நோயாளிக்கு மருந்தைக் கொடுக்கும்போது மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

What the doctor should observe while giving the medicine to the patient - Medicine Tips in Tamil

நோயாளிக்கு மருந்தைக் கொடுக்கும்போது மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள் | What the doctor should observe while giving the medicine to the patient

தனிமனிதனின் தனித் தன்மைகள் முக்கியமானதாகும்.

நோயாளிக்கு மருந்தைக் கொடுக்கும்போது மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்


1. வெச்சையில் போது டாக்டர் ஹானிமன் அவர்களின் தத்துவவழியைக் கடைபிடிக்காதவர் உண்மையான ஓமியோபதி மருத்துவராக இருக்க முடியாததோடு பெரிய ஆபத்தாகவும் முடியும். நோய், நோயாளி, நோய் நீக்கும் மருந்துகள்,"ஒத்த விதி" (Low of Similars) முறையை நாம் கவனத்தில் கொள்ளாமல் நோய்க்கு மட்டும் சிகிச்சை செய்தால் முழுப் பலன் அளிக்காமல், ஒரு பகுதி அல்லது குறைந்தகால பலனே கிட்டும். அதனால் ஒத்த விதியை அனுசரித்தால் மெத்த பலன் கிட்டும்.

மருத்துவரிடமும் நோயாளி வந்து தனக்குள்ள நோய்க்குறிகளையும் நோய் தாக்கப்பட்டுள்ள உறுப்புகளையும் சொல்லும் போது, மருத்துவர் தான் அறிந்துள்ள பல மருந்துகள் அவர் கவனத்திற்கு வந்தாலும் நோய்க்குறிகளுக்கு ஒத்த மருந்து எது? அது எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்? என்பதை அறிந்திருக்க வேண்டும்.


2. ஒரு நோயாளியைக் குணமாக்க ஒரு மருந்து மட்டுமே போதுமானது. ஏனென்றால், ஒன்றுபோலவே இன்னொரு பொருள் அங்கே கிடையாது. சில மருந்துகளைக் கலந்து கூட்டு மருந்தாகக் கொடுத்தால், எந்த மருந்து நோயை நீக்க உதவியது என அறிய முடியாததோடு, எந்த அளவு குணப்படுத்தியது எனவும் அறிய முடியாது. சில நேரங்களில் நல்ல பலனும் கிடைக்கலாம். ஒத்த முறைக்கு இது எதிரானது, தவிர்க்கப்படவேண்டியது: ஆபத்தும் உண்டாகலாம். அதனால் கலப்பு மருந்துகள் தருவதில் ஏற்படும் தோல்வி மருத்துவர் நோயாளி ஆகியோர்களுக்கல்லாமல், ஓமியோபதிக்கும் தோல்வியாகும்.


3. ஒரு ஓமியோபதி மருத்துவர் தன் நோயாளியைப் பற்றிய மனத்தின் நிலை (Spiritual), உணர்ச்சி (Emotional), எண்ணம் (Mental), உடல் நிலை (Physical). மனித சமுதாய அறிவு வளர்ச்சி (Sociological) ஆகியவைகளைத் தெரிந்திருப்பதோடு, அவைகளின் குறிகளையும் அறிந்து கொள்ள நேரத்தை அவசியம் செலவிட வேண்டும். நோயைக் குணப்படுத்த இவை தடையாக இருந்தால் அவைகளை போக்க அறிவுரைகள் வேண்டும், நாட்பட்ட நோயில் உடனே மருத்து கொடுக்காமல் மேற்குறிப்பட்டவைக்கான பதிலைப் பெறும் வரை மருத்தில்லா மாத்திரைகளைக் (Placebo) கொடுக்க வேண்டும்.


4. தனிமனிதனின் தனித் தன்மைகள் முக்கியமானதாகும். இரண்டு பேரின் உடலும் நோய்களும் ஒன்றுபோல் இருப்பது இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.


5. நோயை அழுக்குதல் (Suppression) செய்வது மிகப் பெரிய ஆபத்தாகும்.


