ஒரு புதிய நோயாளியிடம் மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

What the doctor should observe in a new patient: - Medicine Tips in Tamil

ஒரு புதிய நோயாளியிடம் மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்: | What the doctor should observe in a new patient:

மருத்துவர் நோயாளியை அன்புடன் நோயாளி வரவேற்று, மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும்படியான எண்ணத்தை உருவாக்க வேண்டும்

ஒரு புதிய நோயாளியிடம் மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:


1) மருத்துவர் நோயாளியை அன்புடன் நோயாளி வரவேற்று, மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும்படியான எண்ணத்தை உருவாக்க வேண்டும். வரவேற்பிற்குப்பின் மருத்துவர் அமைதியாக உள்ளன்போடு கேள்வியை தொடுக்க வேண்டும்.

2) என்னைப் பார்க்க எது தங்களை இங்கு வரத் தூண்டியது?' என்றும், 'தங்களுக்கு என்ன தொல்லை என்று எனக்கு முழுவதுமாகச் செல்லுங்கள்' என்றும் நோயாளியை கேட்டுவிட்டு, மருத்துவர் அமைதியாகிவிட வேண்டும்.

மருத்துவர் நோயாளியை குறுக்குக் கேள்வி ஏதும் கேட்காமல், அவரின் நோய்க்குறிகளை அவரின் வழியிலேயே சொல்ல அனுமதிக்க வேண்டும். குறுக்குக் கேள்விகள் ஏதும் கேட்டால் நோயாளி சொல்ல வந்ததைச் சொல்லாமல் அவரைத் தடம் புரண்டு போகச் செய்தது போலாகிவிடும். அதனால், முக்கியமான குறிகளைப் பெற மருத்துவருக்கு இயலாமல் போய் விடக்கூடும். யூகமான யோசனை கூறும் கேள்விகளைக் கேட்கக் கூடாது. தனக்கு ஏதுவாக இருக்கும் பொருட்டும் மருத்துவர் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

3) நோயாளி மருந்தகத்தினுள் நுழைந்தது முதல் அவரை மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது மருத்துவர் முக்கியமாகக் குறித்துக் கொள்ள வேண்டியது, நோயாளியின் தோற்றம் (Personality), தெளிவான மனநிலை, கூச்சம், சந்தேகம், பயம், மனச் சோர்வடைதல், விருப்பு, வெறுப்பு, வெட்கப்படல், மனம்விட்டு பேசாதிருத்தல் ஆகியவை ஆகும். உடல் நோய்க்குறிகள், மூச்சுவிடத் திணறல், நடை, மேனிறம், படுக்கும் தன்மை, அதிக உணர்வுகள், வலியுள்ள இடம், அதன் தன்மை, அவரின் சிறப்பான குணம், உடை, சுத்தம் ஒழுங்கு, பெருமை ஆகியவைகளையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

நோயாளியின் வயது, ஆண்பால், பெண்பால், பரம்பரை நோய், தானே வரவழைத்துக் கொண்ட நோய், போதுமான உணவின்மை, தட்பவெட்பநிலை, தொற்றிய நோய், தனிப்பட்ட உடல் குறைபாடு ஆகியவைகளும், நோயாளிக்கு மனத்தில் அசலாக தோன்றும் குறிகளை முதலிலும், பிறகு புதுமையான சிறப்பான குறிகளையும் குறிக்கவேண்டும். மிக உயர்ந்த அளவு மாறாத குணமும், மிக சமீபத்திய அல்லது மறைந்துள்ள குறிகள் வளர்ச்சி பெற்றுள்ளதையும் நிச்சயம் சுருத்தில் கொண்டு, இவைகள் தான் குணப்படுத்தப்பட வேண்டியவைகள் எனக் கருதவேண்டும். 

