயன்கள் :
யோகாசனம்
ஆரோக்கிய குறிப்புகள் : யோகம் என்பது என்ன? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : What is yoga? - Health Tips in Tamil [ Health ]