6. கடுமையான நோய் (Acute Disease) என்பது நாட்பட்ட நோயினுடைய பிரதிபலிப்பாகும். நாட்பட்ட நோயின் கடுமையை அது தணிக்கிறது. மீண்டும் நாட்பட்ட நோய் தோன்றினால். அங்கே நோயின் அதிகரிப்பு இருக்காது. மொத்தக் குறிகளைக்கொண்டு பிறப்பு முதல் தற்போதுள்ளது வரை கருத்திற்கொள்ளல் வேண்டும். பரம்பரை தோய் உடலில் தங்கியிருந்தால் அதை ஒழிக்க ஆழ்ந்து வேலை செய்யும் மருந்துகளைத் தருதல் வேண்டும்.


7. நாட்பட்ட நோய்க்கு உடலமைப்பும், நோயாளிக்கு மருந்து கொடுக்கும் தத்துவமும் அறிந்திருப்பது மதிப்பிட முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்பட்ட நோயாளியினுடைய மனத்தில் தோன்றும் எண்ணத்தை (Concept) அறியாதவர் உண்மையான ஓமியோபதி மருத்துவராக இருக்க முடியாது.


8. ஏற்கனவே கொடுத்த மருந்து வேலை செய்யவில்லை என அறிந்தபின், அதற்கு பதிலாக வேறு மருந்தை உடனே தருமுன், நோயாளியின் நிலையை அறிந்து, மறுபரிசீலனை செய்து, அதற்கு ஒத்த மருந்தை கண்டுபிடித்து கொடுக்கவேண்டும்.


9. தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தை நோயாளிக்கு தவறான வீரியத்தில் கொடுத்து அது வேலை செய்யவில்லையானால், அதற்கடுத்த வீரியத்தை தருதல் வேண்டும். அவ்வாறு கொடுத்த பின் குணம் கிடைத்தால், உடனே மருத்தை நிறுத்தச் சொல்லி வீட்டு, மருந்து இல்லா மாத்திரைகளை உட்கொள்ளக் கூற வேண்டும்.


10. நோயாளி மருந்தை சரியாக உட்கொள்ளுகிறாரா என்றும், வேறு மருந்து மற்றும் உணவுகளின் குறுக்கீடு உள்ளதா என்றும் மருத்துவர் கவனிக்கவேண்டும். 


11. நோயாளி தொடர்ந்து அதிக மருந்து உட்கொள்ளும் பழக்கமுடையவராக இருந்தால், நோய்க்கான ஒத்த மருந்தைக் கொடுத்ததற்குப்பின், மருந்தில்லாச் சர்க்கரை மாத்திரைகளை நோயாளிக்கு தருவதை நிறுத்திவிட்டால், நோயாளியின் நம்பிக்கையை மருத்துவர் இழந்து விடுவார். 


12. மருத்துவருக்கு பொறுமை இல்லாதது-அதாவது ஒரு மருந்து கொடுத்தபின், மருந்தானது வேலை செய்கிறதா எனக் காத்திருத்தல், கவனித்தல் (Walt and watch) முறையை மறந்து விட்டு, விவேகமில்லாமலும், அக்கறையற்றும், ஏற்கனவே கொடுத்த ஒரு மருந்து பலனளித்துக் கொண்டுள்ளது எனத் தெரிந்த பின்னும், அந்த மருந்தை திரும்ப (Repeat) தரக்கூடாது. அது நிலைமையை மோசமாக்கும். ஒரு மருந்து கொடுத்த பின்பு தோலின்மேல் நோய்களோ, நீர் வடிதலோ ஏற்பட்டால், அதை நீக்க வேறு மருந்தை மாற்றித் தரக்கூடாது.


13. மருந்து உள்ளிருந்து வெளியே (From within outward), மேலிருந்து கீழ் (From above downward), குறிகள் மாறுபட்டு திரும்ப செயல்படுதல் (In the reverse order of the Symptoms) முறையானது குணப்படுத்தும் மருந்தைத் தவிர வேறு எதிலும் நிகழ்வதில்லை.