4) நோயாளி சொல்லி முடித்தபின், "வேறு ஏதாவது உண்டா?" எனக் கேட்கவேண்டும். சொல்லப் பிரியமில்லாமல் சுருக்கமாக நோயைப் பற்றி மட்டும் சொன்னால், நோயாளியிடம் அதிக விஷயம் பெற இயலாமல் போகலாம். மருத்துவர் ஊக்கத்துடன் சாத்வீகமான முறையில் கேள்விகளைத் தொடுத்துப்பதில் பெறலாம். நோயாளி நன்றாக வாயாடிப் பேசுபவரானால் மருத்துவர் அவரை வழி தவறிச் செல்லவிடாமல் திறமையுடன் தன் வழிக்குக் கொண்டு வந்து, முக்கியமானவற்றைப் பெற்று பதிவு செய்யவேண்டும்.

5) நோயாளி தன் கதையைச் சொல்லி முடித்துக்கொண்ட போது, அவருக்கு துணையாக எண்ணத்தைத் தூண்டிவிட்டுப் போனதைக் கேள்வி மூலம் கேட்டு, நோயாளி பதில் சொல்லுமளவுக்கு அவருடன் ஒத்துழைத்து, மருத்துவர் தாம் பெற்ற அறிவு தான் மருந்தைத் தேர்ந்தெடுக்க உதவும். உடன் இருப்பவரிடமும் நோயாளியைப் பற்றிக் கேட்டு அறிதல் வேண்டும்.

6) நோயாளி கடுமையான வலியாலோ வேறு துன்பத்தாலோ நீண்ட தூரத்திலிருந்து வராதவரானால், முடிந்தால் மீண்டும் அடுத்த நாள் அவரை வரச் சொல்லி, முழு உடல் சோதனையுடன், மற்ற ஆய்வுக்கூடப் பரிசோதனைகளையும் செய்யவேண்டும். நோயாளிக்கு தன்னுடைய 24 மணிநேர சிறுநீர் ரத்தப் பரிசோதனை தேவையெனச் சொன்னால், விஞ்ஞான அடிப்படையில் தான் மருத்துவர் சிகிச்சையளிக்கிறார் என்ற எண்ணத்தை நோயாளிக்கு தோற்றுவிக்க வேண்டும்.

7) மருத்துவர் தாம் தாளில் பதிந்த விவரங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து, மீண்டும் நோயாளி ஏதாவது அதிகம் சொல்ல விரும்புகிறாரா என வினவ வேண்டும். ஏதும் இல்லை யென்றபோது, நோய் கூடுதல், குறைதல் (Modalities) கொண்டு, உதாரணமாக இரைப்பையில் வலியென்றபோது நோயாளி தானாகவே எரிச்சலும் உண்டென்கிறார். அப்போது மருத்துவர் ஆகாரத்துடன் தொடர்பு கொண்டதா? எந்த நேரத்தில் ஏற்படுகிறது? அதைத் தொடர்ந்து வேறு குறிகள் ஏதும் ஏற்படுகிறதா? அப்போது, மனநிலையில் ஏற்படும் எண்ணங்கள் ஆகியவைகளையும் விசாரித்துப் பெறவேண்டும். இவையாவும், மனநிலை (Montals), பொது நிலை (Generals), குறிப்பிட்ட நிலை (Particulars) போன்றவற்றில் அடங்கியிருக்கவேண்டும்.

8) நோயாளியிடம் கேள்வியைக் கேட்டபோது நோயாளி தன் பதிலில் விளக்கமாக ஏதும் சொல்லாமல் கேள்விக்குமட்டும் பதிலாக "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். அப்போது, மருத்துவர் தான் அறிந்து படித்து வைத்துள்ள மருந்து கவனத்திற்கு வரும்போது அதற்கேற்றவாறு நோயாளியை கேள்வி கேட்டோ, பதிலை எதிர்க் கேள்வி போட்டோ பெறக் கூடாது.