14. குணப்படுத்த முடியாத நோய்களில் மிக உயர்ந்த வீரியங்களைத் தருதல், அல்லது நோயின் காரணங்கள் (Patholo- gical) சம்மந்தப்பட்டதான மாறுதல்கள் ஏற்படும்போது நோய் அதிகரிப்பதற்குத் தூண்டுவதால் அந்நிலையில் நோயாளிக்குச் சிரமம் ஏற்படும். அதனால் அம் மருந்தை முறித்துவிட வேண்டும்.


15. குணப்படுத்துவதற்கு தடையாக உள்ளவைகளை நீக்க சரியான மருந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


16. ஓமியோபதி தத்துவத்தைப் புரியக்கூடிய அளவிற்கு நோயாளியை உணரச்செய்து ஒத்துழைக்க அவசியம் செய்தல் வேண்டும்.


17. சரியான உணவு, சுத்தம், எண்ணம், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவைகளைப் பற்றி அறிவுரை கூறவேண்டும்.


18. மருத்துவர் நோயாளியின் நம்பிக்கையைப் பெற, தொழிலில் தன் திறமை என்ன என்பதை செயலிலும், பேச்சிலும் உணர்த்த வேண்டும். 


19. பரிசோதனை செய்வதின் மூலமும், கேள்வி கேட்பதின் மூலமும், நோயாளிக்கு மருத்துவர் தன் திறமையை உணர்த்த வேண்டும்.


20. விஞ்ஞான அடிப்படையில் தனக்குள்ள ஈடுபாடு, மருந்துகள் தீங்கில்லாதவை, நோய் நிர்ணயம் ஆகியவைகளினால் நோயாளிக்கு நம்பிக்கை ஏற்படச் செய்யவேண்டும். 


21. நோயாளியிடமிருந்து பெறும் குறிகளில் சிறப்பான அசாதாரணமான குறிகள்தான் மொத்தக் குறிகளுக்கு முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் அவை நோயின் சாரமுமாகும்.


22. ஒவ்வொரு நிரூபிக்கப்பட்ட மருந்தும் ஒரு உயிர் வாழும் நபர் போன்றதாகும். அதனால் மருத்துவர் அம் மருந்துகளில் உள்ள தனித்தன்மையை அவசியம் அறிந்திருக்க வேண்டும். நோயை முழுவதுமாகக் குணமாக்க இவை போதுமானதாகும்.


23. ஆரம்ப நிலையிலுள்ள காச நோயாளிக்கு சல்பர், சிலிகா, பாஸ்பரஸ் தருதல் ஆபத்தானது. நோயின் தன்மை எல்லைமீறியிருந்தால் அதை தணிக்கும் மருந்துகளை குறிகளுக்கேற்றவாறு தருதல் வேண்டும்.


24. குறிப்பிட்ட சில மருந்துகளைத் தவறாகக் கையாள்வதில் ஆபத்து உண்டு என்பது கவனத்தில் இருக்க வேண்டும். தீவிர மூட்டு அழற்சிக்கு காலிகார்ப்; சீழ்வடியும் போதும், நுரையீரல் நோயிலும் சிலிகா; ஆஸ்த்துமாவிற்கு நோசோது ஆன சோரினம்; பயங்கரமான நோய் அதிகரிப்பும் நிமோனியா கடுமையாகவும், கடைசி நிலையிலும் உள்ளபோது ஆர்சனிக்கம் ஆல்பம் கொடுத்தால், சாவை நோக்கி சீக்கிரம் செல்ல வழிவகுத்ததாகிவிடும்.


25. நாட்பட்ட நோயாளிடம் நோயை நிர்ணயிக்கத் துருவித்துருவி கேள்விகளைக் கேட்க வேண்டும். அப்போதுதான் மருத்துவர் ஒரு முடிவுக்கு வரமுடியும். நோயாளிக்கு வந்துள்ள நோய் புதிதா, ஏற்கனவே வந்து மறைந்துபோய் மீண்டும் வந்துள்ளதா, அடிக்கடி வருவதா என வினவவேண்டும். நோய் பழையது இல்லை எனில், நோயின் மூலகாரணத்தை கண்டறிய வேண்டும்.


26. எல்லா நாட்பட்ட நோயாளிகளுமே தாதுப்புக் குறைந்தவர்கள்: உறுப்புகளுக்கு தேவையான தாதுப்புவை இழந்தவர்கள். அதுமட்டுமன்றி உடலில் வெப்பத்தையோ அல்லது உயிர்ச் சக்தியையோ இழந்தவர்கள் ஆவர். ஆகையினால், உறுப்பு பழுதடைந்ததை சரிசெய்யத் தேவையானவைகளையும், நச்சுப் பொருட்களை வெளியேற்றவோ, பயனற்றதாக்கவோ செய்தல் வேண்டும். அதனால், குணத்தை நோக்கிச் செல்லும் மருந்து (Centripetal), குணத்தை விலகிச் செல்லும் மருந்து (Contrifugal) எவை என்பதை கண்டறியவேண்டும். அப்போதுதான் நோய் அதிகரிக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும். உடலில் தாதுப்புக்கள் அதிகமாக குறைந்தால் நோயாளி தன் எடையை இழப்பார்.


27. நோய் அதிகரிக்கும் நேரம் (Aggravation time) என்று திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ள நேரங்களில் ஏற்கனவே மருந்து நிரூபணத்தின் போது குறிக்கப்பட்டுள்ள குறிகளைக் கொண்ட ஒத்த மருந்துகளை அந் நேரங்களில் தரக்கூடாது. உதாரணமாக மாலை 4 முதல் 8 மணி வரை லைக்கோ போடியம் மருந்தின் நோய் அதிகரிக்கும் நேரம் ஆகும். அதனால், நோய் அதிகரிக்கும் மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு மணிக்கு முன் அதாவது மாலை 2 அல்லது 3 மணிக்கு கொடுத்தால் நல்லது. நல்ல பலனும் அளிக்கும். யார் ஒருவர் மருந்து வேலை செய்யும் நேரத்தைத் துல்லியமாக தெரிந்து பயன்படுத்துகிறாரோ, நோய் சீக்கிரம் குணமாவதையும் அவர் காண்பார். அப்படியில்லாமல் நேரங் கெட்டு மருந்து தரும்போது, நோய் அதிகமாவதோடல்லாமல் நோயாளிக்கு நீண்ட நாள் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவார்.


28. நீண்டநாள் நோயின் அதிகரிப்புள்ள நோயாளியின் உடல் பலவீனமடையும். ஒன்று நோயாளியை குணப்படுத்த முடியாத நிலையோ அல்லது மிக உயர்ந்த வீரியம் கொடுத்ததன் பலனாக நோயின் சக்தி அதிகரித்த நிலையோ இருத்தல் வேண்டும். இது வழக்கமாக நோயின் காரணத்தைக் கொண்டுள்ள (Pathology) நோயாளிகளிடம் காணலாம். மேலும், நோயாளியின் உடலில் இருந்து குறிகளும் வெளிவருவதைக் காணலம். இம்மாதிரி நிலைகளில் இரண்டாவது மருந்திலும் நோய் அதிகரிப்புக் குறிகள் இல்லாமல் பார்த்து தருதல் வேண்டும். 


29. நோய் அதிகரிப்பு நீண்டு இருந்தாலும் குணம் பெறுவது மெதுவாக நடைபெறும். அப்படிபட்ட மோசமான நோயாளியின் நோயைக் குணமாக்க முடியாத எல்லைக்கு சென்றுள்ள நிலையில் குறிகளைக் கண்டுபிடித்து சிகிச்சையளித்தல் வேண்டும்.