9) இவ்வாறாக பதிவு செய்த பிறகு, உடலின் ஒவ்வொரு முறையையும் அதன் செயல்படும் விதத்தையும் கொண்டுள்ளதா எனவும், முக்கியமானவை ஏதும் விடுபட்டுள்ளதா எனவும் மருத்துவர் கண்டறிந்து நோய் தீர்க்கும் மருந்துகள் ஒன்றோ அல்லது அதற்கு மேலும் தேவையா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

10) மனக்குறிகளையும், குணக்குறிகளையும், மிக முக்கியமாகக் கருத வேண்டும். நோயாளியின் முழு நம்பிக்கையையும் பெறுவது தான் இதில் சிறப்பாகும். உணர்ச்சி, கோபம், அமுக்கப்பட்ட நோய், பால் உணர்வின் தேவை ஆகியவை ஏற்பட அவைகளின் காரணங்களையும் கண்டறிய வேண்டும்.

11) மூடிவில், மருத்துவர் தன்னைப் பற்றி மிக அக்கறையுடன் கவனித்து புதிய முறையான ஓமியோபதியில் சிகிச்சை செய்ய இருப்பதால், அவருக்குப் போதுமான நேரம் தேவை, அதனால் தன் நோய் நீங்கும் என்ற எண்ணத்தை' நோயாளிக்கு ஏற்படுத்த வேண்டும். முழுமையான உடல் பரிசோதனை, ஆய்வுக் கூட பரிசோதனை ஆகியவைகளை ஒவ்வொரு நோயாளிக்கும், பழைய நோயாளிக்கு ஆண்டுக்கு ஒரு முறையாகிலும் அறிவுறுத்த வேண்டும். அந்நேரங்களில், ஓமியோபதி மருத்துவத்தைத் தவிர வேறு மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படும் பாதகங்களையும், நோயாளி உடனே சிகிச்சையில் என்ன தேவையென நினைக்கிறார் என்பதையும் அறிய வேண்டும். நோயாளிக்கு நெருங்கிய குடும்பத்தார் அல்லது நண்பர்களிடமிருந்தும் செய்திகளைப் பெறலாம். அவை மிக்க பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் இதுவும் ஆபத்தாகலாம். ஏனெனில், பயந்த நோயாளி அதை வெறுக்கலாம். மருத்துவர் எல்லா வழிகளிலும், நோயாளியினுடைய உண்மை நிலையைக் கண்டு மொத்தக் குறிகள் பெற ஏதுவாக இருக்கும் பொருட்டுச் செயல்பட்டால் நற்பெயர் கிட்டும்.


குளிரால் அதிகமாதலுக்கு சிறந்த மருந்துகள் (Remedies Predominantly Aggravated by Cold)

மருந்தை சுலபமாகத் தேர்வு செய்ய மருந்தின் பெயரும் அதன் மதிப்பெண்ணும் பிரித்துக் காண்பிக்கப்பட்டுள்ளன.