30. நோய் அதிகரிப்பு உடனேயும், கடுரமாயும், குறுகிய காலமும் இருந்தால் நோயாளிக்கு வேகமான முன்னேற்றம் காணப்படும். குணமும் நீண்டநாள் நீடிக்கக் கூடியதாகவும், முக்கிய உறுப்புகளல்லாத அமைப்புகளில் நல்ல மாற்றத்தையும் காணலாம். இவ் அதிகரிப்பால் கட்டிகளும், சுரப்பிகளும் கசிவும் தோன்றினால் இது ஒரு நல்ல அறிகுறி என்று கருதி அதில் குறுக்கிடக் கூடாது.


31. நோய் அதிகரிப்பில் நோயாளி தொடர்ந்து படிப்படி யாசுக் குணம் பெறுவதைக் காணுதல். இந்நிலைகளில் நோயானது உறுப்புகளில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை யெனவும், தேர்ந்தெடுத்து கொடுத்த வீரியம் சரியானதெனவும் கருதவேண்டும்.


32. நோய் அதிகரிப்பில் நோயாளிக்கு முதலில் நோய் சமனப்படுவதுபோல் உணர்ந்து பிறகு அதிகமாகும். கொடுக்கப்பட்ட மருந்து நோயைத் தணியமட்டுமே செய்துள்ளது என்றும், நோயாளியின் உண்மையான அமைப்பின் நிலையை அது தொட வில்லை என்றும் அறிதல், அல்லது நோயாளியை குணப்படுத்த முடியாது என்றும், அல்லது ஆழமான மியாசங்களை நீக்கத் தேவையான சரியான குறிப்பிட்ட குணமாக்கும் மருந்தை தருதல் வேண்டும்.


33. நோய் அதிகரிப்பில் நோய் நீக்கக் கொடுத்த மருந்தே நிருபணமாக்கும் நிலைக்கு மாறுதலாகும். அவ்வாறு ஏற்படுவது அம் மருத்தின் இயல்பாகும். அல்லது எந்த மருந்து கொடுத்தாலும் நோயாளிக்கு அதிக உணர்வுகளை உண்டாக்கும் உடலமைப்பு கொண்டவராக இருக்கலாம். இவர்களுக்கு குறைந்த மத்திய விரியங்கள்தான் பயன்படும். ஆனால் நோய் குணமாகாது.


34. நோய் அதிகரிப்பில் மருந்து கொடுத்தபின் புதிய குறிகள் தோன்றும். இந் நிலைமைகளில் தேர்ந்தெடுத்து கொடுத்த மருந்து சரியல்லவென்று கருதி இரண்டாவது வேறு மருந்தைத் தருதல் வேண்டும். சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் வீரியம் நோயை அதிகரிக்கச் செய்யாது. உடனடி குணம் காணலாம்.


35. நோய் அதிகரிப்பில் நோயாளிக்குத் தனிக்குறிகள் தெளிவாகத் தெரிவதோடு, நோய் பரவாயில்லையென நோயாளி உணர்வார். இதைத் தொடர்ந்து பழைய குறிகள் மீண்டும் தோன்றியுள்ளதாக கருதுவதோடு, இது மிகவும் ஒரு சாதகமான தாகும். மருத்துவர் இச் சந்தர்ப்பத்தில் நோய்க் குறிகள் தோன்றிய பக்கம் எது என்று குறித்துக்கொள்ள வேண்டும். குறிகள் உள்ளிருந்து வெளியே இல்லாமல் இருந்தால் அது ஆபத்தானது ஆகும்.


36. நோய் அதிகரிப்பில் சி. எம். வீரியத்தை கொடுத்ததினால் அதிகமாகியிருப்பினும், அந்நிலையிலும் நோயாளி தனக்கு பரவாயில்லை எனக் கருதுவாரானால், அது குணம் பெறும் குறிகளைக் கொண்டதல்லாமல், அது ஒரு நோய் அல்லவென நினைக்கவேண்டும்.


37. ஒவ்வொரு தொற்று நோய்க்கும் ஒவ்வொரு சிறப்புக் குறிகள் உள்ளன. எல்லாத் தொற்று நோய்களும் முதலில் உடலிலுள்ள உள்ளுறுப்புகளைத் தாக்கி அவைகளை சக்தியிழக்கச் செய்துவிட்டு, காய்ச்சலுடன் வெளியே தோலின்மீது கொப்புளங்களை தோற்றுவிக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் இது கடுமையான நோயாகக் காணப்படுகிறது. நோயும், காரணத்தையும் கொண்ட பெதாலஜியும் குறிகள் கொண்டிருப்பதைக் காணலாம். அதிலும், பொதுக்குறிகள் உண்டு. பெதாலஜியும் தெரிந்திருக்க வேண்டும். அதிலும்கூட பெதாலஜி அல்லாத ஏராளமான குறிகள் இருப்பதைக் காணலாம். நோய் நிர்ணயம் நோயாளிக்கு திருப்தி செய்யவும் முன்னதாகவே மருந்தையும் வீரியத்தையும் தீர்மானிக்கவும் துணை புரியும்.


38. மேலெழுந்தவாரியாக உள்ள கடுமையான நோய்க்கு மருந்து தந்து, பரவாயில்லை என்று நோயாளி கருதும்போது, நோய் மோசமாக உள்ளதென அவர் மீண்டும் உணர்ந்தால் நாட்பட்ட நோயாளிக்கு எந்த அளவிற்கு சிகிச்சை செய்வோமோ அந்த அளவிற்கு ஆழ்ந்து வேலை செய்யும் மருந்தை தருதல் வேண்டும்.


39. தவறான முறைகளில் மருந்தைத் தருதல், அல்லது இனம்சேரா (Inimical) மருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக தருவதை தவிர்த்தல் வேண்டும்.


40. முதலில் கொடுத்த மருந்து வேலை செய்யாமல் அப்படியே உள்ளபோதும், நோயாளிக்குப் புதிய குறிகள் தோன்றும்போதும், இரண்டாவது மருந்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். இதிலிருந்து நாம் அறிவது முதலில் கொடுத்த மருந்து குணமாகக்கூடிய சாதகமான பலனை அளிக்காதததினால் அதை முறித்துவிடவேண்டும் என்பதாகும். நோயாளிக்கு ஏற்கனவே உள்ள மூலக்குறிகளுடன் (Origional Symptoms) புதிய குறிகளையும் சேர்த்துக்கொண்டு அதற்கேற்றவாறு ஒத்த மருந்தை தேர்வு செய்து கொடுத்தால் மருந்தானது புதிய குறிகளை நீக்குவது மட்டுமல்லாமல் பழைய குறிகளையும் மாற்றிவிடும்.


41. நோய் மியாசத்தின் அடிப்படையில் சிக்கியிருந்தால் முதலில் அதை சுத்தம் செய்துவிட்டு சிகிச்சை அளிக்கவேண்டும்.


42. பண்படுத்தப்படாத மருந்துகள் (Crude drugging) மூலம் அமுக்கப்பட்ட நாட்பட்ட நோயாக இருந்தால், அதை குணப்படுத்த மருந்துகள் கொடுக்கும்போது அசல் நோய் (Origional diseases) வெளி வரலாம்.


43. உணவைப் பொருத்த வரையில் நாட்பட்ட நோயாளிக்கு அதிக விருப்பமுள்ள உணவுகளை அதிக அளவில் உண்ண அனுமதிக்கக் கூடாது. கடுமையான நோயால் பாதிப்புக் குள்ளாகியிருப்பவருக்கு நோயுடன் கூடிய தான் விரும்பும் உணவுகளை உண்ண அனுமதிக்க வேண்டும்.


44. நம் சிறப்பு மிகுந்த இம் மருத்துவ சேவையில் ஒவ்வொரு நோயாளியும் தனிப்பட்டவருக்கு மட்டுமல்லாமல், இச் சமுதாயத்திற்கும், ஓமியோபதிக்கும் இம் மனித இனத்திற்கும் சேவை செய்யக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என மருத்துவர் கருதவேண்டும்.

மருத்துவ குறிப்புகள் : நோயாளிக்கு மருந்தைக் கொடுக்கும்போது மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : What the doctor should observe while giving the medicine to the patient - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்