மதிப்பெண் - 3

ஆர்சனிகம் ஆல்பம் 

பாரிடாகார்ப் 

கல்காரியா கார்ப் 

கல்காரியா பாஸ்

காப்சிகம்

காஸ்டிகம்

சைனா

டல்கமாரா

பெர்ரம் மெட் 

கிராபைடிஸ்

ஹிபார்சல்ப் 

ஹைபரீகம்

காலி ஆர்சனிகம்

காலி கார்ப்

மெக்னிசியம் கார்ப்

மெக்னிசியம் பாஸ் 

மோச்சஸ்

நைட்ரிக் ஆசிட்

நக்ஸ்வாமிகா 

பாஸ்பரஸ்

சோரினம்

பைரோஜினம்

ரனன்குலஸ் பல்பஸ்

ரஸ்டாக்ஸ்

ரூமக்ஸ்

சபதில்லா

செபியா

சிலிகா

ஸ்பைஜீலியா

ஸ்டொரான்டியம் 


மதிப்பெண் - 2

அகோனைட்

அகாரிகஸ் மஸ்கர்யஸ்

அக்னஸ் காஸ்டஸ் 

அலுமன்

அலுமினா

அலுமினா சிலிகேட்

அம்மோனியம் கார்ப்

அர்ஜன்டம் மெட்

அவ்ரம் மெட்

பாடியாகா

பாரிடாமூர்

பெல்லடோனா

போரக்ஸ் 

புரோமியம்

கல்காரியா ஆர்சனிகம் 

கல்காரியா புளோர் 

கல்காரியா சிலிகேட் 

காந்தாரிஸ்

காபோ அனிமலிஸ்

கார்போ விஜிடபிள்

கார்பானி சல்ப்

காலோபில்லம் 

சாமோமில்லா

செலிடோனியம்

சினினம் ஆர்சனிகம்

சிம்ரிபியுகா ரசிமோசா 

சிஸ்டஸ் சுனடென்சிஸ்

கோல்சிகம்

கபியா

காக்குலஸ் இன்டிகா

கோனியம்

சைக்கிளாமன் இயுபோராசியா

பொரம் ஆர்சனிகம்

பார்மிகா ரூபா

ஹெல்லிபோரஸ் 

ஹெலோனியாஸ்

ஹயாசியாமஸ்

ரூடாகிரோவியோ 

லென்ஸ்

சரசபரில்லா 

ஸ்டேனம்

சல்பூரிக் ஆசிட்

தெரிடியான்

வயோலா டிரைகலர் 

ஜிங்கம் மெட்


மதிப்பெண் - 1

அசிடிக் ஆசிட்

அப்ரோடானம்

அப்போசினம்

ஆர்ச சல்பூரீகம் பிளோவம்

அசாரம்

அவ்ரம் ஆர்சனிகம் 

அவ்ரம் சல்ப் 

பென்ஜாயிக் ஆசிட்

காட்மியம் 

காம்பர்

கார்டஸ் மரினஸ்

ரீயம்

ஸ்டாபிசாகரியா 

ஸ்டிரமோனியம்

வலேரியனா

குயாக்கம்

காலிபாஸ் 


வெப்பத்தால் அதிகமாதலுக்கு சிறந்த மருந்துகள் (Remedies Predominantly Aggravated by Heat)

மருந்தைச் சுலபமாகத் தேர்வுசெய்ய மருந்தின் பெயரும் அதன் மதிப்பெண்ணும் பிரித்து காண்பிக்கப்பட்டுள்ளன.

மதிப்பெண் - 3

அபிஸ்மெல்லிகா

அர்ஜன்டம் நைட்ரிக்

புளோரிக் ஆசிட் 

ஐயோடம் 

காலிஐயோடைட்

காலி சல்ப் 

நேட்ரம் சல்ப்

நேட்ரம் மூர் 

பல்சாடில்லா

சபினா

சீகேல் கார்னூடம்


மதிப்பெண் - 2

அஸ்குலஸ் ஹிப்போ 

அலியம் சிபா

ஆலோஸ்

அவ்ரம் ஐயோடைட்

அசபோடிடா

அவ்ரம் மூரியாடிகம்

பிரையோனியா

கலாடியம் 

கல்காரியா

ஐயோடைட் 

கல்காரியா சல்ப்

காக்கஸ் காக்டி

குரோகஸ் சாடிவா 

டிரோசிரா

கிராடியோலா 

ஹமாமலிஸ்

லாச்சஸ்

லேடம்

லிலியம் டிக்ரியம் 

லைக்கோபோடியம்

ஓபியம்

ஸ்பாஞ்ஜியா

சல்பர்

சல்பர் ஐயோடாடம்

வெஸ்பா


மதிப்பெண் - 1

ஆம்பிராகிரிசா

பாரிடாஐ யோடைட் 

காமோகிளாடியா

பெர்ரம் தயோடைட் 

நிக்கோலம்

ப்டிலியா டிரைபோலி

பிக்ரிக் ஆசிட்

தூஜா

டுபர்குளினம்

உஸ்டிலாகோ

வைபூரனம்

மருத்துவ குறிப்புகள் : ஒரு புதிய நோயாளியிடம் மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்: - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : What the doctor should observe in a new patient: - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்